இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு கடவுள் பிராமணனே ?


கடவுள் மந்திரங்களுக்கும், மந்திரங்கள் பிராமணர்களுக்கும்  கட்டுப்பட்டவை. பிராமணர்களே நமது கடவுள்.

உன்னையே நீ கேள்? உன்னுடைய இறைவன் யார்?

ஹிந்துகள் பிராமணர்களல்ல. பிராமணர்கள் ஹிந்துகளல்ல.

*விக்கிரக் கடவுள்கள் அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா? •கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தாங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

இந்துக்களே! விழிமின்! எழுமின்! ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA) 

ஆச்சார்யா ரஜினிஷ் 6.

காமத்தைக் கடவுளாகக் காட்டி அந்தக் காமத்தில் மூழ்கி கரை காணத் துடித்த சுவாமிஜி இவர். இவர் உலகப் பிரசித்திப் பெற்ற காமக்கடவுள்.

இந்தச் 'சுவாமி" என்ன சொல்கின்றார் என்றால், இந்த வாழ்க்கை முடிவதற்குள்ளால் மனிதன் முடிந்தவரை வாழ்க்கையை சுவைத்து விட வேண்டும். இவர் சொன்னதையெல்லாம் செய்தும் காட்டினார்.

இதன் விளைவாக இந்தச் சுவாமியும் அவருடைய சீடர்களும் எல்லாவிதமான பாலியல் நோய்களையும் உலகம் முழுவதும் பரப்பி விடும் பெருங்கூட்டமாக ஆகிவிட்டார்கள்.

சந்திர சுவாமி
உலகப் புகழ் பெற்ற எல்லா ஊழல்களிலும் இந்த சுவாமி உண்டு. இவரை ஊழல் 'சுவாமிஜி" என்றால் அது மிகையாகாது.

ஹாலிவுட் என்ற சினிமா கோட்டத்தில் வாழும் சினிமா நட்சத்திரங்களின் பிரச்சனையைத்தான் இவர் பெரும்பாலும் தீர்த்து வைக்க முனைகின்றார்.

போபர்ஸ் போன்ற பெரிய ஊழல்களில் தான் இவர் ஈடுபடுவார். ஹாலிவுட் நடிகைகளுக்கு ஏதேனும் பிரச்சனை என்றால் இவர் ஒரு சிறப்பு விமானத்தில் பறக்கின்றார்.

இந்தியர்களின் பிரச்சனையை தீர்த்து வைக்கின்ற அளவுக்கு இவர் கீழே இறங்கி வரமாட்டார். ஆனால் இந்தியாவை ஊழல் பிரச்சனையில் சிக்க வைக்கும் அனைத்திலும் இவர் உண்டு.

முன்னாள் இந்திய அழகி பமிலா - இவள் இப்போது உலகப்புகழ் பெற்ற விபச்சாரி. இவளோடு இந்த பிரம்மச்சாரி சந்திரசுவாமி ஆடிய ஆட்டமும் நடத்தி முடித்த ஊழல்களும் சொல்ல ஏடு தாங்காது.

சுமாமிஜி தீரேந்திர பிரம்மச்சாரி (ரோம்போ கடவுள்)
இவர் நவீன துப்பாக்கித் தொழிற்சாலை சுவாமி. இவருக்குச் சொந்தமாக ஒரு துப்பாக்கி தொழிற்சாலை இருக்கின்றது. குண்டர் தொழிலை தொண்டாகக் கொண்ட ரௌடிகள் இவரது ஆஸ்தான சீடர்கள்.

இப்படிச் 'சுமாமி"களைக் கொண்ட ஒரு மதமும், வேதமும் தேவையா? இவர்கள் புனிதர்களா? இல்லை புனித வேஷம் போட்டு ஊரையும் நாட்டையும் ஏமாற்றும் கடைநிலை மானிடர்களா?

ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கம்.
இந்த இயக்கத்தில் போதைப் பொருள் உட்கொண்டு மதிமயங்கி அலையும் மேலை நாட்டவர்கள் தங்களை இணைத்துக் கொண்டுள்ளார்கள். காசியிலே உள்ள ஹிந்து சந்நியாசிகளைப் போல் இவர்கள் போதைப் பொருட்களைக் கொண்டு புகைப்பிடிக்கின்றார்கள்.

15-8-1987 ல் வெளிவந்த UNIசெய்தி:
இந்த இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்துபவர் நிரூபிக்கப்பட்ட கொலைகாரர், போதைப் பொருட்களை கடத்தும் குற்றத்திலும் இருப்பவர் என்று கூறுகின்றது.

38 வயதான இந்தச் சுவாமியின் பெயர் Thomas Drescher (தாமஸ்டிரஸ்சர்) இப்போது இவருக்கு வயது 50. மேற்கு வெர்ஜினியா மத்திய சிறையில் அடைக்கப்பட்டிருந்தார். இவர் 33 வயதான ஸ்ட்டீபன் பிரின்ட் என்பவரைச் சுட்டுக் கொண்றார். 1979 இல் இவர் போதைப் பொருட்களைத தயார் செய்து விற்றார் எனக் குற்றம் சாட்டப்பட்டார். குற்றம் நிரூபிக்கப்பட்டுத் தண்டனையும் பெற்றுள்ளார். 1983ல் இவர் கிருஷ்ண பக்தர் ஒருவரை கொலை செய்தார்.

இதுவரை இந்த ஹரே ராமா ஹரே கிருஷ்ணா இயக்கத்தைத் தலைமை ஏற்று நடத்திய 11 தலைவர்கள், குழந்தைகளைச் சித்திரவதைச் செய்தல், கொலை செய்தல், போதைப் பொருட்கள் விற்பனை, கடத்தல் ஆகிய குற்றங்களுக்காகத் தண்டிக்கப்பட்டவர்களாவர்.

இந்த இயக்கத்திற்கு யார் தலைமை வகிப்பது என்ற பதவிப் போட்டியில் உயிரிழந்தவர்களும் உண்டு.

சில கேள்விகள்

*ஹிந்து மதம் இந்தியாவுக்குச் செய்த நன்மைகள் எவை எவை?

* இன்று இந்தியா எதிர்நோக்கும் பிரச்சனைகளான: ஊழல், குடி, சூது, தற்கொலை, விபச்சாரம் இவற்றில் ஹிந்து மதம் கூறும் தீர்வுகள் யாவை?

* ஹிந்துமதம் கூறும் விக்கிரக் கடவுள்கள் அவை தாக்கப்பட்டால் தடுத்திடும் சக்தி பெற்றவையா?

* கடத்தப்பட்டால் மீண்டும் வந்து தாங்கள் ஆலயங்களில் அமர்ந்திடும் ஆற்றல் பெற்றவையா?

*மனிதர்களால் சித்தரிக்கப்பட்டு படைக்கப்பட்டு மனிதர்களின் உதவியை எல்லா நிலைகளிலேயும் நாடும் இவற்றை கடவுள் என வணங்குவது சரியா?

*இந்தியா 95 சதவீதம் இந்தியர்களுக்குச் சொந்தமா? அல்லது 5 சதவீதம் பிராமணர்களுக்குச் சொந்தமா?

*ஹிந்து மதம் இந்தியாவிலேயே தோன்றியது தானா? இல்லை கைபர் பணவாய் வழியாக பிராமணர்களோடு இந்தியாவுக்குள் வந்த மதமா?

* ஒரு மனிதன் தன்னை பிராமணனாக மாற்றிக் கொள்ள இயலுமா?

* ஜெர்மன் ஆரியர்களுக்கும் இந்தியாவிலிருக்கும் ஆரியர்களான பிராமணர்களுக்கும் என்ன உறவு?

* பிராமண நாஜிகள் ஆரியர்களின் சின்னமாகிய ஸ்வஸ்திக்கையே கொண்டுள்ளனரே ஏன்?

அன்புள்ள வாசகனே உன்னையே நீ கேள்?

உன்னுடைய இறைவன் யார்?

*கங்கையையும், வெண்ணிலவையும் தன் தலை மேல் கொண்டுள்ள அதே நேரத்தில் தன் மகளையே யார் என்று தெரியாமல் தலையைக் கொய்த சிவனா?


*அல்லது சாதாரண சுக்ரீவனின் மாறுவேடத்தைப் புரிந்து கொள்ள இயலாத இன்னொரு கடவுளை மறைந்திருந்து கொலை செய்த இராமானா?


*அல்லது மன்மத லீலைகளில் மிகைத்து நின்ற கிருஷ்ணனா?

பிரமாணர்களின் சதி
சதிச்செயலகள் மூலம் அடுத்தவர்களை அடிமைப்படுத்துவது, பணம், காமம் இவற்றை இந்த குறுகிய லட்சியத்திற்காகப் பயனபடுத்துவது, இவையே பிராமணர்களின் பிரதான செயல்களாக வரலாறு முழுவதும் இருந்து வந்திருக்கின்றன.
தொடர்பு உள்ளவை.
விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த பார்ப்பனர்கள் வரிசையில்..

இந்திய எல்லைப் பகுதிகளில் எந்தெந்த இடங்களில் இந்திய இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது என்ற தகவலை பாகிஸ்தானுக்கு தெரிவித்த ஒரு அதிகாரி கைது செய்யப்பட்டுள்ளார் என்ற செய்தி வெளியாகியுள்ளது.

அந்த அதிகாரியின் பெயர் சுதான் ஷீ சுதாகர் ஆகும். பெயரைப் பார்த்தாலே ஆசாமி யார் என்பது சொல்லாமலேயே விளங்கும்.

பிகார் மாநிலம் சிதாமரியில் உள்ள அவர் வீட்டில் இவர் செய்த துரோகச் செயலுக்காக விசேஷ சட்டத்தின்கீழ் கைது செய்யப்பட்டுள்ளார்.

ஒரு பெயர் பெரும்பாலோருக்கு மறந்திருக்கலாம். ஒரு விஸ்கி பாட்டிலுக்காக இராணுவ இரகசியங்களை பாகிஸ்தானுக்குத் தெரிவித்த அந்த ஆசாமியின் பெயர் கூமர் நாராயணன் அய்யர்வாள் என்பதாகும்.

அவர்மீது தொடுக்கப்பட்ட விசேஷ வழக்கின் முடிவு என்னாயிற்று என்று யாருக்குத்தான் தெரியும்?

டில்லியில் அமைச்சர்கள் வாழும் பகுதியில் நீச்சல் குளத்துடன் கூடிய தோட்ட வீடு கட்டி நிம்மதியாக வாழ்கிறார் என்கிற சேதி வெளிவந்தது.

காட்டிக் கொடுப்பதைக் கலையாகக் கொண்டு கைநிறைய லஞ்சப் பணம் வாங்குவது என்பது ஆரியப் பார்ப்பனர்களுக்குக் கைவந்த கலையாயிற்றே!

கவுடில்யன், திம்மண்ணா, ஜக்கலு ராயண்ணா, வெங்கண்ணா, பூர்ணய்யா, கோவிந்த தீட்சதன், சந்திரசேகரப் பட்டாச்சார்யா என்று ஒரு நீண்ட பட்டியலே உண்டு.

வெள்ளையர்கள் ஆட்சிக்காலத்தில் பார்ப்பனர்களைப் பொதுவாக இராணுவத்தில் சேர்ப்பதில் தயக்கம் கொண்டதுண்டு. காரணம், அவர்களின் காட்டிக் கொடுக்கும் கலையே!

ஓர் அலுவலகத்தில் ஒரு இரகசியத்தைத் தெரிந்து கொள்ள வேண்டுமா?

அந்த அலுவலகத்தில் ஒரு பார்ப்பான் பணியாற்றினால் உனக்குத் தேவையெல்லாம் ஒரு பத்து ரூபாய் செலவுதான் என்பார் தந்தை பெரியார்.

எந்த ஒரு பாவச் செயலுக்கும் பரிகாரம், கழுவாய் உண்டு என்று கனமாக எழுதி வைத்துள்ள பார்ப்பனர்களும் சரி, அவர்கள் வற்புறுத்தி வரும் பார்ப்பனியச் சீழ் படிந்தவர்களும் சரி, ஒழுக்கக்கேட்டை ஒரு பொருட்டாகக் கருதவேண்டிய அவசியமில்லை என்பதுதான் பொதுவான நிலை!--------- மயிலாடன் அவர்கள் 24-9-2009 "விடுதலை" யில் எழுதிய கட்டுரை
-----------------
மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைடூரியத்தை வாங்கிக்கொண்டு
கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர் பார்ப்பனக் கூட்டம்.

மன்னன் சுந்தரபாண்டியனிடம் எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம் இவைகளையெல்லாம் வாங்கிக்கொண்ட பார்ப்பனர்கள் மன்னனுடைய சிலையைவைக்க அனுமதி இல்லை என்று சொல்லி கோயிலுக்கு வெளியே நிறுத்திவிட்டனர்.

பார்ப்பனர்களின் சுயநலத்தை பாரீர் என்று விளக்கி பேசினார் உயர்கல்வி மன்ற துணைத் தலைவர் பேராசிரியர் அ.இராமசாமி அவர்கள்.

13ஆம் நூற்றாண்டில் ஒரு சம்பவம்

பதின்மூன்றாம் நூற்றாண்டில் ஒரு துலாபாரம் நடந்தது.
நான் சொல்லுவது வரலாற்றுச் செய்தி. அந்த துலாபாரம் எங்கே நடந்தது என்றால் உங்கள் ஊர் பக்கத்தில், திருச்சியில் நடைபெற்றது.

திருச்சிக்குப் பக்கத்தில் சிறீரங்கத்திற்குப் பக்கத்தில் ஒரு கோயில் இருக்கிறதில்லையா அங்கேதான் நடந்தது. அங்கே துலாபாரம் கொடுத்தவர் யார் தெரியும்களா?

சுந்தர பாண்டியன். சுந்தரபாண்டியனை நம்முடைய ஆள்களுக்குத் தெரியாது.

மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்றால் தெரியும். ஏனென்றால் நம்மாள்களுக்கு சினிமாவோடு லிங்க் பண்ணிதான் தெரியும்.

அந்த மதுரையை மீட்ட சுந்தரபாண்டியன் என்ன செய்தார் என்றால் ஒரிசா வரைக்கும் படைஎடுத்துக்கொண்டு போனான். தெற்கே இலங்கை வரைக்கும் படை எடுத்துக்கொண்டு போனான்.

இந்த நாடு முழுவதையும் அவனுடைய ஆட்சியின் கீழ் கொண்டுவந்து பெரிய பேரரசாக சக்கரவர்த்தியாக ஆண்டான்.

ஒரு அய்யர் வருவார். இந்த மாதிரி இடத்தில் அய்யர் எப்பொழுதும் வருவார். நீ பல போர்களை செய்திருக்கிறாய். பல உயிர்களைக் கொன்றிருக்கிறாய். அந்தப் பாவத்தைப் போக்கத் துலாபாரம் செய்ய வேண்டும் என்றார்.

சரி, துலாபாரம் செய்யலாம். எங்கே செய்யலாம்? சிறீரங்கத்தில் போய் பெருமாளுக்கு செய்வோம் என்று சொன்னார்கள். சரி என்று வந்தார். உடனே பயம் வந்திடுமில்ல. யாருக்கு வரும்?

பணத்தை அதிகமாக சேர்த்தவனுக்கு, அல்லது ஆசை அதிகமாக இருக்கிறவனுக்கு வரும்.

இந்தப் பயமும், ஆசையுமே பக்திக்கு அடிப்படை காரணம். அவர்களுக்கும் ஆசை வந்தது. பெருமாளுக்குத் துலாபாரம் செய்யலாம் என்று வந்தார்கள்.

கோயிலில் தராசு கட்டினார்கள். பட்டுச் சட்டை வேட்டியோடு துண்டை எல்லாம் அணிந்து கொண்டு வந்தான். மகாராஜா அல்லவா?

சக்ரவர்த்தி அல்லவா? வந்து தராசில் உட்காரப் போனான். அப்பொழுது ஒரு பட்டர் கேட்டார், எடைக்கு எடை என்ன தரப் போகிறீர்கள்? என்று.

அவன் வெள்ளரிக்காய் தருகிறேன், கத்தரிக்காய் தருகிறேன் என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள். வாழைப்பழம் தருகிறேன். முருங்கைக்காய் தருகிறேன். என்றால் வாங்கிக்கொண்டு போயிருப்பார்கள்.

ஆனால், அவன் சுந்தரபாண்டியன் சொன்னான், நான் எடைக்கு எடை பணம் தரப் போகிறேன், வைரம் தரப் போகிறேன் இங்கே யாரோ ஒரு தோழர் சொன்னார், எடைக்கு தங்கம் தந்துவிட்டோம். அடுத்து வைரம் தருவோம் என்று சொன்னார்கள்.

இந்த மாதிரி எடைக்கு எடை தங்கம், வைரம், வைடூரியம், மரகதம் எல்லாம் தருகிறோம் என்று சொன்னார்.

உடனே பார்ப்பன மூளை வேலை செய்தது. எப்படி கெட்டிக்காரத் தனமாக செய்கிறார் பாருங்கள்.

நம்மாள்கள் இவைகளைக் கற்றுக்கொள்ள வேண்டும். நம்மாள்கள் முன்னேற முடியாததற்குக் காரணமே இது தான்.

அவர்கள் என்ன செய்தார்கள்? ஓகோ, எடைக்கு எடை கொடுக்கப்போனால் தங்கம்- வைரம் எல்லாம் கொடுக்கப் போகிறான். அதுவும் நம்மவர்களுக்குத்தான் தரப் போகின்றான். அவன் வெறும் பட்டு வேட்டி கட்டி உட்காரக் கூடாது. ஒரு பட்டர் மன்னரைப் பார்த்து, மன்னா!என்று கேட்டார். இவன், என்ன? என்று கேட்டான்.

நீங்கள் எதற்காக துலாபாரம் செய்கிறீர்கள்? போர்க்களத்திலே பெற்ற வெற்றிக்காகவும், அங்கே செய்யப்பட்ட படுகொலைக்கு பாவ சாந்திக்காகவும் தான் என்று சொன்னான்.

ரொம்ப மகிழ்ச்சி. நீங்கள் துலாபாரம் செய்யுங்கள். அந்தத் தங்கத்தை எல்லாம் கொடுங்கள். ஆனால் ஒன்று. நீங்கள் போர்க் களத்திற்கு எப்படி போனீர்களோ அந்த மாதிரி உடை, பொருள்களை அணிந்து கொண்டு உட்காருங்கள் என்று சொன்னார்கள்.

போர்க்களத்திற்குப் பட்டு வேட்டியையும் துண்டையுமா கட்டிக் கொண்டு போவான்? போர்க்களத்திற்கு எப்படி போவான்? பெரிய இரும்பு உடைவாள், ஈட்டி, கேடயம் இரும்புக் கவசம், தலைப்பாகை இவைகளை எல்லாம் கட்டிக்கொண்டு செல்வான்.

இதுவே ஒரு 50 கிலோ சேர்ந்து போகும். அப்பொழுது இருந்த சுந்தரபாண்டியன் எல்லாம் என்னை மாதிரி இல்லிங்க. நல்ல குண்டான ஆள். இந்த உடைகளைப் போட்டால் இன்னும் 50 கிலோ வைரம் வரும். இன்னும் 50 கிலோ தங்கம் வருமல்லவா?

பார்ப்பான் எப்படி வேலை செய்கிறான் பாருங்கள்.

நம்மாள்களும் என்ன செய்வார்கள்? செயலாளராக பார்ப்பானைத்தான் வைத்துக் கொள்வார்கள். மந்திரியாக ஒரு பார்ப்பானைத்தான் வைத்துக்கொள்வார்கள்.

போரிலே செய்கின்ற படுகொலைப் பாவங்களைப் போக்கத்தானே வந்திருக்கிறீர்கள்? அதனால் போருக்கு போகிற மாதிரியே உட் காருங்கள் என்று சொன்னார்கள். சுந்தரபாண்டியன் பார்த்தான் பயந்து போய் விட்டான்.

பகைவரைக் கண்டு நடுங்காத சுந்தரபாண்டியன் இந்த பட்டரைக் கண்டு நடுங்குகின்றான். உடனே தளபதியை மன்னன் அழைத்தான். உடைவாள், கவசம் எல்லாம் வந்தது. போய் தராசில் உட்காரப் போகிறான்.

இன்னொரு பட்டர் இவனைவிட எம்ப்டன். அவன் என்ன சொன்னான்?

மன்னா என்று சொன்னான். இவன் என்னான்னான். கொஞ்சம் நில்லு! நீ எதற்காக துலாபாரம் இப்படி செய்யப் போகிறாய்? நான் தரப்போகிறேன். போர்க் களத்திலே பெற்ற வெற்றிக்காக அங்கே செய்யப் பட்ட படுகொலை பாவங்களைப் போக்குவதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.

சரி, நல்லா பண்ணுங்கோ; திவ்யமா பண்ணுங்கோ. ஆனால் ஒன்று, போர்க்களத்திற்கு எதன்மீது போனீர்கள் என்று கேட்டான்.

இப்பொழுது புரிந்துகொண்டீர்கள் அல்லவா? சின்னக் குழந்தைகள் எல்லாம் சிரிக்கிறது. சுந்தரபாண்டியன் சிரிக்கவில்லை.

போர்க்களத்திற்கு யானை மீது தானே போனாய்?

போர்க்களத்திற்கு யானை மீது போனேன் என்று சொன்னான். யானை என்றால் சாதாரண யானை என்று நினைக்காதீர்கள்.

எனது சொந்தக்காரர் ஊர் மதுரை. மதுரையில் உள்ள ஒரு பெருமாள் கோயிலுக்காக யானையை வளர்க்கிறார். நான் கேட்டேன்.

ஏண்டா நம்மாள்கள் எல்லாம் ஆடுதானே வளர்ப்பார்கள். நீ யானை வளர்க்கிறாயே என்று கேட்டேன். இல்லை இல்லை; கொஞ்சம் வித்தியாசமா இருக்கட்டுமே என்பதற்காக செய்கிறேன் என்று சொன்னார்.

தெருவிலே போகிற யானை என்ன மாதிரி இருக்கும்? சுந்தரபாண்டியன் போர்க் களத்திற்குப் போன யானை பட்டத்து யானை. திருச்சி மலைக்கோட்டை அளவுக்கு உயர்ந்து நிற்கக் கூடிய பட்டத்து யானை. நல்ல ஓங்கி வளர்ந்துள்ள யானை.

யானையினுடைய ஒவ்வொரு தந்தமும் 25 கிலோ எடை கொண்டது. பட்டத்து யானையோ ஆயிரம் கிலோ. யானையோடு வந்து மன்னன் சுந்தர பாண்டியன் உட்கார வேண்டும்.

யானையோடு மட்டுமல்ல; யானை மீது உட்கார்ந்திருந்த அம்பாரி-அது ஒரு 100 கிலோ.இவ்வளவோடும் நீ வந்து உட்கார்ந்து செய்தால் தான் உன்பாவம் போகும் என்று சொல்லிவிட்டான்.

பக்கத்திலே இருந்த அய்யர், ஆமாம் மகாராஜா. நீங்கள் அவர் சொல்லுகிற மாதிரி யானைமீது வாருங்கள் என்று சொன்னார்.

இன்னொருத்தன், இவன் எப்படி துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம். யானை மீது அம்பாரி கொடுக்கிற அளவுக்கு இவன் எப்படித் துலாபாரம் கொடுக்கிறான் பார்ப்போம் என்று சொன்னார்.

மன்னனும் அப்படியே கொடுப்பது என்று சொல்லிவிட்டான். தராசா இல்லை? நான் கண்டு பிடிக்கிறேன் என்று சொல்லிவிட்டு, எல்லோரும் அம்மாமண்டபத்திற்கு வந்தார்கள். அந்த மண்டபத்தில் இப்பொழுது சீட்டாடுகிறார்கள். அப்பொழுது இல்லை.

அம்மாமண்டபத்திற்குப் போனார்கள். அப்பொழுதெல்லாம் காவிரியில் நிறையத் தண்ணீர் வந்து கொண்டிருந்தது. இரண்டு பரிசலைப் பெரிதாகச் செய்தார்கள். யானை ஏறி நிற்கிற மாதிரி ஒரு பரிசல்.

இன்னொன்று அதே அளவுக்குப் பரிசல். இரண்டையும் கயிற்றிலே கட்டி காவிரி ஆற்றிலே மிதக்கவிட்டார்கள்.

தண்ணீரில் யானையைப் பரிசலில் நிற்க வைத்து, அதற்குச் சமமாக இன்னொரு பரிசலில் தங்கத்தை, வைடூரியத்தை கொட்டு என்று சொன்னார்கள். அப்படி எல்லாவற்றையும் கொட்டினார்கள்.

அதனால்தான் சொன்னார்கள் போலிருக்கிறது ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு என்று. இப்படி கொட்டி நிறுத்து, சுந்தரபாண்டியன் மலை அளவு செல்வத்தை அவன் வாரி வழங்கினான்.

எல்லாமே பார்ப்பானுக்குப் போய்விட்டது. ஆக துலாபாரத்தை சுந்தரபாண்டியன் கொடுத்து விட்டான். அதற்கப்புறம் சுந்தரபாண்டியனை பார்ப்பனர்கள் மேளதாளத்துடன் கூட்டிக் கொண்டு போகிறார்கள்.

மன்னன் வைத்த ஒரு கோரிக்கை

கோயில் வாசலிலே சுந்தரபாண்டியன் நிற்கிறான். அப்பொழுது அந்த தலைமை பட்டரைப் பார்த்து கேட்கிறான். எனக்கு ஒரு கோரிக்கை இருக்கிறது என்று மன்னன் சொன்னான் சுந்தரபாண்டியன்.

யார்? மன்னாதி மன்னன். தென்னாட்டு சக்ரவர்த்தி, பேரரசன். அவனுடைய கண் அசைவுக்கும், கை அசைவுக்கும் மன்னர்கள். கைகட்டி காத்திருக்கின்றார்கள்.

அவ்வளவு பெரிய இந்த சக்கரவர்த்தி பட்டரிடம் சாமி, எனக்கு ஒரு கோரிக்கை என்று கேட்டான்.

கோயில் வளாகத்தில் என்னுடைய சிலை

என்ன கேட்டான் தெரியும்களா? இந்தக் கோவில் வளாகத்திற்குள்ளே என்னுடைய சிலை ஒன்றை வைத்துக் கொள்கிறேன் என்று கேட்டான்.

உடனே அந்த பட்டர் சொன்னார், இல்லை, இல்லை. ஆண்டவனுடைய ஆலயத்தில் சாதாரண மனிதனுடைய சிலை வைப்பதற்கு இடம் இல்லை என்று சொன்னார். மறுத்துவிட்டான்.

சுந்தரபாண்டியன் நினைத்திருந்தால் இந்தக் கோவிலையே இடித்து தரைமட்டமாக்கி யிருக்கலாம். அவனுடைய ஆதிக்கத்தில் கோவில் இருக்கிறது. இந்த பட்டரெல்லாம் அவன் போடுகின்ற பிச்சையில் உயிர் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்தப் பெருமாளே அவன் போடுகின்ற பிச்சையில்தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றான். அந்த அளவுக்கு இருக்கிறது நிலைமை.

ஆனால் அவன் இவ்வளவு செல்வத்தைக் கொடுத்தானல்லவா? ஒரு ஓரத்தில் அவனுடைய சிலையை வைப்பதில் என்ன குறைந்து போய்விட்டது?

கடைசி வரைக்கும் வைக்கவில்லை. அதன் பிறகு ஒரு கட்டப்பஞ்சாயத்து பண்ணினார்கள். நீங்கள் பிறந்த நட்சத்திரத்தில் உங்களுக்கு ஒரு பூஜை பண்ணுகிறோம், அர்ச்சனை பண்ணுகிறோம் என்று பட்டர்கள் சுந்தரபாண்டியனுக்காகச் சொன்னார்கள். அந்த அர்ச்சனை இன்றைக்கும் நடக்கிறது.

நான்கணா கொடுத்தாலே இந்த அய்யர் அர்ச்சனை பண்ணுவான். மலைபோல் இந்த செல்வத்தைக் கொடுத்துவிட்டு ஒரு அர்ச்சனைக்காக மன்னன் அங்கே கைகட்டி நின்றான்.

நான் சொல்லுவதெல்லாம் கதை அல்ல. ஏதோ தொலைக்காட்சியில் வருகின்ற தொடர் இல்லை. எல்லாமே கல்வெட்டில் இருக்கிறது. சீறீரங்கம் கோயில் கல்வெட்டில் இருக்கிறது.

யார் வேண்டுமானாலும் போய் பார்த்துக் கொள்ளலாம். ஆதாரம் இல்லாமல் நாங்கள் யாரும் இந்த மேடையில் பேசமாட்டோம்.

அடுத்தாற் போல 50, 60 ஆண்டுகளில் ஒரு நிகழ்ச்சி நடக்கிறது. ஒரு சித்திராபவுர்ணமி நிகழ்ச்சிக்கு சீரங்கத்திலிருந்து பெருமாள் கொள்ளிடத்திற்கு எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருக்கின்றார்.

சித்திரைத் திருவிழா நடக்கிறது. அந்த நேரம் டில்லியில் முகமது பின் துக்ளக் என்ன பண்ணுகிறான்? அவனுடைய படைகளை அனுப்பி வைக்கிறான். அவனுடைய தளபதி தலைமையில் ஒரு படை வருகிறது.

கொள்ளிடம் வரை வருகிறது. இவர்களுக்கு என்ன செய்வதென்று புரியவில்லை. இந்தப் பட்டருக்கு அங்கே இருப்போமா, திருவிழா நடத்துவோமா, இல்லை கோவிலுக்குத் திரும்பிப் போவோமா என்று ஒரு யோசனை.

கடைசியில் பெருமாளிடமே கேட்போம் என்று சொல்லிவிட்டு சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். இந்த மாதிரி முகமதியர் படை வருகிறது. நாங்கள் இங்கேயே இருந்து திருவிழா நடத்தலாமா? இல்லை போய்விடலாமா? என்று சீட்டுக் குலுக்கிப் போட்டுப் பார்த்தார்கள்.

ஒரு பார்ப்பன சிறுமியைக் கூப்பிட்டு சீட்டை எடுக்கச் சொன்னார்கள். எடுத்துக் கொடுத்தது இந்த மாதிரி. முகமதியர் படை வராது. நீங்கள் இங்கேயே இருந்து திருவிழாவை நடத்துங்கள் என்று சீட்டில் எழுதப்பட்டிருந்தது.

இவர்கள் எல்லாம் அதற்குப் பிறகு திருவிழாவை மகிழ்ச்சியாக நடத்துகிறார்கள். ஆனால் என்ன தப்பு நடந்து போச்சுன்னா பெருமாள் எடுத்துக்கொடுத்த சீட்டு முஸ்லிம் படைத்தளபதிக்குத் தெரியாமல் போய்விட்டது.

அவன் அங்கிருந்து படை எடுத்து வந்துவிட்டான். கொள்ளிடக்கரைக்கு வந்தார்கள் என்று தெரிந்த பின்னாலே இவர்கள் அந்த சாமி சிலையைத் தூக்கிக்கொண்டு சீறீரங்கம் கோவி லுக்கு ஓடிப் போய்விட்டார்கள்.

பிறகு அந்தப் படை சீறீரங்கம் கோவிலுக்குச் சென்று சூறையாடினார்கள். அதற்கப்புறம் ரெங்கநாதர் ஓடினார், ஓடினார், ஓடிக்கொண்டேயிருந்தார். இராமநாதபுரம் மாவட்டத்தில் திருப்பத்தூர் என்ற ஊருக்குப் போனார்.

பிறகு அங்கேயிருந்து திருவனந்தபுரம், அதற்கப்புறம் திருமலை திருப்பதியில் ஓடிப்போய் ஒளிந்துகொண்டார். ஒரு 50, 60 ஆண்டுகளுக்கு ரங்கநாத பெருமாள் கோவிலிலேயே இல்லை. காணாமல் வெளியே போய்விட்டார். அதுதான் அவருடைய சக்தி. -

இவ்வாறு பேராசிரியர் அ.இராமசாமி பேசினார்.
SOURCE: http://viduthalai.in/new/page-4/3322.html

---------------------------------
அக்கிரகாரம் எப்படி தோன்றியது?
உ.வே.சா. அவர்கள் தனது என்சரிதம் எனும் நூலில் அக்கிரகாரம் எப்படி தோன்றியது என்கிற ஒரு தகவலைத் தந்துள்ளார்.

சற்றேறக் குறைய இரு நூறு வருஷங்களுக்கு முன்பு தஞ்சாவூர் ஸமஸ்தானத்தை ஆண்டு வந்த அரசர் தம்முடைய பரிவாரங்களுடன் புறப்பட்டார். தஞ்சைக்குக் கிழக்கே 15 மைல் தூரத்தில் பாபநாசம் அருகில் ஓரிடத்தில் தங்கினார். வழக்கம்போல் போஜனம் முடித்து தாம்பூலம் போட்டு சிரம பரிகாரம் செய்தார்.

அன்று ஏகாதசி. ஏகாதசியன்று அரசர் ஒரு வேளை மாத்திரம் உணவு அருந்துவார். தாம்பூலம் தரிக்க மாட்டார். ஆனால் அன்று அதனை மறந்துவிட்டார். விரதத் துக்குப் பங்கம் ஏற்பட்டது குறித்து வருந்தினார்.

இதற்கு என்ன பரிகாரம் என்று கேட்க, ஓர் அக்ரகாரம் பிரதிஷ்டை செய்து, வீடுகள் கட்டி வேதவித்துக்களாகிய அந்தணர்களுக்கு அவ்வீடுகளோடு பூமியையும் தானம் செய்தால். இந்தத் தோஷம் நீங்கும் என்றனர். அவ்வாறே அரசன் செய்தான்.

அந்த ஊர்தான் உத்தமதானபுரம். அவ்வூரில்தான் உ.வே.சா. பிறந்தார்.

அரசன் தோஷப் பட்டான் என்றே வைத்துக் கொள்வோம் - அதன் பலன் பார்ப்பானுக்குப் போய்ச் சேர வேண்டுமா?


அக்ரகாரம் எப்படி எல்லாம் தோன்றியிருக்கிறது பார்த்தீர்களா?
-- மயிலாடன் அவர்கள் 19-2-2011 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை
---------------------------
இந்துக்களிடம் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ? முஸ்லிம்களிடம் பன்றிக் கொழுப்பல்லவோ?
பார்ப்பனர்கள் திரைமறைவில் தூண்டி விட்ட கலவரம்.

உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் - பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் இருந்தது.

1857-இல் நடந்த சிப்பாய்க் கலவரமானது சுதந்திர உணர்ச்சியின் பேரில் ஏற்பட்ட கலவரம் அல்ல; அன்று ஆட்சி செய்த வெள்ளைக்காரன் செய்த சில சமுதாயச் சீர்திருத்தங்கள் காரணமாகப் பார்ப்பனர்கள் தூண்டிவிட்ட கலவரமாகும்.

அன்று இந்த நாட்டில் புருஷன் இறந்தால் அவனுடன் அவன் மனைவியையும் உயிருடன் பாடையில் வைத்துக் கயிறு போட்டுக் கட்டி, கொளுத்தும் வழக்கம் இருந்தது.

இந்தப் பழக்கத்தை பல்வேறு காலங்களில் பல முஸ்லிம் அரசர்கள் எதிர்த்துப் பார்த்து, தோல்வியே கண்டார்கள்.

வங்கத்தில் தோன்றிய இராஜாராம் மோகன்ராயின் அண்ணன் இறந்தபோது, அவருடைய மனைவியை உயிருடன் பிணத்துடன் சேர்த்துக் கொளுத்தப் பார்ப்பனர்கள் முற்பட்டார்கள்.

அது கண்டு அந்த அம்மாள் திமிறிக்கொண்டு ஓட ஆரம்பித்தார், பார்ப்பனர்கள் விடவில்லை; விரட்டிப் பிடித்துக் கொடூரமாகத் தாக்கி நெருப்பில் தூக்கிப் போட்டுக் கொளுத்தினர்.

இந்த நிகழ்ச்சி சிறந்த கல்விமானான இராஜாராம் மோகன்ராய் மனதை வாட்டியது. அவர் இந்தக் கொடிய உடன்கட்டை ஏறும் வழக்கத்தை முறியடிக்க முயற்சி செய்தார்.

வெள்ளைக்கார அரசாங்கத்தை அணுகி, ``என்ன நாகரிகம் வாய்ந்தவர்கள் நாங்கள் என்று பறைசாற்றிக் கொள்ளுகின்றீர்கள்.உங்கள் ஆட்சியில் தானே ``சதி’’ என்ற இந்தக் கொடுமை நடக்கின்றது? இதனைத் தடை செய்ய வேண்டும்’’ என்று கேட்டுக்கொண்டார்.

அரசாங்கமும் ஏற்றுக்கொண்டு `சதி’ என்று உடன்கட்டை ஏறும் பழக்கத்தையும் சட்ட விரோதமாக்கியது.

வைதீகப் பார்ப்பனர்களும், மதவாதிகளும் எதிர்த்துப் பார்த்துத் தோல்வியே அடைந்தனர்.

இதுதான் இந்திய வரலாற்றிலேயே ஏற்பட்ட முதல் சீர்திருத்தமாகும்.

அடுத்து இந்த நாட்டில் பெண் குழந்தை பிறந்தால் கழுத்தைத் திருகிக் கொன்றுவிடும் பழக்கம் அன்று இருந்து வந்திருக்கின்றது. அதனையும் ஆங்கில அரசாங்கம் சட்ட விரோதமாக்கித் தடுத்து விட்டது.

அந்தக் காலத்தில் விவசாயத் தோட்டங்களுக்கு நரபலி கொடுத்து திருஷ்டி கழிக்கும் வழக்கம் ஆங்காங்கு நடந்து இருக்கின்றது.

அதனையும் வெள்ளைக்கார ஆட்சி ஒழித்தது.அடுத்து அது செய்த `பாவம்’ பெண்களுக்குப் பள்ளி ஏற்படுத்தியதும், ஆஸ்பத்திரி ஏற்படுத்தியதும் ஆகும்.


இதனால் பார்ப்பனர்கள் கொதிப்படைந்து, தந்திரமாகப் பட்டாளத்துக்காரன்களைத் தூண்டி விட்டுக் குழப்பம் பண்ணச் செய்தார்கள்.

முஸ்லிம் தோழர்களிடம் சென்று, ``நீங்கள் உபயோகப்படுத்தும் துப்பாக்கியில் பன்றிக் கொழுப்பு தடவி இருக்கின்றார்கள். உங்கள் மதத்துக்குப் பன்றி கூடாது. உங்கள் மத உணர்ச்சியைக் குலைக்கவே பன்றிக் கொழுப்புத் தடவி இருக்கின்றார்கள்’’ என்று தூண்டிவிட்டார்கள்.

இந்துக்களாக இருக்கின்ற சோல்ஜர்களிடம் சென்று, நீங்கள் உபயோகிக்கும் துப்பாக்கியிலும், தோட்டாவிலும் பசுமாட்டுக் கொழுப்பல்லவோ தடவி இருக்கின்றார்கள்.


இந்துக்கள் கடல் தாண்டுவது என்பது சாஸ்திர விரோதமானதாகும்.உங்களை எல்லாம் கப்பலில் ஏற்றிக் கொண்டு போய் வெளி இடங்களுக்குச் சென்று சண்டை போடச் சொல்லுகின்றார்கள்’’ என்று தூண்டி விட்டார்கள். அன்று பட்டாளத்தில்  இந்துக்களும் அதிகமாக இருந்தபடியால் கலகம் பண்ணினார்கள்.

அரசாங்கத்துக்குக் கீழ்ப்படிய மறுத்ததோடு வெள்ளைக்காரர்கள் மீது துப்பாக்கியை நீட்டவும் ஆரம்பித்தார்கள்.

ஏராளமான வெள்ளைக்காரர்களும், பெண்களும் குழந்தைகளும் கொடூரமாகக் கொல்லப்பட்டார்கள். வெள்ளைக்காரர்கள் பயந்து அங்குமிங்குமாக ஓடினார்கள். ஓர் இடத்தில் என்ன பண்ணினார்கள் தெரியுமா?

பார்ப்பனர்கள் ஒரு படகைக் கொண்டு வந்து நிறுத்தி ``இதில் ஏறிக்கொள்ளுங்கள்; உங்களைப் பாதுகாப்பான இடத்தில் கொண்டு விடுகின்றோம்’’ என்று ஏற்றிச் சென்று, நடுக்கடலில் கொண்டு போய்ப் படகைக் கவிழ்த்துவிட்டு அத்தனை பேர்களையும் கொன்று விட்டார்கள்.

வெள்ளைக்காரனால் கட்டுப்படுத்த முடியாமல் போகவே பார்ப்பனர்களைக் கூப்பிட்டு ஏன் இப்படிக் கலகம் பண்ணுகின்றீர்கள் என்று ராசி பேசினான்.

பார்ப்பனர்கள் ``நீங்கள் எங்கள் மதத்திலே, பழக்க வழக்கங்களிலே தலையிடக் கூடாது’’ என்று உறுதி கேட்டார்கள். அதன்படி எழுதிக் கொடுக்கப்பட்டது. அதுதான் விக்டோரியா மகாராணியின் மகாசாசனம் ஆகும்.

SOURCE: "viduthalai" news  03.04.2007. .

தொடர்பு உள்ளவை. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

-----------------------

தமிழர்களே!! இந்த குறும்படங்களை கண்டு சிந்தியுங்கள்.

“பார்ப்பன பயங்கரவாதத்தின் இரத்த சாட்சிகள்.”

இந்த விடியோ "தமிரங்கம்" தளத்திலிருந்து அறியப்பட்டு திரட்டப்பட்டது
சுட்டிகள் :-
SOURCE:http://www.tamilcircle.net/index.php?Itemid=111&catid=194:documentaryindia&id=3972:2008-09-13-10-53-11&month=10&option=com_content&view=article&year=2008

SOURCE:http://www.tamilcircle.net/index.php?option=com_content&view=article&id=3972:2008-09-13-10-53-11&catid=194:documentaryindia

நன்றி: “தமிழரங்கம்” “புதிய ஜனநாயகம்”
---------------------------

சிறப்பு குறும்படம் "வர்ணம்" (பகுதி-1)
சிறப்பு குறும்படம் "வர்ணம்" (பகுதி-2)
-----------------------
உள்ளத்தை உருக்கும் விடியோ.
கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்..

_________________

தொடர்பு உள்ளவை.
சூட்சமம்!
பார்ப்பனர்களின் அதிகாரப்பீடமான இந்து மதத்தின் ஒவ்வொரு அம்சமும் பார்ப்பனர்களுக்கு இலாபம் கொழிக்கும் ஏற்பாடுதான்.

தேவாதீனம் ஜெகத் சர்வம்
மந்த்ராதீனம் துதேவதா
தன்மந்த்ரம் பிரமணாதீனம் பிராமணா மமதேவதா
(இருக்குவேதம் 62ஆவது பிரிவு 10ஆவது சுலோகம்)

இந்தவுலகம் கடவுளுக்குக் கட்டுப்பட்டது;
கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்;
மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே, நமது கடவுள்;

அவர்களைத் தான் நாம் வணங்க வேண்டும் என்பது தான் இந்த வேத சுலோகத்தின் பொருள்.

இதன் அடித்தளத்தில் கட்டப்பட்டவைதான் இந்து மதத்தின் எல்லா சமாச்சாரங்களும்.

எது நடந்தாலும் அவாளின் கஜானாவை நிரப்புவதாகத்தான் இருக்கும்.

காளஹஸ்தி சிவன் கோயிலின் ராஜகோபுரம் தலைகுப்புற வீழ்ந்து சுக்கல் நூறாகி விட்டது.

உடனே என்ன செய்ய ஆரம்பித்து விட்டார்கள்?

காளஹஸ்தி சிவன் கோயில் கோபுரம் இடிந்து வீழ்ந்ததால் ராகு, கேது தோஷம் உடையவர்களுக்குத் திருமணத் தடை நீடிக்கும். குடும்பத்தில் ஒரே ஒரு ஆண் குழந்தை இருந்தால் அக் குழந்தைக்கு ஆபத்து ஏற்படும் என்று கிளப்பி விட்டனர்.

அதற்கு என்ன செய்ய வேண்டுமாம்?
தோஷ நிவர்த்திக்காக பவுர்ணமி நாளில் நெய் விளக்கேற்றி வழிபட வேண்டுமாம். இதையொட்டி திருவண்ணாமலை மாவட்டத்தின் பெரும்பாலான வீடுகளில் மாலை 6 மணிக்கு நெய் விளக்கேற்றி ஓம் நமசிவாய துதியுடன் சிறப்புப் பூஜை நடந்தது. (தினமலர் 29.5.2010)

சிறப்புப் பூஜை என்றால் என்ன அர்த்தம்? கோயில் அர்ச்சகனுக்கு கொழுத்த வருமானம் என்க!

காளஹஸ்தியைச் சேர்ந்த ஜோதிடர் சிங்கராஜ் பிரகாசம் என்ன கூறுகிறார்? தோஷ பரிகாரத்துக்கு சாந்தி ஹோமம் நடத்த வேண்டும் என்கிறார்.

ஹோமம் என்றாலே பார்ப்பன ஹோமுக்கு (அதாவது அவாள் ஆத்துக்கு) கொள்ளை வருவாய் என்க!

பிரச்சினையே சிவன்தான் அவன் சக்திக்குத்தான் சோதனை.

அப்படியிருக்கும்போது அவனை ஏன் வழிபட வேண்டும்?

அங்கு போய் யாகம் ஏன் நடத்த வேண்டும்?

ஸ்ரீரங்கத்தில் ஒரு புரோகிதக் கல்யாணத்தில் பந்தல் தீ பற்றி மணமகன் உட்பட நூற்றுக்கணக்கானோர் பரிதாபகரமாக மாண்டனர்.

புரோகிதக் கல்யாணத்துக்கு மவுசு குறைந்து விடக் கூடாதே என்பதற்காக சங்கராச்சாரி ஜெயேந்திர சரஸ்வதி என்ன சொன்னார்?

வீட்டுக்கு வீடு விளக்கேற்றுங்கள் என்றாரே!

காந்தியார் கோட்சே என்னும் ஆர்.எஸ்.எஸ். பார்ப்பனரால் சுட்டுக் கொல்லப்பட்டபோது

அன்றைய சங்கராச்சாரியார் சந்திரசேகரேந்திர சரஸ்வதி என்ன கூறினார்?

காந்தி மரணத்துக்கு ஒரு ஹிந்துவே காரணமாகயிருப்பது ஹிந்து சமூகத்திற்கே ஏற்பட்ட பேரவமானம்!

இந்தப் பாவத்தைப் போக்கிட அனைவரும் ஸ்நானம் பண்ணுங்கோ என்றாரே!

எவ்வளவு சாமர்த்தியம்!
எந்த எழவாக இருந்தாலும் பார்ப்பான் தப்பிக்கவும், அவன் வயிற்றில் அறுத்துக் கட்டவுமான லாபமாக ஆக வேண்டும்.

இதுதான் பார்ப்பானின் ஹிந்து மத சூட்சமம்!

என்ன, புரிகிறதோ!
---மயிலாடன் அவர்கள் 1-6-2010 “விடுதலை” யில் எழுதிய கட்டுரை

அடுத்தவர்களை அறியாமையிலேயே வைத்துக் கொள்வது. ஏழ்மையில் அவர்களை உழலச் செய்வது - இவை இவர்களுக்குக் கைவந்த கலை.

இந்தப் பிராமணர்கள் எதையெல்லாம் புனித நூல்கள என்றும், வேத நூல்கள் என்றும எழுதி வைத்திருக்கினறார்களோ அவற்றிலிருந்து இந்த உண்மைகள் புலப்படுகின்றன.

திட்டமிட்ட பெரும்பகுதி மக்களை அடிமைகளாகவும், புழுக்களாகவும், தேரைகளாகவும் ஆக்கி விட்டு ஒரு சிறு கூட்டத்தை ஆதிக்கவாதிகளாக ஆக்கிக்காட்டும் இந்தச சதி நூல்களை எப்படிப் புனிதமானவை என்றும் வேதநூல்கள் என்றும் ஏற்றுக் கொள்ள இயலும்.

புனிதம், வேதம் என்றெல்லாம் புகழப்படும் இந்த நூல்களில் தான் எழுத கூசும் ஆபாசங்கள் பக்கத்திற்குப் பக்கம் பதிந்திருக்கின்றன.

ஹிந்துகள் பிராமணர்களல்ல.பிராமணர்கள் ஹிந்துகளல்ல.

இந்த உண்மை பிராமணர்களால் உருவாக்கப்பட்ட வேத நூல்கள் என்பனவற்றால் புலப்படும்.

ஹிந்துக்கள் எனப்படுபவர்கள் ஹிந்துஸ்தானின் இயல்பான - இயற்கையான குடிமக்கள். ஹிந்து நாகரிகத்தின் உண்மையான வாரிசுகள். இந்த நாகரிகம் தொன்மை வாயந்த பல நல்ல கொள்கைகளையும சிறந்த வாழ்க்கை நெறிகளையும் தன்னகத்தே கொண்டது.

இந்தப் பிராமணர்கள் இமயமலைக்கு அப்பாலிருந்து வந்து இந்த பெருமை மிக்கப் பகுதிக்குள் ஊடுவிருவினார்கள்.


இந்த நாட்டு மக்களின் பண்பாட்டுச் சின்னங்களைத தகர்து தரைமட்டமாக்கினார்கள்.


அவர்களின் கலாச்சாரத்தைக் கலைத்துத் தங்கள் கலாச்சாரத்தைப் புகுத்தினார்கள்.


இந்த நாட்டின் சொந்த குடிமக்களை அடிமைகளாவே ஆக்கி விட்டார்கள்.


அடிமைத்தனம் என்பது பிரமாணர்களின் புனித நூல்கள் எனப் பேசப்படும் புராணங்கள் புகுத்தியது.

யூதர்கள் எப்படி மனித இனத்தை யூதர்கள் - அல்லாதவர்கள் என பாகுபடுத்திப் பிளந்து போட்டார்களோ அதேபோல் இவர்கள் புகுந்த இடங்களிலெல்லாம் பிராமணர்கள் - அல்லாதவர்கள் என்ற பாகுபாட்டை புகுத்தினார்கள்.

பிராமணர்கள் எஜமானர்கள், பிராமணர் அல்லாதவர் அடிமைகள் இந்த அடிப்படையில் தான் இந்த இந்திய மண்ணில் அடியெடுத்து வைத்த அந்த நாள் முதல் இவர்கள் தங்கள் எஜமானத்தனத்தை நிலை நாட்டினார்கள்.

இந்தத் திட்டமிட்ட அடிமைத்தளையை நாம் அறுத்தெறிந்தே ஆக வேண்டும்.

அதற்கான நிரந்தரமான நீண்ட நெடியதோர் போரட்டத்திற்கு நாம் தயாராகியே ஆக வேண்டும. இன்னும் ஒரு நொடி தாமதிக்காமல் இந்தப் போர்க்களம் புகுவோம்.

இராமாயண ஆபாசங்கள்.

டாக்டர் சார்ல்ஸ் அவர்கள் கூறுகின்றார்கள்:
இராமாயணம், விரசமும் ஆபாசமும் நிறைந்தது. அதனை ஓசையிட்டு ஓதவே இயலாது.

கடவுள் இராமன் தன் மனைவி சீதையின் அழகை அங்கம் அங்கமாய் விரிந்துரைக்கின்றான். அது கேட்பவர்களை அப்படியே காமத்தில் ஆழ்த்தும். ஆதாரம்: ஆரிய காண்டம் - அத்தியாயம் -46 ( C.R. சீனிவாச ஐயங்கார் அவர்களின் மொழியாக்கம் இராமாயணம்)

இராமாயணம் தரும் தகவல்களின்படி ஆரியர்கள் குடிப்பவர்கள். மதுபானத்தில் அவர்கள் 9 வகை மதுக்களைக் கண்டுபிடித்து வைத்திருக்கின்றார்கள்.

குடியில் மாமிசத்தை மட்டின்றி புசிப்பார்கள். பல பெண்களை மணம் முடிப்பார்கள்.

விபச்சாரத்தை ஒரு வாழ்க்கை விதியாகவே கொள்வார்கள்.

இராமாயணக் கடவுள் இராமனின் தந்தை தசரதனைப் பற்றி இப்படிக் கூறுகின்றது.

மன்னன் தசரனக்குக் குழந்தைகள் இல்லை. அவர் அப்படியேனும் ஓர் ஆண் குழந்தையைப் பெற்றெடுக்க வேண்டும் என்று விரும்பினார். இதற்கவர் ஒரு பெரும் யாகம் செய்தார்.

பின்னர் அவர் தம் மனைவிமார்களை - கௌசல்யா, சுமித்திரை, கையேயி ஆகிய மூவரையும் மூன்று பூசாரிகளிடம் அனுப்பினார்.

இந்தப் புனித மனிதர்கள் தங்களுடைய காமப் பசியைத் தணித்து முடித்து மூன்று பெண்களையும் அவர்களது கணவர் கடவுள் இராமனின் தந்தை தசரதனிடம் அனுப்பினார்கள்.

இந்த முறையின் மூலம் மன்னன் தசரதனுக்கு இராமன், லட்மணன், பரதன் என மூன்று ஆண் குழந்தைகள் கிடைத்தார்கள். (பாலகாண்டம் - அத்தியாயம்-14)

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

இராமாயணம் கேவலமான பல காம விளையாட்டுகளைப் பற்றிக் கூறுகினறது. இங்கிதம் கருதி அவை பற்றி இங்கே எதுவும் கூற இயலவில்லை.


தொடர்பு உள்ளவை. சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

==> இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. இராமனா கடவுள்? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள் <===

இதுபற்றி விளக்கம் வேண்டுவோர் ஆரிய காண்டம் அத்தியாயங்கள் 45, பாடல்கள் 122 - 125 ஆகியவற்றைப் பார்க்கவும்.

பின்வரும் தகவல்கள் கேவலமான ஒழுக்கக் கேடுகள் எப்படி மதத்தின் பெயரால் புனிதமாகப் பேசப்பட்டுள்ளன என்பதை எடுத்துக்காட்டும்.

லிங்கம் & யோனி

லிங்கம் என்பது ஆண் உறுப்பு. யோனி என்பது பெண் உறுப்பு. ஹிந்துக்களுக்கு இவையெல்லாம் வழிபாட்டிற்குரிய கடவுள்கள்.

அவர்கள் தங்கள் குழந்தைகளுக்கு சிவனின் உறுப்பு எனப் பொருள்படும் சிவலிங்கம் என்றோ, இராமனின் உறுப்பு எனப் பொருள்படும் இராமலிங்கம் என்றோ பெயர் சூட்டிக் கொள்ளத் தயங்குவதில்லை.

கர்நாடக மாநிலத்தின் சில பகுதிகளில் கடவுளை கும்பிட பெண்களும் ஆண்களும் நிர்வாணமாகச் செல்ல வேண்டும்.

தேவதாசிகள் மதத்தின் பெயரால் –விபச்சாரியாக்கப்பட்ட பெண்கள்.
தொடர்பு உள்ளவை.

தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது எப்படி?


இங்கு முத்துலட்சுமி ரெட்டி அவர்களைப்பற்றி எடுத்துச் சொன்னார்கள். முத்துலெட்சுமி ரெட்டி அவர்கள் இசை வேளாளர் ஜாதியைச் சார்ந்தவர்கள்.

கடவுளுக்கு `தாசி’ என்ற பெயரில் பொட்டுக் கட்டி விடுவதை அந்த அம்மையார் அவர்கள்தான் நீதிக் கட்சி ஆட்சியில் ஒழித்தார்கள்.

ஒரு பெண் பிள்ளை தேவதாசியாக

இரண்டு பெண் குழந்தை பெற்றால் ஒரு பெண்ணை வைத்துக் கொண்டு இன்னொரு பெண்ணை தேவதாசியாக ஆக்கி விடுவது அன்றைய நிலை.

 இன்றைய இருபால் இளைஞர்களுக்கு இந்த வரலாறு தெரியாது. இன்றைக்குப் பெண்களைப் பார்த்தீர்களேயானால் கம்ப்யூட்டர் எஞ்சினியர்கள், டாக்டர்கள், நீதிபதிகளாக வருகிறார்கள். பெரியார் பெண்கள் சமுதாயத்திற்காக என்ன செய்தார் என்பதே தெரியாது.

கோயிலில் பொட்டுக் கட்டி விடும் முறை

1959 இல் ஒரு பழைய சம்பவத்தை பேசும் பொழுது சொல்லுகின்றார்.

`பெண்களுக்கு கடவுள் பெயரால் பொட்டுக் கட்டி, விபச்சாரத்திற்கு விடுவது என்பது நேற்றைய வரையில் இருந்து வந்ததே.

கடவுள் காரியம் என்றும்; சாஸ்திரம் என்று சொல்லி பொட்டுக் கட்டி விடுவது என்றால் அவர்கள் நம் அக்காள், தங்கைகள் தானே, நம் சூத்திர ஜாதி தாய்மார்கள் தானே.

முதலாவது நான்தான் இந்த முறையை வெறுத்தேன். என் காலத்தில் நான் தேவஸ்தான செகரட்டரியாகவும் 10 ஆண்டுகள் தேவஸ்தான கமிட்டித் தலைவனாகவும் இருந்தேன். அப்பொழுதுதான் இந்த கொடுமையான நிலைகளை எல்லாம் பார்த்தேன்.

பத்து பதினைந்து `தேவடியாள்கள்’

நான் எந்த ஊர் கோவிலுக்குப் போனாலும், பத்து இருபது தேவடியாள்கள் கோயில் மரியாதை மேள தாளத்துடன் எங்களை வரவேற்கக் காத்துக் கிடப்பார்கள். அவர்கள் எல்லாம் யார்?

தேவடியாள் என்ற ஒரு ஜாதியிலிருந்து வந்தவர்களா? கொடுமுடியில் தேவடியாள்களுக்கு கவுண்டர் என்ற பட்டம். திருநெல்வேலி, தஞ்சை மாவட்டங்களில் பிள்ளை என்ற பட்டம், சென்னையில் முதலியார் என்ற பட்டம் இவர்கள் எல்லாம் நம்மவர்கள்தானே.

நான்தான் முதலில் உத்தரவு போட்டேன்

அந்த காலத்தில் தேவடியாள் கோயிலில் இருக்கும் உரிமை 45 வயதிலிருந்து 90 வயது வரை வாழ்ந்த அவர்களை விலைக்கு விற்று விடுவார்கள்.

குடும்பப் பெண்களில் சூழல் பிழைப்புக்காக வழுக்கி விழுந்த தாசிப் பெண்கள் அந்த உரிமையை வாங்கிக் கொண்டு, தேவடியாள் போல் காலில் சலங்கை கட்டிக் கொண்டு ஆட ஆரம்பித்தார்கள்.

நான்தான் முதன் முதலாக இப்படி உரிமைகளை விற்றால் செல்லாது என்று உத்தரவு போட்டேன்.
அந்த காலத்தில் அப்பீல் எல்லாம் கலெக்டர் அளவில் நின்று விடும். இப்பொழுது போல அய்க்கோட்டுகளுக்கெல்லாம் வராது. பிறகு காலியாக இருக்கும் இடங்களில் வேறு புதிதாக தேவதாசிகளை நியமிக்கக் கூடாது என்றும், ஆள், இல்லா விட்டால் அந்த பதவியோடு முடித்துவிட வேண்டும் என்று நான் உத்தரவு போட்டேன்.

இதற்கு போய் லைசென்ஸ்சா?

பிறகு சட்டசபையில் இது பற்றித் தீர்மானமெல்லாம் வந்தது. பார்ப்பனர்கள், வைதீகர்கள் எதிர்த்ததோடு அல்லாமல், தேவடியாள்கள் என்பவர்கள் எல்லாம் கூட்டம் போட்டு என்னைக் கண்டித்தார்கள்.

நாங்கள் நொடித்துப் போய்விட்டால் என்ன செய்வது என்று கேட்டார்கள்.(சிரிப்பு கைதட்டல்) எப்படியோ நம் உணர்ச்சி உள்ளவர்கள் ஏராளமாக இருந்ததால் இது சட்டமாகி விட்டது’’ என்று பெரியார் சொல்கிறார்.

இந்த கொடுமையை நினைத்துப் பாருங்கள். இதற்கு என்ன லைசென்ஸ் வாங்குவதா? அதை இன்னொருவருக்கு விற்று, 40, 50 ரூபாய்க்கு அந்த காசை வாங்கி இருக்கிறார்கள் என்றால் நம்முடைய சமுதாயம் எப்படி இருந்திருக்கிறது?


இந்த நிலை ஒரு நூறு ஆண்டுகளுக்கு முன்னாலே இருந்தது. தேச பக்த திலகம் என்று அழைக்கப்பட்ட இதே சத்தியமூர்த்தி அய்யர் இந்தப் பிரச்சினையைப் பற்றி சட்டமன்றத்தில் பேசினாரே.

முதல் நாள் சொல்கிறார் தேவதாசி ஒழிப்பு மசோதாவை நான் எதிர்க்கிறேன் என்று பேசினார். நீதிக்கட்சி ஆட்சியிலே இவர் எதிர்க்கட்சித் தலைவர் சொல்கிறார்.

இந்த சட்டம் பாஸ் ஆக நான் அனுமதிக்க மாட்டேன். ஏன் என்றால், இது சாஸ்திர விரோதம், மத விரோதம், இந்த சட்டத்தை எதிர்த்து நான் ஜெயிலுக்குப் போனாலும் போவேனே தவிர, சாஸ்திரத்தை எதிர்த்து நான் நரகத்திற்குப் போக சம்மதிக்க மாட்டேன். இது தான் அவருடைய சட்டமன்ற உரை.

பெரியாரிடம் ஆலோசனை கேட்டார்

பெரியாரிடம் வந்து இந்த மாதிரி சட்டமன்றத்தில் பேசினார்கள். இதற்கு என்ன பதில் சொல்லுவது? நாளைக்கு இந்த மசோதா மீது பேசியாக வேண்டும் என்ன செய்வது என்று முத்துலெட்சுமி ரெட்டி அம்மையார் பெரியாரிடம் ஆலோசனை கேட்டார்கள்.

இனிமேல் உங்க ஜாதியில் செய்யுங்கள்

அய்யா அவர்கள் சொன்னார்கள். நான் சொல்லுகிறபடி நீங்கள் சட்டமன்றத்தில் பேசுங்கள் என்று சொல்லிக் கொடுத்தார். பெரியார் சொன்னதை உள்வாங்கிக் கொண்டு அடுத்த நாள் இந்த அம்மையார் சட்டமன்றத்தில் பேசினார்.
கனம் சத்தியமூர்த்தி பேசினார். தேவர்களுக்கு அடியாள் என்றால் அது கடவுள் தொண்டு என்று அர்த்தம் என்று சொன்னார்.

அவரை ஒன்றே ஒன்று கேட்டுக் கொள்கிறேன். இதுவரையில் எங்க ஜாதியிலேயே கடவுளுக்கு இந்தத் தொண்டை எல்லாம் செய்தார்கள்.

இனிமேல் அந்தத் தொண்டை அவர்களுடைய ஜாதிப் பெண்களே செய்யட்டும் என்று பேசினார். (பலத்த கைதட்டல்).

பெரியார் சொல்லி அனுப்பிய மாதிரியே தேவதாசி ஒழிப்புச் சட்டம் நிறைவேறியது. எதற்காக இதைச் சொல்லுகிறேன் என்றால் அய்யா அவர்கள் மனித சமுதாயத்தைத் திருத்துவதற்கு அவர்கள் எவ்வளவு அரும்பாடு-பட்டார்கள் என்பதை நீங்கள் புரிந்து கொள்ள வேண்டும்.==திராவிடர் கழகத் தலைவர், தமிழர் தலைவர் கி. வீரமணி அவர்கள்
SOURCE: http://thamizhoviya.blogspot.com/2008/06/blog-post_2023.html

நில பிரபுக்கள் கடவுளின் பணியாட்கள் என்ற பூசாரிகள் இவர்களின் சதியாலோசனையின கீழ் எழுந்ததே இந்த மத விபச்சாரம்.

இது Times of India என்ற ஆங்கில நாளேடு மேற்கொண்ட ஆராய்ச்சியின் முடிவு. இந்த முடிவு நாளிதழில் 10-11-87 அன்று வெளிவந்துள்ளது.  -- அன்புடன் தாயகப் பணியில்….. DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.) தொடருகிறது. மீண்டும் வாருங்கள்,


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?


இந்துக்களே! விழிமின்! எழுமின்! 4. இராமனா கடவுள்? கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

 இந்துக்களே! விழிமின்! எழுமின்! 2.பிராமிணர்களுக்கிடையே பிளவு.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்? 1.முன்னுரை.


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

No comments:

Post a Comment