இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?

நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்?

சித்திரை முதல் நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.

ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?

அறிவிற் சிறந்த, படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! தெளிந்து, மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.
சர்வஜித்து’ என்ற சொல் தமிழே அல்ல; சித்திரை முதல்நாள் தமிழ்ப்புத்தாண்டுமல்ல.

படித்த, பட்டம் பெற்ற தமிழர்களே! `சர்வஜித்து’ தமிழாண்டல்ல எனத் தெளிந்து,மற்றவர்க்கும் தெளிவூட்டுங்கள்.

தமிழ்ப்புத்தாண்டென்பது பித்தலாட்டம். கிறித்துவரும், இசுலாமியரும் தங்கள் ஆண்டுகளை எண்களால் கணக்கிடுகிறார்கள்.

`பிரபவ’ எனத் தொடங்கி `அக்ஷய’ என்று முடிவுறும் அறுபது பெயர்களால் ஆண்டுகள் சுழற்சி முறையில் அழைக்கப்படுவது ஏன்?அந்த 60 பெயர்களும் பிள்ளைகளுக்கு சூட்டப்பட்டதாகச் சொல்கிறார்களே, அந்தப் பிள்ளைகளைப் பெற்றவர்கள் யார்?`சாஸ்த்ரோத்தமர்களை’ கேளுங்கள். - `கோடாங்கி’ கடலூர்.

Source: "viduthalai" 28.04.2007.
 -----
அய்யோ ஆபாசமே! இதுதான் தமிழ் வருடப் பிறப்பா?

வருஷம் - 1.  ஒரு முறை நாரத முனிவர் கிருஷ்ணமூர்த்தியை நீர் அறுபதினாயிரம் கோபிகைகளுடன் கூடி இருக்கிறீரே எனக்கு ஒரு கன்னிகை தரலாகாதா என்று கேட்க,

அதற்குக் கண்ணன் நான் இல்லாப் பெண்ணை வரிக்க என் உடன்பட்டுத்தான் (60,000) வீடுகளிலும் பார்த்து, கண்ணன் இல்லா வீடு கிடைக்காததினால், கண்ணனிடம் வந்து அவர் திருமேனியில் மய்யல்கொண்டு, அவரை நோக்கி நான் தேவரீரிடம் பெண்ணாய் இருந்து ரமிக்க எண்ணங் கொண்டேன் என்றனர்.

கண்ணன் யமுனையில் நாரதரை ஸ்நானஞ் செய்ய ஏவ, முனிவர் அவ்வகை செய்து ஒரு அழகுள்ள பெண்ணாயினர்.

இவளுடன் (நாரத முனிவர்) கண்ணன் அறுபது வருஷம் கிரீடித்து அறுபது குமாரரைப் பெற்றனர். அவர்கள் பெயர் பிரபவ முதல் அக்ஷய இறுதியானவர்களாம். இவர்கள் வருஷமாம் பதம் பெற்றனர்.

2. (6). பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதூத, பிரசோத்பத்தி, ஆங்கீரச, ஸ்ரீமுக, பவ, யுவ, தாது, ஈசுவர, வெகுதானிய, பிரமாதி, விக்ரம, விஷு, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விய இவ்விருபதும் உத்தம வருஷங்கள்.

சர்வஜித்த, சர்வதாரி, விரோதி, விகிர்தி, கர, நந்தன, விஜய, ஜய, மன்மத, துன்முகி, ஏவிளம்பி, விளம்பி, விகாரி, சார்வரி, பிலவ, சுபகிருது, சோபகிருது, குரோதி, விஸ்வாவசு, பராபவ இவ்விருபதும் மத்திம வருஷங்கள்,

பிலவங்க, கீலக, சவுமிய, சாதாரண, விரோதி கிருது, பரிதாபி, பிரமாதீச, ஆனந்த, இராக்ஷஸ, நள, பீங்கள, காளயுக்தி, சித்தார்த்தி, ரவுத்ரி, துன்மதி, துந்துபி, உருத்ரோத்காரி, இரத்தாக்ஷி, குரோதன், அக்ஷய
இவ்விருபதும் அதம வருடங்களாம்.

(ஆண் கடவுள் கிருஷ்ணனுக்கும் ஆண் முனிவர் நாரதருக்கும் பிற்ந்த அறுபது பிள்ளைகளின் பெயர் தான் இவை.)

(ஆதாரம்: அபிதான சிந்தாமணி பக்கம் 1392).
இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் பிரசுரமானது.
SOURCE: “VIDUTHALAI” 10.04.2007.
------
நாரதருக்கும், விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள்? முதலமைச்சர் கலைஞர் கேள்வி

சென்னை, ஜன. 26- நாரதருக்கும் விஷ்ணுவுக்கும் பிறந்த பிள்ளைகளா தமிழ் வருடங்கள் ?

மொழிப் போர்த் தியாகிகள் வீரவணக்க நாள் மாபெரும் பொதுக்கூட்டத்தில் தமிழக முதல்வர் கலைஞர் அவர்கள் கேள்வி எழுப்பினர்.

இது பற்றி அவர் ஆற்றிய உரை: தம்பி துரைமுருகன் இங்கே பேசினார் - கருணாநிதி எல்லாவற்றையும் பூம்புகார் முதற்கொண்டு வள்ளுவர் கோட்டம் வரையிலே தமிழை வளர்க்க, தமிழைப் பரப்ப எண்ணுகிறார் என்று சொன்னார்.

அப்படித் தான் நேற்றைய தினம் வெளியிடப்பட்ட ஆளுநர் உரையில் தமிழனுடைய திருநாள் பொங்கல் திருநாள் - தை பிறந்தால் வழி பிறக்கும் என்று ஒரு பாமர மனிதன் கூடச் சொல்லுகின்ற அளவிற்குப் பழக்கப் பட்டுவிட்ட அந்த வாசகத்தை நினைவுபடுத்துகின்ற நாள், தை முதல் நாள்.

அந்தத் தை முதல் நாள்தான் தமிழனுக்கு ஆண்டு முதல் நாள் - இல்லாவிட்டால் நான் பிறந்தது எத்தனை ஆண்டுகளுக்கு முன்பு - உங்களால் சொல்ல முடியுமா? குழம்பி விடுவீர்கள்.

நான் ஆரிய முறைப்படி சொல்லுகின்ற ஆண்டுகளில் ரக்தாட்சி வருஷம் பிறந்தவன்.

பிரபவ, விபவ, சுக்கில, பிரமோதுத, பிரஜோர்பத்தி, ஆங்கீரச, சிறீமுக, பவ, யுவ, தாது, ஈஸ்வர, வெகுதான்ய, பிரமாதி, விக்ரம, விஷூ, சித்திரபானு, சுபானு, தாரண, பார்த்திப, விஜய, ஜய, மன்மத, துன்முகி, விளம்பி என்ற இந்த வரிசையில் வட மொழி வரிசைக் கணக்கின்படி - நான் ரக்தாட்சி வருடம் பிறந்தவன். ரக்தாட்சி 58 ஆவது வருடம். ரக்தாட்சிக்குப் பிறகு குரோதன, அட்சய - அத்தோடு அறுபதாண்டுகள் என்ற சுற்று முடிந்துவிடும்.

அறுபது வருடங்கள் என்றால் என்ன?


நாரதருக்கு ஒரு ஆசை வந்தது. மகா விஷ்ணுவை கணவனாக ஏற்றுக் கொள்ள வேண்டுமென்று. யாருக்கு நாரதருக்கு. அவர். ஆசை நிறைவேறியது. இரண்டு பேருக்கும் குழந்தை பிறந்தது. அறுபது குழந்தை பிறந்தது. அந்தக் குழந்தைகள் ஒவ்வொன்றுக்கும் பெயர் வைத்தார்கள். அறுபது வருஷத்தின் பெயர்களை வைத்தார்கள்.

62 குழந்தைகள் பிறந்திருந்தால் 62 வருடங்களாக இருந்திருக்கும். அந்த 60 குழந்தைகளின் பெயர்கள்தான் பிரபவ, விபவ என்று நான் சொன்ன வரிசை.

இதிலே நான் பிறந்த வருஷன் ரக்தாட்சி. பஞ்சாங்க முறைப்படி யாரோ ஒரு வெளியூர்க்காரன் என்னைப் பார்த்து நீங்கள் எப்ப சார் பிறந்தீர்கள் என்று கேட்டால் நான் என்ன சொல்வேன். ரக்தாட்சி ஆண்டுல பிறந்தேன் என்று சொன்னால், அவன் உடனே ரக்தாட்சி ஆண்டிலிருந்து எண்ணிப் பார்த்து விட்டு, ஓகோ, உங்களுக்குப் பன்னிரண்டு வயதுதான் ஆகிறதா என்று 84 வயதுக்காரனைப் பார்த்துக் கேட்பான்.

ஏனென்றால் அந்தச் சுற்று அப்படித்தான் இருக்கிறது. ரக்தாட்சியிலிருந்து தொடங்கி இப்போதைய வருஷம் வரை எண்ணிப் பார்த்தால் பன்னிரண்டு வயதுதான் வரும். இப்படிப் பட்ட ஒரு கணக்கு - சரியான வயதையோ - சரியான காலத்தையோ குறிப்பிட முடியாது என்ற காரணத்தினால்தான், ஒரு தொடர்ச்சியான ஆண்டாக இருக்க வேண்டும்.

கிறிஸ்து பிறப்பதற்கு முன், கிறிஸ்து பிறந்ததற்குப் பின் - என்று கி.மு., கி.பி. என்று ஆங்கிலேயர்கள் வரிசைக் கணக்கு வைத்திருக்கிறார்களே அதைப் போல ஏன் இருக்கக் கூடாது என்று எண்ணித்தான் 1921 ஆம் ஆண்டு பெரும் புலவர் - மறைமலை அடிகள் என்றால் சாதாரணப் புலவர் அல்ல - இன்றைக்கிருக்கின்ற புலவர்களுக் கெல்லாம் பெரும்புலவர் - அவருடைய தலைமையில் ஒன்றல்ல, இரண்டல்ல, அய்ந்நூறு புலவர்கள் பச்சையப்பன் கல்லூரியிலே கூடி, எடுத்த முடிவுதான்-

இனிமேல் தமிழருடைய ஆண்டு தை முதல் நாள் பிறப்பதாக வைத்துக் கொள்வோம். அதுதான் உழவர் திருநாள். உழைப்போருக்கு திருநாள். அந்த நாள் தமிழனுடைய ஆண்டின் முதல் நாளாக வைத்துக் கொள்வோம். இதைத் தொடர் ஆண்டாக வைத்து திருவள்ளுவர் ஆண்டு என்றழைப்போம் என்று அழைத்தார்கள்.

பிறகு வந்தவர்களும் அதைக் கிடப்பிலே போட்டு விட்டார்கள்.
நான் - அண்ணாவின் மறைவுக்குப் பின் -முதலமைச்சராக வந்த பிறகு அதை ஓரளவு ஏடுகளிலே நம்முடைய பத்திரப் பிரமாணங்களிலே அதைப் பதிவு செய்தேன். அப்படியே தொடர்ந்தது.

இந்த ஆண்டு எல்லோரையும் கலந்து கொண்டு, புலவர்களையும் கலந்து கொண்டு அறிவித்திருக்கிறோம். தமிழக அரசின் சார்பாக இனி தை முதல் நாள் தான் தமிழனுடைய முதல் ஆண்டு பிறப்பு நாள் என்று அறிவித்திருக்கிறோம்.

இதற்கு உடனே - யாராவது ஆரியர்கள் எதிர்த்து இருந்தால் நான் ஆச்சரியப்பட்டிருக்கமாட்டேன். அய்யர்கள் எதிர்த்திருந்தால் நான் ஆச்சரியப்பட்டு இருக்கமாட்டேன்.

தம்பி துரை முருகன் சொன்னது மாதிரி இதை இரண்டு மூன்று புலவர்கள், இதை ஒத்துக்க முடியாது என்று சொல்லியிருக்கிறார்கள். இதில் ஆச்சரியம் ஒன்றுமில்லை.

சங்க காலத்தில் தமிழ்ச் சங்கத்திலேயே புலவர் நக்கீரன் முன் குயக் கொண்டான் என்ற தமிழ்ப் புலவன் ஆரியம் நன்று; தமிழ் தீது என்று சொன்னானாம். அதைக் கேட்டு கோபம் கொண்ட நக்கீரன், தமிழ் தீதென்றும், வடமொழி நன்று என்றும் சொன்ன நீ சாகக் கடவாய் என்று அறம் பாடிக் கொன்றாராம். பின்னர் அறிஞர் பெருமக்கள் அனைவரும் வேண்டிக் கொண்டபடி நக்கீரன் மறுபடியும் வெண்பாபாடி குயக் கொண்டானை உயிர் பெறச் செய்தாராம். இவ்வாறு முதலமைச்சர் கலைஞர் பேசினார். -  SOURCE: இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் பிரசுரமானது “VIDUTHAI” 20.10.2008.
------
தமிழ்ப் புத்தாண்டா?நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? அறிவிற் சிறந்த தமிழ்ச் சமூகம் ???

பகீரதன் தெரியும் அல்லவா? பெரிய தவம் செய்தானே. அந்தத் தவச் சிற்பம் கூட மாமல்லபுரத்தில் உள்ளதே. அவன் தான் பெண்ணுக்கும், பெண்ணுக்கும் பிறந்தவன். இவன் செய்த தவம்தான் அந்தரத்தில் ஓடிக் கொண்டிருந்த ஆகாச கங்கையைத் தரைக்கு வர வைத்தது. அதன் காரணமாகத்தான் கங்கை நதி வட நாட்டில் ஓடுகிறது.

பிறப்பு மாதிரியே அவனது சாதனைகளும் கூட அறிவிற்கு அப்பாற்பட்ட கதைதான். அயோத்தியில் ஓர் அரசன். இராமனுக்கு முந்தியா, பிந்தியா தெரியவில்லை. அவனுக்கு இரண்டு தங்கைகள். இருவரும் ஒரே கட்டிலில் தான் உறங்குவார்கள். ஒன்றாகவே படுத்துத் தூங்குவார்கள்.

ஒருவரோடொருவர் அணைத்தவாறு நித்திரை கொள்ளும் போது ஒருத்திக்குக் கர்ப்பம் உண்டாகிப் பிள்ளையும் பிறந்துவிட்டது. அந்தப் பிள்ளைதான் பகீரதன். இதை மருத்துவ உலகு Sapphism என்கிறது.

ஆனால், இதனால் கருத்தரிக்கும் என மருத்துவ அறிவியல் கூறவில்லை.

அர்த்தமுள்ள இந்துமதம் கூறுகிறது. இதிலும் சுக்கில சுரோணிதம் கிடையாது. சுரோணிதம் மட்டுமே உண்டு.

படைப்புக் கடவுள் பிரம்மா. அதற்கு அப்பா நாராயணன். இதன் தொப்புளில் இருந்து புறப்பட்டு நிற்கும் தாமரைப் பூவில் உட்கார்ந்திருக்கும்.

இந்த நிலையில், இதன் மகன் நாரதனாம். கலகம் செய்யும் கதாபாத்திரமாக இந்து மதக் கதைகளில் வரும். ஆக, நாராயணனின் மகன் பிரம்மாவின் மகன் நாரதன்.

நாராயணனுக்குப் பேரன். நாராயணனின் கீழிறக்கம் (அவதாரம்) கிருஷ்ணன். பெண் லோலன். எல்லாப் பெண்களும் கிருஷ்ணனையே சுற்றிச் சுற்றிச் சுகம் காண்கிறார்கள்.

அப்படி ஒரு கவர்ச்சி எப்படி வந்தது கிருஷ்ணனுக்கு என்று சந்தேகம் நாரதனுக்கு. கிருஷ்ணனிடம் கேட்கிறான் - எனக்கும் ஒரு பெண் வேண்டும் என்று. கிருஷ்ணன் சொன்னானாம், எங்கே நான் இல்லையோ, அங்கே நீ போய்க் கொள் என்று. நம்பிய நாரதன் நாயாய் அலைந்ததாம். பேயாய்த் தேடியதாம்.

எங்கும் தனியாகப் பெண் இல்லவே இல்லையாம். எல்லா இடத்திலும் கிருஷ்ணன் சல்லாபித்துக் கொண்டே இருந்தானாம். அலுத்துப் போய் நாரதன் கிருஷ்ணனிடம் வந்து அப்படி என்னதான் இருக்கிறது, உன்னிடம் என்று கேட்டதாம்.

நாரதனுடன் கலவி செய்து, காட்டியதாம் கிருஷ்ணன். கலவியின் விளைவாக ஒன்றல்ல, இரண்டல்ல, அறுபது பிள்ளைகள் பிறந்தனவாம். அவை தாம் பிரபவ முதல் அட்சய வருடம் வரை பெயர் கொண்ட வருடங்களாம். ஆமாம், தமிழ்ப் புத்தாண்டுகளின் பெயர்களாம்!

ஒன்று கூடத் தமிழ்ச் சொல் இல்லை! எப்படி இவை தமிழ்ப் புத்தாண்டு?

பிறக்கப் போவது - சர்வஜித்! போன சர்வஜித்தில் பிறந்தவருக்கு இப்போது 60 வயது. மணிவிழா ஆண்டு. ஆளைப் பார்த்தால் வயது புரிந்துகொள்ளலாம். பார்க்காமலே சர்வஜித் ஆண்டில் பிறந்தேன் என ஒருவர் கூறினால், அவரின் வயதை எப்படிக் கணக்கிடுவது?

ஒரு வயதுக் குழந்தை என்பதா? 60 வயது மணி விழாக்காரர் என்பதா?

இவ்வளவு குழப்பமாகவா அறிவிற்சிறந்த தமிழ்ச் சமூகம் ஆண்டுக் கணக்கை வைத்துக் கொண்டிருக்கும்? இந்து தான் வைத்துக் கொண்டிருப்பர். நாம் இந்துக்கள் அல்லவே! பின் எப்படி இது நம் புத்தாண்டு? தமிழ்ப் புத்தாண்டு? – இக்கட்டுரை ''விடுதலை'' தினசரியில் பிரசுரமானது . SOURCE: - “ viduthalai.” 07-04-2007.
-----

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

==>  சிவனுக்கும் பெருமாளுக்கும் பிறந்த அய்யப்பன்.
----

நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

3 comments:

 1. ஜெயலலிதா அம்மையாரின் சித்திரைத் தமிழ்ப்புத்தாண்டு அறிவுக்கும் அறிவியலுக்கும் ஒவ்வாத ஒரு புராண வரலாறு.ஜெயலலிதா உண்மையான தமிழச்சியல்ல பார்பனச்சி.ஆகையால் தமிழ் நாட்டில் தமிழர்களுக்கு எதிராகவும் பார்பனியத்துக்கு ஆதரவாகவும் செயல்படுகின்றார்.இவரது முடநம்பிக்கை புகுத்தலை தட்டிக் கேட்க தமிழக சட்ட சபையில் ஒரு சரியான ஆண்பிள்ளை கிடைக்கவில்லையா?

  ReplyDelete
 2. What is this AC and BC. After the birth of Christ. And Before the birth of Christ.Jess's birth day AD 4 DECEMBER 24th. BUT AC AND BC NOT MATCH. WHAT IT'S MEANNING OF AC AND BC.

  ReplyDelete
 3. DEAR BROTHER MARIK KANNAN:
  PL DONT WRITE AS "AC". ACTUALLY THIS SHOULD BE "AD" WHICH MEANS ANNO DOMINI ( IN THE YEAR OF THE LORD) BECAUSE ONLY JESUS ALONE SEPARATED THE WORLDS HISTORY FOR ALL NATIONS (COUNTRIES)THROUGH HIS HOLY BLOOD. THIS IS FACT IN THE HISTORIES AND NOT SUCH AS HINDU PURANAAS. THIS IS NOT RELIGIOUS PROBAGANDA. PL TAKE THIS IN A RIGHT MANNER. ANY WAY I APPRECIATE THE RATIONALISATION ABOUT THE FOOLISH PROCEDURES OF HINDUS.

  ReplyDelete