இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

தமிழர்கள் கடவுளுக்கு தீட்டானவர்களா? காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.

மகாத்மா காந்திக்கே தீட்டு க‌ழித்த‌வ‌ர்.
ஆசாரம் அல்லது தீட்டென்பது இதுதானோ!

இது என்ன அநியாயம்? இது என்ன விபரீதம்?

ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?

ஒ பிராம்மணரல்லாத இந்துகளே, இனியாவது தூக்கத்திலிருந்து, விழித்துக் கொள்ளுங்கள்.

உலகம் கட‌வுளுக்கு கட்டுப்பட்டது. கடவுள்கள் மந்திரங்களுக்கு கட்டுப்பட்டவர்கள். கடவுள்களும் மந்திரங்களும் பிராமணாளுக்கு கட்டுபட்டவை. பிராமணர்களே கடவுள்.‍ ரிக் வேதம் பிரிவு 62 . ஸ்லோகம் 10.
காஞ்சி சங்கரமடத்தின் முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதி தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர்.

அவரது தீட்டுக் கருத்தியல், பெண்களைக் குறித்த விமர்சனம் ஆகியன மிகவும் பிற்போக்கானவை.

அதிகார மையமாகச் செயல்பட்டு வரும் காஞ்சி சங்கரமடத்தின் இன்றைய மடாதிபதி ஜெயேந்திரர் கைது செய்யப்பட்டபோது, இவருக்கு முன்பிருந்த மடாதிபதி சந்திரசேகரேந்திர சரஸ்வதியைப் பல்வேறு பத்திரிகைகள் அடிக்கடி நினைவு கூர்ந்தன. அவர் மிகவும் நல்லவர், நேர்மையானவர், அப்பழுக்கற்றவர் என்பதுபோன்ற கருத்துகள் முன் வைக்கப்பட்டன.

15.10.1927-இல் பாலக்காடு நல்லசேரி என்ற பகுதியில் இவர் தங்கியிருந்த போது மகாத்மா காந்தி இவரைச் சந்திக்கச் சென்றார். தேசத் தந்தை என்றழைக்கப்பட்டாலும், காந்தி வைசிய வருணத்தைச் சார்ந்தவர் என்பதால், `சாமியி” ன் தரிசனம் மாட்டுத் தொழுவில்தான் அவருக்குக் கிட்டியது.

வைசியருடன் உரையாடுவதால் ஏற்படும் தீட்டை மாட்டுத்தொழு போக்கி விடும்’ என்ற நம்பிக்கைதான் இதற்குக் காரணம்.

தேசப் பிதாவுக்கே தீட்டைக் கழித்தவர், மாதப் பூப்புக்களாகும் பெண்களைக் குறித்து பயப்படாமல் இருப்பாரா?

திருப்பதி மலைப் பகுதியில் பேருந்து ஒன்று கீழே விழுந்து பலர் இறந்து போன நிகழ்வை ஒட்டி அவர் தெரிவித்த கருத்து வருமாறு: `முன்னெல்லாம் வீட்டு விலக்கு என்று எவர்களை வீடுகளிலேயே தனித்து வைத்தார்களோ அவர்கள் இப்போது கோயிலிலும் கூட விலக்கு இல்லாமல் பிரவேசித்து விடுகிறார்கள்.

இந்த விதிகளை மீறுவதால்தான் மகாஷேத்திரங்களில், விபத்து, விபரதம் எல்லாம் ஏற்படுகின்றன என்பது என் அபிப்பிராயம்

’இதோடு விட்டாரா? இந்தியா முன்னேறாது என்று சாபம் இடுகிறார்.``

இப்போது அந்த மூன்று நாட்களும் ஸ்திரீகள் ஆஃபீஸுக்குப் போவதில் ஊர் பூராவும் தீட்டுப் பரவுகிறது. `அட்மாஸ் ஃபெரிக் பொல்யூஷன்’ என்று இன்றைக்கு அநேக விஷயங்களை எடுத்துக்காட்டி எதிர் நடவடிக்கை எடுக்கும்படி எச்சரிக்கிறார்கள்.

அந்தப் `பொல்யூஷன்’ எல்லாவற்றையும்விடப் பொல்லாதது ஸ்த்ரீகளின் தீட்டே. அதை இப்படி எல்லா இடத்திலும் கலக்க விட்டால், ஜனங்களுக்கு எத்தனை தான் வரும்படி வந்தாலும், கவர்ன்மென்ட் எத்தனைதான் அய்ந்து வருட திட்டம் போட்டாலும், தேசத்தில் துர்பிக்ஷமும், அசாந்தியும், வியாதியுமாகத் தான் இருக்கும்.

’தீட்டு குறித்த அவரது பயம் ஒருபுறமிருக்க, திருக்குறள் மீதும், தமிழ்மொழி மீதும் அவருக்கு ஒரே பயம்தான்.

ஆண்டாள் திருப்பாவையில், `செய்யாதன செய்யோம் தீக்குறளைச் சென்றோதோம்’ என்ற தொடர் வருகிறது. இத்தொடரில் இடம் பெறும் `தீக்குறளை’ என்ற சொல் தீமை பயக்கும் புறம்பேசுதலைக் குறிக்குமென்பதே உண்மை. வைணவர்களும் இதே பொருளைத் தான் கூறுகிறார்கள்.

ஆனால் நமது ஆச்சாரியாரோ வேடிக்கையான விளக்கத்தைத் தந்தார். திருக்குறளில் அறம், பொருள், இன்பம் என்ற மூன்று பிரிவுகளே இருக்கின்றன. வீடு என்பது இல்லை. நாற்பொருளைக் குறிப்பிடாத திருக்குறளை ஓதக் கூடாதென்ற பொருளில் தான் `தீக்குறள்’ என்று ஆண்டாள் குறிப்பிட்டுள்ளதாகப் புதிய விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

வரலாற்றுப் பேராசிரியர் ந. சுப்பிரமணியன் எழுதியுள்ள சுயசரிதையில் இவரைப் பற்றி இடம் பெற்றுள்ள ஒரு செய்தி தமிழின் மீது இவர் கொண்ட வெறுப்பு எத்தகையதென்று வெளிப்படுத்துகின்றது.

குளித்துவிட்டு பூசை செய்து முடிக்கும்வரை இவர் தமிழில் பேச மாட்டாராம். சமஸ்கிருதத்தில்தான் பேசுவார். ஏனென்றால் தமிழ் `நீசபாசை’யாம்.

பூசை முடிந்தபிறகுதான் நீசபாசையில் (தமிழில்) பேசுவாராம். மனிதநேயம் என்ற சொல் அறிமுகமான போது அவர் தந்த விளக்கம் வருமாறு: ஸமீபத்தில் `மனிதநேயம்’ என்ற ஒரு வார்த்தை உலாத்துகிறதாகப் பார்க்கிறேன். நல்ல வார்த்தைதான். காதுக்குக் கேட்கவும் நன்றாகத்தான் இருக்கிறது.

ஆனாலும் `மனிதாபிமானம்’ என்று இத்தனை நாளாகச் சொல்லி வந்ததில் `அபிமானம்’ என்ற ஸம்ஸ்கிருத வார்த்தை இருப்பது பிடிக்காமல் தான் இப்படி மாற்றியிருக்கிறார்கள் என்பதைக் கவனிக்கும்போது பரிஹாஸமாகத்தான் இருக்கிறது!

ஏனென்றால், `நேயம்’ என்பதும் ஸம்ஸ்கிருத `ஹநேஹ’த்தின் திரிபுதான்! ஸம்ஸ்கிருதம் என்பது இலக்கண சுத்தமான பாஷை. அதையே பேச்சுக் கொச்சையாக இருக்கும்போது ப்ராக்ருதம் என்பார்கள்.

அந்த ப்ராக்ருத பாஷையில்தான் ஸம்ஸ்கிருதத்தில் உள்ள நாடகங்களில் ஸ்த்ரீகள், படிப்பில்லாதவர்கள் ஆகியவர்கள் ஸம்பாஷிப்பார்கள். அதிலே `ஸ்நேகம்’ என்று தான் வரும்.அது போகட்டும்.

`மனிதநேயம்’ என்கிறதிலும் முதலில் மனித என்று வைத்துக் கொண்டிருக்கிறார்களே. அதுவும் ஸம்ஸ்கிருத `மநுஷ்ய’வின் திரிபுதானே? ஒருத்தருக்கும் ஒரு ப்ரயோஜனமுமில்லாமல் இப்படியெல்லாம் வெறும் த்வேஷத்தில் செய்கிற காரியங்கள் கடைசியில் பித்துக்குளித்தனமாகத்தான் முடிகின்றன.

அனைத்துச் சாதியினரும் அர்ச்சகராகலாம் என்ற சட்டம் கொண்டுவரப்பட்ட பொழுது, அதை எதிர்த்து உச்சநீதிமன்றம் செல்ல ஏற்பாடு செய்தார்.

தமிழ் வழிபாட்டு மொழியாவதை எதிர்த்து வந்தவர்.

.-ஆ. சிவசுப்பிரமணியன் நன்றி: `ஜனசக்தி’ 17.5.2007
---------
தமிழர்களே!! இந்த குறும்படங்களை கண்டு சிந்தியுங்கள்.

சிறப்பு குறும்படம் "வர்ணம்" (பகுதி-1)

சிறப்பு குறும்படம் "வர்ணம்" (பகுதி-2)


கட்டபொம்மனும் வெள்ளைக்காரியும்..
உள்ளத்தை உருக்கும் விடியோ._________________

கடவுள் ஒருவர் இருக்கிறார் என்றும் உலகத்தையும் அதிலுள்ள எல்லாவஸ்துக்களையும் அவரே திருஷ்டித்தா ரென்றும் சாதாரணமாக உலகத்தில் ஜனங்கள் சொல்லிக் கொண்டிருக்கிறார்கள்.

ஆனால், இந்துக்களில் புத்திசாலிகளாகிய பிராம்மணர்கள் இதை ஆதாரமாக வைத்துக் கொண்டு பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து பொருள்களை கிரஹிக்க ஆரம்பித்தார்கள்.

இதுதான் ஆச்சரியம். முப்பத்து முக்கோடி தேவர்கள் என்றும் நாற்பத்தெண்ணாயிரம் ரிஷிகள் என்றும் அவைகளுக்குப் பெண், பிள்ளைகளென்றும் கற்பித்தும் கோவில் குளங்களைக் கட்டுவித்தும் தேவதைகளைப் பற்றி அநேக பொய்க் கதைகளை புராணங்களில் எழுதி வைத்து, அவைகளை நம்பும்படி செய்தும்,

புராணங்களில் சொல்லப்பட்டிருக்கிறபடி தேவதைகள் சம்பந்தமாக உற்சவங்கள் செய்யச் சொல்லியும் அனேகவிதமான பண்டிகைகள் கொண்டாடச் செய்தும் பிரார்த்தனைகள் புரியச் செய்தும் பிராமணர்கள் பிராம்மணரல்லாத இதர இந்துக்களிடத்திலிருந்து கொள்ளையிட்டுத் தின்கிறார்களே. இது மட்டுமா?

பிராம்மணரல்லாத இதர இந்துக்களாகிய நமக்கு கடவுளிடத்தில் இருக்கும் ஒருவிதமான நம்பிக்கையை நமது நித்திய வாழ்க்கையில் கொண்டு வந்து சம்பந்தப்படுத்திக் கலியாணம், சோபனம், சீமந்தம், கருமாந்திரம், திவசம், மாசியம் முதலிய சுபாசுபச் சடங்குகளை ஏற்படுத்தி அவைகள் மூலமாகவும் நம்மைப் பிடுங்கித் தின்கிறார்களே.

இது என்ன அநியாயம்?

இது என்ன விபரீதம்?

ஓ பிராமணரல்லாத இந்து சகோதரர்களே!

பிராம்மணர்கள் நம்முடைய தலையைத் தடவி மூளையை உரிகிறார்களே. அது உங்கள் மனதில் படவில்லையா?

அவர்கள் நம்மை ஏமாற்றித் தின்கிறார்களே. அது உங்களுக்குத் தெரியவில்லையா?

நம்முடைய முன்னோர்கள் மோக்ஷத்துக்குப் போய்ச் சேர்ந்ததும் சேராததும் தெரியவில்லையே. கடவுள் நம்மைத் தேங்காய், பழம் பொங்கல், புளியோரை, ததியோதனம் கேட்கிறாரா?

உற்சவங்கள் செய்யச் சொல்லுகிறாரா? பண்டிகைகள் கொண்டாடும்படி வற்புறுத்துகிறரா? பிரார்த்தனைகள் புரியும்படி தொந்தரவு செய்கிறாரா?

எல்லாம் பிராமணர்கள் செய்கிற ஆர்ப்பாட்டத்தானே இவைகளெல்லாம் நமது வயிறு எரிய பிராமணர்கள் தம் குக்ஷியைத்தானே நிரப்புகின்றனர்.

ஐயோ! பிராம்மணரல்லாத இந்து குடும்பங்களில் எத்தனையோ, உற்சவங்கள் செய்தும் பண்டிகைகள் கொண்டாடியும், பிரார்த்தனைகள் புரிந்தும், சுபா சுபச் சடங்குகள் செய்தும் தரித்திர தசையையடைந்திருக்கின்றன.

ஒ பிராம்மணரல்லாத இந்து சகோதரர்களே, இனியாவது தூக்கத்திலிருந்து விழித்துக் கொள்ளுங்கள்

நீங்களும் நன்றாய் யோசித்துப் பாருங்கள். பிராம்மணர்களுக்குக் கொடுத்தால் என்ன? நமது முன்னோர்களைவிட நாம் புத்திசாலிகளா? முதலிய வீண் குதர்க்கங்கள் வேண்டாம்.

தீர யோசனை செய்து பாருங்கள் நல்லது. இது கெட்டது இது என்று தெரிந்து கொள்ளுங்கள். கடவுள் ஒருவர் இருக்கும் பக்ஷத்தில் துட்டு துக்காணி வீண் செலவில்லாமல் அவரிடத்தில் உண்மையான பக்தியுடன் தொழுதால் அதுவே போதுமானது.

அதை விட்டு வீண் செலவு செய்ய வேண்டாம். பிராம்மணர்களுக்கு ஒன்றும் கொடுக்க வேண்டாம்,

கொடுக்க வேண்டாம். நாம் செல்வான்களாக ஆகிறதைப் பாருங்கள்.  - போரூர் சண்முக முதலியார். `திராவிடன்' 15.6.1917
-----
ஓ பிராமணரல்லாத இந்து சகோதரர்களே! இந்து மதத்தில் பிறக்கிறவன், அரசுக்குச் செலுத்தும் வரியைவிட மதக் காரணங்களுக்காகப் புரோகிதத்திற்கும், அர்ச்சகர்களுக்கும் கொட்டிக் கொடுக்கும் வரி என்பதுதான் அதிகமாகும்.

ஆண்டு முழுவதும் பண்டிகைகள், விசேஷங்கள், விரதங்கள், கோயில் நிகழ்ச்சிகள் என்று மனிதன் உழைப்பையும், பொருளையும், பொழுதையும் நாசப்படுத்துவது என்பது இந்து மதத்தில் உள்ளதுபோல வேறு எந்த மதத்திலும் இருப்பது கிடையாது.

பணத்துக்கு ஏற்ப சாமி தரிசனம் என்ற முறை திருப்பதி ஏழுமலையான் கோயிலில் இருக்கிறதே, அதன் பொருள் என்ன? ``காசேதான் கடவுளடா’’ என்பதல்லாமல் வேறு என்ன?

நீ கொடாமல் இருந்தால் ஒரு நாள் வைத்திருப்பானா இந்தக் கடவுளை - இந்தப் பேராசை பார்ப்பான்? உனக்கு முன்னாலன்றோ கடப்பாரை எடுத்துக் கொண்டு போவான் - கோயிலை இடித்து உள்ளதையும் அபகரித்துக் கொள்ள?

இதை அறியாமல் பைத்தியக்காரத்தனமாக கடவுள் பேரால் ஏனப்பா அள்ளிக் கொடுத்து வருகிறாய்?

இத்தனை சொத்துக்களையும் கடவுளுக்கு அழுதவன் நீயும், உன் பாட்டனும் பூட்டனும் தானே? ஒரு பார்ப்பானாவது ஒரு அடி நிலம் விட்டிருப்பானா சாமிக்கென்று? அப்படிச் செய்ய அவனென்ன உன்னைப் போல் பைத்தியக்காரனா?

பார்ப்பானுக்குப் பைத்தியம் பிடித்தால் கூட வீதியிலுள்ள சாமான் வீட்டுக்குள் போகுமே ஒழிய, ஒரு ஓட்டை உடைகல் சட்டிப்பானைக்கூட வீதிக்கு வராதே – தெரியுமா உனக்கு அது?

எந்தப் பார்ப்பானாவது தன் வீட்டு எண்ணெயைக் கொண்டு கடவுளுக்கு தீபம் வைக்கிறானா?

எந்தப் பார்ப்பானாவது திருவண்ணாமலை தீபத்திற்கு நெய் டின்கள், எண்ணெய் டின்கள் அனுப்பியிருக்கிறானா?

எந்தப் பார்ப்பானாவது சூத்திரனுக்குச் சமாராதனை செய்திருக்கிறானா?

ஏன் ஒரு குண்டு விறகாவது உங்கள் சமாராதனைக்காக அவன் அனுப்பியிருப்பானா? - நன்றி:விடுதலை
---------------

இவைகளை படிக்கவும்.

== >  பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் விக்ரகம் வெறுங்கல்லாகி பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

== > பகுதி 31. கோவில் கட்டியவனுக்கு சாமியை சுமக்க, பூசை செய்ய தடையா? ‘சூத்ராள் பூஜை பண்றது, அதுவும் தமிழ்ல பண்றது ஏத்துக்க முடியாது...

==> பகுதி 44(2). தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

==>பகுதி 69 – 70. கட‌வுளை காலையில் சுப்ரபாதம் பாடி எழுப்பனுமா?. Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

==>பகுதி 71. தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்..

==>பகுதி - 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

===>பகுதி – 73. தமிழா! ஜடமாகி போனாயா? `ஜாதி'களை உத்தரவாக்கி, பல கூடாதுகளை பின்பற்றுகிறவன், கடவுள் பெயரைச் சொல்லி உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்பவ‌ன் மனிதனே அல்ல ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான். புனித நீராடல், தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

---------------

திராவிடர்கள் வடிவமைத்து வணங்கி கொண்டிருந்தவைகளை பிராமிணர்கள் எப்படி கையக‌ப்படுத்தி திராவிடர்களை வெளியில் நிற்க வைத்து விட்டார்கள் என்பதை படியுங்கள்.

==>பகுதி 82 – 2 to 84. சப‌ரிமலைப்பகுதியின் அய்யனார் பிராமணர்களால் மணிகண்டானாகவும், அய்யப்பனாகவும் மாறினார்.

==>பகுதி 76 to 82-1. திருப்பதியில் உள்ளது காளி சிலையா? திருப்பதியில் நடப்பதென்ன? ஆண் ஆகிய‌ திருப்பதி பெருமாளுக்கு தலையை சீவி சிங்காரித்து அழகான பின்னல் ஏன்? பிராமணர்களால் காளியை சிவனாக்கி பின் திருப்பதி பெருமாளாக எவ்வெவ்வாறு மாற்றப்பட்டது? திருப்பதியில் உங்களை மொட்டை போடச்செய்து பிராமணர்களால் "மொட்டை" அடிக்கப்படுபவர்களே!. சிந்தியுங்கள்.

No comments:

Post a Comment