இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? இந்து மதம் எங்கே போகிறது?

இந்து மதம் எங்கே போகிறது?
தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

 தமிழுக்கு என்ன நிலைமை?... தமிழ் இறைவனின் நேசபாஷையா? நீசபாஷையா?

இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.


இந்து மதம் எங்கே போகிறது? பகுதி-71.

தமிழ் இறைவனின் நேச பாஷையா அல்லது நீசபாஷையா என்பதை திருப்பாணாழ்வாரின் வாழ்வியல் குறிப்பை அடிப்படையாகக் கொண்டு பார்த்தோம்.

திருப்பாணாழ்வாரின் தமிழை கேட்பதற்காக ஆளனுப்பி அவரை மரியாதையோடு தூக்கிவரச் சொன்னார் அரங்கத்துக்கு பெருமாள். ஆனால்... அப்பேற்பட்ட ஸ்ரீரங்கத்திலே படுத்துக்கிடக்கும் ரங்கநாதனுக்கு எதிரே நாலாயிரம் அருளிச் செயலை பாடுகிறார்களா?

ஒவ்வொரு திருமால் ஆலயத்திலும் வைகுண்ட ஏகாதசிக்கு முன் பத்துநாள் பின் பத்துநாள் ஆக இருபது நாள்கள் நாலாயிரம் ஆழ்வார்கள் அருளிச் செயலை பாடி ஒரு தமிழ்விழா நடத்துவார்கள். இது வருடா வருடம் நடக்கும்.

ஸ்ரீரங்கத்தில் எப்படி நடக்கும் என்றால்... மூலவரான ரங்கநாதன் படுத்தபடியே தமிழ் கேட்க காத்திருக்க... உற்சவரை அதாவது உற்சவ மூர்த்தியை வெளியே ஒரு மண்டபத்துக்கு தூக்கி வருவார்கள்.

அங்கே வைத்து நாலாயிரம் அருளிச் செயலையும் இசையோடு...  பாடி முடிப்பார்கள். இதற்கு அரயர் சேவை என்று பெயர். இது முடிந்த பிறகு... அதாவது தமிழ்ப் பாடல்கள் முடிந்த பிறகு உற்சவரை மறுபடியும் தூக்கி உள்ளே கொண்டு போய் வைத்து விடுவார்கள்.

ஆக... தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்.

அதுவும்... தமிழுக்காக ஆழ்வாரை தூக்கிவரச் சொல்லி தமிழ் கேட்ட ரங்கநாதனுக்கு... நமது பூஜை புனஸ்காரங்கள் படி தமிழ் கேட்க வாய்ப்பில்லை. இதை நான்முன்பே பலதடவை வலியுறுத்தியபோதும்... வைணவ சமயவாதிகள் சிலர் எதிர்த்தனர்.ஆனால் என் நிலையிலும், தமிழின் நிலையிலும் மாற்றமே இல்லையே?

சரி வைணவத்தில் தமிழ் பார்த்தாயிற்று சைவத்தில்?... “தென்னாடுடைய சிவனே போற்றி...என்னாட்டவர்க்கும் இறைவா போற்றி...”என்ற தமிழ்க் கவிதையே சிவன் தென்னாட்டவன் அதாவது தமிழ்க் கடவுள்... ஆனாலும் எல்லா நாடுகளுக்கும் அருள் செய்வான் என தமிழ் நாட்டுக்காரனாக தத்துவப்படுத்தியிருக்கிறது.

திருவாசகத்துக்கு உருகார் ஒருவாசகத்துக்கும் உருகார் என்னும் அளவுக்கு சிவனுக்கும் தமிழுக்கும் Tight Relationship கொடுத்துள்ளார்கள். சிவனடியார்களும் நாயன்மார்களும் உதாரணத்துக்கு...இன்றைய வேதாரணியம்... அன்றைய திருமறைக்காடு... அங்குள்ள சிவன் கோயில்மணிவாசல் கதவு வேதங்களால் பூஜிக்கப்பட்டு அடைக்கப்பட்டு விட்டது.

என்னென்னமோ பண்ணி பார்த்து விட்டோம். திறக்கவே முடியவில்லை என சிவனடியார்கள் துன்புற்ற வேளை... திருஞானசம்பந்தரும், திருநாவுக்கரசரும் மணிக்கதவை திறக்கவேண்டும்என முடிவு செய்தனர்.

திருநாவுக்கரசர் கோயில் வாசலிலேயே நின்று...``பண்ணினர் மொழியோள் உமைபங்கரோமண்ணினார் வலஞ் செய்ம்மறை காடரோகண்ணினால் உமைக் காணக் கதவினைதிண்ணமாக திறந்தருள் செய்ம்மினே...”என தமிழ்ப்பாடினார்.

தாமதமானது, மீண்டும்``அரக்கனை விரலால் அடர்த்திட்டநீர்இரக்க மொன்றிலீர் எம்பெருமானரேசுரக்கும் புன்னைகள் சூழ்மறைக்காடரேசரக்க இக்கதவம் திறம்பிம்பினோ...”இந்த இரண்டாவது தமிழ்ப் பாட்டு கேட்டதும் வேதங்களால் வெகுகாலம் மூடிக்கிடந்த சிவன் கதவு மணிக்கதவு மெல்லத் திறந்தது. இறைவனுக்கு தமிழ்ப் பாமாலைகள் சாத்திவழிபட்டனர். மகிழ்ச்சி பொங்கியது.

சரி, இரவாகிவிட்டது’ கதவை அடைத்துவிட்டு நாளை திறக்க வேண்டும். மறுபடியும் திருஞான சம்பந்தர் ‘சதுரமறைதான்...’ என பதிகம் பாட கதவு மூடிக் கொண்டது.அன்றிலிருந்து தான் கதவு திறந்து சாத்தும் வகையில் மாறியது என்கிறார்கள்.

இந்தக் கதையை நாம் நம்பவேண்டாம் என்றாலும்கூட பல்லாண்டு காலம் வேதக்காரர்களால் பூட்டப்பட்ட கதவை தமிழ்பாடி திறக்கவேண்டும்’ என்ற கருத்துருவே நமக்கு போதுமே. வேதம் அடைத்ததை தமிழ் திறக்கும் என்ற கருத்தை நிலை நிறுத்தவே இந்த கதையில் கதவுகொண்டு வரப்பட்டது.

இப்படியாக தமிழுக்கு முக்கியத்துவம் கொடுத்து எளிய...பலதரப்பினரும் புரிந்துகொள்ளத்தக்க தமிழ்ப் பாக்களை வளர்த்தது சைவம். முற்காலத்தில் காவிரி பொய்த்து பஞ்சம் பாசனம் நடத்தியபோது... இறைவனே காசு கொடுத்து எல்லார்க்கும் உணவு கொடுக்கச் சொன்னாராம்.

ஏனென்றால் அப்போதுதான் அடியார்களின் தமிழ் கேட்கலாம் என்ற அவாவில். இதை...“இருந்து நீர் தமிழோடு இசை கேட்கும் இச்சையால் காசுநித்தம் நல்கிறீர்” என்கிறார் சுந்தரர், மேலும்,“பாடலங்கார பரிசில் காசருணிபழுத்த செந்தமிழ் மலர் சூடி...” என்கிறார் சேந்தனார் திருவிசைப்பாவில்அதாவது... உணவுக்கு பஞ்சம் வந்தால்கூட தமிழுக்கும்... தமிழ்ப்பற்றுக்கும் பஞ்சம் வரக்கூடாது என்பதை ‘சிவனை’ முன்னிறுத்தி மொழிந்தார்கள் சைவக்காரர்கள்.

இப்படியெல்லாம் தமிழோடு பின்னிப் பிணைந்திருக்கும் சிவபெருமானுக்கு...சிவன் கோயில்களில் நடக்கும் பூஜை புனஸ்காரங்களில் தமிழுக்கு என்ன நிலைமை?...

சிவாச்சாரியார் திருநீற்றுப் பட்டை அணிந்து கொண்டு... லிங்கத்தை நெருங்கிச் செல்வார். பூஜைகள் செய்வார். அவர் வாயில் தமிழ் இருக்காது சமஸ்கிருதம்தான் சொல்லும் இந்தநேரத்தில்... லிங்கத்திடமிருந்தும்... சிவாச்சாரியாரிடமிருந்தும் சற்றே தூரத்தில் நின்றுகொண்டு... வெளிப்புறமாக நின்றபடி ஓதுவார்கள் தமிழை.

தேவாரம், திருவாசம், திருவிசைப்பா, பெரியபுராணம், திருப்பல்லாண்டு ஆகிய பக்திப்பாடல்களில் இருந்து சில பாடல்களை ஓதுவார்கள். அவர்கள் பெயர்தான் ஓதுவார்கள்.

ஆக...இவர்கள் ஓதும் தமிழ் சிவாச்சாரியாருக்கோ... சிவலிங்கத்துக்கோ... அருகில் சென்று கணீரென கேட்காது.
நாம் பேருந்தில் செல்லும்போது நமக்குப் பிடித்த பாடல் எங்கோ திடீரென லேசாக ஒலித்து காதைவிட்டு மறையுமே... அதேபோலத்தான் சிவன் கோயில்களில் சிவனுக்கு தமிழ் கேட்கும். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
---------
பகுதி 69 – 70. கட‌வுளை காலையில் எழுப்பனுமா? சுப்ரபாதம் பாடி?. Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

பகுதி - 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம். பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, உன் தாய்மொழியை கெட்டது, உன் தாயை வேதம் கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

No comments:

Post a Comment