இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

ஆபாச பிள்ளையார் ? இந்துமுன்னணி புகார். தி.க. சவால்.

பெண்குறி தொடும் வல்லபை கணபதி சிலை. இந்துமுன்னணியே, ஓடாதே,நில்!  திராவிடர்கழக துண்டறிக்கையும் இந்துமுன்ணியின் எதிர்ப்பும்..

புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள் - திராவிடர் கழகம் தலைவர் திரு வீரமணி.

வல்லபை கணபதி 
 "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு" என்று "திராவிடர் கழகம்" வெளியிட்ட துண்டறிக்கை.

இந்து மக்களுடைய மனதைப் புண்படுத்தும் வகையில், விநாயகர் சிலையை அவமதித்து துண்டுப் பிரசுரம் வெளியிட்ட திராவிடர் கழகம் மீதும், அதன் தலைவர் திரு.கே.வீரமணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று ஆட்சேபம் தெரிவித்து இந்துமுன்ணி வழக்கு பதிவு செய்யப்போவதாக அறிவித்தது.

இதோ "திராவிடர் கழகம்" வெளியிட்ட அந்த துண்டறிக்கை சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

துண்டறிக்கை===> "விநாயகர் சதுர்த்தி கொண்டாடும் பக்தர்களின் சிந்தனைக்கு"
  <=== படித்து விட்டு மேலே தொட‌ர‌வும்.
_____

விநாயகருக்கு எத்தனை மனைவிகள்?

பிள்ளையார்பற்றி கதைகள் ஏராளம் உண்டு. பலவற்றிலும் - எல்லாம் கட்டுக்கதை புராணங்கள் தானே - தமிழ்நாட்டில் அது இறக்குமதி கி.பி. ஏழாம் நூற்றாண்டுக்குப் பிறகுதானே!

அபிதான சிந்தாமணி 1910 இல் வெளிவந்த அந்தக்கால தமிழ் கலைக்களஞ்சியம் - என்சைக்ளோ பீடியா!

விநாயகருக்கு சித்தி புத்தி, வல்லபை, விஷ்ணு மூர்த்தியின் குமாரியாகிய மோதை, சுமகை, சுந்தரி, மனோரமை, மங்கலை, கேசனி, காந்தை, சாரு ஹாசை, சுமத்திமை, நந்தினி, காமதை முதலியவரை மணந்தவர் என்று எழுதி வைத்திருக்கின்றான்.

விநாயருக்கு ஒரு பெண்டாட்டி, இரண்டு பெண்டாட்டி இல்லை. பதினாறு பெண்டாட்டிகளை கணக்குப் போட்டிருக்கின்றான்.
அபிதான சிந்தாமணி 1910 இல் பக்கம் 1751, விநாயகர் தலைப்பு
இதில் சித்தி ஒரு மனைவி, புத்தி ஒரு மனைவி, புத்தியும் அவருக்கு வெளியிலிருந்துதான் வருகிறது. ஏனென்றால் களிமண் ஆனதினாலே வெளியிலிருந்துதான் புத்தி வரும்.

சித்தி, புத்தி விநாயகரே என்று நம்மாள் பொருள் தெரியாமலே பாடிக்கொண்டிருக்கின்றான்.

ஏனென்றால் இன்னொரு மொழியிலிருந்து வந்ததினாலே இவனுக்கு என்னவென்றே தெரியாது. வல்லபை கணபதி வல்லபை கணபதி என்பதைப் பற்றி நீங்கள் தெரிந்துகொள்ள வேண்டும். யாருக்காவது சந்தேகம் இருந்தால் அங்கே போய் பார்க்க வேண்டும்.

தாய்மார்களை வைத்துக்கொண்டு சொல்வது எனக்கே கொஞ்சம் சங்கடமான நிலை. வல்லபை என்பது விநாயகருடைய மனைவி. சுப்பிரமணியன் விநாயகருடைய தம்பி.

சுப்பிரமணியம் சூரபத்மனோடு சண்டைக்குப் போகின்றார். சூரபத்மன் அசுரன். அசுரன் என்றால் ரொம்ப பலமானவன். அவனுக்கு வீரர்கள் அதிகம். ஆனால் சுப்பிரமணியனுக்கு படை வீரர்கள் இல்லை. தனக்குப் படை வீரர்கள் வேண்டும் என்று தம்பி சுப்பிரமணியம் அண்ணனிடம் விநாயகனிடம் கேட்கின்றார்.

ஆயிரக்கணக்கான வீரர்கள் உற்பத்தி

உடனே கணேசர் என்ன பண்ணுகிறார்? உனக்கு இராணுவம் வேண்டும் சைனியம் வேண்டும். அவ்வளவு தானே என்று சொல்லி, தனது மனைவி வல்லபை மூலம் ஆயிரக்கணக்கான வீரர்களை உற்பத்தி பண்ணி அனுப்புகிறார். சைனியம் வந்து கொண்டேயிருக்கிறது. ஃபேக்டரியில் அச்சடித்து வெளியே வந்து கொட்டுகிற மாதிரியே இருக்கிறது. ஒரு கட்டத்தில் போதும், போதும் என்று சுப்பிரமணியரே நினைத்தார்.

கார்க் அடைக்கிற மாதிரி...

உடனே சைனியத்தை நிறுத்துவதற்காக விநாயகர் என்ன செய்தார்? துதிக்கையை வைத்து கார்க் மாதிரி அடைத்துவிட்டார்.

இதற்கு மேல் சொன்னால் எனது தகுதிக்கு குறைச்சல்.

உண்மையிலேயே ரொம்ப அசிங்கமான விசயம் அது. நான் இதை விட ரொம்ப நாசூக்காக சொல்ல முடியாது. இதெல்லாம் கற்பனை என்று நினைக்காதீர்கள்.

சிதம்பரம் ரொம்ப பக்கத்திலேயே இருக்கிறது போய் பார்க்கலாம். - சீர்காழியில் 27.9.2010 அன்று நடைபெற்ற மண்டல மாநாட்டில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள். SOURCE: http://naathigam.blogspot.com/2010/10/blog-post_6234.html
---------

இந்துமுன்னணியே, ஓடாதே,நில்!

திண்டுக்கல்லில் கலவரத்தைத் தூண்டும் தி.க.வினர்மீது வழக்கு.

குன்னூரில் விநாயகன் பற்றி துண்டு அறிக்கைககள் கொடுத்த மாவட்ட தி.க., தலைவர்மீது வழக்கு.

ராஜபாளையத்தில் துண்டறிக்கை கொடுத்த தி.க.வினர் விசாரிக்கப்படுகின்றனர்.

என்கிற சேதிகள் நாளேடுகளில் வெளிவந்துள்ளன.
ஆமாம், திராவிடர் கழகத் தோழர்கள் செய்த குற்றம் என்ன?

விநாயகன் பற்றி விழிப்புணர்வூட்டும் துண்டு அறிக்கைகளை பொது மக்களிடம் கொடுத்தார்களாம்.

திராவிடர் கழகத்தினர்களுக்கு பகுத்தறிவுக் கருத்துக்களைப் பரப்பவும், மூடநம்பிக்கை இருளை விரட்டியடிக்கவும் உரிமை இல்லையா?

பக்தியை மட்டுமே பரப்பி மக்களின் புத்தியை நாசப்படுத்த வேண்டும் என்பது எழுதப்படாத சட்டமா?

பக்தியின் பெயரால் புத்தியைக் கெடுத்துக் கொண்டு, பொருளையும் பொழுதையும் நாசப்படுத்திக் கொண்டுதான் இருக்க வேண்டுமா?

அவர்களைச் சிந்திக்க வைக்கும் சீரிய வழியில் பகுத்தறிவுப் பணிகளை மேற் கொள்ளக் கூடாதா?

இந்தப் பணியை திராவிடர் கழகம் இன்று நேற்றா செய்து வருகிறது 75 ஆண்டுகளுக்கு மேலாகச் செய்து வருகிறதே.
அப்பொழுதெல்லாம் இல்லாத சட்டம் இப்பொழுது மட்டும் ஆகாயத்திலிருந்து பொத்தென்று குதித்து விட்டதா? விநாயகன் கனவில் வந்து காவி உடை இந்து முன்னணியினர் கூறுவதை காக்கிச் சட்டை காவல் துறையினர் கவனத்தில் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கூறினாரா?

துண்டு அறிக்கைகளில் கூறப்பட்டவை உண்மையற்றவை என்று விவாதிக்க முன் வரட்டுமே!.

தி.க.வினர் வெளியிட்ட துண்டு அறிக்கையில் இந்தந்தத் தவறுகள் இருக்கின்றன என்று கூறி மறுத்து அறிக்கைகளை வெளியிடட்டுமே!

அதுதானே அறிவுடைமை? அறிவு வேலை செய்யாத இடத்தில் ஆத்திரம்தான் அலைமோதும். அந்த நிலையில்தான் இந்து முன்னணியினர் இருக்கின்றனர். இப்படிப் பட்ட காவிகளின் புகாரை ஏற்றுக் கொண்டு, காக்கிச் சட்டைகள் கருப்புச் சட்டைக்காரர்கள் மீது வழக்குத் தொடுப்பது என்றால், இது எவ்வளவு பெரிய பொறுப்பற்ற செயல்?

சேலத்தில் ராமனை செருப்பாலடித்த வழக்கே ஒன்றுமில்லாமல் போய்விட்டது. அந்த வழக்கினை நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டதே!

ராமன், சீதை, லட்சுமணன் உருவங்களைக் கொளுத்தி இராவண லீலாவை அன்னை மணியம்மையார் நடத்திக் காட்டினார்களே (25.12.1974). விநாயகர் உடைப்புப் போராட்டத்தையே தந்தை பெரியார் நடத்தினாரே இவ்வளவுக்கும் அப்போது ஆச்சாரியார் முதல் அமைச்சர்; ஆண்டவனைக் காப்பாற்ற வேண்டும் என்று அவாளுக்கு இல்லாத அக்கறை, ராஜாவை விஞ்சும் விசுவாசிகளாக இருக்கும் சில காவல்துறை அதிகாரிகளுக்கு வந்திருக்கிறது போலும்.

விநாயகர்பற்றி அவன் பிறப்புப் பற்றி விநாயகர் புராணம் கூறுகிறது; கந்தபுராணம் பேசுகிறது - அபிதான சிந்தாமணி என்னும் புராணக் களஞ்சியம் புட்டுப் புட்டு வைக்கிறது.

தேவாரத்தில் திருஞான சம்பந்தனே பாடியிருக்கிறான்: சிவன் ஆண் யானையாகவும், பார்வதி பெண் யானையாகவும் மருவிப் புணர்ந்து பிள்ளையாரை பெற்று எடுத்தார்கள் என்பது தேவாரம் கூறும் ஆதாரம்

பிடியதன் உருவுமை கொள மிகு கரியது
வடிகொடு தனதடி வழிபடும் அவரிடர்
கடிகண பதிவர அருளினன் மிகு கொடை
வடிவினர் பயில்வலி வலமுறை யிறையே

நாகை மாவட்டம் கீழ்வேளூர் திருத்துறைபூண்டி மார்க்கத்தில் வலிவலம் எனும் ஊரில் கோயில் கொண்ட சிவனைப் பற்றிதான் திருஞான சம்பந்தன் இப்படிப் பாடியிருக்கிறார். இந்தப் பாடல் அந்த வலிவலம் கோயிலிலேயே கூட பொறிக்கப்பட்டுள்ளதே!

இந்து முன்னணியினருக்கு எரிச்சல் வந்தால் என்ன செய்திருக்க வேண்டும்? விநாயகன் ஆபாசமாகப் பிறந்தான் என்று கூறும் தேவாரத்தை அல்லவா தீயில் போட்டுப் பொசுக்க வேண்டும்!

பார்வதியின் உடல் அழுக்கிலிருந்து பிள்ளையார் பிடித்து வைக்கப்பட்டவர் என்று சிவபுராணத்திலும், கந்தபுராணத்திலும் கூறப்பட்டுள்ளதே - இந்தப் புராணங்களையல்லவா பூமியில் போட்டுப் புதைப்பதற்கு முன் வர வேண்டும்.

சூரபத்மனை எதிர்த்த போரில் அண்ணன் சுப்பிரமணியன் தோற்ற நிலையில், தம்பியாகிய விநாயகன் களத்தில் குதித்தான் என்றும், அசுரர்களை அழிக்க அழிக்க வீரர்கள் புற்றீசலாக வந்து கொண்டேயிருந்தனர் என்றும்,

வல்லபை என்ற பெண்ணின் குறியிலிருந்து அவர்கள் உற்பத்தியாகி வந்தனர் என்றும்,

 விநாயகன் தன் துதிக்கையால் வல்லபையின் பெண்குறியை அடைத்தான் என்றும்,

அதனால்தான் விநாயகனுக்கு வல்லபை கணபதி என்று பெயர் வந்தது என்றும் கந்தபுராணம் கதைக்கிறதே.

மானம், வெட்கம், ரோஷம் இருந்தால் இந்த இந்து முன்னணிகள் கந்தபுராணத்தைக் கொளுத்தும் போராட்டத்தையல்லவா நடத்த வேண்டும்?

விநாயகர்பற்றிய வரலாற்றினை அறிவுடையோர் அருவருக்கத் தக்கதான ஒரு கதை வடிவிற் கட்டிவிட்டார்கள் என்று சைவ மெய்யன்பராகிய மறைமலை அடிகளார் அவர்கள் எழுதியிருக்கிறாரே! (சைவ சித்தாந்த நூற் பதிப்புக் கழகம் வெளியிட்டுள்ள கடவுள் நிலைக்கு மாறான கொள்கைகள் சைவம் ஆகா என்னும் நூலில் விநாயகனின் ஆபாசம் குறித்து வேதனையோடு எழுதியுள்ளாரே!)

மறைமலை அடிகள் என்ன கருஞ்சட்டைக்காரரா?

இந்தக் கணபதி ஓர் இறக்குமதிச் சரக்குதானே! கி.பி.641-42 இல் பல்லவ மன்னனின் சேனாதிபதியான பரஞ்சோதி படையெடுத்து புலிகேசியைத் தோற்கடித்து வாதாபியை வென்று, அதன் அறிகுறியாக அங்கு இருந்த இந்த விநாயகனைக் கொண்டு வந்து, திருச்செங்காட்டாங்குடி என்னும் ஊரில் கோயில் கட்டி வைத்தான் என்று தமிழ் அறிஞர் பன்மொழிப் புலவர் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் எம்.ஏ; பி.எல்., எம்.ஓ.எல் அவர்கள் எழுதியுள்ளாரே_
(பிறந்தது எப்படியோ? பாரி நிலையத்தார். வெளியீடு - 1951) மறுப்பு உண்டா?

சிவசேனா வீரர் பால்தாக்கரேயை விட வா இவர்கள் விநாயகர்களின் பக்தர்கள்?

1995இல் ஒரு விநாயக சதுர்த்தியின் போது அவரின் மனைவி விநாயகப் பூஜையில் மூழ்கி இருந்த நிலையிலேயே மரணம் அடைந்தார்; எவ்வளவோ முயற்சித்தும் மனைவியைக் காப்பாற்ற முடியவில்லை.

சீ... என்ன கடவுள் என்ன விநாயகன்? எல்லாம் பொய்! பொய்!! என்று கூறி வீட்டில் இருந்த விநாயகன் உள்பட சாமிப் படங்களையெல்லாம் தூக்கி வெளியில் எறிந்தாரே (தி வீக் 19.11.1993), அவர் என்ன நாத்திகரா?

கடவுளை அவமானப்படுத்தி விட்டனர் தி.க.வினர் என்று காவல்நிலையத்தில் படைஎடுக்கும் இந்து முன்னணியினர் விநாயகர் சதுர்த்தி அன்று என்ன செய்கிறார்கள்?

விநாயகர் ஊர்வலம் நடத்தி அந்தச் சிலைகளை நீர் நிலைகளில் தள்ளி, ஏறி மிதித்து, அடி அடி என்று அடித்து மூழ்கடிக்கிறார்களே அது மட்டும் விநாயகன் அவமதிப்பு இல்லையா?

இந்து முன்னணியே, ஓடாதே நில் ஒழுங்காக நின்று பதில் சொல்!

திராவிடர் கழகம் வெளியிட்டுள்ள துண்டறிக்கையில் வல்லபையின் குறியில் விநாயகனின் தும்பிக்கை இருப்பது போன்ற படம் வெளியாகியுள்ளது.

இது ஒன்றும் திராவிடர் கழகத்தரின் கற்பனையோ, வக்கிரப் புத்தியோ அல்ல.

எத்தனை எத்தனைக் கோயில் தேர்களில் இந்த உருவம் வடிக்கப்பட்டுள்ளது.

எத்தனை எத்தனைக் கோபுரங்களில் இந்த வல்லபை கணபதி காட்சிப் படுத்தப்பட்டுள்ளார்!

வல்லபை கணபதி கோயிலே தருமபுரிக்குப் பக்கத்தில் இருக்கிறதே!

ஆத்திரம் வந்தால் இந்து முன்னணி ஆத்திகப் பிரமுகர்கள் சம்மட்டியை எடுத்துக் கொண்டு போய் வல்லபை கணபதிக் கோயிலை இடித்துத் தள்ள வேண்டியதுதானே!

தேர்களைக் கொளுத்த வேண்டியதுதானே! மானமுள்ள நம் தமிழச்சிகள் எந்த வகையில் எது கொண்டு வல்லபை கணபதியைச் சாத்த வேண்டுமோ அது கொண்டு சாத்த வேண்டியதுதானே!

மூலத்தை விட்டு விட்டு மூளை கொண்டு ஆராய்பவனைக் காய்ந்தால், காய்கிறவனுக்குக் கடுகளவும் புத்தியில்லை என்றுதான் பொருள்.

ஆத்திரப்படாமல், அருமைத் தோழா, ஒரே ஒரு நொடி ஆம் ஒரே ஒரு நொடி இந்த ஆபாசக் கடவுள்களின் பிறப்பு வளர்ப்பு செய்திகளைச் சிந்தித்துப் பாருங்கள்.

கண்டிப்பாகச் சீற்றம் வரும் இந்துமதக் கடவுள்கள்மீதும், அவற்றைக் கற்பித்த காட்டு விலங்காண்டிகள் மீதும். ஆறுவது சினம் அவ்வை வாக்கு!

வரவேற்கிறோம்

விநாயகர்பற்றி துண்டு அறிக்கைகளை விநியோகம் செய்ததால் பக்தர்களின் மனம் புண்பட்டதாக சில ஊர்களில் கழகத் தோழர்கள் மீது வழக்குப் பதிவு செய்துள்ளார்களாம் வரவேற்கிறோம்.

வீதியில் விநாயகன் பற்றி சொன்னதை எல்லாம் விரிவாக நீதிமன்றத்திலும் சொல்லலாம் அல்லவா!
------மின்சாரம் அவர்கள். 11-09-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை. SOURCE: http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_9958.html

விநாயகர் இந்து முன்னணி புகாருக்கு கி.வீரமணி பதிலடி
விநாயகனின் கை கால்களை அறுத்து வெட்டி தூக்கி எறிந்தது நீங்களா? நாங்களா? விநாயகனை பங்கப்படுத்தியது நீங்களா? நாங்களா? என்று திராவிடர் கழக தலைவர், தமிழர் தலைவர் கி.வீரமணி அவர்கள் கேள்வி எழுப்பினார்.

சென்னை திருவல்லிக்கேணியில் 18.9.2010 அன்று நடைபெற்ற பொதுக்கூட்டத்தில் திராவிடர் கழக தலைவர் தமிழர் தலைவர் ஆற்றிய உரையின் நேற்றைய தொடர்ச்சி வருமாறு:

பல பேர் கேட்பார்கள் உலகத்தை படைத்தது கடவுள் என்று இவன் சொல்லிக் கொண்டிருக்கின்றான். அந்தக் கடவுளைக் காட்டிதான் நம்மை கீழ்ஜாதியாக்கினான். நமக்குப் படிக்க உரிமை இல்லை என்று சொன்னான்.

அறிவியல் ரீதியாக கருத்துகளைத்தான் நாங்கள் வலியுறுத்தக் கூடிய பிரச்சாரத்தை செய்கின்றோம். இந்த பிரச்சாரம் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனும் செய்ய வேண்டிய பிரச்சாரம்.
எதிலே அரசியல் சட்டத்திலே. அரசாங்கங்கள் இதை ஊக்கப் படுத்த வேண்டுமே தவிர, தடுக்கக் கூடாது.

காரணம், என்னவென்றால் இந்திய அரசியல் சட்டத்திலே ரொம்பத் தெளிவாகவே அடிப்படை உரிமைகள் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது. இதே போல இன்னொரு பகுதி இருக்கிறது. இதுவும் ரொம்ப பேருக்குத் தெரியாது. வழக்கறிஞர்களுக்குக் கூட பல பேருக்கு தெரியாது. அடிப்படை கடமைகள்

அடிப்படை கடமைகள் என்ற பகுதியில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்திய அரசியல் சட்டத்தில் சொல்லப் பட்டிருக்கிறது. இந்தியாவில் இருக்கக் கூடிய ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கிற கடமைகள் என்ன?

1. அறிவியல் மனப்பான்மையை மக்களிடத் திலே ஒவ்வொரு குடிமகனும் வளர்க்க வேண்டும்.
2. ஏன்? எதற்கு? என்று கேட்க வேண்டும்.
3. மனித நேயத்தை வளர்க்க வேண்டும்.
4. சீர்திருத்தம் செய்ய வேண்டும்.

இந்திய அரசியல் சட்டப்படி ஒவ்வொரு குடிமகனுக்கும் இருக்கக் கூடிய கடமை இது.

இதைத்தான் பிள்ளையார் விழா ஆனாலும், ராமர் பிரச்சினை ஆனாலும், இந்த மூடநம்பிக்கைகளை எடுத்து விளக்கி நாங்கள் சொல்ல வேண்டுமென்று நினைக்கின்றோமே. தவிர, வேறு ஒன்றும் இல்லை.

பிள்ளையாருக்கும், நம்முடைய நாட்டுக்கும் சம்பந்தமே கிடையாது. ஏழாம் நூற்றாண்டு வரையிலே நம்முடைய நாட்டிற்குப் பிள்ளையார் வரவில்லை. மதவெறியைப் பரப்ப பிள்ளையார்

தந்தை பெரியார் பிள்ளையார் சிலையையே உடைத்தார். அப்பொழுதெல்லாம் இந்த மாதிரி பிள்ளையார் ஊர்வலம் கிடையாது. ஆனால் இன்றைக்கு பிள்ளையார் ஊர்வலம் எதற்குப் பயன்படுகிறது? மத வெறியைப் பரப்பப் பயன்படுகிறது.

ஒரு சமுதாய மக்கள் இன்னொரு சமுதாய மக்களை வெறுப்பதற்காக பயன்படுத்தப் படுகிறது. மதவெறியை மாய்த்து மனித நேயத்தைக் காப்பாற்ற வேண்டிய எங்களுக்குடைய கடமை என்பதற்காகத்தான் இந்த பொதுக் கூட்டத்தைப் போட்டு நடத்துகின்றோம்.

யாருக்கும் சிக்கலை உண்டாக்குவதற்கு அல்ல. யாருக்கும் பிரச்சினையை உண்டாக்குவதற்கு அல்ல. இன்று மாலை வந்த பத்திரிகையை நண்பர்கள் காட்டினார்கள்.

வருடாவருடம் நாங்கள் புராணக்கதைகளில் உள்ள மூடநம்பிக்கைகளை எடுத்துச் சொல்லி எவ்வளவு ஆபாசமாக, அருவருப்பாக இருக்கிறது இந்தக் கதைகள் என்பதைப் பற்றி எடுத்துச் சொல்லி மக்களுக்கு விளக்குவோம்.

இங்கே சொன்னார்கள் பிள்ளையாரை ஊர்வலமாகக் கொண்டு போய் அதை உடைத்து, கை, கால்களை தனித்தனியாக அறுத்து, கடலில் தூக்கி எறிகின்ற வேலையை நாங்கள் யாரும் செய்வதில்லை.

கடவுள் இல்லை என்று சொல்லுகின்றவர்கள் தான் நாங்கள். ஆனால், நாங்கள் யாரும் இதைச் செய்வதில்லை. ஆனால் கடவுள் நம்பிக்கையாளர்கள் தான் இந்த பாடுபடுத்துகிறார்கள். அது அவர்களுடைய உரிமை. அது எப்படியோ போகட்டும்.

இன்று மாலை வந்த செய்தி விநாயகர் சிலையை அவமதித்து துண்டு பிரசுரம். சென்னையை அடுத்த பம்மல் பகுதியில் விநாயகர் சிலையை அவமதித்து திராவிடர் கழகம் சார்பில் துண்டு பிரசுரம் வெளியிட்டதாக கூறப்படுகிறது. நாங்கள் ஓன்றும் எதையும் ரகசியமாக செய்யக் கூடியவர்கள் அல்ல.

விடுதலையில் விளம்பரப்படுத்தி லட்சக்கணக்கான துண்டறிக்கைகள் மூலம் நாடு பூராவும் பிரச்சாரம் செய்கின்றோம் இருப்பதை எடுத்துச் சொல்லுகின்றோம்.

எக்ஸ்ரே மீது கோபப்பட முடியுமா?

யாராவது எக்ஸ்ரே கருவி மீது கோபப்படுவீர்களா? எக்ஸ்ரே எடுக்கும் பொழுது எலும்பு முறிந்திருக்கிறது என்று சொல்லுகின்றான்.

இரத்த பரிசோதனை கருவி இரத்தத்தில் புற்றுநோய் இருக்கிறது என்பதைக் காட்டுகிறது.

உடனே இரத்தப் பரிசோதனைப் பற்றி சொன்னவர் மீது நடவடிக்கை எடு என்றால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி? நடவடிக்கை எடுத்தால் அவர் எவ்வளவு பெரிய புத்திசாலி?
ஆகவே நாங்கள் எந்த விலையையும் கொடுக்கத் தயார்.

இந்து முன்னணியைச் சார்ந்த பொறுப்பாளர் காவல்துறையில் புகார் கொடுத்துள்ளார். புகாரைத் திட்டமிட்டு அவர்கள் சொல்லியிருக்கின்றார்கள்.

ஏனென்றால் இதன் மூலம் காவல்துறை அதிகாரிகளுக்கு ஒரு பதற்றத்தை உண்டாக்க வேண்டும். ஒரு நெருக்கடியை உண்டாக்க வேண்டும். அவர்கள் திராவிடர் கழகத்தோடு மோத வேண்டும். அதன் மூலம் அரசாங்கத்திற்கு ஒரு சிக்கலை உண்டாக்க வேண்டும் என்பது தான். இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ்.காரர் களுடைய நோக்கம். அதற்காக இதை செய்கிறார்கள்.

புகார் மனுவில் இந்து மக்களுடைய மனதைப் புண்படுத்தும் வகையில், விநாயகர் சிலையை அவமதித்து துண்டுப் பிரசுரம் வெளியிட்ட திராவிடர் கழகம் மீதும், அதன் தலைவர் திரு.கே.வீரமணி மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று கூறப்பட்டிருக்கிறது. பம்மல், திண்டுக்கல் போன்ற பல ஊர்களில் இந்த மாதிரி செய்திருக்கிறார்கள்.

அப்படி எங்கள் மீது நடவடிக்கை எடுத்தால் காவல்துறை மீதோ, அரசாங்கத்தின் மீதோ எங்களுக்கு கோபம் இல்லை.
நடவடிக்கை எப்பொழுது?

நடவடிக்கை எப்பொழுது வரும் என்று ஆவலோடு எதிர்நோக்கிக் கொண்டிருக்கின்றோம் (கை தட்டல்).

தயது செய்து யாரும் தாமதிக்க வேண்டாம். நீங்கள் எங்கள் மீது வழக்கு போடுங்கள். நான் கோர்ட்டுக்கு போய் நீண்ட நாள் ஆகிவிட்டது.

அரசியல் சட்ட வழக்கிற்காக, பொது நல வழக்கிற்காக, தடா வழக்கிற்காக நீதி மன்றத்திற்குப் போயிருக்கின்றேன். அதே மாதிரி வாய்ப்பு வர வேண்டும். பிள்ளையார் கதையை
நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டும்

இந்த பக்தர்களை கூண்டில் நிறுத்தி ஒவ்வொரு புராணத்திலும் என்னென்ன இருக்கிறது என்பதை படித்து, விநாயகர் புராணத்தை எடுத்துக் காட்டி விளக்க வேண்டும் என்று நினைக்கின்றோம்.

பொதுக்கூட்டங்களில் இதைப் பற்றி விளக்கிச் சொல்லுகின்றோம்.

அதுபோல, வாய்ப்பு கிடைக்கின்ற இடத்தில் குறிப்பாக நீதிமன்றத்தில் நீதிபதி முன்பு விளக்க வேண்டும் என்று நினைக்கின் றோம். ஒவ்வொரு இடத்திலும் பதிவு பண்ணுவார்கள்.

இந்த பிள்ளையாருடைய யோக்கியதை என்ன என்பதை நீதிமன்றத்தில் பதிவு செய்ய வேண்டுமென்று விரும்புகின்றோம். இதை விட உலகத்திற்கு தெரிய வைக்கக் கூடிய வாய்ப்பு வேறு கிடைக்காது. எங்கள் மீது நடவடிக்கை எடுங்கள். நடவடிக்கை எடுங்கள் என்று சொல்லுகின்றார்.

விநாயகர் புராணத்தில் உள்ள செய்தி பெரியார் சொன்ன செய்தியைச் சொல்லுகின்றேன். இது தேவாரத்தில் பாடலாக இருக்கிறது. பல கதைகள் உண்டு.

ஏழாம் நூற்றாண்டில் பிறந்தது எப்படியோ? என்ற தலைப்பில் தெ.பொ.மீனாட்சி சுந்தரனார் எழுதியிருக்கின்ற நூல். இவர் எழுதிய கட்டுரை பல்கலைக் கழகங்களுக்கெல்லாம் பாடமாக இருக்கிறது. நரசிம்மவர்மனின் படைத் தலைவனான பரஞ்சோதி வாதாபியை வென்று திரும்பி வந்த பொழுது கொண்டு வந்த பொம்மை தான் வாதாபி கொண்ட கணபதி. இதுதான் பிள்ளையார் வந்த வரலாறு என்று எடுத்துச் சொல்லியிருக்கின்றார்கள்.

பார்வதி மனைவி பாத்ரூமில் குளித்துக் கொண்டிருக்கிறார். உடம்பில் இருக்கின்ற அழுக்குருண்டையைத் திரட்டி ஒரு பிடி பிடித்து உருவமாக வைத்து விட்டுப் போய் அதற்கு உயிர் கொடுத்தார். இதுதான் பிள்ளையார்.

பாத்ரூமுக்கு கதவு கிடையாது. நான் குளிக்கும் பொழுது யார் வந்தாலும் உள்ளே விடாதே என்று சொல்லி விட்டார். பார்வதி சிவ பெருமான் அடிக்கடி வந்து தொந்தரவு கொடுத்துக் கொண்டிருப்பார் போல இருக் கிறது. ஆகவே விடாதே என்று சொல்லி விட்டு போய் விட்டார். சிவபெருமான் திடீரென்று வந்து உள்ளே போகிறார். விநாயகன் தடுக்கின்றார். என்னை தடுப்பதற்கு நீ யார் என்று வாளை எடுத்து பிள்ளையார் கழுத்தை சிவபெருமான் சீவி விடுகின்றார். உடனே உள்ளே போய் விடுகின்றார்.

இந்த அம்மா கேட்கிறார். நீங்கள் எப்படி இங்கே வந்தீர்கள். நான் ஒரு காவலாளியை வைத்திருந்தேனே என்று சொல்லுகின்றார்.
இல்லை ஒருவன் தடுத்தான். நான் அவன் கழுத்தை வெட்டிவிட்டேன் என்று சிவபெருமான் சொல்லுகின்றார்.
அப்படியா.. அந்தப் பிள்ளைக்கு உயிர் ஊட்டுகின்றேன் என்று சொல்லுகின்றார்.

பிள்ளையாரின் ஆபாசமான கதைகள்
என்ன செய்வது என்று சிவபெருமான் பார்த்தார். ஒரு யானை இருந்தது. யானை தலையை வெட்டி, வெட்டிய உடலுக்கு உயிர் ஊட்டினார். இது ஒரு கதை. பிள்ளையாருக்கு என்று எழுதி வைத்திருக்கின்றான்.

இன்னொரு கதை- பரமசிவனும், பார்வதியும் காட்டில் உலவுவதற்குப் போனார்கள். அவர்கள் சென்ற பொழுது ஒரு ஆண் யானையும், பெண் யானையும் கூடி கலவியில் இருந்ததைப் பார்த்த இவர்கள். அதே மாதிரி நாமும் செய்ய வேண்டுமென்று நினைத்தார்கள். இதை விட அசிங்கம் வேறு இருக்க முடியுமா? இதுதான் விநாயகன் பிறந்த கதைகள். நாங்கள் கொஞ்சம் தரத்தோடு பேசுகின்றோம்.

புராணக்கதையைப் பற்றி பேசினால் வாயை டெட்டால் போட்டுத்தான் கொப்பளிக்க வேண்டும். அவ்வளவு அசிங்கமான, ஆபாசமான கதைகளை எழுதி வைத்திருக்கின்றார்கள்.

இன்னும் கேவலமாக இவைகள் எல்லாம் விநாயகர் புராணங்கள் பரமசிவனும், பார்வதியும், கலவியில் ஈடுபட்டால் எப்படி யானை தலையோடு மனித உருவம் பிறக்கும், இருக்கும்? இப்படி கேள்வி, ஆராய்ச்சி என்று இறங்கினால் அது ரொம்ப தூரத்திற்கு இழுத்துக் கொண்டேபோய்விடும்..  --
SOURCE: "விடுதலை"  24- 9-2010
-----
----
சோ மெய் சிலிர்த்து போகிறாரா?

துக்ளக் `சோ’ கேள்வி.
இதோ ஆதாரம்: வல்லப கணபதி!

முதலமைச்சர் கலைஞர் சாட்டையடி பதில்

சென்னை, - கலைஞர் அவர்கள் இன்று அளித்துள்ள கேள்வி பதிலில் ஒரு பகுதி வருமாறு:

கேள்வி: `பல கோவில்களில் உள்ள சிலைகளையெல்லாம் பார்த்தால் புனிதரும், புரட்சியாளருமான பெரியார் சிலை கோவில் வாசலில் இருப்பது தவறில்லை என்று முதலமைச்சர் கருணாநிதி கூறியுள்ளது பற்றி’’ என்ற கேள்விக்கு

துக்ளக் ஆசிரியர் சோ அவர்கள் திமுக கொடியிலேயே சிகப்பும் கறுப்பும் இருக்கின்றன என்பதால் திமுக தலைவர்கள் மீதெல்லாம் சிகப்பு கறுப்பு வர்ணம் பூசி விடுவதா?’’ என்று பதில் அளித்திருக்கிறாரே?

கலைஞர்: என் கேள்விக்குப் பதிலளிக்க முடியாமல் சோ அவர்கள் சொதப்பியிருக்கிறார் என்பதுதான் உண்மை.
அவர் என்னோடு வரட்டும்,

சிதம்பரம் கோவிலிலே உள்ள மிகப் பிரமாண்டமான `வல்லப கணபதி’யின் சிலையைக் காட்டுகிறேன்.

திருவாரூர் ஆலயத்திலே உள்ள `உச்சிஷ்ட கணபதி’ யின் சிலையைக் காட்டுகிறேன்.

இரண்டு சிலைகளும் கோயிலுக்குள் வைத்து எல்லா குருக்கள்மார்களாலும் பூஜிக்கப்படுகிற பக்தர்களால் வணங்கப்படுகிற சிலைகள்தான்.

அவர் என்னோடு வந்து பார்க்கட்டும். இல்லை தனியாகவாவது சென்று பார்க்கட்டும்.

கோயிலுக்குள் செல்லாவிட்டாலும் கோயிலுக்கு வெளியிலே உள்ள பிரமாண்டமான தேரின் அடித்தட்டைக் காணட்டும்.

அதிலே இருக்கின்ற சிற்பங்களைப் பார்த்து நண்பர் சோ மெய் சிலிர்த்து போகிறாரா? அல்லது கருணாநிதி சொன்னது மெய்தான் என்று ஒத்துக் கொள்ளப் போகிறாரா என்பதைப் பார்ப்போம்..

THANKS TO SOURCES:

http://viduthalai.periyar.org.in/20100921/news28.html
http://pazhaprabu.blogspot.com/2010/09/blog-post_27.html
http://naathigam.blogspot.com/2010/10/blog-post_6234.html
http://naathigam.blogspot.com/2010/09/download.html
https://docs.google.com/fileview?id=0B9vPXySlxJ-cNWNjZDZmNmItYWUwYy00YmIxLTkwYTYtY2ZlODhkMGFlOGI0&hl=en
http://www.unmaionline.com/2010/october/01-15/page03.php
http://thamizhoviya.blogspot.com/2010/09/blog-post_9958.html
--------

சுட்டியை சொடுக்கி படிக்கவும்
 ==>1. பகுதி 56-2. வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல்.

===> 2. இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணகளின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்


===>3. ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.

------
 நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

4 comments:

 1. தங்களின் வலைப்பூ நன்றகா உள்ளது,வாழ்த்துக்கள்

  ReplyDelete
 2. ஒன்று இதில் உள்ள கருத்துக்கள் தாத்தாச்சாரியார் என்ற பெயரில் வேறு ஒருவர் எழுதுகிறார். ஒரு பிராமணரே இவ்வாறு பரப்புவதை போல செய்தால் ஹிந்து மதத்தை அழித்து விடலாம் என்ற கனவு காண்கிறார்.
  அல்லது உண்மையிலேயே இது தாத்தாச்சாரியார் தான் எழுதினார் என்றால், அவருக்கு கணபதி concept புரியவில்லை என்று அர்த்தம். அரை வேக்காடு என்பதை தவிர வேறு சொல்வதற்கில்லை.

  ReplyDelete
 3. avaraavadhu dhadhacahari endra peyaril ezhudhugirar, nee un peyaraikooda solla thuppillaamal ananymus endru sollugiraai. enna concept endru unakku theriyuma???

  ReplyDelete
 4. neeya nanaa madiri poguthu,epdi pathalum companikku rendu rubaa labam

  ReplyDelete