இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

ஆரிய வந்தேறிகளால் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

*இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

*மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

*இந்தியாவில் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

•சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமை.
 இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஆசிரியர் DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)


3) வேதமும் கீழ்ஜாதி மக்களும்.

பிராமணர்களைப் பற்றித் தீதாகப் பேசிய சூத்திரனின் நாக்கை அறுத்திட வேண்டும்.

முதல் மூன்று உயர்ஜாதியனரோடும் தன்னை சமமாக எண்ணும் அளவுக்கு எந்தக் கீழ் ஜாதிக்காரனும் நெஞ்சுரம் கொண்டால் அவனை சவுக்கால் அடிக்க வேண்டும். (அப்பஸ்தம்பா தர்மல் சூத்திரம் : 111-10-26)

வேதம் ஓதுவதை காதால் கேட்டுவிட்டால் ஈயத்தைக் காய்ச்சி அவன் காதுகளில் ஊற்றிடவேண்டும்.

அவன் வேதத்தை உச்சரித்தால் அவனது நாக்கை அறுத்துத் துண்டாக்கிட வேண்டும்.

வேத நாதங்களை அவன் உள்ளத்தில் தேக்கி வைத்தால் அவனது உடலைக் கண்ட துண்டங்களாகத் துண்டாடிட வேண்டும். மனுவின் விதி 167-272 கூறுகின்றது.

பிராமண தர்மத்தை சூத்திரன் ஒருவன் கற்றுக் கொள்ளவோ, கற்றுக்கொடுக்கவோ துணிவானேயானால் அரசன் நன்றாக சூடான எண்ணையை அவனுடைய காதுகளிலும், வாயிலும் ஊற்றிட வேண்டும்.

மனுவின் விதி இன்னும் சொல்கின்றது.

பிராமணன் என்னதான் குரூரமான குற்றத்தைச் செய்தாலும் அவனைத் தண்டிக்க இயலாது.

இப்படி ஒரு அநீதி வேதத்தின் பெயரால் இந்த உலகில் எங்கேயும் இருக்கும் என எதிர்பார்ப்பதற்கில்லை.காந்தியைக் கொன்றவர்கள் தாழ்த்தப்பட்ட மக்கள் மீது கட்டவிழ்த்து விட்டுவரும் அநீதிகள் சில சிறு மேற்கோள்கள்!

* ஹரிஜனப் பெண்கள் நிர்வாணமாக வீதிகளில் உலாவர வைக்கப்பட்டார்கள். - கரண்ட் 6-4-1983

* தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்த ஒருவனிpன் ஆடை பிராமணன் ஒருவனின் ஆடை மீது பட்டுவிட்டது என்பதனால் அந்தத் தாழ்த்தப்பட்ட ஜாதியைச் சார்ந்தவன் கடினமாகத் தாக்கப்பட்டான் - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-1984

* ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுக்கும் கிணற்றில் உயர்ஜாதி ஹிந்துக்கள் இறந்த மிருகங்களையும் மனித மலத்தையும் எறிந்து, ஹரிஜனங்கள் குடிக்கத் தண்ணீர் எடுத்துக் கொள்ள இயலாமல் செய்தார்கள். காவல்துறையினர் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. - டைம்ஸ் ஆப் இந்தியா நாளிதழ் 18-11-84

* கோயிலில் கடவுளைக் கும்பிட தனக்கும் உரிமை வேண்டும் என்று வேண்டிக் கொண்ட ஒரு ஹரிஜன் வன்மையாகத் தாக்கப்பட்டான். மனித மலம் அவன் வாயிலே திணிக்கப்பட்டது. இது தாத்தூர் என்ற கிராமத்திலே நடந்து (சோராப் தாலூகா). -டெக்கான் ஹெரால்டு நாளிதழ் 5-2-88

* வெள்ளத்தால் சூழப்பட்டுத் தத்தளித்துக் கொண்டிருந்தவர்களைப் படகில் ஏற்றிப் பாதுகாப்பான இடத்திற்குக் கொண்டு சென்று கொண்டிருந்தனர். போகும் வழியில் படகில் இருக்கும் பெண்களில் சிலர் ஹரிஜனப் பெண்கள் என்பதைக் கண்டு கொண்டனர். அவர்களைப் படகிலிருந்து தூக்கி தண்ணீரில் எறிந்தனர். -பிளிட்ஸ் 18-3-84

* 1970 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18-ம் நாள் இந்தியாவின் பிரதமர் இந்திரா காந்தி அவர்கள் நாடாளுமன்றத்தில் பின்வரும் தகவலைச் சொன்னார்கள். (இது பிராமணர்களின் கணக்கு) கடந்த மூன்று வருடங்களில் 1117 ஹரிஜனங்கள் கொலை செய்யப்பட்டுள்ளார்கள்.

* தமிழத்தின் சேலம் மாவட்டத்தில் பால்மணம் மாறாத 5வயது அரிஜனச் சிறுதி தனம், தாகம் தணிக்கப் பள்ளிக் கூடத்தில் தண்ணீர் குடித்ததற்காக உயர்ஜாதி வகுப்பாசிரியரால் தாக்கப்பட்டு கண்பார்வை இழந்ததும் 1995ம் ஆண்டு ஆகஸ்டு திங்களில்தான்.

CLICK TO READ


மேலை நாடுகளின் நிறவெறிக் கொள்கையும் இந்தியாவின் உயர்ஜாதி பிராமணவாதமும்

இந்தியாவில் 5%க்கும் குறைவுதான் பிராமணர்கள். இவர்கள் 95% இநதியக் குடிமக்களை ஆட்சி செய்து வருகின்றனர்.

தென் ஆப்பரிக்காவில் வெள்ளயைர்கள் 15% தான். இவர்கள் 85% கறுப்பர்களை ஆட்சி செய்து கொண்டிருக்கின்றார்கள்.
ஆனால் இந்தியா அடிக்கடி நிறவெறிக் கொள்கையை அதாவது கறுப்பர்களை வெள்ளையர்கள் ஆட்சி செய்யும் அநீதியை அடிக்கடி குறை கூறுவதுண்டு.

அதே அநீதியை இந்தியாவில் செய்து கொண்டிருப்பவர்களுக்கு அவர்களைக் குறைகூற எந்தத் தகுதியுமில்லை. இதை ஏனோ உணர்ந்து கொள்ளத் தவறி விட்டனர்.

ஜனநாயகம், மதச்சார்பிண்மை ஆகியவற்றைப் பற்றி வாய்நிறையப் பேசுகின்றோம்.

அதேபோல் சட்டத்தின் முன் அனைவரும் சமம் எனப் பீற்றிக் கொள்கின்றோம்.

ஆனால் இந்த நாட்டில் பெருமபான்மையாக வாழும் ஒரு சமுதாயத்தை தீண்டத்ககாதவர்களாகவும், பார்க்கத் தகாதவர்காளவும் ஆக்கி வைத்திருக்கின்றோம்.

உண்மை நிலை இப்படி இருக்க சமத்துவம், சகோதரத்துவம், ஜனநாயகம் இவற்றைப் பற்றிப் பேசிட நமக்கு என்ன தகுதி இருக்கின்றது?

இந்தியாவின் உண்மையான குடிகளே! இந்த ஆதிக்கவாதிகளை அப்புறப்படுத்த அணி திரளுங்கள்.

மக்கள் தொடர்பு கருவிகள் யார் பிடியில்?

இன்று இந்த நாட்டில் வெளிவரும நாளிதழ்கள், மாத, வார, இதழ்கள் இவற்றில் யார் முழுமையான ஆதிக்கம், செலுத்துகின்றார்கள்? இவற்றில் 81 சதவீதம் பிராமணர்கள் பிடியில் தான்.

இன்று நாட்டில் வெளிவரும செய்திகளை மக்களுக்குச் சொல்லிடும் பத்திரிக்கைகள் இந்தியன் எக்ஸ்பிரஸ், ஹிந்து, டைம்ஸ் ஆஃப் இந்தியா இவை அனைத்தும் பிராமணர்களின் ஆதிக்கத்தில் இருப்பவை.

இவற்றில் பணியாற்றுபவர்களும் பிராமணர்கள்தாம்.

இந்தியன் எக்ஸ்பிரஸ் 93 சதவீதம் பிராமணர்கள்.
ஹிந்து 97 சதவீதம் பிராமணர்கள்.

டைம்ஸ் ஆஃப் இந்தியா 73 சதவீதம் பிராமணர்கள். இவர்கள் (பிராமணர்கள்) வானொலி, தொலைக்காட்சி ஆகியவற்றில் தங்கள் ஆதிக்கத்தை முழுமையாக நிலைநாட்டிவிட்டார்கள்.

பணமும் - வளமும் - பிராமணர்களும்

மனுஸ்மிர்தி விதி V11 133 இப்படிச் சொல்லுகின்றது. பிராமணர்களை வரிவிதிப்பிற்கு உட்படுத்தக் கூடாது. அவர்களை அரசுத்துறை செலவில் பராமரிக்க வேண்டும்.

சூத்திரர்கள் என்ற கீழ்ஜாதி ஹிந்துக்கள் பற்றி மனுஸ்மிர்தி இப்படிக் கூறுகின்றது. விதி எண்: X - 129ல்,

செல்வத்தைச் சேர்த்துக் கொள்வது சூத்திரர்களுக்கு ஆகாது. அவர்களுக்கு அதற்குரிய திறமைகள் இருந்தாலும சரியே!

சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொள்வது என்பது பிராமணனுக்கு வேதனையைத் தரும்.

இன்னும் பிராமணன் பலத்தை பிரயோகித்துச் சூத்திரனுடைய செல்வத்தை அபகரித்துக் கொள்ளலாம். பஞ்சவனிஷ் பிரஹமான் 3-1/11இப்படிக் கூறுகின்றது.

சூத்திரன் செல்வத்தை சேர்த்துக் கொண்டாலும் அவன் எப்போதும் ஓர் அடிமையாகவே இருப்பான்.

அவனுடைய தலையாயபணி உயர்ஜாதியனரின் கால்களை கழுவுவதாகும்.

துளசிதாஸ் இவர் ஒரு பிராமணன். இவர் தன்னுடைய நூலில் - அதாவது இராமாயணத்தில் பின்வருமாறு எழுதுகின்றார்.

சூத்திரன் ஒருவன் கற்றவனாகவும், நல்லொழுக்கமுள்ளவனாகவும் இருந்தாலும் அவனுக்கு அந்த மதிப்புமில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது எல்லா தொழிற்சாலைகளையும் பிராமணர்களே எடுத்துக் கொண்டார்கள்.

எந்த அளவுக்கு என்றால் அவர்கள் இன்று நாட்டிலுள்ள 60 சதவீதம் தொழில்களின் மேல் ஏகபோக ஆதிக்கம் உள்ளவர்களாக இருக்கின்றார்கள்.

60 சதவிகிதம் ஆலைகளை அடக்கியாளும் இவர்கள் நாட்டின் மொத்த குடிமக்களுடன் 5 சதவீதம் தான் என்பதை மறக்கலாகாது.

இதேபோல் இந்த 5 சதவிகிதத்தினர் தான் நாட்டின் உயர்பதவிகளில் 60 சதவிகிதம் பதவிகளை வகிக்கின்றனர்.

இதோ இந்தப் புள்ளி விபரத்தைப் பாருங்கள். இந்த இந்தியா இன்றும் யார் கைகளில் சிச்கித் தவித்துக் கொண்டிருக்கின்றது என்ற உண்மை புலப்படும்.

எண் விவரங்கள். பிராமணர்களின் %
1 நாடாளுமன்றத்தின் மக்கள் சபையில் 45%
2 நாடாளுமன்றத்தின் மேல் சபையில் 36%
3 கவர்னர்கள் - L.G. 50%
4 கவர்னர்களின் செயலாளர்கள். 54%
5 மத்திய அமைச்சரவையின் செயலாளர்கள் 53%
6 மத்திய அமைச்சரவையின் தலைமை செயலாளர்கள் 54%
7 அமைச்சர்களின் தனிச் செயலாளர்கள் 70%
8 நீதிபதிகளின் தனி செயலாளர்கள் 62%
9 பல்கலைக்கழகங்களின் துணை வேந்தர்கள் 51%
10 உச்ச நீதிமன்ற நீதிபதிகள் 56%
11 உயர்நீதிமன்ற நீதிபதிகள் - கூடுதல் நீதிபதிகள் 50%
12 இந்தியாவின் பிரதிநிதிகளாக வெளிநாட்டுத் தூதுவர்கள் 41%
13 பொது நிறுவனங்களில் தலைமை பொறுப்பாளர்கள் (மத்திய அரசின் கீழ் இயங்குபவை) 57%
14 மாநிலை அரசுகளின் கீழ் இயங்கும் அரசின் பொது நிறுவனங்களின் முதன்மைப் பொறுப்பாளர்கள் 82%
ஆதாரம் : Voice of the Weak, Oct, 1989)

ஏனைய நிறுவனங்களில்
விவரங்கள் பிராமணர்களின் %
வங்கிகள் 57%
விமானத் துறை 61%
I A S அதிகாரிகள் (மாவட்ட ஆட்சியாளர் போன்ற பொறுப்பில் இருப்பவர்கள்) 72%
I P S காவல்துறையின் உயர் பொறுப்புகளில் இருப்பவர்கள் 61%
வானொலி மற்றும் தொலைக்காட்சியில் பணியாற்றுபவர்கள் 83%
CBI மத்திய புலனாய்வுத் துறை அதிகாரிகள், சுங்கவரி அதிகாரிகள் ஆகியவற்றில் பணியாற்றுபவர்கள் 72%

இது தான் இந்த நாட்டில் கிடைக்கும் வேலை வாய்ப்புகளின் நிலை.

அரசு இயந்திரத்தை இயக்கிடும் அத்தனை பதவிகளும், அரசு உதவியுடன் நடக்கும் நிறுவனங்களை நிர்வகிக்கும் முக்கயப் பொறுப்புகளும் பிராமணர் கையில் - இப்படி, அரசின் கஜானா முழுவதும் ஒரு சாராருக்கே சம்பளம் சலுகை என்று வழங்கப்பட்டு விடுகின்றது.

இந்த நிலை மாறி வேண்டும். அரசுத் துறையில் கிடைக்கும் வேலை வாய்ப்பு வசதிகள் ஏனைய மக்களுக்கும கிடைத்திட வேண்டும் எனப பரிந்துரைப்பதே மண்டல (குழு) கமிஷன் அறிக்கை.

பரிந்துரை.
இந்தியாவை முழுமையாகத் தின்று ஏப்பம் விட்டுக் கொண்டிருக்கும் பிராமண ஏகாதிபத்தியம், இந்த மண்டல் குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவதில் அத்தனை முட்டுக் கட்டைகளை போட்டு வருகின்றது.

உங்கள் குழந்தைகள், குழந்தைகளின் குழந்தைகள், இப்படி உங்கள் சந்ததியினர் அனைவரைம் இந்த ஆரிய வந்தேறிகளால் அடிமைப்படுத்தப்பட்டு விடுவார்கள்.

அன்புடன் தாயகப் பணியில்….. DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.) தொடருகிறது. மீண்டும் வாருங்கள்
-------

1.இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்? முன்னுரை.

2. இந்துக்களே! விழிமின்! எழுமின்! பிராமிணர்களுக்கிடையே பிளவு.


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. இராமனா கடவுள்? கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

No comments:

Post a Comment