இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

நடிகர் விவேக்கும் சாமி சாணிசித்தரும்.


நடிகர் விவேக்கை பாடாய் படுத்தியவர்கள் வாயடைத்து போகும் கதி.
விவேக்கின் வீட்டின் முன்னால் ஒரு சமயம் ஆர்ப்பாட்ட ரகளை செய்து எச்சரிக்கபட்டது.
இப்பொழுது விவேக் எத‌ன் வ‌ழியாக சிரிப்பார். ?

மலத்திற்கும் மலர் தூவப்படுகிறது.

“இன்னுமொரு பெரியார் வேண்டும் .” ??

ஒரு திரைப்படத்தில் ரோட்டோர எல்லைக்கல்லின் மேல் உட்கார்ந்திருந்த‌ விவேக்கை சிலர் விரட்டிவிட்டு அந்தக் கல்லை அவர்களின் "குல தெய்வம்" என கும்பிடுவார்கள். அப்போது "எத்தனை பெரியார் வந்தாலும் உங்களை திருத்தவே முடியாது” என கூறுவார். இந்த வசனம் மக்களிடையே பிரபல்யமாகிவிட்ட‌து.

இது போன்ற விழிப்புணர்வுகளை தன‌து நகைச்சுவை நடிப்புகளால் விவேக் தொடர்ந்தினால்,

விவேக்கின் மேல் முன்னணி மதவாதிகளின் வெறுப்பு ஏற்பட்டு,

இது போல் தொடர்ந்தால் வட மாநிலங்களில் சிவசேனாவின் நடவடிக்கைகள் போல் தொடர்வோம் என விவேக்கின் வீட்டின் முன்னால் ஆர்ப்பாட்ட ரகளை செய்து எச்சரிக்கபட்டவுடன்,

விவேக் ஒரு பிரசித்தி பெற்ற வார இதழில் தான் ஒரு கடவுள் எதிர்ப்பாளன் அல்ல . மனைவியுடன் வாராவாரம் கோயிலுக்கு சென்று வருபவன் என அறிக்கை விடும் சூழ்நிலை உருவாகியது.

"இன்னுமொரு 'பெரியார்' வேண்டும்"
ரோட்டோர எல்லை கல்லை சிலர் கடவுளாக சித்தரித்து விட்டு செல்ல, பலரும் அதை வழிபட்டு வருகின்றனர்.

ராமநாதபுரம் மாவட்டம் எட்டிவயல் அருகே மதுரை-ராமேஸ்வரம் தேசிய நெடுஞ்சாலையில் எல்லை கல் ஒன்று உள்ளது.

சில நாட்களுக்கு முன், அந்த கல் மீது சிலர் மாலை போட்டு, பூஜை நடந்ததற்கான அடையாளங்களுடன் விட்டு சென்றனர். அதை அவ்வழியாக வந்தவர்கள் பார்த்து, வழிபட துவங்கினர். சில நாட்களில் எல்லை கல் வழிபாடு பிரபலமானது.

வெளியூர் வாசிகள் இதை பொருட்படுத்தவில்லை என்றாலும், அருகில் உள்ள கிராமத்தினர் இவ்வழியாக செல்லும் போது எல்லை கல்லை வழிபடுவதை வழக்கமாக்கினர்.

நெடுஞ்சாலைத்துறையினர் ஒட்டிய ஒளிரும் ஸ்டிக்கரால், இரவில் கல் ஒளிர்வதை கூட, கடவுளின் அருள் என அப்பகுதியினர் நம்புகின்றனர்.

சத்திரக்குடியை சேர்ந்த சந்திரசேகர் கூறியதாவது: ஒரு மாதத்தில் தான் இந்த வழிபாட்டு முறை வந்தது.

"இதை வழிபட்டு சென்றதால், எனக்கு சில காரியத்தில் வெற்றி கிடைத்தது. இதற்கு பெயர் வைத்தால் வழிபட வசதியாக இருக்கும்" என்றார்.

பல ஆண்டுகளுக்கு பின், சமீபத்தில் தான் நெடுஞ்சாலையில் உள்ள எல்லை கற்கள் புதுப்பிக்கப்பட்டன. அதற்குள் அதை கடவுளாக்கி வழிபாட்டு முறையையும் கொண்டு வந்ததை அப்பகுதி பகுத்தறிவாளர்கள் ஏற்கவில்லை.

"விளையாட்டாக யாரோ செய்த செயல், தற்போது கடவுள் நம்பிக்கையாக மாறிவருவதாக,' சிலர் கூறினர். "

"கடவுளாக பாவித்தாலும் இதுவரை அதற்கு பெயர் வைக்காமல் விட்டு வைத்ததே,''ஆறுதல்பட வேண்டிய விசயம்.

நன்றி: தினமலர் 04.02.2011
THAKS TO: http://rajagambeeran.blogspot.com/2011/02/blog-post_6970.html

இது தெரிந்து நடிகர் விவேக் அழுவாரா? சிரிப்பாரா?
சிரித்தால் விவேக் எத‌ன் வ‌ழியாக சிரிப்பார். ?
-----------------
விவேக் சாணி சித்தர் ஆகிவிட்டார்.
---------

ஓர் அய்யங்கார் அம்மணிக்குச் சொந்தமான தொலைக்காட்சியில் பார்ப்பன மடிசார் மாமிகள், கையில் பித்தளைத் தட்டில் கற்ப்பூரத்தைக் கொளுத்தி எடுத்துக் கொண்டு, பசு மாட்டின் பின்புறம் மலம், மூத்திரம் வெளிவரும் உறுப்புகளுக்குக் கற்ப்பூர தீபாராதனை காட்டும் காட்சியைக் காட்டினார்கள். இதுதான் பார்ப்பன பண்பாடு!

இந்து மதத்தின் எல்லாக் கடவுள்களும் பசு மாட்டில் வசிக்கின்றன என்ற கருத்தின் அடிப்படையில்?? பசு மாட்டைக் கும்பிடும் பார்ப்பனர், இதைச் செய்ய ஆரம்பித்து விட்டனர். பசுவின் மூத்திரம் வரும் வழியில்தான், லட்சுமி வாசம் செய்கிறாள் என்கிறது, இந்து மதம்! அதனால்தான், வைணவக் கோயிலில் விடிந்ததும் பூஜை நடக்கும்போது பெருமாள் முகத்திற்கு நேரே பசு மாட்டின் யோனியைக் காட்டுகிறார்கள்! கடவுள் லட்சுமியை தரிசனம் செய்கிறதாம்!

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
===> பசு புனிதமா? வேதங்களில் ஒரு வரி காட்டமுடியுமா?
--------


சுட்டியை சொடுக்கி படிக்கவும்
==> பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறி “யாக மந்த்ரங்கள்” போன்றவையாம் .
------------------


-------

வேப்பமரசாமி.

திருச்சி மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகே இருப்பது தமிழ்நாடு மின்சார வாரிய அலுவலகம். அதன் அருகே ஒரு வேப்ப மரம் உள்ளது. அந்தத் தெருவில் மொத்தம் 20-க்கும் மேற்பட்ட மரங்கள் உள்ளன. இருப்பினும் இந்த வேப்பமரம் இப்போது முக்கியத்துவம்(?) பெற்று வருகிறது.

சில நாள்களுக்கு முன்னர் வரை அது சாதாரண மரமாகவே இருந்தது. ஆனால் இப்போது இது சாமி மரமாக மாறிவிட்டது. பட்டுத்துணி கட்டி, மஞ்சள் பூசி, பொட்டு வைத்திருக்கிறார்கள்  சில மனிதர்கள்.

இவ்வளவிற்கும் குடியிருப்புகள் குறைந்து, அரசு அலுவலகங்கள் நிறைந்த பகுதி அது. அலுவலகங்களில் பணிபுரிவோரை சில நேரங்களில் அங்கு காண முடிகிறது. வாகனங்களில் போவோர், வருவோர் அம்மரத்தைப் பார்த்துக் கன்னத்தைத் தொட்டுக் கொள்கின்றனர். (அதாவது சாமி கும்பிடுறாங்களாம்!)  Source: viduthalai/20081031/news
----------------

மலத்திற்கும் மலர் தூவப்படுகிறது மூட நம்பிக்கையால்!!! மூடநம்பிக்கை மக்களிடம் எப்படி வருகிறது?

மூடநம்பிக்கை மற்றவர்கள் செய்வதைப் பார்த்தும், மற்றவர்கள் சொல்வதை அப்படியே நம்புவதாலும், நம்பியதை அவரவர் ஏந்துக்குத் தகுந்தாற்போல மாற்றிக் கொண்டு செய்வதாலும்,
சிறிதும் பகுத்தறிவிற்கு வேலை கொடுத்து சிந்திக்காததனாலுமே பரவுகிறது!

17 ஆண்டுகளுக்கு முன் என்னுடைய நண்பனுடன் திருப்பதிக்குச் சென்றிருந்தேன். அவனுடன் அவன் மனைவி மற்றும் அய்ந்து அகவைப் பையனும் வந்திருந்தார்கள்.

திருமலைக்கு நடந்து போவதாக வேண்டிக் கொண்டதால் நடைபாதை வழியாக நடந்தே போனோம். பாதி வழியில் அவனுடைய பையன் அவசரமாக மலம் கழிக்க வேண்டும் என்று சொன்னான்.

நண்பனோ இது கோவிலுக்குப் போகும் வழி, இங்கு அப்படிச் செய்யக்கூடாது என்று கண்டித்தான். சிறுவனால் அடக்க முடியவில்லை. நான் நண்பனிடம், பரவாயில்லை, சின்னப் பையன்தானே அவன் `போன’’ பிறகு நாம் எடுத்தெறிந்து விடலாம் என்று கூறினேன். சிறுவனும் ஓரமாக உட்கார்ந்து மலம் கழித்தான்.

இதைப் பார்த்த பக்தர்களில் பலர் எங்களைக் கண்டபடி பேசி விட்டுச் சென்றார்கள். அந்த `வேலை’ முடிந்தவுடன் அதில் ஈக்கள் வந்து மொய்க்கத் தொடங்கின.

நான் பெருமாளுக்கு அர்ச்சனை செய்வதற்காக நண்பன் வாங்கியிருந்த பூவைக் கொஞ்சம் எடுத்துப் போட்டு மலத்தை மூடினேன்.

எங்களுக்குப் பின்னால் வந்த பக்தர்கள் இதைப் பார்த்துவிட்டு ஏன் என்று சிந்திக்காமல் இந்த இடத்தில் பூப்போட்டால் புண்ணியம் என்று எண்ணி அவர்களும் நான் போட்ட பூவின்மேல் பூவை எடுத்துப் போட்டார்கள்.

நாங்கள் இதைக் கொஞ்ச நேரம் வேடிக்கைப் பார்த்துவிட்டு மேலே போய் கும்பிட்டு விட்டுத் திரும்பிவர 7 மணி நேரம் ஆகிவிட்டது.

திரும்பி வரும்போது பூப் போட்ட இடத்தில் பெரிய கும்பல். அந்த இடத்தில் பூப் போடுவதற்காக ஆண்களுக்குத் தனி வரிசையும், பெண்களுக்குத் தனி வரிசையும் செய்து கொடுக்க 2 காவலர்களைக் கோயில் ஆட்சி ஏற்பாடு செய்திருந்தது.

அய்ந்து அகவைச் சிறுவன் வேறு வழியில்லாமல் அங்கு மலம் கழிக்கும் போது திட்டியவர்கள், அதன்மீது போடப்பட்ட மலரைப் பார்த்தவுடன் மதி கெட்டுப் போவது ஏன்? கொஞ்சம் சிந்தித்தால் இந்த அவல நிலை வருமா?

என் நண்பனும் மூடத்தனம் என்பதை உணர்ந்தான்!

ஒவ்வொரு மாதமும் ஆரல் (கார்த்திகை) நாளன்று முருகன் கோயில்களில் பக்தர்கள் கூட்டம் நிரம்பி வழியும். பூசனைத் தட்டுகள் விற்கும் கடைகள் அன்றைக்குத் தற்காலிகமாக நிறைய இருக்கும். கணவன், மனைவி, அம்மா ஆகிய மூன்று பேரும் அருகருகே தனித்தனியாக மூன்று கடைகளைப் போட்டுப் பூசனைத் தட்டுகள் விற்பார்கள்.

கணவன் 15 உருபா என்பார்; அந்தக் கடையில் வாங்கவில்லையென்றால் மனைவி அதே பொருள்களை 12 உருபா என்று விற்று விடுவார்.அவரிடம் வாங்கவில்லை எனில் அம்மா, 10 உருபாவுக்கு விற்று விடுவார். எப்படியோ வணிகம் நடந்து விடும். மூன்று பேருக்கும் சேர்த்து 1,000 உருபா ஊதியம் கிடைக்கும். இதற்காக ஒரு கிழமை அலைந்து தேங்காய், பழம், சூடம், மணக்குச்சி (ஊதுபத்தி), வெற்றிலை, பாக்கு, பூ இவற்றைச் சேர்க்க வேண்டும்.

கடைக்காரர் தன் சிந்தனையுடையவர். நினைத்துப் பார்த்தார். ஒரு கிழமை அலைந்து மூன்று பேர் உருவா 1000 சம்பாதிப்பது முட்டாள்தனம். கோயிலில் பூசனை செய்பவர் எந்தப் பொருளுமே இல்லாமல் வெறும் மந்திரம் என்ற பெயரிலேயே 4000, 5000 உருபா வரை சம்பாதிக்கிறார்.

நாமும் அதுபோல ஏதாவது செய்ய வேண்டும் என்றெண்ணி, ஓர் ஆரல் (கார்த்திகை) நாளன்று 1000 சூட வில்லைகளை மட்டும் வாங்கி வந்து, பேருந்து நிற்கும் இடத்திற்குப் பக்கத்தில் ஒரு மேசையைப் போட்டு, அதன்மீது ஒரு வெள்ளைத் துணியைப் போட்டு, மேசையை மல்லிகைப்பூவால் அழகுபடுத்திச் சூடத்தை மேசைமீது அழகாக அடுக்கி வைத்தார்.

தெருவோரமாகக் கிடந்த ஒரு கருங்கல்லைக் கொண்டு வந்து தரையில் போட்டு அதற்கு மூன்று பட்டைகள் போட்டு குங்குமமும் வைத்து, அதற்குப் பூப் போட்டு, ஒரு சூடவில்லையை ஏற்றி வைத்தார்.

பேருந்தை விட்டு இறங்கியவர்களில் ஒருவர் வந்து, இங்கே என்ன சிறப்பு? ஏன் சூடம் கொளுத்தி வைக்கப்பட்டுள்ளது? என்று கேட்டார். கடைக்காரரோ இது எல்லாருக்கும் தெரியாது.

இந்த ஊரிலேயே இந்தக் கல்லுக்குத்தான் மகிமை! இதைக் கும்பிடாமல் முருகனைக் கும்பிடுவதால் எந்தப் பயனும் இல்லை என்றார்.

உடனே அவர் ஒரு சூடத்தை வாங்கி ஏற்றி வைத்து கீழே விழுந்து கும்பிட்டார். இதைப் பார்த்த மற்றவர்களும் அதே போல் செய்யத் தொடங்கினர்! விளைவு?

50 காசு சூடம் 2 உருபா. மூன்று மணி நேரத்தில் விற்றுத் தீர்ந்தது. ஊதியம் உருவா 1500! பழம், தேங்காய் என்று அலையவும் தேவையில்லாமல் போயிற்று.--- நன்றி: `வெல்லும் தூயதமிழ், (நவம்பர் 2006) ARTICLE SOURCE: "VIDUTHALAI" 18.02.07

---------------
சர்வ சகல சித்த சர்க்கரை வாங்கி பய‌னடையுங்கள்.
பெரிதாக காண படத்தின் மேல் சொடுக்கி தோன்றும் ப‌ட‌த்தில் மீண்டும் சொடுக்கி  ப‌டிக்க‌லாம்.
---------
சுட்டியை சொடுக்கி படிக்கவும்.
==>சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

==> இந்துமதம் இந்திய மதமா?
இந்துமதம் இந்தியர்கள் இல்லாத பிராமணகளின் மதம். இந்து மதமும் இந்திய மதம் இல்லை! இல்லை! இல்லவே இல்லை! இந்துக்களின் நாடு என்கிறார்களே, இந்தியா இந்துக்களின் நாடு என்று எந்த வேதத்தில், புராணத்தில் சட்டத்தில் இருக்கின்றது? அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள் 


==> ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள். தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.

==> பகுதி 91-2 to 96. எது இந்து மதம்? நம்தேசத்தில் இருந்த 450 மதங்களில்.? சர்டிபிகேட்களில் ‘ஹிந்து’ என்று எழுதுகிறார்களே ஏன்? வேதங்களில் ஹிந்து என்றோ இந்து என்றோ ஒரு இடத்தில் கூட இல்லவே இல்லை. கிடையவே கிடையாது. ‘ஹிந்து’ என்ற பெயர் நமக்கு அந்நியன் சூட்டிய பெயர். அதைத்தான் நாம் இன்று சூட்டிக் கொண்டிருக்கிறோம்.அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

7 comments:

 1. 'ப‌சு' திருப்பி (வ‌டிவேலு/பார்த்திப‌ன் ஜோக் அல்ல‌)
  வாசித்தால் 'சுப‌' ஆகிற‌து. அத‌னால் தான் ப‌சுவின்
  பின்புற‌ம் வ‌ணங்க‌ப்ப‌டுகிற‌தாம்.

  ReplyDelete
 2. சூப்பர்ப்... பொய் சொல்றேன்னு நினைக்காதீங்க... இதே பதிவை நானும் எழுதனும்னு நினைச்சேன்... அதை கொஞ்சம் நகைச்சுவையான எழுத்துநடையுடன் எழுத வேண்டுமென்று காத்திருந்தேன்... அதற்குள் நீங்கள் முந்திக்கொண்டீர்கள்... பரவாயில்லை இருக்கட்டும்... யார் எழுதினால் என்ன...? கருத்து தானே முக்கியம்... எனது ஏதாவதொரு பதிவில் உங்கள் இடுகைக்கு இணைப்பு தருகிறேன்...

  உங்கள் சேவை தொடரட்டும்...

  ReplyDelete
 3. தோழர் பிரபாகரின் வருகைக்கும் கருத்துக்கும் ஆதரவுக்கும் நன்றி.

  எனது BLOG க்கு தாங்கள் BLOG ல் இணைப்பு தருவது பேருதவியாக இருக்கும்.

  முன் கூட்டிய நன்றிகள்.

  தமிழன்.

  ReplyDelete
 4. எல்லாம் பயம் படுத்துற பாடுதாங்க ஹி ஹி!!

  கலிமுத்தி போச்சில்ல அதான்

  ReplyDelete
 5. உங்களுக்கு பிடித்த தளங்களை எளிதில் புக்மார்க் செய்யுங்கள் + உங்கள் தளத்திற்கு அதிக வாசகர்களை பெற,,, இணையுங்கள்,,,

  http://otti.makkalsanthai.com/upcoming.php

  பயன்படுத்தி பாருங்கள் சகோ,, பிடித்திருந்தால் நமது நண்பர்களுக்கு தெரியபடுத்துங்கள்,,,,

  ReplyDelete
 6. படிக்கவே அருவருப்பாக இருக்கிறது..! இதெல்லாம் அப்பாவிகளை பயன்படுத்தி வயிறு வளர்க்க எண்ணுகிற புரோகித புரட்டர்களின் சூழ்ச்சி தான் என்பது எளிதில் விளங்குகிறது..

  தகுந்த ஆதாரங்கள் அடிப்படையில் அமைந்த இந்த பதிவுக்கு எமது பாராட்டுக்களும்..வாழ்த்துக்களும்..!

  ReplyDelete