இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 5. ஆபாச‌ செயல்களில் கடவுள்களா ?

*கடவுள்கள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

*கிருஷ்ணன் கடவுளே அல்ல.*சிவன் கடவுளுமல்ல. *இவனை கடவுளாக எடுத்துக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா? *பலி வேண்டும் காளி. *கடவுள் பாஞ்சாலி ஐந்து பேருக்கு மனைவி.

இந்துக்களே! விழிமின்! எழுமின்! - ஆசிரியர் (DR. . சாட்டர்ஜி M.A., Ph.d,. (USA)


கடவுள் கிருஷ்ணன் 5

கடவுள் கிருஷ்ணன் ஒரு விவகாரத்தில் அலாதியான ஆசை உள்ளவர். அந்த ஆசை இளம் பெண்களை நிர்வாணமாகப் பார்ப்பதாகும்.

ஒரு காலத்தில் இராமன் சாதாரண இராமனல்ல. கடவுள் இராமன் கன்னிப் பெண்கள் குளித்துக் கொண்டிருப்பதை பார்ப்பதற்காக, அப்பெண்களின் மாற்றாடையை எடுத்து மரங்களின் மேல் ஒளித்து வைத்து விட்டார். கடவுள் இது போன்ற கீழ்த்தரமான செயல்களில் ஈடுபடலாமா?

கீதை - ஹிந்துக்களின் புனித நூல் - இது கிருஷ்ணன் பெண்கள் குறித்துக் கொண்டிருப்பதைப் பார்த்த கதையில் கிருஷ்ணனும் குளித்துக் கொண்டிருந்த பெண்களின் துணிகளை எடுத்து ஒளித்து வைத்து விடுகின்றான்.

குளித்துக் கொண்டிருந்த பெண்கள் கீழ்ஜாதியைய் சார்ந்தவர்கள்.

இவர்கள் காணாமற்போன துணிகளைத் தேடி நீருக்குள்ளிருந்து வெளியே வருகின்றார்கள். வருபவர்கள் தங்கள் கைகளால் தங்கள் உறுப்புக்களை மறைத்து கொண்டு வரக்கூடாதாம். கீதை கூறுகின்றது. அந்தப் பெண்களை கைகளை உயர்த்திக் கொண்டே வரவேண்டும் என்று கடவுள் கிருஷ்ணன் வேண்டிக் கொண்டானாம்.தொடர்புள்ள பதிவுகள். சுட்டியை சொடுக்கி படிக்கவும்

.


2. பக்தையை சூறையாடிய கடவுள் விஷ்ணு. பார்வதியை கட்டிப்பிடித்த பக்தன். கடவுளை கற்சிலையாக்கிய பக்தை.


3. ஆபாசத்தின் உச்சம். துளசி பிரசாதமானது எப்படி?


4. அழகியிடம் சிக்கிய‌ காமாந்தகார‌ பகவான்கள். பகவானின் லீலாவிநோத‌ங்க‌ள். திரும‌ண‌ங்க‌ளில் அக்னி சாட்சி, அருந்த‌தி பார்ப்ப‌து ஏன்?


5. உடம்பெல்லாம் பெண்குறி ஆகிய இந்திரன்.
தொடர்புள்ள பதிவுகள்.

கிருஷ்ணனின் அசிங்கமான
விளையாட்டுகள்


ஜகநாதம் என்பது இந்தியாவில் உள்ள புண்ணிய ஸ்தலங்களிலெல்லாம் மிக முக்கியமானது என்று

சொல்லப்படுவது இந்துக்கள் என்போர்களில் தென்னாட்டில் உள்ள சைவர்களில் யாரோ ஒரு சிலரால்

மதத்துவேஷம் காரணமாக ஜகநாதம் ஒரு சமயம் அலட்சியமாகக் கருதப்பட்டாலும், இந்தியாவில் உள்ள பெரும்பாலோராலுமே முக்கிய ஸ்தலமாகக் கருதப்படுவது.


அந்த ஸ்தலத்தின் முக்கியதுவத்திற்கு உதாரணம் என்னவென்றால், அந்த ஜகநாதம் என்கின்ற ஊரின்
எல்லைக்குள் ஜாதி வித்தியாசம் பார்க்கக் கூடாது என்று சொல்வார்கள்.

அதற்கு உதாரணமாக அந்தக் கோயிலில் பூஜை பண்ணுகின்றவர்கள் அந்தப் பக்கத்திய நாவிதர்கள். அவர்கள் குளத்தருகில் அடைப்பத்துடன் நின்று கொண்டு சவரம் செய்வார்கள். பிறகு கோயிலில் பூசாரியாகவும் இருப்பார்கள்.


அந்தக் கோயிலில் பூசை செய்யும் உரிமையே அந்த ஊரிலுள்ள நாவித வகுப்பைச் சேர்ந்தவர்களுக்குத்தான் உண்டு என்கின்றார்கள்.


அங்கு சுவாமிக்கு முன்னால் சாப்பாட்டை மலைபோல் குவித்து ஆராதனை செய்வார்கள். அந்தச் சாதத்தை பூசாரிகள் பங்கு பிரித்து எடுத்துக் கொண்டு வெளியில் வந்து விற்பார்கள்.


யாத்திரைக்காரர்கள் யாராயிருந்தாலும் அதை வாங்கிச் சாப்பிட வேண்டும். மற்றபடி கடையிலும் சாதத்தை சட்டியில் வைத்துவிற்பார்கள். ஜாதி வித்தியாசம் என்பதில்லாமல்யாவரும் வாங்கிச் சாப்பிடுவார்கள்.


தவிர, அந்த ஸ்தல எல்லைக்குள் எச்சில் வித்தியாசம் பார்க்கக் கூடாது என்பார்கள். இலையில் உள்ள சாப்பிட்ட மீதியை எடுத்து திரும்பவும் சட்டிக்குள் போட்டுக் கொள்வார்கள். கடைகளில் விற்பனைக்காக

வைத்திருக்கும் சாதச்சட்டியில் யாரும் கைவிட்டு சாதத்தை எடுத்து வாயில் போட்டுப் பார்த்து மீதியை சட்டியிலேயே போட்டுவிடலாம் அதை யாரும் ஆட்சேபிக்க மாட்டார்கள்.


ஜெகநாதத்திலுள்ள அந்த ஜெகநாதர் கோயிலுக்குள் யாரும் போகலாம்; சாமியைத் தொடலாம்; சாமியைச் சுற்றலாம்; காலைத் தொட்டுக் கும்பிடலாம். இது மாத்திரமல்லாமல், அந்த எல்லைக்குள் யாரும்

திதி, விரதம், தர்ப்பணம் முதலிய அனுஷ்டானங்கள் ஒன்றும் செய்யக்கூடாதாம். செய்தால் பாவமாம்.


அன்றியும், அங்குள்ள சாமிகள் கிருஷ்ணன், பலராமன், சுபத்திரை ஆகிய மூவர். அதாவது மற்ற இடங்களைப் போல் சாமி புருஷன் பெண் ஜாதியுடன் இல்லாமல் அண்ணன், தம்பி, தங்கை ஆகிய மூன்று

பேர்களுக்கும் தங்கையாகிய சுபத்திரையை நடுவில் வைத்து அண்ணன்மார் இருவரும் இரு பக்கத்தில் நிற்கின்றார்கள்.


இதுவும் மரக்கட்டையில் அரைகுறையாய் செய்த உருவங்கள்தான், விக்கிரகங்கள்.


இந்த ஊரைப்பற்றிச் சொல்லும்போது சர்வம் ஜகநாதம் என்றுசொல்லுவது ஒருவழக்கம்.


அதாவது ஜாதி, மதம், எச்சில், விரதம், முறை முதலிய வித்தியாசம் அந்த எல்லைக்குள் இல்லை

என்பதைக் காட்டுவதற்காகச் சொல்லுவது. இதற்கு ஆதாரமாக இரண்டு விதமான கதைகள் சொல்லப்படுவதுண்டு.


ஒன்று,


இப்படி விஷ்ணு என்னும் முழுமுதற் கடவுளின் அவதாரமாகிய கிருஷ்ணன் என்னும் கடவுள் இறந்த பிறகு அந்தக் கடவுளின் பிணத்தை துவாரகைச் சுடுகாட்டில் வைத்து தகனம் செய்து அது எரிந்து கொண்டிருக்கையில்


திடீரென்று சமுத்திரம் பொங்கியதால் துவாரகை முழுவதும் தண்ணீருக்குள் ஆழ்ந்துவிட்டபோது இந்தக் கடவுளின் பிணமும், எரிந்து கொண்டிருந்த சுடுகாடும் தண்ணீருக்குள் மூழ்க நேரிட்டதால்,


அரைகுறையாய் வெந்த பிணக்கட்டையானது தண்ணீரில் மிதந்து கரை ஓரமாய் ஒதுங்கியதாகவும், அந்த ஊருக்கு ஜகநாதம் என்று சொல்லப்பட்டதாகவும்,


அந்த ஊரார் அந்தக் குறை பிணத்தை எடுத்து அதன் சக்தியை ஒரு மரக்கட்டையில் ஏற்றி அம் மரக்கட்டையில் இருந்து குறை பிணம் போலவே ஒரு உருவம் செய்து அதை வைத்து பூசித்து வருவதாகவும், அந்த ஸ்தலத்தின் சரித்திரம் சொல்லுகின்றது.


மற்றொன்று,


கிருஷ்ணபகவானின் லீலா விநோதங்களில் ஒன்றாகிய கோபிகைகளுடன் கூடி குலாவி வருவதை கிருஷ்ண பகவானின் தங்கையாகிய சுபத்திரை பார்த்து பொறாமைப்பட்டு,


ஸ்ரீ கிருஷ்ணபகவானிடம் சென்று "ஓ அண்ணாவே! நீ எவ்வளவோ அழகாகவும், பெருமை உள்ளவனாகவும் இருக்கின்றாய். உன்னுடன் கூடி அனுபவிக்கும்

பெருமை கோபிமார்கள் எல்லோரும் பெற்று அனுபவித்து வருகின்றார்கள்.


ஆனால், நானோ உனக்கு தங்கையாகப் பிறந்துவிட்ட காரணத்தினால் அந்த சுக போகத்தை அடைய யோக்கியதை யில்லாதவளாய்ப் போய் விட்டேன்" என்று
துக்கப்பட்டதாகவும்,


கிருஷ்ணபகவான் பார்த்து, "உலகத்திலேயே மிகவும் புண்ணிய பூமியாகிய ஜகநாதம் என்கின்றதாக ஒரு ஸ்தலம் இருக்கின்றது. அங்கு எந்தவிதமான வித்தியாசமும் கிடையாது;


எந்தவிதமான செய்கைக்கும் பாவம் கிடையாது; ஆதலால் அந்த ஜகநாதத்திற்குப் போய் எல்லாவிதமான சுகங்களையும் அனுபவிக்கலாம்"


என்பதாகச் சொல்லி ஜகநாதத்திற்கு வந்து கிருஷ்ணன், சுபத்திரை, பலராமன் ஆகிய சகோதர சகோதரிகள் ஒன்று சேர்ந்து இருப்பதாகவும் ஒரு கதையை ஜெகநாத பண்டாக்கள் ஸ்தல மகிமையைச் சொல்லும் முறையில் சொல்வதுண்டு. நன்றி:-"விடுதலை" 5-8-2009 பக்கம் -8)


வைஷ்ணவதர்மம் - மகாபாரதம் - ஆஸ்வ மேதிக பர்வம். அத்யாயம் 96, பக்கம் 267. பகவான் கோபாலனுடைய லீலைகளை விரிவாய் “உபதேசிக்கும்” பகுதி பாகவதத்தில் பத்தாவது “°கந்தம்” (பகுதி).

பாகவதத்தை யாக்கனத்தோடு அச்சிட்டு வெளியிட்ட கடலங்குடி நடேச சாஸ்திரிகள் கூட “கிளு கிளு”ப்பான இப்பகுதியைத்தான் முதலில் வெளியிட்டார்.


இதில் கிருஷ்ணன் பரஸ்திரீகளான (பிறர் மனைவியர்) கோபிகைகளோடு அத்யாயம் 29 இல் “ஜலக்கிரீடை” செய்ததையும், அத்யாயம் 30 இல் “வனக்கிரீடை” செய்ததையும்,

அத்யாயம் 31 இல் “ஸ்தலக் கிரீடை” செய்ததையும் மிக மிக அருவருப்பான மொழியில் சொல்லப்பட்டுள்ளது.

 (ஜலக்கிரீடை - நீரில் விளையாடுவது, வனக்கிரீடை - காட்டில் விளையாடுவது, ஸ்தலக் கிரீடை - நிலத்தில் விளையாடுவது) அத்தியாயங்கள் 32, 3359 ஆகியவற்றிலும் “சிருங்கார கதை” தொடர்கிறது.


- நன்றி: கடலங்குடியின் ஸ்ரீமத் பாகவதம்- கடலங்குடி பப்ளிகேஷன்ஸ், உரைநடையில் ஸ்ரீமத் பாகவதம் - ஸ்ரீ ஆனந்த நாச்சியாரம்மா - ஸ்ரீஇந்து பப்ளிகேஷன்ஸ்
SOURCE:

http://arivagam.blogspot.com/2006/10/blog-post_25.html
----------

நல்ல எண்ணங் கொண்ட ஹிந்துக்களே கூறுங்கள்! இதைச் செய்தவனை கடவுள் என எடுத்துக் கொள்ளலாமா?

கடவுளாக இருந்தால் அவன் இப்படிச் செய்வானா?
உண்மை என்னவெனில் கிருஷ்ணன் கடவுளே அல்ல.

தொடர்புள்ளபதிவு..

செத்துப்போன கடவுள்!


கிருஷ்ணன் ஒரு காட்டில் படுத்து ஒரு முழங்காலின்மீது மற்றொரு கெண்டைக் காலைப் போட்டு நித்திரை செய்யும்போது அக்காட்டில் வேட்டை ஆடிக்கொண்டிருந்த வேடன் ஒருவன் இந்த நிலையைக்கண்டு, இது மிருகம் என்று எண்ணி அம்பு எய்திவிட்டான்.


அதனால் கிருஷ்ணன் செத்துவிட்டான். மக்கள் அவன் பிணத்தைச் சுட்டெரித்து விட்டார்கள். அவன் மனைவிமார் உடன்கட்டை ஏறிவிட்டார்கள். அருச்சுனன் எல்லோருக்கும் சரம (கரும) கிரியை செய்தான்.

ஆதாரம்: விஷ்ணு புராணம் 37,38 ஆம் அத்தியாயம்
SOURCE:http://viduthalai.periyar.org.in/asuranmalar/snews16.html

சுட்டியை சொடுக்கி படிக்கவும்.

1.விஷ்ணுவின் தலையை தைலம் தடவி கழுத்தோடு ஒட்ட வைத்தார்களாம் அஸ்வினி குமாரர்கள். பிராமணன் டாக்டருக்கு படிக்கக்கூடாது. வேத நிபந்தனை..புகையிலை - சுருட்டுக் குடிக்கும் பிராமணர்கள் அடுத்த பிறவியில் பன்றிகளாகப் பிறப்பார்கள்- பத்மபுராணம்


2. பன்றி புனிதம். பன்றியின் ஆண் பெண் குறி “யாக மந்த்ரங்கள்” போன்றவையாம் .


--------


கடவுள் சிவன் - கணேசன் - கடவுள் பார்வதி

ஹிந்து மதத்தின் கொள்கைகளின்படி கங்கை நதி சிவனுடைய தலையிலிருந்து பிரவாகமெடுக்கின்றது.

சந்திரனும் அதாவது நிலா அங்கே தான் அமர்ந்திருக்கின்றான்.

ஆனால் அமெரிக்கா, வானவீதியில் தான் நிலவைக் கண்டது. அங்கே தான் நீல் ஆம்ஸ்ட்ராங் - ஐ அனுப்பி வைத்தது.

அமெரிக்கா சிவன் தலையை நோக்கி நீல் ஆம்ஸ்ட்ராங்கை அனுப்பியதாகத் தெரியவில்லை.

உண்மை என்னவெனில சிவன் கடவுளுமல்ல. கங்கை அவன் தலையில் பிரவாகமெடுக்கவுமில்லை. சந்திரன் அங்கே இருப்பதுமில்லை.


தொடர்புள்ள பதிவு.

சீனாக்காரன் கையில் சிக்கிய சிவபெருமானும் ! சொர்க்க லோகமும் !! எப்போது எப்படி மீட்பது ?

இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான்.? அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?


திருக்கைலயங்கிரி என்ற தமிழ் இலக்கியம் போற்றும் திரிக்கைலாய மலை உள்ள பிரதேசம்தான் பூலோக சொர்க்கம்.


இது திபெத் பகுதியில் உள்ளது. சீனாவின் ஆக்கிரமிப்பிற்கு உட்பட்ட எல்லைப் பிராந்தியம்; `கைலாஸ் மானஸரோவர் எனும் இப்பிரதேசம்.


பாரதத்தின் கலை - கலாசார ஆன்மீகத்துறைகளுக்கு ஆதார சக்தியாக விளங்கி வந்திருக்கிறது இந்தப் பூலோக சொர்க்கம்.


இதற்கு பாரதத்தில், வழங்கிய புராதனப் பெயர் `த்ரிவிஷ்டபம் (திப்பெத்). சிருஷ்டியின் தொடக்கம் இப்பிரதேசத்தில் தான் ஏற்பட்டது என்று ரிக் வேதம் கூறுகிறது.


பூமியில் பேரதிர்வு ஏற்பட்டு, இமயமலை எழுந்ததும், கடல்கள் உருவானதும் இப் பகுதியிலிருந்துதான். ரிக் வேதத்தில் இத்தகவலைத் தரும் பல சூக்தங்கள் இருக்கின்றன.


`த்ரய:ஸுபர்ணா உபரஸ்ய மாயூ நாகஸ்ய ப்ருஷ்ட்டே. அதி விஷ்ட பிச்ரிதா:.. என்று தொடங்கும் சூக்தம், இந்தக் கருத்தை வெளியிடுகிறது.


``மூன்று தைவ சக்திகள் - அக்னி இடி மின்னல், சூரியன் இங்கு ஒன்று சேர்ந்து இயங்கியதால் ஜீவராசியின் சிருஷ்டி தொடங்கியது. இதுதான் சொர்க்க லோகம்;


இங்கு அமிர்த சக்தி இருக்கிறது. ஜீவர்கள் இந்த அமுத சக்தியைப் பெற்று வளர்கின்றன. இதனாலேயே இப்பகுதியை `த்ரவிஷ்டபம் (மூன்று தைவ சக்திகள் ஒருமித்த சொர்க்கம்) என்று
அழைக்கிறோம்.


மகாபாரதத்தில் வியாச முனிவர் இந்த திப்பெத் பிரதேசத்தை `த்ரதவிஷ்டபம் என்றே குறிப்பிட்டு, ஆர்ய வர்த்தத்தின் நடுப்பகுதி, மிகப் புனிதமான புண்ய பூமி என்று கூறியிருக்கிறார்.


கிம் புருஷவர்ஷம். கின்னரதேசம், கந்தர்வ லோகம் என்றெல்லாம் இப்பகுதியில் உள்ள பிரதேசங்களை வர்ணிக்கிறார்.


கைலாஸ பர்வதத்தை ``ஹேம கூடம் என்று மகாபாரதமும் `கிரௌஞ்ச பர்வதம் என்று வால்மீகி ராமாயணமும் குறிப்பிடுகின்றன.


ஏழாம் நூற்றாண்டில் இங்கு ஆட்சி புரிந்து வந்த ஸோங் வத்ஸன் ஸகம்போ எனும் திப்பெத்திய அரசனின்
காலத்திலிருந்து 1954-ல் சீனா இந்நாட்டை ஆக்கிரமித்துக் கொள்வதற்கு முன்பு வரையில் பாரதத்தின் பகுதி
போலவ இங்கு இந்திய யாத்திரிகள் போய் வந்து கொண்டிருந்தார்கள்


கைலாஸ் - மானஸரோவர் பகுதியிலுள்ள மகன்ஸர் கிராமத்திலிருந்து பாரதம் 1948-க்கு முன்பு
வரைக்கும் கிஸ்தி வசூல் செய்து கொண்டிருந்தது.


1950 வாக்கில் இப்பகுதியுடன் கிட்டத்தட்ட எண்பதாயிரம் சதுர மைல் பரப்புள்ள இந்தியப் பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துக் கொண்டு விட்டதால் 1962-ல் ஏற்பட்ட சீனப் படையெடுப்பிற்குப் பின் கைலாஸ் மானஸ ரோவர் புனித யாத்திரை தடைப்பட்டு விட்டது.


-திரு. சௌரி எழுதிய `இந்தியாவின் கலையும் கலாசாரமும் என்ற நூல் - பக்கம் 145, 146 (வானதி பதிப்பக வெளியீடு)


நமது கேள்வி இதுதான்


பூலோக சொர்க்கம் என்று போற்றப்படுகின்ற இடம்!சிவபெருமான் உறைவதாகக் கூறப்படுகின்ற இடம்!மூன்று தைவ சக்திகள் ஒன்று கூடுவதாகக் கூறப்படும் இடம்.


இவ்வளவு அற்புத சக்தி வாய்ந்த இடத்தை அந்நியன் எப்படி ஆக்கிரமித்தான் - அதுவும் கடவுள் நம்பிக்கை இல்லாத நாத்திகனான சீனாக்காரனால் எப்படி ஆக்கிரமிக்க முடிந்தது?


அவன் படை எடுத்துவந்த நேரத்தில் சிவபெருமான் என்ன செய்து கொண்டிருந்தான்?


திரிபுரத்தை அவன் சிரித்தே அழித்ததாகக் கதை கட்டி இருக்கின்றார்களே - அந்த அபார சக்தி என்ன
ஆயிற்று?


உண்மையிலேயே சிவபெருமான் என்று ஒருவன் இருந்து அவன் அபார சக்தி உடையவனாகவும் இருப்பது உண்மையானால், சீனாக்காரன் அந்த இடத்தைக் கைப்பற்றி இருக்க முடியுமா?இதிலிருந்து என்ன தெரிகிறது?


SOURCE: viduthalai.news. 26 may 2008
-----------


பூமியை அரசர்கள் மாறி மாறி ஆள்வது ஏனாம்?


சிவனும் பார்வதியும் நூறு தேவ வருட காலம் புணர்ந்து கொண்டிருந்தும், விந்து வெளிப்படாத நிலையில்,

தேவர்கள் எல்லாம் ஒன்று சேர்ந்து, சிவனிடம் சென்று புணர்ச்சியை நிறுத்தும்படி வேண்டினர்.

ஏனெனில், இவ்வளவு நீண்டகாலப் புணர்ச்சியின் காரணமாக ஒரு பிள்ளை பிறந்தால் நாடு தாங்காதாம். வேறு வழியின்றி சிவன் விந்துவை வெளியில் விட்டான்.


விந்து ஸ்கலிதமாகும் நேரத்தில் தேவர்கள் இப்படிக் கெடுத்துவிட்டார்களே என்ற ஆத்திரத்தில், அவர்களின் மனைவிகள் எல்லாம் மலடாகப் போகக்கடவது என்று பார்வதி தேவியார்
சாபமிட்டாளாம்.


மற்றும், தனது கர்ப்பத்தில் விழவேண்டிய விந்து, பூமியில் விழுந்ததால், பூமாதேவி மீதும் பார்வதிக்குக்கோபம்! பூமாதேவியை தனது சக்களத்தியாக பார்வதி கருதி, அவளை (பூமியை) பல பேர்
ஆளவேண்டும் என்று சபித்தாளாம். அதன் காரணமாகத்தான் பூமியை மாறி மாறி அரசர்கள் ஆளுகின்றார்களாம்.
ஆதாரம்: வால்மீகி இராமாயணம்
SOURCE:http://viduthalai.periyar.org.in/asuranmalar/snews19.html


தொடர்புள்ள பதிவுகள். சுட்டியை சொடுக்கி படிக்கவும் .
--------


புராணத்திலோர் புனிதக் கதை

கடவுள் பார்வதி - சிவனிடம் அதாவது தன் கணவனிடம் குழந்தை பெற்றுக கொள்ள அனுமதி கேட்டாள். சிவன் மறுத்து விட்டான்.

பார்வதி தன் அழுக்கை உருட்டி ஒரு குழந்தையை உருவாக்கி விடுகின்றாள். அந்த அழுக்குருண்டைக்குப் பெயர் (கடவுள்) கணேசன்.

இந்தக் கடவுள் கணேசனின் தலையைத் தவறுதலாய் வெட்டி விடுகின்றான்.

எந்த கடவுளாவது இந்தத் தவறைச் செய்வானா?

இவனை கடவுளாக எடுத்தக் கொண்டால் நமது வாழ்க்கையில் சிக்கல் வளருமா? தீருமா?

இந்தத் தவறை சரி செய்து கொள்ள கடவுள் ஒரு குழந்தை யானையின் தலையை வெட்டி அழுக்குக் கடவுள்

கணேசனின் முண்டத்தோடு பொருத்தி விடுகின்றான். அன்று முதல் அவனுக்கு (கணேசனுக்கு) ஆனை முகத்தோன் என்று பெயர்.

இவன் தன் தாயைப் போல் அழகான பெண் எனக்கு வேண்டும் என்று வேண்டிக் கொண்டான்.

இந்தக் கடவுளின் சிலை குளத்துக் கரையோரம் அதிகமாகக் காணப்படும். காரணம் இந்தக் கடவுள் தன் தாயைப் போன்ற அழகுள்ள ஒருத்தியை தேடிக் கொண்டிருக்கின்றாராம்.


பலி வேண்டும் காளி.
Press Trust of India என்ற செய்தி நிறுவனம் கூறுகின்றது.
கடந்த மூன்று வருடங்களில் 2500 இளம் பிள்ளைகளும், பெண்டிரும் கடவுள் காளிக்காகப் பலி கொடுக்கப் பட்டுள்ளார்கள் என்று.

இராமனின் பக்தன் ஒருவன் எட்டு வயதான தனது மகனைக் கதறக் கதற தலையை வெட்டினான். காரணம் காளி அவனிடம் சொன்னாளாம். 'உன் மகனின் தலையை வெட்டிவிடு. அவன் இறந்துவிடுவான். அவன் மீண்டும் வந்து விடுவான். மீண்டும் வரும் போல அவன் செல்வத்தை மூட்டி கட்டி வருவான்" என்று.

இராம பக்தன் காளியிடம் ஏமாந்தான்

இந்த இரத்த வெறி கொண்ட காளியை கடவுள் என்று இந்த நாடு முழுவதும் வணங்குகின்றார்கள் அப்பாவி பாமரர்கள்.

காளியின் வாய் எப்போதும் அகலவிரிந்தே இருக்கும். கிழிந்து பீரிக் கொண்டு கோரமாய் இருக்கும்.

பற்களிலிருந்து இரத்தம் கொட்டிக் கொண்டே இருக்கும். வெட்டிய தலையொன்று கையிலேயும் இருக்க,

அவள் துர்க்கை, தேவி, சக்தி, உமா என்ற பெயர்களுடன் குரூரமாய் காட்சி தருவாள்.

டெல்லியில் காளிமாதாவுக்கு பணிவிடை செய்யும் பூசாரி கூறுகின்றார்:

காளிக்கு ஒரு குழந்தையைப் பலி கொடுப்பது ஓர் ஆண்மகன் பிறப்பதற்கான உத்திரவாத்தைப் பெற்றுக் கொள்வதாகும்.

இந்தியாவில் மனித பலி என்பது கொலையாகும். எனவே பலி கொடுப்பவர் இன்னும் அதோடு தொடர்புடையவர் அனைவரும் கொலை செய்ததற்குரிய தண்டணையைப் பெறுவர்.

ஆனால் காவல்துறை இதுவரை இதில் சாதித்தது எதுவுமில்லை.

ஜே.ஷாஹோ பீகார் மாநிலத்தின் காவல்துறை தலைவர் கூறுகின்றார்:

மனித உயிர்களை காளிக்கும் பலியாகத் தருவதைத் தடுத்திட நாங்கள் எங்களால் இயன்றவற்றையெல்லாம் செய்தோம். ஆனால் எந்த மனித பலியையும் தடுத்திட இயலவில்லை. ஊரார் கூடி பெற்றோரின்

சம்மதத்தைப் பெற்று ஒரு சிறுவனை குறி வைத்து காளியின் முன்னே அழைத்துச் சென்று தலையை வெட்டி விட்டு எதுவுமே நடக்காதது போல் நடந்து கொண்டால் காவல் துறையினர் என்ன செய்திட இயலும்.

உம்காந்த் சதுர்வேதி - இவர் பீகார் மாநிலத்தின் சிறந்த வழக்கறிஞர். அவர் கூறுகின்றார்:

சட்டத்தில் மனித பலி கொலை என்று எடுத்துக் கொள்ளப்படும். ஆனால் யார் கொலை செய்தார் என்பதை நிரூபிப்பது கடினம். பெரும்பாலும் மனித பலி என்ற இந்த கொலையைச் செய்பவர் பூசாரி தான்.

பெரும்பாலான கொலைகளில் - மனித பலிகளில் - காவல் துறையினர் துணிந்து நடவடிக்கை எடுக்கத் தயங்குகின்றனர். காரணம் காளி தங்கள் மீது கோபப்பட்டு விடுவாளோ என்று அஞ்சுகின்றனர்.

1972ல் மராட்டிய மாநிலத்தில் திகைப்பூட்டும் அளவு சில உயிர் பலிகள் நடந்தன.

அரசியல் செல்வாக்கு மிக்க ஒருவர் தனது இஷ்ட தேவதையிடமிருந்து பொக்கிஷம் ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்காக 11 கன்னிப் பெண்களின் இரத்தத்தை வெட்டிக் காட்டினார். ஆனால் காளி அவருக்கு பொக்கிஷத்தைத் தரவில்லை. காவல்துறையினர் அவரைத் தேடினர். அவரோடு பலி கொடுப்பதில் ஈடுபட்ட 4 அடியாட்கள் பிடிபட்டனர். தலைவரோ தப்பித்துக் கொண்டார்.

கேரளாவில் ஒரு கோர சம்பவம். ரவி சித்தார்தன் என இரண்டு சகோதரர்கள். இவர்களுக்கு ஷோபா என்றொரு தங்கை.
சகோதரர்கள் இருவரும் சகோரியைக் குளித்து விட்டு காளி கோவிலுக்குள் பூஜைக்கு வரச்சொன்னார்கள்.

அப்படியே சகோதரி குளித்துவிட்டு காளி கோயில் பூஜைக்காக வந்தாள். மந்திரங்களை முழங்கிக் கொண்டு சகோதரர்கள் இருவரும் அவளது கழுத்தை வாளால் வெட்டச் சென்றார்கள். அவள் கதறினாள். உத்தம சகோதரர்கள் விடவில்லை. அவள் உயிர்ப்பிச்சை கேட்டு மன்றாடினாள். இரக்கம் காட்டும்படி

இறைஞ்சினாள். விடவில்லை. அவளைத் துண்டு துண்டாக வெட்டி காளிக்கு காணிக்கையாக்கினர். இந்த பலியைக் கொடுத்தால் பூமிக்குக் கீழே இருந்து ஒரு பொக்கிஷம் அவர்கள் முன் வெளிப்படும் என காளி வாக்களித்தாளாம். இன்னமும் அது வெளிப்படவில்லை.

இந்தப் பலிகளெல்லாம் பாமரர்களுக்குத் தானே தவிர பிராமணர்களுக்கல்ல.

வேதத்தில் பிராமணர்களை பலி கொடுக்கக்கூடாது என்று பகிரங்கமான பிரகடனம் இருக்கின்றதாம்.

கடவுள் பாஞ்சாலி.

இந்தக் கடவுள் ஐந்து பேருக்கு மனைவி. அந்த ஐந்து பேரும் சகோதரர்கள்.


இவளுக்கோர் குழந்தை பிறந்தது என்றால் அந்தக் குழந்தைக்கு யார் தந்தை?

இந்திய நாட்டு நீதி மன்றங்களே இதற்குப் பதில் சொல்ல வேண்டும்.

தொடர்புள்ளபதிவு.


திரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்!

இது தான்
பாரதம்.


முதல் காதல்.


பாரதப் போர் - அன்றைய போரில் அர்ச்சுனனும் கர்ணனும் மோதுகிறார்கள். முந்தைய நாள் போரில் பாண்டவர்களில் மூத்தவனான தருமன் கர்ணனிடம் சண்டையிட்டுத் தோற்றுப் போய் மூலையில் முடங்கி விட்டான். இன்றையப் போரின் முடிவு எப்படி இருக்கும்?

கர்ணன் கொல்லப்பட்டான் என்றுதான் இருக்கும். நியாயமான முறையில் நடத்தப் படும் போர் அல்லவே! சூழ்ச்சிக்கார கண்ணன் அல்லவா போரை நடத்துகிறான். சூதும் வாதும் வஞ்சகமும்
பித்தலாட்டமும் நிறைந்த முறையில் நடத்துகிறான். பின் எப்படி கர்ணன் வெற்றி பெற முடியும்?


தேரை அழுத்தி அம்பு தாக்காமல் ஒருவனைக் காத்தான். யானை இறந்தது என உரக்கச் சொல்லி, மயக்கி ஒருவனை மாய்த்தான். சூரிய ஒளியை மறைத்துப் போரை முன்னதாகவே முடிக்கச் செய்து தோற்றுக் கொண்டிருந்த ஒருவனின் உயிரைக் காப்பாற்றினான். இப்படி எத்தனையோ நய வஞ்சகங்கள். அவனுக்கு முடிவு முக்கியம். வழிகளில் நேர்மை தேவையில்லை.


உள்ளம் பதைபதைக்க பாண்டவர் குடும்பத்தார் அனைவரும் எதிர்பார்த்த முடிவு போர்க்களத்திலிருந்து சங்கும் தடயையும் சேர்ந்து ஒலித்தன. சத்தம் பயங்கரமாகக் கேட்டது என்றாலும் அதனையும் மீறிக் கேட்டது ஓர் ஓலம். குந்திதேவியின் குரல். போர்க்களம் நோக்கி ஆவேசமாக ஓடிக் கொண்டே எழும்பிய குரல்.
ஏன்?


மாமியார் ஓடுவதைப் பார்த்த மருமகளும் ஓடினாள். குந்திக்கு மகன்கள் அய்ந்து என்றாலும் மருமகள் ஒருத்திதான். அய்ந்து பேருக்கும் ஈடுகொடுத்த அழியாத பத்தினி. அய்வருக்கும் ஈடு கொடுத்தாளா? உண்மை நிலை வேறு நிலை.


நல்ல கணவன் வேண்டும் என்று கடவுளிடம் வேண்டிக் கொண்டாள் திரவுபதை தாம் முனுமுனுத்தது கடவுளின் காதில் விழுந்ததோ இல்லையோ என்ற சந்தேகம் எழவே மறுபடியும் முனகல் "பதிம்தேஹி" என்று. மீண்டும் மீண்டும் அய்யம். அம்மணி அய்ந்து முறை உச்சரித்தாளாம்.


ஆகவே அய்ந்து கணவன்களாம். அய்ந்து கணவன்கள் இருந்தும் திரவுபதையின் பிள்ளை அல்லது பிள்ளைகளின் பெயர்கள் என்ன? குழந்தையே இல்லையாம்.


தருமன் ரிஷி மாதிரியாம். மனைவியிடம் தரும நீதி பேசுவாரோ? இருக்காதே! பள்ளியறை இருக்கும்
போதே ஆயுதப் பாசறையைப் படுக்கறையாக்கி அர்ச்சுனன் பார்க்கும்படி ஆகிவிட்டதே! அப்படியும் புழுபூச்சி வைக்கவில்லை.


பல்லோ பலகாதம், பல்லிடுக்கு முக்காதம் என்று வருணிக்கப்படும் பீமன் நளின காம சூத்திரச் செயல்களுக்கு சரிப்பட்டு வராத ஆள் போலிருக்கிறது.


அர்ச்சுனன் பல பூக்களின் மகரந்தத்தைத் துய்க்கும் தும்பி. விளையாட்டுப் பிள்ளை. தீராத விளையாட்டுப் பிள்ளை கண்ணனின் மைத்துனன். வெளி விளையாட்டுக்கே முக் கியத்துவம். அய்ந்தில் ஒரு பங்கு தேவைப் படவில்லை போல.


நகுல சகாதேவச் சிறுவர்கள் அண்ணியைத் தாயாகவே எண்ணி இருந்து விட்டார்களோ? இருக்கலாம்.


எது எப்படியோ, குழந்தை இல்லை. எனவே தனியாகவே ஓடினாள். ஓடிக் கொண்டே திரும்பிப் பார்த்தாள். தருமன் ஓடி வந்து கொண்டிருந்தான்.


மூவரும் போர்க்களம் போயினர். கர்ணன் அடிபட்டு, இதோ அதோ என்று சாகும் காலத்தை நெருங்கிக் கொண்டு.. அந்தக் கடைசிக்கால வேதனை முகத்தில் படர... புஸ்புஸ் என்று ஏங்கி மூச்சு விட்டுக் கொண்டு.. கண்கள் செருகிக் கொண்டு..... மார்பில் தைத்த அம்பின் மீது கை வைத்தவாறு... எடுத்து
எறிந்திடத் தெம்பில்லாத நிலையில்.. தேர்ச் சக்கரத்தில் தலையைச் சாய்த்தவாறு...


கூவியபடி முதலில் ஓடிய குந்தி கர்ணனின் மேல் விழுந்தாள்...


வந்தாயா, அம்மா... கர்ணனின் உதடுகள் பிளந்து வார்த்தைகள் வந்தன. குந்தியின் காதுகளில் மட்டுமே கேட்டிருக்கும் அருகில் இருந்ததால்.


அய்யோ, மகனே! அலறிக் கொண்டே அழுதாள் குந்தி.

நான் செய்து கொடுத்த சத்தியத்தை மறந்து விடவில்லை, மகனே என்று அரற்றியவாறு தன் மார்புச் சேலையை விலக்கினாள். அரச குடும்பத்து வாளிப்பில் வளர்ந்துள்ள தன் மார்பில் கர்ணனின் வாய்படுமாறு அணைத்துக் கொண்டாள்.


என்ன சத்தியம்? கர்ணன் தேரோட்டியின் மகன். இழி ஜாதி மகன் இறக்கும் தறுவாயில் ராஜமாதாவின் ஸ்தனத்தில் வாய் வைப்பதா? பால் குடிப்பதா? ராஜமாதாவே இந்தப் பாதகத்தைச் செய்வதா?


பின்னாலேயே ஓடிவந்த திரவுபதையும் சிந்தித்தாள். தருமனும் சிந்தித்தான். பின்னாலே கூடிவிட்ட பீமன், அர்ச்சுனன், நகுலன், சகாதேவன் நால்வர் மனதிலும் இதே கேள்விதான்.

கர்ணன் குந்திக்கு மகனா?


என் நெஞ்சின் கனமும் உன் நெஞ்சின் ஆசையும் தீர, மகனே! ஸ்தன்யபானம் செய்து கொள்! எனக் கதறினாள் குந்தி. சுற்றி இருந்தோர்க்குப் புரிந்து விட்டது. அய்ந்து பேரைப் பெற்ற மாதிரியே கர்ணனையும் பெற்றிருக்கிறாள். முதலில் பிறந்தவனே கர்ணன்! அப்படியானால்..


தர்மன் இரண்டாமவன்.


திரவுபதைக்குக் கிட்டாமல் போய்விட்ட ஆறாவது கணவன். திரவுபதையின் மனதில் ஆறாமல் இருந்த ஆசை நாயகன்.


அவள் மனதில் கடந்த கால நிகழ்ச்சிகள் நிழலாக வந்து போயின.


திரவுபதைக்குச் சுயம்வரம். வில்லை வளைத்து நாண் ஏற்றி இலக்கைத் தாக்க வேண்டும். அந்தக் காலத்தில் இப்படி ஒரு போட்டி. இதற்கும் இவ்வாழ்க்கைக்கும் என்ன சம்பந்தம்? திரவுபதையின் அப்பாதான் பதில் கூற வேண்டும்.


போட்டிக்கு கர்ணனும் வந்திருந்தான். தேரோட்டியின் மகனாக இருந்தாலும் துரியோதனன்தான் அவனுக்குச் சரியாசனம் தந்து அரசனாக்கியிருந்தானே? என்ன செய்தும் என்ன? நாணேற்றும்போது வில் நழுவி விட்டது. திரவுபதையும் நழுவிப் போய் விட்டாள்.


ஆனாலும் அன்று கர்ணனைப் பார்த்த மாத்திரத்தில் மனதில் எழுந்த ஆசையை திரவுபதை மறக்க முடியவில்லை.


மணக்க முடியவில்லையே தவிர ஒரு தடவையாவது மருவிவிட வேண்டும் என்ற ஆசை அவன் மனதில்
இருந்து மறையவேயில்லை.


காட்டில் அத்திரி முனிவரின் தோட்டத்தில் இருந்த ஒரே ஒரு நெல்லிக்கனி. ஆண்டில் ஒன்று மட்டுமே காய்க்கும் என்கிற அதிசயக் கனி. முனிவர் மட்டுமே சாப்பிட என்றே காய்க்கும் கனி. அது கிடைக்கா விட்டால் முனிவரின் கோபத்திற்கு அளவில்லாமல் போய்விடும் என்கிற கனி.


கணவன்களுடன் நடந்து சென்ற திரவுபதை கனி வேண்டும், அந்தக் கனிதான் வேண்டும் எனக் கேட்டாள். கணவன்களில் ஒருவனான அர்ச்சுனன் அம்பால் அடித்துக் கனியைப் பிடித்தான்.


அதன் பிறகுதான் சொன்னார்கள் அய்யய்யோ, முனிவன் அறிந்தால் விடவே மாட்டான், சாபம் தந்து முடக்கி விடுவான் என்பதை, கைபிசைந்து நின்றபோது, கண்ணன் சொன்னான்.


அவரவர் மனத்து ஆசையை மறைக்காமல் வெளிப்படுத்தினால் மரத்தில் போய் கனி ஒட்டிக் கொள்ளும் என்றான்.


எல்லாரும் சொன்னார்கள். கனி மெல்ல மெல்ல மேலே போனது. திரவுபதைதான் பாக்கி. அவளையும் சொல்லச் சொன்னான் கண்ணன்.


அவளும் சொன்னாள். அய்ந்து பேர் கணவனாக இருந்தும் என் தாகம் தணியவில்லை. ஆறாவதாக ஒரு கணவன் வேண்டும் என்கிற ஆசை என் மனதில் அமிழ்ந்து கிடக்கிறது என்றாள். கனி மரத்தில் ஒட்டிக் கொண்டது.


சுயம்வரத்தில் பார்த்த அந்த ஆணழகன் இதோ.. திரவுபதையின் மனதில் அவ்வப்போது ஏற்படும்
கிளர்ச்சிக்குக் காரணமான கர்ணன் இதோ.. அதுவும் தன் கணவன்களுக்கெல்லாம் மூத்தவனாக இதோ.. தன்
மாமியாரின் முதல் மகனாக இதோ..


புதிதாகப் பழி ஏதும் வந்துவிடப் போவதில்லை என்பதால் குந்தி கர்ணனைத் தன் மகன் என்பதை வெளிப்படுத்தி விட்டாள். கர்ணன் மீது தான் கண்டது முதல் காதல்.. ஆசை.. காமம்.. அடையத்
துடிக்கும் ஆவல்... என்பதையெல்லாம் எப்படி வெளிப்படுத்துவாள், திரவுபதை?


பாவம், தன் உள்ளத்தில் குடி வைத்துக் கொஞ்சிக் கொண்டிருக்கும் கர்ணனை திரவுபதை கொன்றுவிட வேண்டியதுதான். வேறு வழியில்லை.


கர்ணன் தன் விருப்பம் - ஆசை - பிறந்தவுடனேயே தொட்டிலில் வைத்து ஆற்று நீர்ப் போக்கில் போகவிட்டு விட்ட தாயின் முலைப் பாலைக் குடித்து உயிரை விட வேண்டும் என்பதை நிறைவேற்றிக் கொண்ட மனநிறைவில் கண்களை மூடிக் கொண்டான்.


தருமனும் அவன் தம்பிகளும் என்ன நினைப்பார்கள்? கர்ணன் அண்ணன் என்பதால் சாவுக்காக அழுவார்களா? எதிரி என்பதால் மகிழ்வார்களா?


போர்க்களத்தில் முடிவு மாறிப் போயிருந்தால்... கர்ணன் வென்று அர்ச்சுனைக் கொன்று இருந்தால்.. திரவுபதையின் மனம் எப்படி இருந்திருக்கும்? அர்ச்சுனனுக்காக அழுவாளா? கர்ணன் கிடைத்து விட்டான் என்பதற்காக மகிழ்வாளா?


பாரதப் புத்திரியின் மனம் கூடப் புதிர் தானோ? - சார்வாகன்

அவர்கள் ஜூலை 16-31_2009 "உண்மை" இதழில் எழுதிய கட்டுரை
SOURCE:http://thamizhoviya.blogspot.com/2009/07/blog-
post_9739.html
----------------------ஹிந்து மதத்தை ஆழ்ந்து ஆராய்ந்த டாக்டர் சார்ஸ் என்பவர் இது போல் அண்ணன் - தங்கை, அக்காள் - தம்பி தகாதப் புணர்ச்சி ஹிந்து மதத்தில் மிகச்சாதாரணமான நிகழ்ச்சிகளாக இருக்கின்றன என்று கூறுகின்றார்.

பூரி சங்காச்சாரியார் அவர்களின் பேட்டி

பூரி சங்கராச்சாரியார் நிரஞ்சன் தேவ் தீரத் அவர்கள் பிரமணர்களின் ஆன்மீகத் தலைவர். இவர் கல்யாண் என்ற ஹிந்தி மாதாந்திர இதழுக்குக் கொடுத்த பேட்டியில் இப்படிக் கூறுகின்றார்:

கேள்வி: மஹாராஜ்! சூத்திரன் ஒருவன் நற்செயல்கள் செய்து பக்தியோடு நடந்து கொண்டால் அவன் பிராமணனாக ஆக இயலுமா?

பதில்: சூத்திரன் ஒருவன் கொடுக்கப்பட்ட வரையறைகளுக்குள் நடந்து கொண்டு, வர்ணாஸ்சிரம தர்மத்தை

அப்படியே பின்பற்றினால் அவன் அடுத்த பிறப்பில் ஒரு வேளை பிரமணனாக மாறலாம். நிச்சயமாக அவன் எக்காரணத்தைக் கொண்டும் இந்தப் பிறவியில் பிராமணனாக இயலாது.

கேள்வி: ஜாதி துறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது அவசியமா?

பதில்: ஆமாம்! ஜாதிமுறையில் நம்பிக்கை கொள்ள வேண்டியது மிகமிக அவசியமே! ஜாதி அமைப்பில்

நம்பிக்கை இல்லையென்றால் முன்னேற்றம் என்பதே இல்லை.

கேள்வி: மஹாராஜ்! ஜாதி மாற்றம் என்பது நற்பணபுகள், நற்செயல்கள் இவற்றோடு சம்பந்தப்பட்டவை தானே!

பதில்: இல்லை! ஜாதி அமைப்பு பிறப்பை அடிப்படையாகக் கொண்டவை. நற்பண்புகள், நற்செயல்கள் அவற்றை மாற்றியமைக்கமாட்டா! இஃதோர் மறுக்க இயலாத உண்மை.

1969ல் விஷ்வ ஹிந்து பரிஷத்தின் கிளை ஒன்றை பாட்னாவில் திறந்து வைத்துப் பேசிய போது பூரி சங்கராச்சாரியார் சொன்னார்:

'தீண்டாமை ஹிந்து மதத்தின் பிரிக்க முடியாத ஓர் அம்சம். நான் இந்த நம்பிக்கையை எந்த நிலையிலும் கைவிடப் போவதில்லை. என்னை அவர்கள் தூக்கில் போட்டாலும் சரியே!"

கீழ்ஜாதி ஹிந்துக்களைப் பற்றி மனு இப்படிக் கூறுகின்றது:

'அடிமைத்தனம் சூத்திரர்களோடு பிறந்தது. அவர்களை யாரும் அதிலிருந்து விடுதலை செய்திட இயலாது"

(மனுஸ்மிர்தி அத்தியாயம் 8 சுலோகம் - 413)

'ஸ்ரீ பிரம்மா தீண்டத் தகாதவர்கள் அடிமைகளாகவே பிறந்து அடிமைகளாகவே வாழ்ந்து அடிமைகளாகவே மடிய வேண்டும் என்றே நியமித்துள்ளார்" (மனு அத்தியாயம் - 19. சுலோகம் -414)

இதே பூரி சங்கராச்சாரியார் கூறுகின்றார்:

'விதவையாகிவிட்ட பெண்ணுக்கு - அதாவது கணவன் இறந்து விட்டப் பெண்ணுக்கு வேறு வழியே இல்லை. உடன்கட்டை ஏறுவதைத் தவிர"

'உடன்கட்டை ஏறுவதைத் தடுக்கும் சட்டத்தை நான் தூக்கிலிடப்படும் வரை எதிர்த்துக் கொண்டே
இருப்பேன்."

தொடர்புள்ள பதிவு. சுட்டியை சொடுக்கி படிக்கவும்
.
-----------------

இந்த சங்கராச்சாரியாரை இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் கீழ் தண்டிக்கபட வேண்டிய சங்கராச்சாரியாரை

இந்திய அமைச்சர்கள், பிரதம அமைச்சர்கள், குடியரசுத் தலைவர்கள் காலைத் தொட்டுக் கண்ணில் வைத்து

ஆசி பெற்று ஆட்சி நீடிக்க வரம் பெற்று வருகின்றார்கள்.- அன்புடன்

தாயகப் பணியில்….. DR. சாட்டர்ஜி M.A., Ph.d., (U.S.A.)
தொடருகிறது. மீண்டும் வாருங்கள்,
----------

பதிவுகள். சுட்டியை சொடுக்கி படிக்கவும்

இந்துக்களே! விழிமின்! எழுமின்!? நமக்கு எத்தனை கடவுள்கள்?1.முன்னுரை.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!2.பிராமிணர்களுக்கிடையே பிளவு.

இந்துக்களே! விழிமின்! எழுமின்!3. ஆரிய வந்தேறி வேதமும் கீழ்ஜாதி மக்களும்!

இந்துக்களே! விழிமின்! எழுமின்!4. இராமனா கடவுள்? கடவுள் கழுதையாகவும், பாச்சானாகவும் பல்லியாகவும் அவதாரம் எடுத்துத் தான் வரவேண்டுமா? *மனைவியை மீட்க மன்றாடிய கடவுள்

இந்துக்களே! விழிமின்! எழுமின்! 6. இந்துகளுக்கு இறைவன் பிராமணனே? உன்னுடைய இறைவன் யார்? கடவுள் மந்திரங்களுக்குக் கட்டுப்பட்டவர்; மந்திரங்கள் பிராமணர்களுக்குக் கட்டுப்பட்டவை; பிராமணர்களே நமது கடவுள் ?


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

2 comments:

  1. அருமை தொடருங்கள் உங்கள் பணியை ... Gopi

    ReplyDelete