இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்துக்களே! விழிமின்! எழுமின்! .ஆபாசமே ஆயுதமா?.

 ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான்.

ஆபாச ஆலமரத்துக்கு விதை. மகாபாரதம் அநீதியான செயல்களின் தொகுப்பு.

 அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான்.வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

*பூமி தட்டையானது ?பூமி அய்ந்து கண்டங்களா ? ஏழு கண்டங்களா?

பகவத் கீதையை கொண்டு வந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!
இந்துக்களே! விழிமின்! எழுமின்!.ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,.(USA).

7.b. புனித நூல்கள் - வேதங்கள் ஹிந்து மதம்.
இராமாயணக் கதைகள்.

காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.

இராமாயணத்தை ஒரு முறை நீங்கள் படித்தால் அது வேத நூல் அல்ல என்ற முடிவுக்கு அவசியம் வருவீர்கள். மாறாக அதில் ஆபாசம், தகாப்புணர்ச்சி, பொய், ஏமாற்றுக்கதைகள் ஆகியவையே நிரம்பக் கிடக்கக் காண்பீர்கள்.

ஒரு சராசரி ஹிந்து இவற்றில் எதையுமே தெரியாமல் இருக்கின்றான். அவன் உண்மையிலேயே இராமாயணத்தைப் படிப்பானேயானால் அவன் இப்படியொரு மதத்திற்கு தான் சொந்தக்காரனாக இருப்பது அறிந்து வெட்கப்படுவான். வேதனைப்படுவான். தலைகுனிவான். அதிலிருந்து தப்பிக்க முயற்சிப்பான்.


தொடர்பு உள்ளவை.

வேதங்களின் வண்டவாளம்.

ஏ சேர்க்கை செய்வதற்குத் தகுதியுள்ள வாலிபனே! நீ உனக்கு விவாகம் செய்த பெண்ணை அல்லது நியோக(வியபிசார) விதவையை நல்ல சந்ததிகளுடையவளாகச் செய்விப்பாயாக...

ஏ பெண்ணே! நீயும் விவாகம் முடித்துக் கொண்ட அல்லது நியோகத்தில் (வியபிசாரத்தில்) சேர்த்துக் கொண்ட புருஷனைக் கொண்டு பத்துப்பிள்ளைகள் ஈன்றெடுப்பாய்... பதினோராவது புருஷனை நியோகத்தில்(வியபிசாரத்தில்) பெற்றுக் கொள்வாய் (ரிக் வேதம் 10, 85; 45)

ஒவ்வொரு பெண்ணும் (கலியாணமில்லாமலேயே) பதினொரு புருஷன் வரையிலடைந்து நியோகத்தில் (வியபிசாரத்தில்) பத்துபிள்ளைகள் வரையில் பெற்றுக் கொள்ளும்படி வேதம் கட்டளையிடுகின்றது.

இதுபோல் ஆடவனும் பதினொரு பெண்களுடன் வியபிசாரத்தின் மூலம் பிள்ளைகளைப் பெற்றுக் கொள்ளலாமென்றும் கூறுகின்றது.

எப்படிப் பசுக்கள் தமக்கு வேண்டிய நேரத்தில் தகுந்த மாதிரியாக உயிர்ப் பிராணிகளை சந்தோஷப்படுத்துகின்றதோ, அப்படியே நல்ல ஸ்திரீகள் ஒவ்வொரு நேரத்திலும் தங்கள் கணவன்மார்களையும், மற்றவர்களையும் திருப்தி செய்து சந்தோஷப்படுத்துவாளாக (யஜுர் 17-3)

ஆடுமாடுகள் போலவே இடம் நேரம் முதலியவைகள் கூட கவனியாமல், புருஷர்களுடன் மட்டுமின்றி மற்ற ஆடவர்களுடனும் சுகித்திருப்பதற்கு வேதம் இடம் கொடுக்கின்றது.

SOURCE: http://viduthalai.periyar.org.in/20101217/news33.html

கீதை.

கீதையின் உண்மையான வசனங்களை திரித்தும் மறித்தும் பிராமணர்கள் தங்களுக்குத் தகுந்தடி பயன்படுத்திக் கொண்டிருக்கின்றார்கள்.

இந்த உண்மைகளை 'The Gita as it is ‘ என்ற நூலில் சமஸ்கிருத மொழி வல்லநர் Phulgenda Sinha எனபவர் வெளியிட்டிருக்கினறார். இந்த நூல் பின்வரும முகவரியில் கிடைக்கும்.

Open Court, La Salla, Illimois 61301, USA - Price: US Dollar: 19.95

தொடர்பு உள்ளவை.

19ஆம் நூற்றாண்டும், பகவத் கீதையும் !

பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும், பகவத் கீதையை கொண்டுவந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இந்திய மண் முழுவதும் அந்நியருக்கு அடிமைப்பட்டுக் கிடந்தபோது அதிலிருந்து விடுபடுவதற்கு இந்தியர்களை ஒன்றுபடுத்தி ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவதற்கு பொதுவான விடயம் ஒன்று தேவைப்பட்டதை, விடுதலைப் போராட்டத்தில் போராடிய மகாத்மா காந்தி உட்பட அனைத்துத் தலைவர்களும் உணர்ந்தனர்.

இந்தியர்களை குறிப்பாக பெரும்பாண்மை என்ற சொல்லாடலில் வைத்திருக்கும் இந்துக்களை ஒன்றுபடுத்துவதென்றால் பொதுவாக எதாவது ஒரு அம்சம் இருக்க வேண்டும். அது எல்லோரும் ஏற்றுக்கொள்ளக் கூடியதாகவும் இருக்க வேண்டும் என்றும், மேலும் அதை முன்னிலைப்படுத்திப் போராடினால் அது ஊக்கம் தருவதாக இருக்க வேண்டும் என்று நினைத்தனர்.

இந்த தேடலில் திடீர் ஞான உதயமாக காட்சி கொடுத்ததுதான் பகவத் கீதை.

19 ஆம் நூற்றாண்டுக்கு முன் பகவத் கீதை என்பது ஒரு உபநிடத நூல் என்ற அளவில் மிகச் சிலரால் பொத்தி பொத்தி உயர்வாக பேசப்பட்டு வந்திருந்தது. நாடுமுழுவதும் பேசப்படாத, மொழி பெயர்க்கப்படாத நூலாகவே அது இருந்தது. அதைத்தாண்டி பகவத் கீதையின் தேவை வாழ்வியலுக்காகவோ வேறு எதற்காகவோ பயனளிக்கக் கூடியது என்று ஆராய்ச்சி எல்லாம் எவரும் செய்யவில்லை.

மேலும் பகவத் கீதை அன்றாடத் தேவைக்கு மிக அவசியம் என்ற காரணம் சமூக காரணங்கள் இருக்கவில்லை.

பகவத்கீதையின் ஒரு சிறப்பு அம்சம், வேதத்தை நம்பும் வைதீகத்தின் கருத்துக்களை அது உள்வாங்கி இருக்கிறது என்பதால் வைதீக பிராமணர்களாலும் அது சிறப்பிக்கப்பட்டது.

அதே போன்று கிருஷ்ணர் அருளியது என்ற தோற்றம் இருப்பதால் வைணவர்களாலும் போற்றப்பட்ட பொதுவான நூலாக அது இருந்தது.

இந்த இரு அம்சங்களை முதலில் கருத்தில் கொண்டுவந்த விடுதலைப் போராட்ட இந்து அமைப்பினர், அதை முன்னிலைப் படுத்துவது என்ற முடிவுக்கு வந்தனர்.

இது மட்டும் போதுமா ? இது வெறும் வைதீக மரபினரை மட்டுமே திருப்தி படுத்தும் என்பதால், மேலும் அதற்கு புனித நூல் அங்கீகாரம் கொடுத்தால் தான் அவற்றை மற்ற இந்து சமயத்தை உள்ளடக்கிய பிற சமயத்தினரும் ஏற்றுக் கொள்வார்கள் என்று கருதினர்.

ஆங்கிலேயர்களால் ஏற்பட்ட நீதிமன்றத்தில் சத்திய உறுதி (பிரமாணம்) ஏற்பது என்பது வழக்கு நடக்கும் போது முதலில் செய்யப்படும் ஒரு முறை (சம்பிரதாயம்). இதன் மூலம் தாம் கடவுளின் பெயரால் சொல்வதெல்லாம் உண்மை என்று ஆரம்பித்து அதன் அடிப்படையிலும், சாட்சியங்களின் அடிப்படையிலும் நீதி வழங்கப்படுகிறது.

ஏற்கனவே புனித நூல் என்ற அந்தஸ்தை கிறித்துவ பைபிள் பெற்றிருப்பதால் கிறிஸ்துவர்களுக்கும், குரானை புனித நூலாக கொண்டுள்ள இஸ்லாமியர்களுக்கோ எந்த பிரச்சனையும் இல்லை.

ஆனால் இந்துக்கள் என்று வரும் போது ஒரு புனித நூல் என்பது இருந்து அது எல்லோராலும் ஏற்றுக் கொள்ளப்பட்டிருந்தால் மட்டுமே அவை நீதிமன்றத்தில் பயன்படுத்தப்படும் என்ற நிலை அன்றைய நீதீமன்றங்களில் இந்து வழக்குகளுக்கு அவசியமானதாக இருந்தது.

இந்த சூழ்நிலையில் பகவத்கீதையை புனித நூல் என்று பொதுப்படுத்துவதைத் தவிர வேறு வழியில்லை என்று இந்து தலைவர்கள் முடிவு செய்து பகவத்கீதையை முன்னிலைப்படுத்த பல்வேறு இந்திய மொழிகளில் உரை எழுத தலைப்பட்டனர்.

காந்திஜி, இராஜாகோபால் ஆச்சாரியார், கோபால கிருஷ்ண கோகலே மற்றும் நம் பாரதியாரும் வந்தே மாதிரத்தை மொழி பெயர்த்தவுடன் கீதையை மொழி பெயர்த்து வெளியிடும் முயற்சியில் ஈடுபட்டனர்.

அதன்பிறகு இந்து சமயத்தில் சைவம் - வைணவம் என்று பெரிய எதிர்ப்பு எதுவும் வராததால் பகவத் கீதை புனித நூலின் சிறப்புத் தகுதியை பெற்றது.

பகவத்கீதை முழுவதற்குமே பொருள் சொல்லி போற்ற முயன்றிருந்தால் அது அன்றே நிராகரிக்கப்பட்டு இருக்கும்,

ஏனென்றால் 'நான்கு வர்ணங்கள் என்னிடமிருந்தே தோன்றியதாகவும், யார் யார் ? எங்கிருந்து பிறந்தார்கள்' என்றும் கண்ணன் அதில் ஆணித்தரமாக சொல்கிறான்.

எனவே அவற்றைத் தவிர்த்து கர்மயோகத்தில் காட்டியுள்ள 'செயல்கள்' குறித்து மட்டுமே விரிவாக எடுத்துக் கூறப்பட்டது. 'கடமையை செய், பலனை எதிர்பாராதே' என்ற வாக்கியம் முன்னிலைப் படுத்தப்பட்டது.

ஆங்கிலேயர்களுக்கு எதிராக போராடுவது என்பது கடமை என்றும் போராடுபவர்களே சத்திரியர்கள், 'வெற்றித்தோல்வி பற்றி எண்ணம் எதுவுமின்றி போராட்டம் ஒன்றையே குறிக்கோளாக் கொள்ள வேண்டும்' என்று இந்து போராட்ட வீரர்களுக்கு அது உபதேசமாக்கப்பட்டது.

ஏனென்றால் அப்போதும், எப்போதும் இருப்பது போலவே இஸ்லாமிய - இந்து சண்டைகள், கிறித்துவ - இந்து சண்டைகள் இருந்தன.

அவர்கள் புனிதப்போர் என்று புனித நூல்களின் மேற்கோளைக் காட்டிப் போரிடும் போது அதே செயல் (உத்)வேகம் இந்து மதத்து இளைஞர்களுக்கும் இருக்க வேண்டும் என்பதற்காக பகவத்கீதை புனித நூலாகவும் கர்மயோக கோட்பாடுகள் போரைப்பற்றிய தெளிவு கொடுப்பதற்கும் பயன்பட்டது.
**********************

இவையெல்லாம் சுதந்திர போராட்டத்துக்கு முந்தைய கீதைப்பற்றி மக்கள் மத்தியில் முன் வைக்கப்பட்ட கருத்துக்கள். கீதைவழி - எதிர்பார்தது போலவே இந்து இளைஞர்களின் எழுச்சியாலும் விடுதலை போராட்டம் வெற்றி பெற அதுவும் ஒரு காரணமாக அமைந்தது.

அதன் பிறகு அது இந்து வெறியாகவும் மாறியது, முடிவில் ?
மகாத்மாவே கொலை செய்யப்பட்டார்.

இன்றைய தேவை என்று பகவத் கீதையில் இந்திய ஒருமைப்பாட்டுக்கு குறிப்பாக இந்துக்களின் ஒருமைப்பாட்டுக்கு எந்த விடயமும் இல்லை.

தமிழக இந்துக்களுக்கு கீதையோ, வேறு வடமொழி நூல்களோ புதிதாக எதுவும் சொல்வதற்கு என்று ஒன்றுமே இல்லை எனலாம்.

சாணக்கியர் எழுதிய அர்த்த சாஸ்திரம், கெளடில்யர் எழுதிய தர்ம சாஸ்திரம், வாத்ஸ்யாயனர் எழுதிய காம சாஸ்திரம் ஆகிய மூன்றிற்கும் முன்பே முப்பாலும் ஒருங்கே இணைந்த ஐயன் வள்ளுவனின் அழகு குறள்கள் நமக்கு இருக்கின்றன.

'ஒன்றே குலமும் ஒருவனே தேவனும்' என்றுரைக்கும் திருமூலச் சித்தரின் திருமந்திரத்தை விடவும், சைவர்கள் மூவர் அருளிய தேவரம்,திருவாசகத்தை விடவும் வைணவர்களின் நாலாயிரம் திவ்யபிரபந்தத்தை விடவும் பக்தியை வளர்க்க கீதை எந்த விதத்திலும் பயனளிப்பதாக நான் கருதவில்லை.

பகவத்கீதை - இதில் மனு என்ற அரக்கன் மறைவாக பதுங்கி இருந்து சந்தர்ப்பம் கிடைக்கும் போதெல்லாம் பிறப்பை வைத்து இழிவுபடுத்தவும், பிறப்பின் அடிப்படையில் 'தகுதிகள்' பற்றி பேசவும் கண்விழித்துக் காத்துக் கொண்டிருக்கிறான்.

இதற்குமேலும் தமிழக இந்துக்கள் கீதையை போற்ற ஆரம்பித்தால் அதில் மறைந்துள்ள வர்ண சூட்சமத்தை சூரணமாக்கி தின்று அந்த தெம்பில் வெளியே வந்து பயமின்றி நடனமே ஆடுவான்.

புனித நூல் என்பதால் சில கருத்துக்களில் உடன்பாடு (சமரசம், காம்ரமைஸ்) செய்து கொள்ளலாம் என்று நினைத்து அலட்சியமாக இருந்தால் மனுவென்ற அரக்கன் கீதையின் (கிருஷ்ணனின்) ஆதரவு நிழலில் படுத்துக்கிடக்கும் ஆதிசேசன் போன்றவன்.


எந்த நேரத்திலும் அவன் விஷம் கக்கினால் மீண்டும் நாமெல்லாம் சூத்திரர்கள் ஆக்கப்படுவோம் என்ற ஆபத்து நிறையவே இருக்கிறது.


சூத்திரன் - இதன் பொருள் வேசி மகனா ? இழிபிறவியா ? மனுவில் உள்ள குறிப்புப்படி அப்படித்தான் பொருளாம் !!!


எதைக் கொண்டுவந்தாய் எதை இழப்பதற்கு ?


பகவத் கீதையை கொண்டு வந்தால் அதன் பிறகு இழப்பதற்கு ஒன்றுமே இல்லை!!!

இன்று உன்னுடையதாக இருப்பது (அதாவது நீ மீட்டுக் கொண்டது ?) நாளை வேறு ஒருவருடையது ஆகும் ! :))

அதன்பிறகு பெறுவதற்கென்று எதாவது கிடைத்தால் தானே இழப்பைப் பற்றி பேச முடியும் ? : நன்றி: govikannan
சுட்டி: http://govikannan.blogspot.com/2007/08/19.html

-----------

மகாபாரதம் அநீதியான செயல்களின் தொகுப்பு

ஏகலைவனின் விரலை துரோணர் கேட்டது அநீதியானது
எதுவுமே சொல்லிக் கொடுக்காமல் ஏகலைவனின் விரலை துரோணர் கேட்டது அநீதியானது-சுப்ரீம் கோர்ட்.

டெல்லி: எதுவுமே சொல்லிக் கொடுக்காமல், நேரடி குருவாக இல்லாத நிலையில், ஏகலைவனிடம் துரோணர் குரு தட்சணை கேட்டது நியாயமே இல்லாதது. அதை விட ஏகலைவனின் கட்டை விரலைக் கேட்டது மிகவும் அவமானகரமானது என்று உச்சநீதிமன்றம் கருத்து தெரிவித்துள்ளது.

மகாபாரதத்தின் முக்கிய பாத்திரங்களில் ஒன்று துரோணர். குருக்களிலேயே மிகவும் சிறந்த குருவாக கருதப்படுவர் துரோணாச்சாரியார். இவர் பாண்டவர்களுக்கும், கெளரவர்களுக்கும் குருவாக விளங்கியவர்.

ஆனால் துரோணச்சாரியாரை உச்சநீதிமன்றம் நேற்று கடுமையாக சாடியது. அவர் செய்த செயல் அநீதியானது, அவமானகரமானது என்றும் கடுமையாக விமர்சித்துள்ளது.

தனது சிஷ்யரான அர்ஜூனனுக்கு சாதகமாக அவர் நடந்து கொண்டதாகவும், இதற்காக தன்னை மானசீக குருவாக ஏற்றுக் கொண்ட ஏகலைவனிடம் அவர் அநீதியாக நடந்து கொண்டதாகவும் உச்சநீதிமன்றம் சாடியுள்ளது.

நீதிபதிகள் மார்க்கண்டேய கட்ஜு மற்றும் கியான் சுதாமிஸ்ரா ஆகியோர் அடங்கிய பெஞ்ச் முன்பு நேற்று ஒரு வழக்கு விசாரணைக்கு வந்தது.

மகாராஷ்டிர மாநிலத்தைச் சேர்ந்த பில் என்ற பழங்குடியினத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணை, அவர் வசித்து வரும் மலைவாழ் கிராமத்தைச் சேர்ந்த நான்கு பேர் அடித்து உதைத்து நிர்வாணமாக ஊரில் நடக்க வைத்து அவமானப்படுத்தியுள்ளனர்.

இந்த வழக்கில் நான்கு பேரும் கைது செய்யப்பட்டனர். அவர்களுக்கு அகமதுநகர் மாஜிஸ்திரேட் கோர்ட் ஒரு ஆண்டு சிறைத் தண்டனை கொடுத்தது. ஆனால் அவர்கள் நான்கு பேரும் அவுரங்காபாத் உயர்நீதிமன்றக் கிளையில் அப்பீல் செய்து விடுதலையாகி விட்டனர்.

இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் அப்பீல் செய்யப்பட்டது. அந்த வழக்கைதான் நேற்று கட்ஜூ தலைமையிலான பெஞ்ச் விசாரித்தது.

விசாரணைக்குப் பின்னர் நான்கு பேருக்கும் விதிக்கப்பட்ட தண்டனையை உறுதி செய்து பெஞ்ச் உத்தரவிட்டது. மேலும் இந்த வழக்கில் மகாராஷ்டிர அரசு சார்பி்ல அப்பீல் செய்யப்படாதது குறித்தும் நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர்.

வழக்கு விசாரணையின்போது பழங்குடியினரை வெகுவாக பாராட்டியும், புகழ்ந்தும் நீதிபதிகள் கருத்து தெரிவித்தனர்.

இதுகுறித்து நீதிபதிகள் கூறுகையில், பழங்குடியினர் அல்லாதவர்களை விட பழங்குடியின மக்கள் பல விஷயங்களில் மிகவும் உயர்ந்தவர்கள். அவர்களது ஒரே சொத்து வனங்களும், இயற்கையும்தான். அந்த இயற்கையைக் கொள்ளையடித்துக் கொண்டிருக்கிறார்கள் மற்றவர்கள். இது மிகப் பெரிய அநீதியான செயல்.

அவர்களுக்கு இன்று நேற்றல்ல காலம் காலமாக துரோகமும், அநீதிகளும் தொடர்ந்து கொண்டேதான் இருக்கின்றன.


மகாபாரதத்திலேயே இதைப் பார்க்கலாம்.

கெளரவர்களுக்கும், பாண்டவர்களுக்கும் குருவாக இருந்தார் துரோணர். ஆனால் அவர் என்ன செய்தார்? நடுநிலையுடன் நடக்கவில்லை அவர்.

துரோணரை தனது மானசீக குருவாக வரித்து, தூரத்திலிருந்தபடியே அவரைப் பார்த்து கற்றுக் கொண்டு வில்வித்தையில் சிறந்தவனாக உயர்ந்தவன் ஏகலைவன். ஆனால் துரோணர் என்ன செய்தார், அவனது கட்டைவிரலை குரு தட்சணையாக கேட்டார்.

துரோணர், ஏகலைவனுக்கு எதுவுமே சொல்லித் தரவில்லை. பிறகு எப்படி அவர் குரு தட்சணை கேட்க முடியும்?. அடிப்படையே அங்கு தவறாக உள்ளது.

அதை விட முக்கியமாக, தனது சிஷ்யனான அர்ஜூனன்தான் உலகிலேயே மிகச் சிறந்த வில்வீரனாக இருக்க வேண்டும் என்ற குறுகிய எண்ணத்தை மனதில் கொண்டு, வில் வித்தைக்குக முக்கியமான, வலது கை கட்டை விரலை தட்சணையாக தருமாறு ஏகலைவனிடம் கேட்டுள்ளார் துரோணர்.

இது மிகவும் அநீதியானது, அவமானகரமானது.

அன்றே பழங்குடியினருக்கு அநீதி நடந்துள்ளது. இதன் மூலம் அர்ஜூனனுக்கு போட்டியாக பழங்குடியினத்தைச் சேர்ந்த ஏகலைவன் வந்து விடாமல் தடுத்துள்ளார் துரோணர்.

இதை விட ஒரு அநீதியை எங்காவது பார்க்க முடியுமா?

மகாபாரதத்தின் ஆதிபர்வம், முழுக்க முழுக்க அநீதியான செயல்களின் தொகுப்பாக அமைந்துள்ளது.

பழங்குடியினருக்கு எந்த அளவுக்கு அநீதிகள் நடந்துள்ளன என்பதை இதைப் பார்த்தாலே அறிந்து கொள்ள முடியும் என்றனர் நீதிபதிகள்.
SOURCE: http://thatstamil.oneindia.in/art-culture/essays/2011/dronacharya-act-was-shameful-supreme-court.html
--------

ஆபாசமே அவர்களின் ஆயுதம்

இந்து மதம் என்றால் எத்தனை எத்தனையோ விமர்சனக் கணைகள் அதன்மீது!

அனைத்திற்கும் காரணங்கள் உண்டு. அடிமுட்டாள்தனத்தில் அதன் மாளிகை எழுந்திருக்கிறது.

அதன் அங்குலம் அங்குலமான இடம் ஒவ்வொன்றுமே ஆபாசத்தில் திளைத்து, அநியாயத்துக்குக் கண்களைச் சிமிட்டிக் கொண்டு இருக்கிறது.

விபச்சாரத்தைத் தொழிலாகக் கொண்டவர்கள் கூட அதனிடம் சலாம் வைத்து புறமுதுகிட்டு ஓடவேண்டும்.

ஒழுக்கம், அறப்பண்பு, நன்னடத்தை இவற்றை மக்களிடம் பரப்பிய கவுதமப் புத்தர் - அவர் உருவாக்கிய அமைப்பு - சீலங்கள் அத்தனையையும் தவிடு பொடியாக்கிட இந்து மதம் மிகவும் கேவலமான ஒரு கலாச்சாரப் படைப்பாகக் ``கிருஷ்ண அவதாரத்தை’’க் கற்பித்தது.

இதுபற்றி என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா இவ்வாறு கூறுகிறது.

``புத்த பிரான் அற மொழிகளில் (பஞ்ச சீலம்) முக்கியமானது பிறன் மனைவியை விரும்பாதே என்பது. இந்தக் கொள்கைக்கு எதிர்ப்பாக கிருஷ்ண அவதாரக் கதை ஆரியப் பார்ப்பனர்களால் இட்டுக் கட்டிப் பரப்பப்பட்டது.

காம விளையாட்டுகளை மக்களிடையே அதிகரிக்கச் செய்வதே ``கிருஷ்ண லீலா’’ கதையின் நோக்கம்.

புத்தர் கொள்கைகளின் சொல் வாக்கை ஒழிக்கவே கிருஷ்ண அவதாரக் கதை இட்டுக் கட்டப்பட்டது’’ என்று மிகச் சரியாகக் கணித்தது என்சைக்ளோபீடியா பிரிட்டானிகா.

இந்த வகையில் இன்றைய சின்னத்திரை, பெரிய திரை ஆபாச ஆலமரத்துக்கு விதையே இந்து மதத்தின் கிருஷ்ண அவதாரம் தான்.

அண்ணல் அம்பேத்கர் எழுதிய ``ராமன், கிருஷ்ணன்-பற்றிய புதிர்கள்’’ என்ற நூலில் கிருஷ்ணனைப்பற்றி எழுதியவை இந்த இடத்தில் இணைத்துப் பார்க்கத்தக்கவை!

``கிருஷ்ணன் - இவன் ஒரு காமவெறியன். பல பெண்களுடன் உறவு கொண்டவன். ருக்மணி என்ற மனைவி இருந்தும், ராதா என்ற பெண்ணோடு தொடர்பு கொண்டிருந்தான்.

கிருஷ்ணனுக்கு எட்டு மனைவிகளும், 16,108 வைப்பாட்டிகளும், 1.80 லட்சம் குழந்தைகளும் இருந்தனர்’’ (பக்கம் 338) என்று அறிஞர் அம்பேத்கர் குறிப்பிட்டுள்ளார்.

குளத்தில் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் ஆடைகளைக் களவாடியதும், மரத்தின் உச்சியில் அமர்ந்து குளிக்கும் பெண்களின் உடல்களை இரசிப்பதும்தான் ஒரு கடவுள் வேலையா?

இந்தக் கடவுளிடத்தில் பக்தி செலுத்துபவர்கள் எந்தத் தாக்கத்துக்கு, உணர்ச்சிக்கு ஆளாவார்கள்?

ஒரு பக்தை - அவருக்கு ஆண்டாள் என்று பெயர். கண்ணான அந்தக் கிருஷ்ணனைக் காதலனாக வரித்துக் கொண்டு வருந்தி வருந்தி எழுதிய பாடல்கள் தாம் எத்தனை! எத்தனை!!

அதில் வழிந்தோடும் குடலைப் புரட்டும் ஆபாசச் சாக்கடையை எது கொண்டு சாற்றுவது!

திருப்பாவை மட்டுமல்ல - ஆண்டாள் ``நாச்சியார் திருமொழி’’ என்ற பக்திப் பாசுரத்தையும் `அருளி’யுள்ளார்.

`கொக்கோகம்’ வெட்கித் தலை குனிய-வேண்டும். எடுத்துக்காட்டுக்கு இதோ ஒரு பாடல்:

``முத்தன்ன வெண்முறுவல் செவ்வாயும் முலையும் அழகழிந்தேன் நான் புணர்வதோர் ஆசையினால் - என் கொங்கை கிளர்ந்து குமைத்து குதூகலத்து ஆவியை ஆகுலம் செய்யும் அங்குயிலே!’’

நாச்சியார் தன்னுடைய காதலனாகிய கண்ணனிடம் கொண்ட காதல் அவள் எண்ணப்படி நிறைவேறாமல் தாம் பட்ட உள்ளுணர்வோடு கூடிய துன்பத்தின் மிகுதியைக் குயிலிடம் கூறுவதாகப் பாட்டடிகள் அமைந்துள்ளன.

``நான் முத்துக்கள் போன்ற பற்களைப் பெற்றிருந்தேன். சிவந்த வாயையும், மார்புகளையும் பெற்றிருந்தேன். கண்ணனாகிய காதலன் வந்து என்னை புணராமையால் இவைகளின் அழகையெல்லாம் இழந்தேன்.

கண்ணனைப் புணர வேண்டுமென்ற ஆசை மிகுதியால் என்னுடைய மார்புகள் மகிழ்ச்சியால் உந்தப் பெற்று, பெருத்து, உணர்ச்சி வசப்பட்டு என்னுடைய உயிரைத் துன்பப்படும்படிச் செய்கின்றது. இவைகளை அழகிய குயிலே கூறுவாயாக!

மேலும் நாச்சியார் பாடுகின்றார்:

கண்ணீர்கள் முலைக்குவட்டில்
துளிசோராச் சோர்வேனைக்
காமத்தீ உள்புகுந்து கதுவப்பட்டு
இடைக்கங்குல்
ஏமத்தோர் தென்றலுக்கு
இங்கிலக்காய் நானிருப்பேனே
என்னாகத்து இளங்கொங்கை
விருப்பித்தாம் நாள்தோறும்
பொன்னாகம் புங்குதற்கு எனப்
பரிவுடைமை செப்புமினே!

இந்தப் பாட்டடிகளின் அருவருப்பை ஒரு பெண் வெளிப்படையாக இப்படிப் பாடுவாளா என்பதை எண்ணிப் பாருங்கள். பாட்டடிகளின் கருத்து பின்வருமாறு அமைகின்றது.

கண்ணனின் பிரிவுக்கு ஆற்றாமல் வருத்தம் மிகுந்து கண்களிலிருந்து கண்ணீர் கொட்டுகிறது. அக்கண்ணீர் மார்பின் முலைகளில் படிந்து முலைகளின் முனைகள் வழியாகத் துளித்துளியாக வழியும்படி வருத்தம் அடைகின்ற நான் காம நெருப்பால் சுடப்பட்டுத் தென்றலுக்கு ஆட்பட்டு துன்பமடைந்து இங்கிருப்பேன்.

என் மார்பின் இளைய முலைகளை கண்ணன் விரும்பி நாள்தோறும் என்னைக் கூடும்படி விருப்பங் கொண்டு நான் இங்கு இருப்பேன் என்று அவனிடம் சொல்லுங்கள் என்று பாடுகின்றார்.

எந்தக் கேடு கெட்ட பெண்ணும் தம் காமவெறியை இப்படி வெளிப்படுத்துவாளா?

சாக்கடையைச் சந்தனம் என்பதும், மலக்காட்டை மலர்க்காடு என்பதும் முடை நாற்றத்தை முல்லை மணவாசம் என்பதும்தான் பக்தியும் - பார்ப்பனீயமும் அதன் ஒழுக்கமும் போலும்!

கொள்ளும் பயனொன்றில்லாத கொங்கை
தன்னைக் கிழங்கோடும்
அள்ளிப் பறித்திட்டு அவன் மார்பி
வெறிந்து என்னழலைத் தீர்வேனே!
என்றும் பாடுகிறார் ஆண்டாள்!

அந்தரங்கத்தில் கூட நடக்க முடியாத ஆபாசச் சேற்றை அள்ளி எறிகிறார் ஒரு பெண் பக்தை.

இந்து மதத்தின் கடவுள்கள் அவற்றின் தோற்றம் நடப்புகள் என்று எடுத்துக் கொண்டாலும் எல்லாம் காட்டுவிலங்காண்டித்தனமான விரகதாபத்தின் வெளியீடுகளும் – வழியல்களும் தான்.

`ஓம்’ என்னும் தாரக மந்திரமானாலும் சரி, சிவலிங்கம் என்று சொல்லப்படுவதானாலும் சரி எல்லாமே ஆண் - பெண் புணர்ச்சிகளை மையப்படுத்தும் சமாச்சாரங்கள் தாம்.

கடவுளே மோகினி அவதாரம் எடுப்பது, அந்த மோகினியைக் கண்டு இன்னொரு முழு முதற்கடவுள் சபலப்படுவது - கூடுவது - பிள்ளையைப் பெறுவது என்கிற தன்மையில் இந்து மதம் என்ற குட்டை சேறும் சகதியுமாக, கும்பியும் நாற்றமுமாக மனித நாகரிகத்தில் மூக்கைத் துளைக்கிறது.

ஒழுக்கத்தை ஒழித்து, மனிதனின் மலிவான உணர்வுகளைத் தூண்டி மீன் பிடிப்பது தான் இந்து மதத்தின் அணுகுமுறை.

கோயில் தேர்களிலும், கோபுரங்களிலும் செதுக்கப்பட்டு இருக்கும் ஆபாசத்தை முதலமைச்சர் மானமிகு - மாண்புமிகு கலைஞர் அவர்கள் சுட்டிக்காட்டினால் அவற்றை ஏன் பார்க்கிறீர்கள் என்று இந்து முன்னணியினர் கேட்டது சமாதானமாகி விடுமா?

பார்ப்பதற்காகத்தானே செதுக்கி வைத்துள்ளீர்கள்? கோயிலுக்கு மக்களை ஈர்ப்பதற்கு இந்தக் கேவலமான உபாயத்தைத்தானே கையாண்டிருக்கிறீர்கள். அதனைச் சுட்டிக்காட்டினால் வெட்கப்படுவதற்குப் பதில் வெட்டிப் பேச்சுப் பேசுவதில் நியாயம் இருக்க முடியுமா?

இந்து மதத்தின் இதிகாசங்களும், புராணங்களும் கூட இதே கெதியில்தான் – சுருதியில் தான்.

மகாபாரதத்தைப்பற்றிச் சொல்லும்பொழுது வாசகர் ஒருவர் `ஹிந்து’ நாளேட்டில் எழுதிய (17.12.1988) ஒரு கடிதம் தான் நினைவிற்கு வருகிறது. சென்னையைச் சேர்ந்த டி.அய். சுந்தரம் என்பவர்தான் அந்தக் கடிதத்தை எழுதியிருந்தார்.

தர்மபுத்திரா (யுத்திஸ்த்ரா), வாயு புத்ரா (பீமர்) ஆசியோடு குந்திக்கு, தர்மர் ஆகியோர் பிறக்கிறார்கள். தொலைக்காட்சியில் வாயுவைக் காட்டும்போது, உடனே குழந்தைகள், அந்தப் பிறப்புப்பற்றி சில கேள்விகளைக் கேட்கத் தொடங்கி விடுகிறார்கள்.
பெற்றோர்களால் அந்தக் கேள்விகளுக்குப் பதில் சொல்ல முடியவில்லை.

அது தெய்வீக சம்பந்தப்பட்டது; எனவே, அதுபற்றி எல்லாம் குழந்தைகள் கேள்வி கேட்கக் கூடாது என்று தான் பெற்றோர்கள் பதில் சொல்ல வேண்டியிருக்கிறது.

இப்போது - மேலும் தொடர்கள் ஒளிபரப்பாக இருக்கின்றன. பாண்டவர்களும், கவுரவர்களும் சூதாடுவது, பாண்டவர்கள் தோற்பது, மனைவியை வைத்தே சூதாடுவது, திரவுபதையைத் துகில் உரிவது ஆகிய காட்சிகள் எல்லாம் வர இருக்கின்றன.

இவைகளை குழந்தைகளை வைத்துக் கொண்டு எப்படிப் பார்க்க முடியும்?

நாம் நமது குழந்தைகளிடம் திரவுபதி 5 ஆன்மிக சக்திகளின் சின்னம்; எனவே, 5 பேரை மணந்து கொண்டார் என்று கூறினால் அவர்கள் திருப்தி அடைந்து விடுவார்களா?

அல்லது கட்டிய மனைவியை, மற்றவன் துகில் உரிவதைப் பார்த்துக் கொண்டிருப்பதுதான் `புருஷ லட்சணம்’ என்று அவர்களிடம் கூற முடியுமா?

நமது காலத்தைவிட இக்காலக் குழந்தைகள் மிகவும் புத்திசாலிகள். 3000, 5000 ஆண்டுகளுக்கு முன் நடந்ததை இப்போது அவர்களிடம் விவரித்து, குழப்பத்தை ஏற்படுத்தக் கூடாது.

எல்லாவற்றுக்கும் தெய்வீக முத்திரையைக் குத்தி, நாம் குழந்தைகளிடம் வியாக்யானம் செய்து கொண்டிருக்க முடியாது.

தொலைக்காட்சியில் ஒளிபரப்பாகும் மகாபாரதத் தொடர் எனவே, நள்ளிரவு சினிமாக்களை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்பும் நேரத்தில், இதை ஒளிபரப்புவது நல்லது.- இவ்வாறு அந்த வாசகர் தமது கடிதத்தில் எழுதியிருக்கிறார்.

ஹிந்துவில் கடிதம் எழுதியவர் ஒன்றும் பெரியார் தொண்டரல்லர். கருஞ்சட்டை வீரருமல்லர் - பக்தர்தான் - அதுவும் `ஹிந்து’ ஏட்டில் எழுதியிருக்கிறார் என்பதைக் கவனிக்க-வேண்டும். இந்துக்கள் இதற்கெல்லாம் என்ன பதிலை வைத்துள்ளார்கள்?

ஒருத்திக்கு ஒருவன் என்கிற உன்னத வாழ்வு தமிழர்களுக்கு உள்ளது.

அய்வருக்கும் தேவி அழியாத பத்தினி என்பது ஆரியப் பார்ப்பனர்களுடையது.

ஆரியர்களின் கலாச்சார சின்னம் தீபாவளி, கிருஷ்ண ஜெயந்தி வகைகள்! தமிழர்களின் பண்பாட்டுச் சின்னம் தைப்பொங்கல் நாள் என்னும் வேளாண்மை விழா - அவர்கள் வேறு - நாம் வேறு - வேறுபடுத்திப் பாருங்கள் - நம் வேரின் ஆழம் என்ன என்று தெரியும்!- நன்றி: "உண்மை" 16-31 ஜனவரி2007.

SOURCE: http://thamizhoviya.blogspot.com/2008/05/blog-post_7954.htmlஅறிவுக்கு ஒவ்வாத விவாதங்கள்.
பிராமணர்கள் எதையும் எல்லா மூடப்பழக்க வழக்கங்களையும் விஞ்ஞானத்தால் நிரூபிக்கபட்டது என்று வாதிடுவது வழக்கம்.

ஆனால் மருத்துவர்களும், விஞ்ஞானிகளும் இதில் முற்றாக மாறுபடுகின்றார்கள்.

இதோ சில எடுத்துக்காட்டுகள்:

பூமி தட்டையானது.

நரசிங்கபுராணம் பக்கம் 169 அபிதான சிந்தாமணி கூறுகின்றது பூமி தட்டையானது.

ஆனால் இன்று விஞ்ஞானம் ஐயத்திற்கிடமின்றி பூமி உருண்டையானது என்று நிரூபித்துள்ளது.

பூமி, சூரியன் - சந்திரன் இவற்றிற்கிடையேயுள்ள இடைவெளி தூரம்:விஷ்னுபுராணம் கூறுகின்றது:

சூரியன் 800000 மைல்களுக்கப்பால் இருப்பதாகவும், சந்திரன் 2200000 மைல்களுக்குப்பால் இருப்பதாகவும் கூறுகின்றது.

ஆனால் விஞ்ஞானம், சந்திரன் தான் பூமிக்குப் பக்கத்தில் இருக்கின்றான் என்றும் அதற்கும் பூமிக்கும் இடையில் உள்ள தூரம் 240000 மைல்கள் என்றும சூரியன் 93000000 மைல்களுக்கப்பால் இருக்கின்றான் என்றும கண்டுபிடித்து நிரூபித்துள்ளது.

பூமியின் பரப்பளவு:
மார்கண்டேய புராணம் கூறுகின்றது: பூமியின் பரப்பளவு 4000000000 சதுர மைல்கள்.

ஆனால் விஞ்ஞானம் அறுதி இட்டுக் கூறுகின்றது. பூமியின் பரப்பளவு 190700000 சதுர மைல்கள் மட்டுமே!
------------------------------
"வல்லபை கணபதி"


தொடர்பு உள்ளவை.

பூமி அய்ந்து கண்டங்களா? ஏழு கண்டங்களா?
பாதாள லோகம்? உலகின் அமைப்பு பற்றிப் புராணப் புளுகுகளைப் பார்ப்போம்..

உலகம், உயிர்கள் உருவானவை என்பது அறிவியல், ஆராய்ச்சி . உருவாக்கப்பட்டவை என்பது மதக் கருத்து. எல்லா மதங்கள் என்பவையுமே இக்கருத்தையே கொண்டிருக்கின்றன.

ஆனாலும் இந்து மதம் சற்று வேறுபாடானது. இதில் புராணங்கள் உண்டு. 18 புராணங்கள். ஒவ்வொன்றும் ஒவ்வொரு வகைப் புளுகுகள்.

இந்த உலகம், உயிர்கள் ஆகியவற்றின் ``படைப்பு’’பற்றி ஒவ்வொரு புராணங்களும் ஒவ்வொரு விதமாகப் புளுகிக் கொண்டுள்ளன.

உலகின் அமைப்பு பற்றிப் புராணப் புளுகுகளைப் பார்ப்போம்.

முதலில் பிரம்ம புராணம்--பூ மண்டலப் பிரிவுகள் : பூ மண்டலம் ஏழு தீவுகளாகப் பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றைச் சுற்றி ஏழு வகையான சமுத்திரங்கள் உள்ளன. ஏழு வகையான பர்வதங்கள் உள்ளன.பாரத வர்ஷம் எனப்படும் நம் நாடு எட்டுப் பிரிவாக உள்ளது.

இந்திரத் தீவு, சுசேருமனத்தீவு, தாம்ரபரணத் தீவு, கபஸ்தி மானத்தீவு, நாகத்தீவு, சவம்யத் தீவு, காந்தர்வத் தீவு, வாருணத்தீவு என்பவை பாரதம். ஒன்பதாவது பகுதி கடலில் மூழ்கிவிட்டது.

பாரத வர்ஷத்தின் கிழக்கில் கிராதர்களும், மேற்கில் யவனர்களும் உள்ளனர்.பூமிக்கடியில் அதலம், விதலம், நிதலம், சுதலம், தலாதலம், ரஸாதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் உள்ளன. இவற்றில் தைத்தியர்கள், தானவர்கள், நாகர்கள் ஆகியோர் வசிக்கின்றனர்.

இந்தப் பாதாள லோகங்கள் மிகவும் அழகியவை. இங்கு பொன்னும் பொருளும் குவிந்து கிடக்கின்றன. இங்கேயும், காடு, பறவைகள் போன்ற ஜீவராசிகளும் நிறைந்துள்ளன என்று நாரதர் கூறினார்.

பூமண்டலப் பகுதியாக பல நகரங்கள் அமைந்துள்ளன. இதற்கெல்லாம் தலைவன் யமதர்மராஜன். அவரவர் செய்யும் பாவங்களுக்கு ஏற்ப இங்கு ஜீவன் தண்டிக்கப்படுகிறது. பாவப் பிராயச் சித்தம் செய்தவர்களும் புனிதர்களும் நரகங்களுக்குச் செல்லார். ஸ்ரீ கிருஷ்ணனைத் தியானிப்பதே சிறந்த தவமாகும்.

மண்ணிலிருந்து விண் வரை பரவியிருப்பது இப்பூமி. புவர் லோகம் இதில் ஒரு பகுதி. மற்றும் வரிசையாக சூரிய மண்டலம், சந்திர லோகம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்தரிஷி மண்டலம், துருவ லோகம் என்று பல பிரிவுகள் உள்ளன.

கல்ப முடிவில் பூலோகம், புவர் லோகம், சுவர் லோகம் மட்டும் அழியும்.இதே செய்தியை விஷ்ணு புராணம் கூறுவது கீழே உள்ளவாறு:பாதாள லோகம்--பூமிக்குக் கீழே, அதலம், விதலம், நிதலம், சுபஸ்திமத், மஹாதலம், ஸுதலம், பாதாளம் என்று ஏழு உலகங்கள் ஒன்றன் மேல் ஒன்றாய்த் தட்டுகள் போல் அமைந்துள்ளன.

ஒரு சமயம் நாரத முனிவர் பாதாளத்திலிருந்து சொர்க்கத்திற்கு வந்து தேவ சபையில் இந்திரனிடம் பாதாள லோகம் பற்றி விரித்துரைத்தார். அது நாகரிக நிலையில் மிகச் சிறந்தது. சொர்க்கத்தைக் காட்டிலும் அழகுடையது. விரக்தி அடைந்தவர்கள்கூட அதனை விரும்புவர். அங்கு இனிய மங்கல ஒலிகள், ஆடல், பாடல் போன்ற போகப் பொருள்கள் உள்ளன.

இங்கு, தைத்ய, தானவ, நாக ஜாதியர் வசிக்கின்றனர். இந்தப் பாதாள லோகத்திற்கு நெடுந்தொலைவில் ஆதிசேஷன் இருக்கிறார். அவர் விஷ்ணுவின் திருமேனியாய் விளங்குகிறார்.

ஆயிரம் தலைகள் கொண்டவர் அவர். உடல் போன்ற மலை கொண்ட திருவரையில் நீலப்பட்டாடை உடுத்தியும், வெண்மையான முத்து மாலைகளை அணிந்தும் விளங்குகிறார்.இரு புறங்களிலும் சாந்தி தேவியினாலும், வாருணீ தேவியினாலும் உபாசிக்கப்படுகிறார். இவர் எல்லா பூ மண்டலங்களையும் தாங்கிக் கொண்டு பாதாளத்தின் அடியில் இருக்கிறார்.

அவருடைய ஆற்றலை அறிந்தவர் யாருமிலர். அவர் கொட்டாவி விடும்போது மலை, காடு, கடல் கொண்டு நிலம் நடுக்கம் பெறுகிறது. இவ்வாறு பற்பல லோகங்களைத் தாங்கும் பூமியை ஆதிசேஷன் தாங்குகிறார்.

பல வகை நரகங்கள்--பாப பலன்களை அனுபவிக்கும் இடம் நரகங்களாம்.

அவை பலவகை. ரவுரவம், ஸுகரம், ரோதம், தாலம், விசஸநம், மஹாஜ்வாலம், தப்த கும்பம், லவணம், விலோஹிதம், ருதிராம்பஸ், வைதரணி, க்ருமிசம், க்ருமிபோஜனம், அஸிபத்ரவனம், க்ருஷ்ணம், மிகக் கொடிய லாலாபக்ஷம், பூயவஹம், அக்னி ஜ்வாலம், அதச்சிரஸ், ஸந்தம்சம், க்ருஷ்ணஸுத்ரம், தமஸ், அவீசி, ச்வபோஜனம், அப்ரதிஷ்டம் முதலியன.

மேலும் பல கொடிய நரகங்களும் உண்டு நரகங்கள் யமனின் ஆளுகைக்கு உட்பட்டவை. இவை அக்கினிபயம், ஆயுத பயம் கொண்டு பாவிகளைத் தண்டிக்கின்றன.

சூரிய, சந்திரர்களால் ஒளி பெற்று, கடல், ஆறு, மலை ஆகியவை கொண்ட பாகம் பிருதிவீ (அ) பூலோகம் என்றுஅழைக்கப்படுகிறது. இந்தப் பூமியின் பரப்பளவு தூரம் மேலே உள்ளது.

`புவர் லோகம்’. பூமிக்கு மேல் லக்ஷம் போஜனை தூரத்தில் சூரிய மண்டலம் உள்ளது. அதற்கு மேல் அதே அளவு தூரத்தில் சந்திர மண்டலம், அதே போல் அதற்கு மேலே நக்ஷத்ர மண்டலம், அதற்கு மேல் புதன், அதற்குமேல் சுக்கிர மண்டலம், அதற்குமேல் அங்காரக மண்டலம், பிருஹஸ்பதி மண்டலம், சனி மண்டலம் ஆகியவை உள்ளன. அவற்றிற்கு மேல் சப்தரிஷி மண்டலம், துருவ மண்டலம் உள்ளன. இவை `சுவர் லோகம்’ எனப்படும்.

இவற்றிற்குமேல் `மஹர்லோகம்’, அதற்குமேல் `ஜனலோகம்’ அதற்கு மேல் `தபோலோகம்’ உள்ளது. இதற்கு மேல் பிரம்மாவின் `சத்தியலோகம்’ உள்ளது.ஆக, மேலே ஏழு உலகங்களையும், கீழே ஏழு லோகங்களையும் கொண்டது `பிரஹ்மாண்டம்’ ஆகும்.

பூமியை அய்ந்து கண்டங்களாகப் புவி இயலார் பிரித்திருக்கின்றனர்.

இந்துமதப் புராணீகர்கள் ஏழு கண்டங்களாகப் பிரித்துள்ளனர். ஆஸ்திரேலியா, நியூசிலாந்து ஆகியவற்றைச் சேர்த்து ஆறாம் கண்டம் என இப்போது அழைக்கின்றனர்.

ஆகவே இந்துமதப் புராணம் ஏழு தீவுகள் எனக் கூறுவது கூடப் பரவாயில்லை.

ஆனால் அத்தீவுகளில் அடங்கிய நாடுகளைப் பற்றிய விவரம் தந்தால் நாமேகூட `அட்லஸ்’ போடலாம்!

இந்திய நாடு (பாரதவர்கம்) எட்டுப் பிரிவாக உள்ளதாம். எப்படி?

இந்தியாவைத் தீவுக்குறை (தீபகற்கம் (Peninsula) என்று தான் கூற வேண்டும். ஆகவே இந்தியா தீவு அல்ல. இது புராணத்தின் முதல் குறை.

எட்டுத் தீவுகளாக இந்தியா இருக்கிறது, ஒன்பதாம் தீவு கடலில் மூழ்கி விட்டது எனப் புராணம் கூறுவது முற்றிலும் குறை. அல்லவா?

பாதாள லோகமாம். ஏழு உலகங்களாம். அழகிய உலகங்களாம். பொன்னும் மணியும் குவிந்து கிடக்கின்றனவாம். இந்தப் பூதேவர்கள் ஏன் அந்த ஏழு பாதாள உலகங்களை விட்டுவிட்டுப் பூவுலகத்திற்கு வந்தனர்? மண்ணிலிருந்து விண் வரை இந்தப் பூமி பரவியிருக்கிறதாம்! பீம்சிங், இது என்ன புதுக்குழப்பம்?

வரிசயாக சூரிய மண்டலம், சந்திர மண்டலம், புதன், சுக்கிரன், அங்காரகன், குரு, சனி, சப்த ரிஷி மண்டலம், துருவ லோகம் எனப் பலப் பலப் பிரிவுகள் உள்ளனவாம். பால் விதியை புராணீகர்கள் இப்படிப் புளுகி வைத்திருக்கின்றனர்.

இதே விசயம்பற்றி விஷ்ணு புராணம் எப்படி புளுகுகிறது?

ஏழு உலகங்கள் பூமிக்குக் கீழே ஒன்றன் கீழ் ஒன்றாய்த் தட்டுகள் போல் அமைந்துள்ளன எனக் கூறுகிறது. ஆக, இந்தப் புளுகர்களின் கருத்துப்படி பூமியும் தட்டை; பாதாள உலகங்களும் தட்டைதான்.

அறிவியல் கருத்துக்கு எதிரான மூடக் கருத்து அல்லவா? எல்லாவற்றிற்கும் கீழே ஆதிசேஷன் என்ற ஆயிரம் தலைப்பாம்பு படுத்துக் கிடக்கிறதாம். அது கொட்டாவி விடுகிறதாம். அதனால் தான் நில நடுக்கம் ஏற்படுகிறதாம்.

சுனாமி ஆதிகேகனால்தான் வந்தது, வருகிறது என்று இந்த நூற்றாண்டுப் புராணம் ஒன்றைப் புதிதாக எழுதிச் சேர்த்து விடுவார்கள். நடக்கலாம்!

பூமிக்குமேல் இலட்சம் யோசனை தூரத்தில் சூரிய மண்டலமாம். அதற்கும் மேலே அதே அளவு தூரத்தில் சந்திர மண்டலமாம்! சரியா?

பூமிக்கு அருகில் சந்திரனும் தொலைவில் சூரியனும் என்பதுதான் உண்மை. அறிவியல் கண்டுபிடிப்பு,

எல்லாமே! புராணம் நேர்மாறாகப் புளுகுகிறது.இப்படி மொத்தமாகப் புளுகுகளின் மூட்டைதான் புராணம்!

இந்தப் புளுகர்கள் சூரியனைப்பற்றி எழுதி வைத்திருப்பதைப் பார்ப்போம்.

சூரியன் அவனது ரதம்---சூரியனுடைய தேருக்கு ஒற்றைச் சக்கரமே உள்ளது. சக்கரத்தில் `மஹாக்ஷம்’ என்னும் அச்சு உள்ளது. இந்தச் சக்கரம் `ஸம்வத்ஸரம்’ எனப்படும் காலச்சக்கர சொரூபமாக உள்ளது.

முற்பகல், நண்பகல், பிற்பகல் மூன்றும் அச்சாகிய இருசைக் கோக்கும் இடம்.ஸம்வத்ஸரம், பரிவத்ஸரம், இடா வஸ்த்ரம், அநுவஸ்தரம், இத்வத்ஸரம் ஆகிய ஐவகை வருஷங்கள் அந்தச் சக்கரத்தின் ஆரக் கால்கள் ஆகும்.

ருதுக்கள் ஆறும் வட்டக் கால்கள். காயத்திரீ, ப்ருஹதீ, உஷ்ணிக், ஜகதீ, திருஷ்டுப், அநுஷ்டுப், பங்க்தி ஆகிய ஸப்த சந்தஸ்ஸுகள் ஏழு குதிரைகளாகும். துருவனை ஆதாரமாகக் கொண்ட சிறிய அச்சு. தேரின் பெரிய அச்சுடன் இணைக்கப்பட்டுள்ளது.

சூரியனே `தேவயான மார்க்கம்’ அது அர்ச்சிராதி மார்க்கம் எனவும் சொல்லப்படும். புண்ணிய கர்மாக்கள் செய்பவர் சொர்க்கம் செல்லப் பயன்படும் வழி `பித்ருயாணம்’ என்றும் `தூமாதி மார்க்கம்’ என்றும் அழைக்கப்படும். சூரியனில் ஒரு போதும் வெப்பமும், ஒளியும் குறைவதில்லை.

ஆனால், காலையிலும், மாலையிலும் குறைந்துள்ளது போல் காணப்படுவது வெகு தூரத்தில் இருப்பதாலேதான் உண்மை நிலையல்ல அது.இரவு, பகல் நேரங்களில் மாறுதல்- புஷ்கர த்வீபத்தின் மையப் பிரதேசத்தில் சூரியன் முப்பதில் ஒரு பாகத்தை அடையும்போது முஹுர்த்த காலம் ஏற்படுகிறது.

ஆகவே, சூரிய கதியைக் கொண்டு முப்பதில் ஒரு பாகம் ஒரு முஹுர்த்த காலம் என்று கணக்கிடப்பட்டுள்ளது. சூரியன் தக்ஷிணாயன காலத்தில் பன்னிரண்டு முஹூர்த்த கால அளவில் பதின்மூன்றரை நக்ஷத்திரங்களைக் கடந்து மிகப் பெரிய பூமியைக் கடக்கிறான்.

இரவு காலத்தை பதினெட்டு முஹூர்த்த காலத்தில் கடக்கிறான். அதனால் பகற்பொழுது குறைந்தும், இரவுப் பகுதி நீண்டும் தோன்றுகிறது.உத்தராயண காலத்தில் சூரியனுடைய கதி வேறு விதமாக அதாவது, நேர்மாறாக அமைகிறது.

சூரியன் கடக்கும் மார்க்கம் ஒரே அளவு உடையது எனினும் உத்தராயண, தக்ஷிணாயன காலங்களில் ராசி மண்டலங்களை சூரியன் கடக்கும் வகையினால் இரவு பகல்களில் ஏற்றத் தாழ்வு உண்டாகிறது.

சூரியன் விஷ்ணுவின் அமிசமானவன். அந்த ஒளிமயமான சூரியனுக்குள் நிர்விகாரமான பிரம்மம் இருக்கிறது. அதுவே பிரணவத்தின் பொருளாகப் பொருந்தி நிற்கிறது. எனவே, பிரணவம் என்னும் பிரம்மம்தான் சூரியனை இயக்குகிறது.

கால அளவு பதினைந்து நிமிஷங்கள் ஒரு காஷ்டை: முப்பது காஷ்டைகள் ஒரு கலை. முப்பது கலை ஒரு முஹூர்த்தம். முப்பது முஹூர்த்தங்கள் கொண்டது இரவு பகல் ஒரு நாள். பதினைந்தாம் முஹூர்த்தம் ஸந்தியா ஆகும்.

சூரியன் உதித்து மூன்று முஹூர்த்த காலம் `பிராதக் காலம்’ ஆகும். அடுத்து மூன்று முஹூர்த்த காலம் `ஸங்கவம்’ அதன் பின் மூன்று முஹூர்த்தம் `மத்யாஹ்நம்’ அதற்கு மேல் மூன்று முகூர்த்தம் வரை `அபராஹணம்’ அதன் பிறகு மூன்று முகூர்த்தம் வரை `ஸாயாஹ்நம்’ என்றும் பெயர் பெறும். 15 நாட்கள் 1 பக்ஷம்.

இரண்டு பக்ஷம் 1 மாதம். 2 மாதங்கள் 1 ருது. 3 ருதுக்கள் அயனம். 2 அயனங்கள் 1 ஆண்டு என்ற கால அளவு சூர்ய கதியினால் கணக்கிடப்பட்டவை.சூரியகதி,-சூரிய நாராயணன் சூரியன் ஸஞ்சரிக்கும் உத்தராயண, தக்ஷிணாயனங்களின் நடுவில் உள்ள ஆகாயத்தின் அளவு 183 கிராந்தி வட்டமாகும்.

இதில் சூரியன் உத்தராயணத்தில் ஏறி தக்ஷிணாயனத்தில் இறங்கிச் செல்கிறான் என்றும், எனவே 366 கதிகள் ஆகின்றன என்றும், அதன்படி சூரியன் ஒரு வருஷத்தைக் கழிக்கிறான் என்றும் அறிக.

சூரியனுடைய தேர் ஆதித்தியர்கள் எனப்படும் தேவர்கள், ரிஷிகள், கந்தர்வர்கள், அப்சரசுகள், யக்ஷர்கள், ஸர்ப்பங்கள், ராக்ஷசர்கள் ஆகியோரால் அதிஷ்டானம் செய்யப்பட்டிருக்கிறது.

ஒவ்வொரு மாதத்திலும் இதனைச் செலுத்துபவர் வெவ்வேறாக இருப்பர். பன்னிரண்டு மாதங்களிலும் ஒவ்வொரு மாதத்திற்கும் வெவ்வேறு எழுவர் சூரியனது தேரில் உலகை ஒளிப்படுத்த வருகின்றனர்.

இவர்கள் அனைவரும் ஸ்ரீ விஷ்ணுவின் சக்தியினால் போஷிக்கப்படுபவரர்களாவர். ஸ்ரீ விஷ்ணுவின் சக்தி ரிக், யஜுர், சாமம் என்ற மூன்று வடிவமாக உள்ளது. ப்ரஹ்மா, விஷ்ணு ருத்திரர் ஆகிய மூவரும் விஷ்ணு சக்தியே. இம்மூவகைச் சக்திகளும் ஸ்ரீ விஷ்ணுவின் ஸாத்விக சக்திகள் ஆவர். இந்தச் சக்திகள் எழுவர்க்கும் பொது வானாலும் சூரியனிடமே அதிகமாக அமைந்துள்ளது.

இப்படி சூரியனுக்குள் பிரவேசித்து சூரிய அந்தர்யாமியாக விளங்கும் சூரிய நாராயணனே வேதங்களால் துதிக்கப்படுவர்.

வெப்பக்கோளமான சூரியனைத் தேர் என்னும் குதிரைகள் இழுக்கின்றன என்றும் புளுகியிருப்பது போலச் சந்திரனைப்பற்றிப் புளுகியிருப்பதையும் காண்போம்.

சந்திரனும் அவனது தேரும் சந்திரனுடைய தேருக்கு மூன்று சக்கரங்கள். தேரின் இடப்புறத்திலும், வலப்புறத்திலும் பத்து வெண்ணிறக் குதிரைகள் கட்டப்பட்டுள்ளன. துருவனை ஆதாரமாகக் கொண்டு விரைவாகச் செல்லும் இந்தத் தேரினால் தான் இந்திரன் நாகவீதி முதலியவற்றில் உள்ள நக்ஷத்திரங்களைக் கடந்து செல்கிறான்.

சந்திரனுக்கும் உதயாதி காலங்களில் கிரணங்கள் குறைவதும் நிறைவதும் உண்டு.

சந்திரனது கலைகள்---சந்திரனது கலைகள் பதினாறு ஆகும். அவற்றுள் பதினைந்து கலைகளை தேவர்கள் பருகி வருகின்றனர்.

கடைசி ஒரு கலையுடன் நிற்கும் சந்திரனைச் சூரியன் `ஸுஷும்னை’ என்ற நாடியினால் தேவர்கள் பானம் பண்ணும், முறையில் வளர்க்கிறான். பதினைந்து நாட்களில் முழுமை பெறச் செய்கிறான். இவ்வாறு முழுமை பெற்ற பூர்ண சந்திரனிடத்தில் உள்ள அமுதத்தினைத் தான் தேவர்கள் பருகிக் களிக்கின்றனர்.

ஸுரிய கிரணங்கள் பலவற்றிற்கும் வெவ்வேறு பெயர்கள் உண்டு. அவற்றுள் ஒன்று `ஸுஹும் நா’ மற்றும் `அமா’ என்ற பெயருடைய இரண்டும் உண்டு. கடைசியில் இரண்டே கலைகளுடன் எஞ்சி நிற்கும் சந்திரன் சூரியனுடைய `அமா’ என்ற கிரணத்தில் வசிக்கிறான். இவ்வாறு சந்திரன் `அமா’வில் வசிப்பதால் அன்று `அமாவாஸ்யா’ எனப்படுகிறது.

அன்று சந்திரன் செடி, கொடிகளில் வாசம் செய்வதாகவும், அதனால் அமாவாசை அன்று செடி கொடிகளை அழிப்பவன் `பிரம்மஹத்யா’ தோஷத்தை அடைகிறான். அதனால் தான் அமாவாசை அன்று துளசிகூட பறிக்கக் கூடாது.

சூரியன் ஒரு நட்சத்திரம். சந்திரன் பூமியின் துணைக்கோள்.

ஆனால் இந்த இரண்டையும் கிரகங்கள் என்ற கணக்கில் சேர்த்து ஜாதகம் கணிக்கும் புரட்டர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் ஆளுக்கு ஒரு தேர் கட்டிப் புளுகி வைத்துள்ளனர். SOURCE: “VIDUTHALAI NEWS”
-------------
அமாவாசை
மகாளய அமாவாசையையொட்டி இன்று முன்னோர்களுக்குத் தர்ப்பணம் செய்து வழிபாடு நடத்துகிறார்கள்.

புரட்டாசி மாதம் பவுர்ணமி முதல் அமாவாசை வரும் 15 நாள்களும் மகாளய பட்ச காலமாம்.
இந்த நாள்களில் அந்தந்த திதிக்கு உரிய, தங்களின் முன்னோர்களுக்குத் திதி கொடுக்கும் வழக்கம் இந்துக்களுக்கு உண்டாம்.

அதிலும் மகாளய பட்சத்தின் இறுதி நாளான மகாளய அமாவாசை தினம் இன்றாம் - முன்னோர்கள் வழிபாட்டிற்கு உகந்தநாள் இந்நாள் என்று சாங்கோ பாங்கமாக தினமலர் ஏடு விவரிக்கிறது.

அது சரி, அமாவாசை, அமாவாசை என்று கதைக்கிறார்களே, அதன் கதைதான் என்ன?
புராணக் களஞ்சியமான அபிதான சிந்தாமணி என்ன கூறுகிறது?

அச்சோதை என்பவர் ஒரு புண்ணிய நதியாம். மரீசி மக்களாகிய பிதுர்க்களுக்கு குமரி. இவள் தம் பிதுரரால் நிருமிக்கப்பட்ட அச்சோதை யென்னும் நதிக்கரையில் ஆயிரம் வருடம் தவஞ் செய்ய,

பிதுர்க்கள்  பிரத்திய க்ஷணமாயினர். அவர்களுள் ஒருவனா கியமாவசு என்பவனை நாயகனாக எண்ண, அதனால் அவள் விபச்சாரியாய்ச் சுவர்க்கத்திலிருந்து தள்ளப்பட்டு பூமியில் விழாது, அந்தரத்து நின்று தவஞ் செய்தனள்.

அவள் வசமாகாத மாவசு, இச்செய்தி நடந்த தினத்தை அமாவாசையாக்கினான்.

அவள் மீண்டும் அவர்களை வேண்ட, நீ தேவர் கர்மத்தைப் புசித்து (28) வது துவாபரயுகத்தில் ஒரு மீன் வயிற்றில் சத்தியவதியெனப் பிறந்து, பராசரனைக் கூடி, வியாசனைப் பெற்றுப் பிறகு சந்தனுவின் தேவியாய் இரண்டு புத்திரரைப் பெற்று,

அப்பால் அச்சோதையெனும் புண்ணிய நதியாகவென அருளிப் போயினர். இத்தினத்தில் அப்பிதுர்க்களை நினைத்துக் கர்மாதிகள் செய்யின் அவை பிதுர்ப் பிரீதியைத் தரும் (மச்ச புராணம்) என்று விவரிக்கிறது

அபிதான சிந்தாமணி. ஒருமுறைக்கு இருமுறை படித்தாலும் மண் டைக் குடைச்சலைத் தான் ஏற்படுத்தும்.

இந்து மத வகையறாக்களை எங்குத் தோண்டினாலும் அங்கெல்லாம் விபச்சாரம் என்னும் பாம்பு தலையெடுக்காமல் இருக்காது.

மூடத்தனம், ஆபாசம், விபச்சாரம் என்னும் இவற்றை விட்டால், இந்து மதத்தில் எந்தச் சரக்கும் கிடையவே கிடையாது.

கசுமாலம் இவற்றையெல்லாம் படித்துத் தொலைய வேண்டியிருக்கிறதே, என்ன செய்ய!

செத்துப் போனவர்களுக்கு இந்த நாளில் புரோகிதப் பார்ப்பானை அழைத்துத் தர்ப்பணம் செய்தால், பொருள்களை வாரிக் கொடுத்தால், அவை செத்துப் போன நம் முன்னோர்களுக்குப் போய்ச் சேருமாம் - கதை அளக்கிறார்கள்.

நடிகவேள் எம்.ஆர். ராதா சொல்வார் - புரோகிதன் வயிறு பரலோகத்துக்குத் தபால் பெட்டியோ என்று அவருக்கே உரித்தான பாணியில் குரல் கொடுப்பார். நாடகக் கொட்டகையே அதிரும்.

அய்யரே, எங்கள் அப்பாவுக்கு கருவாடு, மீன் இல்லை யென்றால் ஓர் உருண்டை சோறுகூட உள்ளே போகாது. சமையல் ரெடி - இங்கேயே என் எதிரிலேயே உட்கார்ந்து சாப்பிடணும் என்பார் நடிகவேள் - எடுப்பார் அய்யர் ஓட்டம்.

இதையே இன்னொரு வகையில் கபிலர் பாடியுள்ளார்.
பார்ப்பன மாந்தர்காள்
பகர்வது கேண்மின்
இறந்தவராய் - உமை
இல்லிடை இருத்தி
பாவனை மந்திரம்
பலபட உரைத்தே
உமக்கவர் புத்திரர்
ஊட்டின போது
அரும்பசியாற் குலைந்து
ஆங்கவர் மீண்டு
கையேந்தி நிற்பது
கண்டதார் புகல்வீர்!
அருந்திய உண்டியால்
ஆர்பசி கழிந்தது என்றார்
கபிலர் - சிந்திப்பீர்!
-மயிலாடன்
SOURCE: VIDUTHALAI NEWS.  07.10.2010.

http://viduthalai.periyar.org.in/20101007/news06.html

------------------------------

இந்தியாவைத் தவிர வேறு நாடுகளைப் பிரம்மா படைக்கவில்லை!!!.

புராணங்களைப் புரிந்து கொள்ளுங்கள்! (50)--சு. அறிவுக்கரசு.

18 புராணங்களில் மிகப் பெரியது கந்தபுராணம். மிகவும் சிறியது மார்க்கண்டேய புராணம். இந்தப் புராணங்களை வரிசைப் படுத்தியதில் கடைசிப் புராணம் பிரம்மாண்ட புராணம் என்பதாகும்.

இந்தப் புராணம் உலகைப் படைத்தது பற்றிக் கூறுகிறது. ஒவ்வொரு புராணமும் ஒவ்வொரு விதமாகப் புளுகுகின்றன. அதில் பிரம்மாண்டப் புளுகு இது.

பிரம்மா என்கிற படைப்புத் துறைக்கான கடவுள் என்பது பகலில்தான் படைப்பைச் செய்கிறதாம். இந்தப் பிரம்மனும் கூட நாராயணனே என்கிறது இப்புராணம்.

நர என்றால் நீர்; அயன என்றால் உறங்குதல். எனவே நாராயணன் என்றால் நீரில் தூங்குபவன் அல்லது நீர்த் தூங்கி எனப் பொருள்.

பிரம்மா ஏழு கடல்களையும் ஏழு நிலப்பகுதிகளையும் தோற்றுவித்ததாம். அதன்பின் பிரம்மாவின் உடலில் இருந்தே தேவர், அசுரர், யட்சர்கள் ஆகிய பல வகையினரும் தோன்றினர் என்கிறது இந்தப் புராணம். அப்புறம், ஒன்பது ரிஷிகளும் தோன்றினார்களாம்.

பிறகு ரிஷிப் பட்டாளங்களாகிய சனந்த, சனக, சனாதன, சனக்குமார ரிஷிகளும் தோன்றினார்களாம்.

பிரம்மனுக்குத் திருப்தி வரவில்லையாம். முதல் ஆணையும் பெண்ணையும் தன்னில் இருந்தே பிரம்மா தோற்றுவித்ததாம்.

ஆணுக்கு மனு என்றும் பெண்ணுக்கு சதநீபை என்றும் பெயர் வைக்கப்பட்டதாம். இவர்களின் மகன்கள் பிரியவிரதன், உத்தானபாதன், மகள்கள் பிரசுதி, ஆகிருதி என்றும் இவர்களின் வமிசம் வளர்கிறது.

நான்கு யுகங்களும் நான்கு வர்ணங்களும் இதன் படைப்பு தான்.

நான்கு வருணத்தாருக்கு வெவ்வேறு தொழில்கள். ஜாதிக் கொடுமையின் மூல வேர் இந்தப் புராணம்.

நான்கு வருணத்தாரும் வாழ்க்கையில் நான்கு நிலைகளைக் கடைப்பிடிக்க வேண்டுமாம். பிரமச்சரியம், கிருகஸ்தியம், வானப்பிரஸ்தம், சன்னியாசம் என நான்கு நிலைகளாம்.

அதன் பிறகு காலண்டர் கணக்கு முறை பற்றியும் இப்புராணம் கூறும்.

பிரம்மக் கணக்கின்படி ஒரு நாள் என்பது ஒரு கல்பம். ஒராயிரம் கல்பங்கள் பிரம்மாவின் ஓர் ஆண்டு.

எண்ணாயிரம் கல்பங்கள் பிரம்ம யுகம். ஓராயிரம் யுகங்கள் ஒரு கவனம். இரண்டாயிரம் கவனங்கள் ஒரு திரிவிரதம். பிரம்மாவின் வாழ்க்கைக் காலம் திரிவிரதா எனப்படும். 33 கல்பங்கள் முடிந்து தற்போது வராக கல்பம் நடை பெறுகிறதாம்.

நாராயணனின் தொப்புள் வழியே தோன்றிய தாமரைப் பூவில் பிறந்ததாம் பிரம்மா. அதனால் பத்ம (தாமரை) யோனி எனப் பெயரும் உண்டாம்.

இந்தப் பிரம்மா சிவனைக் கண்டு யார் எனக் கேட்டுத் தெரிந்து கொண்டதாம்.

சிவனைத் தங்களுக்குச் சமமாக ஏற்க பிர்மா மறுத்ததாம்.

நாராயணன், அவரும் கடவுள்தான்; நம் இருவரையுமே வென்றுவிடக் கூடிய சக்தி படைத்தது சிவன் என்று கூறியதாம்.

பிரம்மாவுக்குப் பிள்ளை பெற்றுக் கொள்ள வேண்டும் என்கிற ஆசை வந்ததாம். உடனே அதன் மடியில் நீலமும் சிவப்பும் கலந்த ஒரு குழந்தை தோன்றி விட்டதாம்.

கல்யாணமும் வேண்டாம், மனைவியும் வேண்டாம், மனைவிக்குப் பிரசவ வேதனையும் வேண்டாம்!

அந்தக் குழந்தை அழுததாம். பக்கத்திலிருந்த மேதாவி யாரோ, தனக்குப் பெயர் வைக்க வேண்டுமென்று கேட்டுதான் குழந்தை அழுகிறது என்றதாம்.

உடனே பிரம்மா ருத்ரன் எனப் பெயர் வைத்ததாம்! ருத் என்றால் கத்தி அழுதல்; ஆகவே அந்தப் பெயர் வைத்ததாம்.

இந்தக் குழந்தை சூரியனில் ருத்ரனாக, நீரில் பாவனாக, பூமியில் சிவனாக, தீயில் பசுபதியாக, காற்றில் ஈசனாக, விண்ணில் பீமனாக, பார்ப்பனர் உடலில் உக்கிரனாக, சந்திரனில் மகா தேவனாக வசிக்குமாம்.

இடத்திற்குத் தகுந்த நிறம் மாறுமாம் பச்சோந்தி. ஆனால் பிரம்மாவின் மகன் இடத்திற்கு ஒரு பெயர் வைத்திருக்குமாம்.

பாரதவர்ஷத்தை (நாட்டை) உருவாக்கியதாம். இது போக பூமி அல்லவாம். கர்மபூமியாம். வாழ்க்கையே கர்மா (கடமை) என்பதால் இந்தப் பெயராம்.

இந்தியாவைத் தவிர வேறு நாடுகளைப் பிரம்மா படைக்கவில்லை.

ஆனால் 14 லோகங்களைப் பற்றிக் கூறுகிறது. பூலோகம், புவர்லோகம், சுவர் லோகம், மகர் லோகம், ஜனலோகம், தபலோகம், சத்திய லோகம் என்று மேல் உலகங்கள் ஏழாம். அதல, சுதல, நிதல, கபஸ்தல, மகாதல, கீதல, பாதாளம் என ஏழ கீழ் உலகங்களாம்.

புராணப் புளுகு அளவில்லாமல் போய்விட்டது. இதைப் படியுங்கள்.

கலியுகம் நான்கு யுகங்களில் இறுதியானது. இது கொடுமை மிக்கது. வருணா சிரம தருமங்கள் நிலை குலையும்.

ஏமாற்றுக்காரர்கள் தலை முடியை மழித்து சமயக்குரவர் போல் சாஸ்திரம் படிப்பார்கள். அவர்களை ஏற்று மக்கள் மோசம் போவார்கள்.

உண்மையில் தரும நெறி உடையார் இந்த யுகத்தில் நல்ல பலன் பெறுவர். கலியுகத்தில் ஒரு நாளின் தருமம், துவாபரயுகத்தில் ஒரு மாத பண்ணியத்துக்கும், திரேதாயுகத்தில் ஓராண்டு பண்ணியத்துக்கும் சமமாகும்.

எனினும், கலியுக முடிவில் தருமம் நிலை நாட்டப்படும். விஷ்ணு பிரமிதி மன்னன் வடிவில் அவதரிப்பார். இவர் `கல்கி எனவும் கூறப்படுவார்.

கல்கி தனது முப்பத்திரண்டாவது வயதில் தருமத்தை நிலை நாட்ட ரத, கஜ, துரக, பதாதிகளுடன் கிளம்பி துஷ்டநிக்கிரகம் செய்து, சிஷ்டபரிபாலனம் செய்வார். இவ்வாறு இருபத்தைந்து ஆண்டுகள் நடைபெறும்.

இவ்வாறு அய்ம்பத்திரண்டு ஆண்டுகள் கழிய உலகை ஆண்டு வருவார். இவ்வாறு சத்ய யுகத்திற்கு கலியுகம் வித்திடும். மக்களெல்லாம் சிறிது சிறிதாக உயரம் குறைந்து குள்ள மனிதர்கள் ஆகித் தோன்றுவர்.-சு. அறிவுக்கரசு.

SOURCE: VIDUTHALAI NEWS 02.02.2008.
-----------
புராணத்தில் விஞ்ஞானமாம்!

கொலைக்குற்றத்தின்கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் இருந்தாலும், பிணையில் வெளிவந்தாலும் சங்கராச்சாரியார் உத்தமபுத்திரர் போலவும், ஞானம்மிக்க கருத்துகளை திருவாய் மலர்வதுபோலவும் தூக்கிப் பிடிப்பதில் பார்ப்பனர்களுக்கு நிகர் பார்ப்பனர்களே!

காமகோடி என்ற மாத இதழ் சங்கரமடத்தின் ஆசியோடு வெளிவந்து கொண்டிருக்கிறது. ஒவ்வொரு பக்கமும் கொலைக்குற்றப் புகழ் ஜெயேந்திரரின் திருக்கல்யாண குணங்களைப்பற்றிய பிரஸ்தாபம்தான்.

இவர்கள் எந்த அளவு பொது அறிவு உள்ளவர்கள் என்பதற்கு ஜெயேந்திரர் தெரிவித்துள்ள கருத்தே போதுமானது.

புராணங்களை ஆழ்ந்து படித்தால் தற்கால விஞ்ஞானம் எல்லாம் அதில் பொதிந்து கிடப்பதைக் கண்டறிய முடியும் என்று கூறியுள்ளார்.

கொஞ்சம் புத்தியோடு சிந்திப்பவர்கள் யாராக இருந்தாலும் இதனைப் படித்துவிட்டு வாயால் சிரிக்க மாட்டார்கள்.

பூமியைப் பாயாகச் சுருட்டிக்கொண்டு கடலில் விழுந்தான் ஒருவன் என்றும், மகாவிஷ்ணு என்னும் ஓர் இந்துக் கடவுள் பன்றி அவதாரம் எடுத்து கடலில் குதித்துப் பூமியை மீட்டான் என்றும், அந்தப் பூமிக்கும் பன்றிக்கும் ஒரு பிள்ளை பிறந்தது என்றும் கூறும் புராணக் கூற்றிலும் என்ன விஞ்ஞானம் இருக்கிறது என்பதை ஜெகத்குரு கூறினால் வரவேற்கலாம்.

பூமி தட்டையா? உருண்டையா? என்பதிலேயே லோகக் குருவுக்குச் சந்தேகம்.

பாற்கடலில் மகாவிஷ்ணு பள்ளி கொண்டாராம். அப்படி ஒரு கடல் இருக்கிறதா? பால் கடல், தயிர்க்கடல், நெய்க்கடல், சர்க்கரைக்கடல், புளிக்கடல், மிளகாய்க் கடல் என்று மளிகை சாமான்களுக்கான கடல்கள் எங்கே இருக்கின்றன? அவற்றைக் கண்டுபிடித்துச் சொன்னால் மக்களுக்கு எவ்வளவு சவுகரியமாக இருக்கும்.

சந்திரன் என்பவன் தேவர் குழாமில் ஒருவன் என்றும், அவன் குரு பத்தினியைக் கற்பழித்தான் என்றும் கூறுவதெல்லாம் எவ்வளவு காட்டுமிராண்டிக்காலப் பிதற்றல்!

விநாயகக் கடவுள் ஒரு நாள் சமுத்திர ஸ்நானம் செய்யச் சென்றதாகவும், அப்பொழுது தன் தும்பிக்கையால் கடல்நீர் முழுவதையும் உறிஞ்சிவிட்டதாகவும், அதன்பின் அந்த நீர் முழுவதையும் சிறுநீராகக் கழித்துவிட்டதாகவும்,

அப்பொழுதிருந்துதான் கடல் நீர் உப்புக் கரிக்க ஆரம்பித்து விட்டதாகவும் கூறும் புராணத்தில் புதைந்து கிடக்கும் விஞ்ஞானக் கருவூலங்களுக்குக் கொஞ்சம் பதவுரை, பொழிப்புரை செய்யக்கூடாதா காஞ்சி மாஜி சங்கராச்சாரியார்?
சூரபத்மனுக்கும், சுப்பிரமணியக் கடவுளுக்கும் சண்டை நடந்ததாகவும் (ஹிந்து மதத்தில் கடவுள்கள் எல்லாம் சண்டை கூடப் போடும் கற்பழிக்கும்) அழிக்க அழிக்க அசுரர்கள் வல்லபை என்ற அரக்கர் குலப் பெண்ணின் பிறப்பு உறுப்பிலிருந்து வந்ததாகவும்,

அதனை சுப்பிரமணியனின் அண்ணனான விநாயகன் தன் தும்பிக்கையால் அடைத்து வீரர்களை வராமல் தடுத்ததாகவும் கந்தபுராணம் கூறுகிறதே _ - இதற்குக் கொஞ்சம் பாஷ்யம் கூறி இதற்குள் குடிகொண்டிருக்கும் அர்த்த புஷ்டிமிக்க அறிவியல் விஷயங்களைக் கொஞ்சம் எடுத்துவிடக் கூடாதா?

கால்நடையாகவும், பல்லக்கிலும் சென்றுகொண்டிருந்த இந்த ஜெகத்குருக்கள் இன்றைக்கு விலை உயர்ந்த கார்கள் மூலமாகவும், விமானம் மூலமாகவும் பயணம் செய்து,

நவீன லௌகிக வாழ்க்கையை ருசித்துக்கொண்டு சாங்கோபாங்கமாக வளமாக ஒரு பக்கத்தில் வாழ்ந்துகொண்டு இன்னொரு பக்கத்தில் பழைய புராண அழுக்கு மூட்டைகளை அவிழ்த்துக்கொட்டி மக்களைப் பக்திச் சேற்றில் அழுத்திச் சுரண்டும் கொடுமையை என்ன சொல்ல!

தந்தை பெரியார் இந்தப் பக்தியைத் தோலுரிக்கும் பணியை மேற்கொண்டது எவ்வளவு பெரிய உயர்ந்த அரும்பெரும் தொண்டு என்பதை _ இந்தச் சங்கராச்சாரியார்களின் நடவடிக்கைகள் மூலம் தெரிந்துகொள்ளலாமே!--விடுதலை"தலையங்கம் 26-6-2009

SOURCE: http://thamizhoviya.blogspot.com/2009/06/blog-post_5492.htmlமாட்டுச்சாணம் - விபூதி
பசு புனிதமானது. ஆகவே அது வணக்கத்திற்குரியது.

தொடர்பு உள்ளவை. சொடுக்கி படிக்கவும்.
-------------
திருநீறு வகைகள்.   திருநீற்றை நான்கு வகைகளாகப் பிரிக்கின்றனர். அவை
1.கல்பம் = கன்றுடன் கூடிய நோயற்ற பசுவின் சாணத்தைப் பூமியில் விழாது தாமரை இலையில் பிடித்து உருண்டையாக்கி பஞ்ச பிரம்ம மந்திரங்களால் சிவாக்கினியில் எரித்து எடுப்பதே கல்பத் திருநீறு எனப்படும்.

2.அணுகல்பம் - ஆரண்யங்களில் (காடுகளில்) கிடைக்கும் பசுஞ்சாணங்களைக் கொண்டு முறைப்படி தயாரிக்கப்படுவது அணுகல்பத் திருநீறு எனப்படும்.

3.உபகல்பம் - மாட்டுத் தொழுவம் அல்லது மாடுகள் மேயும் இடங்களில் இருந்து எடுத்த சாணத்தைக் காட்டுத்தீயில் எரித்து, பின்பு சிவாக்கினியில் எரித்து எடுக்கப்படுவது உபகல்பத் திருநீறு எனப்படும்.

4. அகல்பம். -அனைவராலும் சேகரித்துக் கொடுக்கப்படும் சாணத்தைச் சுள்ளிகளால் எரித்து எடுப்பது அகல்பத் திருநீறு எனப்படும்.  - SOURCE: http://ta.wikipedia.org/wiki
------------

பிராமணர்கள் இன்னொரு படி மேலே போய் மாட்டுச் சாணத்தில் எடுக்கப்படும் சாம்பல் புனிதமானது. அதற்கு நோய் நீக்கும் மருத்துவ குணங்கள் உண்டு என்றெல்லாம் பிரஸ்தாபிக்கின்றனர்.

ஆனால் விஞ்ஞானம் இது அப்பட்டமான பொய் என்று நிரூபித்துள்ளது.

மேற்கு ஜெர்மனியைச் சார்ந்த விஞ்ஞானக் கழகம் இதை நன்றாக ஆராய்ந்து பொய் என்று அறிவித்துள்ளது.

இந்த விஞ்ஞான உண்மைகளை அறியாத பாமர‌ர்கள் பலர் தங்கள் இல்லங்களை மாட்டுச்சானத்தால் மெழுகிக் கொள்கின்றனர்.

பசியும் பட்டினியும நிறைந்த நாடு இந்தியா. இங்கே மாட்டிறைச்சி மிகவும் மலிவாகக் கிடைக்கும் சத்தான உணவு. ஆனால் பிராமணர்களோ கீழ் ஜாதி ஹிந்துக்கள் மாட்டிறைச்சி உண்ணக்கூடாது என மார்தட்டிக் கொள்கின்றனர்.

வால்மீகியின் இராமாயணத்தில் இராமன் இறைச்சி உண்டான் என்பது ஊர்ஜிதப்படுத்தப்பட்டுள்ளது.

உண்மை இப்படி இருக்க, இந்த பிராமணர்கள் மட்டும் ஏன் இறைச்சி உண்பதை இப்படி எதிர்க்கின்றார்கள். - அன்புடன் தாயகப் பணியில்….. DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.) தொடருகிறது.  மீண்டும் வாருங்கள்,


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 7 (a). காம சூத்திரம். தேவதாசி. நிர்வாண சாமியார்கள். பிணந்திண்ணி சாமியார்கள். புனித கங்கையில் காலைக்கூட நனைக்க மனம் வரவில்லை.

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. இராமனா கடவுள்? கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 2.பிராமிணர்களுக்கிடையே பிளவு.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்? 1.முன்னுரை.


நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

4 comments:

 1. <+a href+=+http://thathachariyar.blogspot.com/2011/02/4.html+>இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. இராமனா கடவுள்? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் <+/+a>

  ReplyDelete
 2. sariya unga pathivukal nalla matha karuthukaludan manithanai pan paduthaddum anpodum natpodum vaala thunai puriyaddum iraivan

  ReplyDelete
 3. Dear Admin,
  You Are Posting Really Great Articles... Keep It Up...We recently have enhanced our website, "Nam Kural"... We want the links of your valuable articles to be posted in our website...

  To add "Nam Kural - External Vote Button" to your blog/website. Kindly follow the instructions given here, http://www.namkural.com/static/external-vote-button/

  To get more visibility for our users webpage, We promote them through social networking platforms as well. We upload 80% - 100% of daily links of NamKural in social networking websites such as,
  1. Facebook: https://www.facebook.com/namkural
  2. Google+: https://plus.google.com/113494682651685644251
  3. LinkedIn: https://www.linkedin.com/company/namkural

  தாங்கள் எங்கள் வலைபக்கத்திலும் சேர்ந்து தங்களின் வலைப்பக்கங்களை மேலும் பல இணைய பயனாளிகளுக்கு கொண்டு செல்லுங்கள். எங்கள் வலை முகவரி,http://www.namkural.com/

  நன்றிகள் பல...
  நம் குரல்

  ReplyDelete