இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?


நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.

படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.

அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?

அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???

நித்திரையில் இருக்கும் தமிழா!
சித்திரையல்ல உனக்கு தமிழ்ப்புத்தாண்டு

அண்டி பிழைக்க‌ வ‌ந்த
ஆரிய‌ர் கூட்ட‌ம் காட்டிய‌தே
அறிவுக்கொவ்வாத‌ அறுப‌து ஆண்டுகள்!.

த‌ர‌ணி ஆண்ட‌ த‌மிழ‌ருக்கு
தை முஅத‌ல் நாளே த‌மிழ் புத்தாண்டு.

புர‌ட்சிக் க‌விஞ‌ர் பார‌திதாச‌ன்.


சித்திரை முதல்நாள் தமிழ்ப் புத்தாண்டுமல்ல.

படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.

தமிழ்ப்புத்தாண்டென்பது பித்தலாட்டம்.

கிறித்துவரும், இசுலாமியரும் தங்கள் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகிறார்கள்.

`பிரபவ’ எனத் தொடங்கி `அக்ஷய’ என்று முடிவுறும் அறுபது பெயர்களால் ஆண்டுகள் சுழற்சி முறையில் அழைக்கப்படுவது ஏன்?

அந்த 60 பெயர்களும் பிள்ளைகளுக்கு சூட்டப்பட்டதாகச் சொல்கிறார்களே, அந்தப் பிள்ளைகளைப் பெற்றவர்கள் யார்?

`சாஸ்த்ரோத்தமர்களை’ கேளுங்கள்.

`கோடாங்கி’கடலூர் SOURCE: VIDUTHALI NEWS. 28/04/2007.
-----------------------

அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?

வருஷம் - 1 ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,

அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.

கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.

இவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.

2. (6). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய இவ்விருபதும் அதம வருடங்களாம்.

(ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கும் ஆண் முனிவர் நாரதருக்கும் பிற்ந்த அறுபது பிள்ளைகளின் பெயர் தான் இவை.)

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி பக்கம் 1392).
இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் 10.04.2007 பிரசுரமானது.
------------

நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?  முதலமைச்சர் கலைஞர் கேள்வி

சென்னை,  ஜன. 26- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள் ?

மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இது பற்றி அவர் ஆற்றிய உரை: தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் - கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார் முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப எண்ணுகிறார் என்று சொன்னார்.

அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய திருநாள் பொங்கல் திருநாள் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப் பட்டுவிட்ட அந்த வாசகத்தை நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள்.

அந்தத் தை முதல் நாள்தான் தமிழனுக்கு ஆண்டு முதல் நாள் - இல்லாவிட்டால் நான் பிறந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு - உங்களால் சொல்ல முடியுமா? குழம்பி விடுவீர்கள்.

நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன்.

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி - நான் ரக்தாட்சி வருடம் பிறந்தவன்.

ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன, அட்சய - அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும். அறுபது வருடங்கள் என்றால் என்ன?

நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின் பெயர்களை வைத்தார்கள்.

62 குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று நான் சொன்ன வரிசை.

இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி. பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள் எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன்.

ரக்தாட்சி ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா என்று 84 வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான்.

ஏனென்றால் அந்தச் சுற்று அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம் வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும்.

இப்படிப் பட்ட ஒரு கணக்கு - சரியான வயதையோ - சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால் தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ் பிறந்ததற்குப் பின் - என்று கி.மு., கி.பி. என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் - மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல - இன்றைக்கிருக்கின்ற புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் - அவருடைய தலைமையில் ஒன்றல்ல, இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி, எடுத்த முடிவுதான்-

இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள். அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர் ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப்போம் என்று அழைத்தார்கள்.

பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள்.
நான் - அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன். அப்படியே தொடர்ந்தது. இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு அறிவித்திருக்கி றோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள்தான் தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.

இதற்கு உடனே - யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான் ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன்.

தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்று மில்லை.

சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று; தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன், தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக் கடவாய் என்று அறம் பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெரு மக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச் செய்தாராம். இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார்.

SOURCE: இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் 20.10.2008. ல் பிரசுரமானது “VIDUTHAI” 20.10.2008.

------------------------------

தமிழ்ப் புத்தாண்டா? நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???

பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம்கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன்.

இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது.

பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான். அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்குவார்கள்.

ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு Sapphism என்கிறது.

ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை.

அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது. இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.

படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந்திருக்கும்.

இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன். நாராயணனுக்குப் பேரன்.நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள்.

அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு.கிருஷ்ணனிடம் கேட்கிறான் - எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம்.

எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம்.

நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்!

ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?

பிறக்கப் போவது - சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது?

ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா? இவ்வளவு குழப்பமாகவா அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? – இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் 07-04-2007 ல் பிரசுரமானது .
SOURCE: - “ viduthalai.” 07-04-2007.
===================================

தமிழருக்குத் தமிழ்ப்புத்தாண்டு எது?

உலகில் மாந்தர் தோன்றிய முதல் இடம் குமரிக் கண்டம். அவர்கள் பேசிய முதல் மொழி தமிழ். கல்தோன்றி மண் தோன்றாக் காலத்தே முன் தோன்றிய மூத்தக் குடி தமிழ்க் குடி.


தமிழ்க் குடியில் பிறந்த ஒல்காப்பெரும்புகழ்த் தொல்காப்பியர் தொன்மைச் சிறப்புக்குத் தொல்காப்பியத்தையும் வான்புகழ் வள்ளுவர் வாழ்வியல் சிறப்புக்கு வளளுவத்தையும் முத்தமிழ் முனிவர் இளங்கோ அடிகள் முத்தமிழ் சிறப்புக்குச் சிலப்பதிகாரத்தையும் இயற்றியத் தமிழுக்கும் தமிழகத்துக்கும் புகழும் பெருமையும் சேர்த்தார்கள்

தமிழர்கள் அரசியல், பொருளியல், சமுதாயவியல், மொழியியல், கல்வி, கலை, அறிவியல், இலக்கியம், பண்பாடு, தொழில், வாணிகம், சமயம் முதலிய பல துறைகளிலும் சிறப்பாக வாழ்ந்தார்கள்.

ஆடவர், மகளில் பிறந்த நாள், நாழிகை முதலியவற்றைக் குறித்து ஒவ்வொருவருக்கும் பிறப்பியம்(ஜாதகம்) எழுதி வைத்துப் பாதுகாக்கும் பழக்கம் தமிழர்களிடம் அன்றும் இன்றும் இருந்து வருகிறது. இத்துணைச் சிறப்புகளுக்குரிய தமிழர்கள் - தனி மனித வாழ்க்கையில் தனிக் கவனம் செலுத்திய தமிழர்கள் குடும்பம், குமுகாயம்(சமுதாயம்), நாடு பற்றிய நிகழ்ச்சிகளையும் வரலாறுகளையும் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஆண்டுக் கணக்கால் குறிக்கும் வழக்கத்தைப் பின்பற்றவில்லை என்பது பெரிதும் வருந்துதற்குரியது.

இக்குறைக்குக் காரணம் எது? யார்? தனி மனிதச் சிறப்பையும் செல்வாக்கையும் பெயரையும் புகழையும் போற்றுகின்ற அளவுக்கு மொழியையும் இனத்தையும் நாட்டையும் பொதுவாகப் பேணும் நல்ல கொள்கை தமிழர்களிடையே வேரூன்றவில்லை போலும்.

தலை நகரின் தோற்றம், பேரரசன் பிறப்பு அரசர்கள் முடி சூட்டிக்கொண்ட ஆட்சித் தொடக்கம் ஆகியவற்றை அடிப்படையாகக் கொண்டு அந்தந்த அரசர் பெயரோடு தொடர் ஆண்டு கடைப்பிடித்து வந்தனர் என்று சங்க இலக்கியங்கள், கல்வெட்டுகள், செப்புப்பட்டயங்கள் மூலம் தெரிகின்றன.

தமிழ் மொழிக்கு, தமிழ் மக்ளுக்கு, தமிழ் கூறும் நல்லுலகுக்குப் பொதுவான தொடர் ஆண்டால் காலத்தைக் கணக்கிடல் வேண்டும் என்ற கருத்து அரசர்களிடம் இல்லை என்று தோன்றுகிறது. தமிழ்ப் புலவர்கள், அறிஞர்கள், சான்றோர்கள் அதன் இன்றியமையாமையை அரசர்களுக்கோ மக்களுக்கோ எடுத்துக் கூறியதாகச் சான்றுகள் கிடைக்கவில்லை

இந்தச் சூழ்நிலையையும் தமிழர்களிடையே மண்டிக்கிடந்த கடவுள் மதச் செல்வாக்கையும் அரசர்களிடம் பெற்றுள்ள நெருக்கத்தையும் பயன்படுத்திப் பிரபவ முதல் அட்சய வரை உள்ள 60 ஆண்டு முறையைப் புகுத்திவிட்டது ஆரியம்.

அறுபது ஆண்டுகளின் பெயர்களில் ஒன்று கூடத் தமிழ் இல்லை. 60 ஆண்டுகள் பற்சக்கர முறையில் இருப்பதால், 60 ஆண்டுகளுக்கு மேற்பட்ட காலத்தைக் கணக்கிடுவதற்கு உதவியாகவும் இல்லை.

அதற்கு வழங்கும் கதையோ ஆபாசமாகவே இருக்கிறது. அந்தக் கதை வருமாறு:

ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடியிருக்கிறீரே, எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,

அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என்றான். இதற்கு நாரதர் உடன்பட்டு அறுபதினாயிரம் வீடுகளிலும் பார்த்தார்.

எங்கும் அவர் இல்லாத பெண்களைக் காண முடியாததால் நாரதர் கண்ணனிடமே வந்து அவர் திருமேனியில் மையல் கொண்டு அவரை நோக்கி நான் தேவரிடம் பெண்ணாய் இருந்து சமிக்க எண்ணம் கொண்டேன் என்றார்.

கண்ணன் நாரதரை யமுனையில் ஸ்நானம் செய்ய ஏவ, நாரதர் அவ்வாறே செய்து ஓர் அழகுள்ள பெண்ணாக மாறினார்.

இவருடன் கண்ணன் 60 வருடம் கிரீடித்து அறுபது குமாரரை பெற்றார். அவர்கள் பிரபவ முதல் அட்சய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்
(அபிதான சிந்தாமணி - பக்கம் 1392)

ஆணும் ஆணும் கலவி செய்து பெற்றெடுத்த குழந்தைகள் தாம் அறுபது தமிழ் வருடங்கள்.


அறிவுக்கும் இது பொருந்துகிறதா? காலத்திற்கும் கருத்திற்கும் ஒத்து வருகிறதா? என்ற வினா எழுவது ஒருபுறம் இருக்கட்டும்.

இக்குழப்ப ஆண்டு முறையால் குடும்பம், குமுகாயம் நாடு, உலகம் ஆகியவற்றின் வாழ்க்கை வரலாற்று நிகழ்ச்சிகளைக் கணக்கிடுவதற்கு முடியவில்லையே! என் செய்வது?

இந்து இழிவை எண்ணிக் கொதிப்படைந்த தந்தை பெரியார் தமிழனுக்குக் காலம் கிடையாது. ஒன்று பார்ப்பானுடையது அல்லது ஆங்கிலேயனுடையதுதான் ஆண்டாகப் பயன்படுகிறது என்று கூறுவதைத் தமிழர்கள் கருத்தில் கொள்ள வேண்டும்.

இயேசு கிறித்துவை வைத்துக் கிறித்தவர்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு. முகமது நபியை முதலாகக் கொண்டு முசுலீம்களுக்குத் தொடர் ஆண்டு உண்டு.

சாலிவாகனனை வைத்து வட மொழியாளர்களுக்குத் தொடர் ஆண்டு இருக்கிறது. புத்தர்களுக்குத் தொடர் ஆண்டு புத்தர் பெருமானை வைத்துப் போற்றப்படுகிறது.

சமணர்கள் மகாவீரரை வைத்துத் தொடர் ஆண்டு பின்பற்றுகிறார்கள். மலையாளிகள் கொல்லம் தோடர் ஆண்டைக் கடைப்பிடிக்கிறார்கள். வங்காளிகளுக்கு, பார்சிகளுக்கு, யூதர்களுக்கு, சௌராட்டிரர்களுக்கு ஒவ்வொரு தொடர் ஆண்டு உண்டு.

ஆனால், ஒரு மொழி வைத்து உலகாண்ட தமிழனுக்கு, உலக முதல் மொழியாகிய தமிழைத் தாய் மொழியாகக் கொண்ட தமிழனுக்குத் தமிழ் மொழி, தமிழ் மக்கள், தமிழ்நாடு ஆகியவற்றிற்குப் பொதுவான ஒருவர் பெயரில் தொடர் ஆண்டு இல்லையே!

இவற்றை எல்லாம் நன்கு உணர்ந்த தமிழ் அறிஞர்கள், சான்றோர்கள், புலவர்கள் 1921 ஆம் ஆண்டு சென்னைப் பச்சையப்பன் கல்லூரியில் கூடி ஆராய்ந்தார்கள். திருவள்ளுவர் இயேசு கிறித்துப் பிறப்பதற்கு 31 ஆண்டுகள் முன்பு பிறந்தவர் என்றும் அவர் பேரில் தொடர் ஆண்டு பின்பற்றுவது என்றும் அதையே தமிழ் ஆண்டு எனக் கொள்வது என்றும் முடிவு செய்தார்கள்

இந்த முடிவு செய்தவர்களில் தலையான தமிழ் அறிஞர்கள் தமிழ்க் காவலர் சுப்பிரமணிய பிள்ளை, சைவப் பாதிரியார் சச்சிதானந்தம் பிள்ளை, நாவலர் ந.மு.வேங்கடசாமி நாட்டார், நாவலர். சோமசுந்தர பாரதியார், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ.விசுவநாதம் ஆகியோர் ஆவார்கள்.

பத்தன்று; நூறன்று; பன்னூறன்று;
பல்லாயி ரத்தாண்டாய்த் தமிழர் வாழ்வில்
புத்தாண்டு தை முதல் நாள்; பொங்கல் நன்னாள் என்னும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பாடல் கருத்தும் தமிழருக்குத் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்பதை நன்கு தெளிவு படுத்துகிறது.

தை முதல் நாள் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம். அன்று பெரும் பொங்கல். பொங்கல் நாளன்று புத்தாண்டு தொடங்குவதால் பொங்கல் புத்தாண்டு என்று போற்றிப் பின்பற்றப்படுகிறது.

தமிழ் ஆண்டாகிய திருவள்ளுவர் ஆண்டு முறை என்பது தை மாதத்தை முதல் மாதமாகவும் மார்கழியை இறுதி மாதமாகவும் வழக்கில் உள்ள கிழமைகளையும் கொண்டது.

புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் திருவள்ளுவர் காலம் கி.மு.31. எனவே, திருவள்ளுவர் அண்டு கண்டுபிடிக்க ஆங்கில ஆண்டுடன் 31ஐ கூட்டல் வேண்டும். 1892+21=202

தமிழ்நாடு அரசு திருவள்ளுவர் ஆண்டு முறையை ஏற்று 1971 முதல் தமிழ்நாடு அரசு நாட்குறிப்பிலும் 1972 முதல் தமிழ் நாடு அரசிதழிலும் 1981 முதல் தமிழ்நாடு அரசின் அனைத்து அலுவல்களிலும் பின்பற்றி வருகிறது.

உலகில் உள்ள நாடுகள் 269 உலக நாடுகள் மன்றத்தில் (யு.என்.ஓ) சேர்ந்துள்ள நாடுகள் 175 தமிழ் இன மக்கள் வாழ்கின்ற நாடுகள் 72. இவர்களின் தொகை ஏறத்தாழப் பதின்மூன்று கோடி.

72 நாடுகளில் வாழ்கின்ற தமிழர்கள் அனைவரும் பொங்கல் இடும் தை முதல் நாளையே தமிழ்ப் புத்தாண்டு நாள் என்று பின்பற்றுகின்றனர்.

தமிழ் நாட்டில் தமிழ் இனத் தலைவர்கள், தமிழ் அறிஞர்கள், தமிழ்ச் சான்றோர்கள், தமிழ்ப் புலவர்கள் முதலிய அனைவரும் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் தை முதல் நாள் என்று ஏற்றுப் போற்றி வருகிறார்கள்.

புலவர்கள், அறிஞர்கள், முனைவர்கள், சான்றோர்கள் என்று 49 பெருமக்களைக் கொண்டு முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் அமைத்துள்ள தமிழகப் புலவர் குழுவும் தை முதல் நாளே தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்ற முடிவு செய்து வழக்கில் கைக்கொள்ளுமாறு தமிழ் மக்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.

தமிழ் மலையாளம் மறைமலை அடிகள் நிறுவிய தனித் தமிழ் இயக்கத்தினரும் தை முதல் நாள்தான் தமிழ்ப் புத்தாண்டுத் தொடக்கம் என்று நடைமுறைப்படுத்தி வருகிறார்கள்.

மொழி ஞாயிறு தேவநேயப் பாவாணர் அமைத்துள்ள உலகத் தமிழ்க் கழகத்தினரும் தை முதல் நாள் என்றே பின்பற்றியும் பரப்பியும் வருகிறார்கள்.

ஒரு நாட்டில் ஒரு முறையைப் பெருவாரியான மக்கள் கைக்கொள்வார்களானால் அதனைச் சட்ட சம்மதமாக்க வேண்டியது அரசின் கடமையாகும் என்று உலகில் 72 நாடுகளில் வாழ்கின்ற 13 கோடி தமிழ் மக்களின் இதயத்தை ஆள்கின்ற மாமன்னன் நம் அண்ணா கூறியுள்ளார். --
வ.வேம்பையன். (அமைப்பாளர் தலை அறிவியல் மன்றம், பகுத்தறிவாளர் கழகம், கல்பாக்கம்-603102.)
source:தமிழருக்குத் தமிழ்ப்புத்தாண்டு எது?
-----------------------------------------------

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

===>பகுதி 82 – 2 to 84. சபரிமலை அய்யப்பன் ரக‌சியங்கள். அடங்காகாம சிவனுக்கும் ஆண்கடவுள் பெருமாளுக்கும் பிறந்த அய்யப்பன்.

4 comments:

  1. வணக்கம் தாத்தாசாரியார் ஐயா, உங்களது பதிவுகள் சிந்தனையை தூண்டும் பதிவுகள் வாழ்த்துக்கள்.

    ReplyDelete
  2. இப்போது படிக்க ஆரம்பித்துள்ளேன். விளக்கம் வேண்டும் போது வேண்டலாம்?

    ReplyDelete
  3. மூதேவிகள் அனைவரும் தமிழை கற்று தேர்ந்தவர்கள் தான் . தமிழை பேச மறுப்பவர்கள். தமிழில் உள்ள அனைத்து நல் கருத்துக்களுக்கும் ஒரு கற்பனை கதை புணந்து .அதையே உண்மை என்று நம்ப வைக்க கதை புனைந்தனர். அவ்வளவே.

    ReplyDelete