இது பதினெட்டு வயதிற்குட்பட்டவர்கள் படிக்கக் கூடாத ஒரு ஆபாச நூலாகத் தோன்றுமளவு இருக்கிறது கம்பனின் வர்னனைகள்.
ஒரு கடவுள் காவியத்தில் இத்தனை ஆபாசங்களா? என்பதை அறிஞர் அண்ணா எழுதிய "கம்பரசம்" எனும் நூலைப் படித்ததும் எழுந்த கேள்வி இது.
இந்த நூலில் அவர் சுயமாக எந்தக் கற்பனைக் குதிரையயும் அவிழ்த்து விட்டு மிகைப்படுத்திக் கூறவில்லை. மாறாக தெய்வ காவியமான "இராமாயணத்தில்" கம்பனால் சொட்டப் பட்ட காமரசம் மிகும் பாடல்களைத் தொகுத்து அதற்கான விளக்கங்களை தெளிவு பட எழுதியிருக்கிறார்.
உதாரணத்திற்கு அந்நூலில் இருந்து ஒரு விளக்கம். இராமாயணத்தில் இது அமையப் பெற்ற இடத்தைப் பார்த்தால் காறித்துப்பத் தோன்றுகிறது. மன்மதக் காவியங்களில் கூட நாயகன் நாயகியைக் குறித்து இத்தனை ஆபாசமாக நண்பனிடம் கூற மாட்டான். இங்கு தெய்வமாக போற்றப் படும் இராமன் தன் மனையாட்டி சீதாவை கண்டறிய அனுமனுக்கு அடையாளம் கூறுகிறான்.
செவ்விள நீரும் தேர்வன்
துப்பொன்று திரள்சூ தென்பன்
சொல்லுவன் தும்பிக் கொம்பை
தப்பின்றிப் பகலின் வந்த
சக்கரவாகம் என்பன்
ஒப்பொன்றும் உலகின் காணேன்
பல நினைத்து உலைவன் இன்னும்."
அதாவது இராமன் கூறுகிறார் "என் மனைவி மகாசுந்தரி! அவளுடைய கொங்கைக்கு உவமை தேடித் தேடிப் பார்க்கிறேன், ஒன்றும் பொருத்தமாக இல்லை. உலகிலேயே ஒரு பொருளும் இல்லை அவைகட்கு இணை. என்ன செய்வேன்!" என சோகிக்கிறார். "செப்புக் கலசமோ!" "செவ்விளநீரோ!" என தன் மனைவியின் கொங்கைகளுக்கு உவமை தேடுகிறார் அந்தக் கடவுள்(?).
அதிலும் இந்த உவமைகளை அவர் சொல்லுவது கட்ட பிரம்மச்சாரியாகக் கருதப்படும் அவரின் நண்பன் அனுமனிடம். இது போன்ற உவமைகள் நண்பனிடம் சொல்லப்படுவதாக காமம் சொட்டும் காம காவியங்களில் கூடப் படித்திருக்க முடியாது. ஆனால் இந்த கம்ப இராமாயணத்தில் படிக்கலாம்.
இது வெறும் சாம்பிள் மட்டும் தான். இதை விட கொடுமையான ஆபாச வர்ணனைகள் எல்லாம் நிரம்பி வழியும் காவியம் தான் இந்த "இராமாயணம்". அதிலும் அத்தகைய ஆபாசங்கள் வைக்கப் பட்ட இடங்கள் படிப்பவர்களை நிச்சயம் காறித் துப்ப வைக்கும் என்பதில் சந்தேகமே இல்லை.
அனைவரும் படித்துப் பாருங்கள் இந்தக் கம்பரசத்தை. புரிந்து கொள்ளுங்கள் இது கடவுள் காவியமா? அல்லது காம காவியமா? என்பதை.










Source: Annavin Padaipukal.
.
After a long time this blog is updated.
ReplyDeleteThis is very useful blog to know the depth of Brahmins culture.
Good job.