இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

பிராமணர்கள் தமிழகத்திலேயே வாழக்கூடாதாம்.? இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 72.

பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்


பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக்கரைக்காரன் தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறாய்?


வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது.


உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.


நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?


தமிழ் கெட்டவர்களின் கெட்டபாஷை ? தமிழ் தள்ளி வைக்கப்பட்டதற்கு காரணம் என்ன ?


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 72

வைணவத்திலும் சரி... சைவத்திலும் சரி... தமிழ் இப்படி தள்ளி வைக்கப்பட்டதற்கு என்ன காரணம்? இதற்கு வேதங்களில் இருந்துதான் பதில் கிடைக்கிறது.

சுக்லயஜுர் வேதத்தில் ஒரு மந்த்ரம் பாருங்கள்.

“தஸ்மாது ப்ராம்மணேனநம்லேச்சித வைநம அபபாஷித வை...”

இந்த சின்ன வரிகள் தேக்கி வைத்திருக்கும் கருத்துகள் பெரியவை. அதாவது தேவர்களுக்கும் அசுரர்களுக்கும் இடையே போர் நடந்தது. இதில் நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன்.

நல்லவனை தேவன் என்றும் கெட்டவனை அசுரன் என்றும் வேதம் சொல்லியிருக்கிறது என்று. இதன்படி இந்த போரில் சமஸ்கிருத பாஷை பேசிய தேவர்கள் ஜெயித்தார்கள்.


மிலேச்சபாஷை... அதாவது சமஸ்கிருதம் அல்லாத பாஷை பேசிய அசுரர்கள் தோற்றார்கள்.

எனவே, தெய்வீகமான பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர மற்ற பாஷைகளெல்லாம் கெட்டவர்களின் கெட்ட பாஷை. மிலேச்ச பாஷை அதாவது தெய்வத் தன்மையற்ற பாஷை... என்கிறது வேதம்.

இப்படிப்பட்ட வேதத்தை எளிமைப்படுத்துவதற்காக அவதரித்த மநுவும் தன் பங்குக்கு சொல்கிறார். “...தயோ ரேவ அந்ததம் கிரியோஹாதேவ நதியோஹா யதந்தரம்தம்தேவ நிர்மிதம் தேசம்ஆரிய வர்த்தம் விதுர் புதாஹா...”

அதாவது... விந்திய மலை, இமயமலை இந்த இரண்டு மலைகளுக்கு இடையேயுள்ள பகுதியும்... கங்கை, யமுனை நதிகள் பாயும்...  இந்த நதிகளுக்கு இடையே உள்ள பகுதியும் தான் ஆரியவர்த்தம் என அழைக்கப்படும். இங்குதான் தெய்வீகத் தன்மையும் சமஸ்கிருத பாஷையும் நிலைத்து நிற்கும்.

அதனால்... இந்த பகுதியை தவிர... மற்ற பகுதிகள் தெய்வீகத்தன்மை இல்லாதவை.

இதே நேரம்... மநு இன்னொரு கருத்தையும் சொல்கிறார் பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதிகளாக... வகுத்துச் சொல்லும் போது, ப்ரும்மா வர்த்தம், ப்ரும்மரிஷி வர்த்தம் என்றெல்லாம் இமய மலைச்சாரல் பகுதிகளைக் குறிப்பிட்டிருக்கிறார். இதுவெல்லாம் இப்போது ஆப்கானிஸ்தானாக இருக்கிறது.

மநு சொல்படி, வேதச் சொல்படி பார்த்தால்... பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசக்கூடாது. பேசினால் பாவம்.


மேலும், அவர்கள் இமயமலை, விந்தியமலை, கங்கை, யமுனை பகுதிகளில்தான் வசிக்கவேண்டுமே தவிர வேறெங்கும் வசிக்கக் கூடாது

இதையெல்லாம் பின் பற்றும் பட்சத்தில் தமிழையும் ஒதுக்கட்டும். ஆனால்... பல ஆண்டுகளுக்கு முன், தான் வாழ்ந்திருந்த நிலப்பகுதியை மட்டுமே அறிந்த எவனோ பண்ணிவைத்த மந்த்ரத்துக்கு இன்றும் குருட்டுத்தனமாக கட்டுப்பட்டு வாழ்வதும் குருட்டுத் தனமானதுதானே.

ஒரு சுவாரஸ்யமான உதாரணம் சொல்கிறேன் பாருங்கள். கர்மாக்களில், யாகங்களில் ஒரு வேத மந்த்ரம் சொல்வார்கள்.

“நமோ கங்கா யமுனை யோஹேமத்யேயே வசந்தீ...தேமே ப்ரஸனினாத் மானாஹா”...

இந்த வேத மந்த்ரத்தை நமது காவேரிக்கரையிலோ... வைகைக்கரையிலோ... தாமிரபரணி ஆற்றின் கரையிலோ உட்கார்ந்து பிராமணன் உச்சரிக்கிறான். அவனும் கைகூப்பி அவனுக்கு எதிரே உட்கார்ந்திருக்கிறவர்களையும் கைகூப்பச் சொல்கிறான்.

இந்த மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம் என்று கேட்டால்...“கங்கை நதிக்கும் யமுனை நதிக்கும் இடையில் வசிக்கும் ரிஷிகளே மக்களே உங்களை வணங்குகிறேன்” என்பதாகும்.

“அடத்திருடா... நீ உட்கார்ந்திருப்பது காவிரிக் கரையில். உனக்கு தட்சணை கொடுப்பதும் காவிரிக்கரைக்காரன்தான். நீ எதற்கு கங்கைக்கும் யமுனைக்கும் இடையே இருந்தவர்களுக்கு வணக்கம் செலுத்துகிறாய்?

கேள்வி கேட்டால், ‘வேதத்தில் இருக்கு நான் சொல்கிறேன்’ என்பார்கள்.

வேதத்தில் தான் தமிழ் கெட்ட பாஷை அதை பேசக்கூடாது என்றிருக்கிறது.

உன் தாய்மொழியை, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது.

நான் சொல்கிறவனை கும்பிடு என்கிறது. அதற்காக வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

வேதக்காரர்கள் அன்று... தாங்கள் வாழ்ந்த பிரதேச வாழ்வின் அடிப்படையில் தங்கள் நிலப்பகுதியை, நதிகளை, மலையை வணங்கு. அதாவது இயற்கை வழிபாடு. அதை விட்டுவிட்டு... காவேரிக்கரையில் நின்று கொண்டு கங்கையைக் கும்பிட்டால்? அந்த மந்த்ரத்தை மாற்றவேண்டும்.

சென்னையில் இருக்கும் பிராமணர்கள்...“நமோ அடையாறு கூவம் யோஹேமத்யேயே வசந்தீ...” அடையாறுக்கும் கூவம் ஆற்றுக்கும் இடைப்பட்ட ரிஷிகளை வணங்குகிறேன் என சமஸ்கிருதத்தில் வேண்டாம் தமிழில் சொல்லுங்கள்.


சரி... நெல்லை, மதுரை போன்ற தென்ஜில்லாக்காரர்களா? தாமிரபரணிக்கும் வைகையாற்றுக்கும் இடையே உள்ளவர்களை வணங்குகிறேன்... என சொல்லிவிட்டு ஆரம்பியுங்கள். பிரமாதமாக காரியம் ஈடேறும்.


தஞ்சாவூர், திருச்சி... என காவேரி பாயும் ஊர்க்காரர்கள். காவேரியையும் கொள்ளிடத்தையும் கைகூப்பிவிட்டு... ஆரம்பிக்கட்டும்.

“கங்கையிற் புனிதம் ஆய காவிரி நடுவுப்பாட்டு...” என திருமாலையில் சாதிக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார். “கங்கையைவிட தூயதான புனிதமான காவிரி சூழ்ந்த திருவரங்கம் என்கிறார்.

ஆனாலும்... நீங்கள் வேதம் சொன்னபடி கங்கையைத்தான் வணங்குவேன். காவிரியை வணங்கமாட்டேன் என்றால்...? -
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

பகுதி 71. தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்..

பகுதி – 73. தமிழா! ஜடமாகி போனாயா? `ஜாதி'களை உத்தரவாக்கி, பல கூடாதுகளை பின்பற்றுகிறவன், கடவுள் பெயரைச் சொல்லி உடல் ரீதியாக தன்னைத்தானே வருத்திக் கொள்பவ‌ன் மனிதனே அல்ல ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.. புனித நீராடல், தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

3 comments:

 1. மிக நேர்மையான பதிவு,
  தமிழர்கள் உணர வேண்டும்

  ReplyDelete
 2. தமிழன் அழிந்துபோவதற்க்கு முதன்மை காரணமே
  இந்த பாலாய் போன இந்து மதம்தான் மற்றும்
  இந்தியா என்ற மாயயை உணர்வு(இதை பற்றி நாம் பின்பு பார்ப்போம்).
  இதை வைத்தே தமிழர்களை நன்றாக ஏமாற்றுகிறார்கள்.

  *தமிழன் இயற்கையை மட்டுமே வணங்கி வந்தான், வேடிக்கை என்னவென்றால்
  *இந்து மதத்தை தமிழர் மதம் என்று பொய் பரப்புரை செய்து தமிழர்களை சுரண்டுகிறார்கள்,
  *தமிழர் மதம் இந்து என்றால்
  --ஏன் கடவுள் வழிபாடு தமிழில் நடப்பதில்லை,
  --தமிழக அரசு ஆணை பிறப்பித்தும் தமிழில் பூசெய் செய்யமுடியாது என்று சொல்ல என்ன இறுமாப்பு இவர்களுக்கு,
  --இந்து மத பண்டிகை என்று சொல்லபடும் பண்டிகைகள் எதாவது தமிழர்களின் வாழ்கை முறையோடு ஒன்றிபோகிறதா,
  --அந்த பண்டிகைகளின் பெயர் விநாதயகர் சதுத்திர்த்தி, சரஸ்வதி பூசை, தஸ்ரா, நவராத்திர, அஷ்டமி, தீபாவளி இன்ன பிற... எதாவது தமிழ் மொழியோடு ஒன்றிபோகிறதா.
  --இந்து மதங்களின் நூல்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை,
  --இந்து கடவுளின் பெயர்கள் ஏன் ஒன்றும் கூட தமிழில் இல்லை.

  *எவனோ பெற்ற பிள்ளைக்கு நீ எப்படி தகப்பனாய் இருக்க முடியும்
  *உன் இனம், உன் மொழி, உன் பண்பாடு ஆகியவற்றை உண்ர்ந்து அதுபடி நடப்பதே சாலச் சிறந்தது,
  இது மற்ற மொழி, பண்பாடு மீதான எந்த காழ்புணர்ச்சி எதுவும் கிடையாது சில விசமிகள் இதை தப்பாக திரித்து சொல்ல கூடும், மற்ற இனத்தின் ஆதிக்கம் தமிழ் பண்டாடு, நெறி மீது இருத்தல் கூடாது என்பதே என் அவா.

  *சிறுவயது முதல் குழந்தைகளுக்கு நல்ல தமிழ் நூல்களை கற்ப்பிக்க வேண்டும்,
  *குறைந்தபட்சம் தினம் ஒரு திருக்குறளை கற்ப்பிக்கலாம் அதை திணிக்காமல் நல்ல பொருள்பட சொல்லி தரும்போது அந்த குழந்தைக்கு தித்திப்பாகவும், வரும் நாளில் நல்ல பண்புடன், அறநெறியுடன் வாழவழி செய்யும்

  *நம் தமிழ் நூல்களில், இலக்கியங்களில்;
  --நம் வாழ்கைக்கு முறைகளுக்கு தேவையான
  அன்பு, பண்பு, அறம், நெறிமுறை, பண்பாடு, இன்பம்,
  கோட்பாடுகள், மாந்த நேயம் இன்ன பிற.. உள்ளன.

  *பிற மொழி, கலாச்சாரம், பண்பாடு ஆகியவற்றை பின்பற்ற தமிழரும், தமிழ் மொழியும் ஒன்றும் ஊனம் அல்ல.
  *பிறமொழியை சேர்ப்பதால் தமிழுக்கு நல்லது என்று சொல்லி சமற்கிருத்தை தமிழில் தணித்து தமிழை சீரழித்ததுபோதும் வேண்டுமானால் வடவர்கள் தமிழை சமற்கிருதத்தில், இந்தியில் சேர்த்து கொள்ளட்டும்

  *தமிழ்மொழி உலகில் உள்ள அனைத்து மொழிக்கும் மூத்த மொழியாக உள்ளது
  இது தற்பெருமையோ, தம்பட்டமோ இல்லை
  இந்த பெருமையும், பட்டம் உலக அறிஞர்களால் உணர்ந்து கொடுக்கபட்டது.

  வாழ்க தமிழ்,
  வளர்க தமிழ்,
  வெல்க தமிழ்

  ReplyDelete