இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

கட‌வுளை காலையில் எழுப்பனுமா? சுப்ரபாதம் பாடி?.

Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம். சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம்.
சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள்.

தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி -69 – 70.
பகுதி – 69. ஆழ்வார்கள் தமிழில் பாடியதால் கோயில்கள் புனிதமாகின என்று பார்த்தோம். ஆனால்... அதே ஆழ்வார்கள் பாடிய அதே கோயில்களில் கூட...

காலை வேளைகளில் ஒலிக்கிறதே வடமொழி சுப்ரபாதம்! சுப்ரபாதம் என்றால் என்ன அர்த்தம்?... அது ஒரு வடமொழிப் பெயர். அதாவது இப்பொழுது நற்பொழுதாகட்டும் என்று அர்த்தம். இன்னும் உங்களுக்கு மாடர்ன் ஆக சொல்ல வேண்டுமென்றால் Good Morning. கடவுளுக்கு காலை வணக்கம் செலுத்தி அவரை எழுப்புவது தான் சுப்ரபாதம்

அதாவது "Good morning to God and wake up him...'' இன்று பற்பல கோயில்களிலும்... காலை வேளைகளில் ரம்யமான விடியல் போதில்... ஸ்பீக்கரில் போடுகிறார்கள் சுப்ரபாதத்தை. அந்த இசை கேட்கும்போதே நம்மை மயக்குகிறது. ஆனால் அதன் அர்த்தம் உங்களுக்குப் புரியுமா?... என்ன பாடுகிறார்கள் என்று தெரியாமலேயே... அதை நாம் திரும்பப் பாடி முணுமுணுக்கிறோம்.

தினமும் காலையில் அதை டேப் ரெக்கார்டரில் போட்டு விடுகிறோம். எம்.எஸ்.சுப்புலட்சுமி தன் வசீகர குரல் வளத்தால்..."கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்ததது..." என ஆரம்பிக்கிறார். அப்படியே விடியும்வரை கேட்கிறீர்கள்.

இது யார் எழுதியது?... இதன் அர்த்தம் என்ன?... தமிழ்நாட்டில் பற்பல பிராமணர் அல்லாதோர் வீடுகளிலும் இந்த சுப்ரபாதப் பாடல் ஒலித்து மயக்குகிறதே... இந்த சுப்ரபாதம் ஏன் தமிழில் இல்லை?...

திருப்பதி வெங்கடேசனை எழுப்பும் இந்த சுப்ரபாதம் ஏன் தமிழ்நாட்டின் குக்கிராமங்களில் கூட ஒலிக்கிறது?... என்றெல்லாம் உங்களுக்கு கேள்வி எழ வேண்டும்... அதற்கு பதில் உங்களில் பலருக்கு தெரியாது. இது சத்தியம்.

இந்த சுப்ரபாதத்தை அதாவது சமஸ்கிருத "Good morning' 'ஐ இயற்றியவர் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா. (மத விஷயங்களில் தன்னோடு வாதம் பண்ண வருபவர்கள் யாராக இருந்தாலும்... தன்னுடைய பயங்கரமான பிரதிவாதம் மூலம் அவர்களை தோற்கடித்து விடுவார் அண்ணா. அதனால்தான் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா என பெயர் பெற்றார்.) இவர் மணவாள மாமுனிகளின் சிஷ்யர். "ஆழ்வார்கள் வாழி அருளிச் செயல் வாழி' என்று வாழ்த்தினாரே அதே மணவாள மாமுனிகளின் சிஷ்யர்தான் அண்ணா.

"கௌசல்யா சுப்ரஜா ராமாபூர்வா சந்த்யா ப்ரவத்தது...'' என்ற இந்த முதல் வரிகள் வால்மீகி ராமாயணத்திலிருந்து உருவப்பட்டது அதாவது... விஸ்வாமித்ரர் ராமனை எழுப்புகிறார். "கௌசல்யை புண்ணியம் செய்து பெற்ற ராமா... அங்கே காட்டுப் பக்கம் அரக்கர்கள் அடாவடி செய்து தவ முனிவர்களுக்கு இடைஞ்சல் செய்கிறார்கள். நீ வந்து அவர்களை வீழ்த்து...' என ராமனை எழுப்பி அழைக்கிறார்

விஸ்வாமித்ரர்.இதை முதல் வரியாக போட்டு... வெங்கடேச சுப்ரபாதத்தை இயற்றியிருக்கிறார் ப்ரதிவாதி பயங்கரம் அண்ணா.

இவர் இந்த சுப்ரபாதத்தை 14-ம் நூற்றாண்டில் இயற்றினார் என்கிறார்கள். ஆனால்... இதே போன்ற சுப்ரபாத வடிவத்தை நாம் இப்போது கேட்கிற சுப்ரபாதம் இயற்றப்பட்டதற்கு அறுநூறு வருஷங்கள் முன்னதாகவே... அற்புதமாக இயற்றியிருக்கிறார் தொண்டரடிப் பொடியாழ்வார் தமிழில்.

இனிய தமிழில் "திருப்பள்ளியெழுச்சி' என்றும் பெயர் கொண்ட அந்த பத்து முத்தான பாடல்களை (ஆழ்வார்கள் அருளிச் செயல் புத்தகத்தில் 917 முதல் 926 வரையிலான பாடல்கள்) சிலவற்றை மட்டும் உங்களுக்கு சொல்கிறேன்.

தொண்டரடிப் பொடியாழ்வார் காவேரிக் கரையில் படுத்திருக்கும் திருவரங்க பெருமாள் அரங்கநாதனை எழுப்புவதாக இந்த பாடல்களை இயற்றியிருக்கிறார். "கதிரவன் குணதிசைச் சிகரம் வந்துஅணைந்தான்; கனை இருள் அகன்றதுகாலை அம் பொழுதாய்மது விரிந்து ஒழுகின மாமலர் எல்லாம்வானவர் அரசர்கள் வந்து வந்து ஈண்டி எதிர்திசை நிறைந்தனர். இவரொடும் புகுந்த இருங் களிற்று ஈட்டமும் பிடியொரு முரசும்அதிர்தலில் அலை-கடல் போன்றுவிது எங்கும்அரங்கத்தம்மா. பள்ளி எழுந்தருளாயே...-இதுதான் தமிழ் திருப்பள்ளியெழுச்சியின் முதல் பாடல்.

கதிரவன் கிழக்கின் மேலே முளைத்து விட்டான். இரவின் இருள் அகன்றது... காலைப்பொழுது மலர்கள் பூத்து தேன் சொரிகின்றன. வானத்து தேவர்களும், பூமியின் மன்னர்களும், பக்தகோடிகளும் நீ பார்க்க தெற்குப் பக்கம் திரண்டிருக்கிறார்கள். அவர்கள் வந்த யானைத் திரள்கள் எழுப்பும் பிளிற்று ஒசையும்... யானைப் படையின் முரசு ஒலியும் எல்லா திசைகளிலும் எதிரொலிக்கிறதே அரங்கா... திருப்பள்ளியை விட்டு எழுக, அவர்களுக்கு காட்சி தருக...-என திருவரங்கத்து பெருமானை தமிழால் தட்டி எழுப்புகிறார் தொண்டரடிப் பொடியாழ்வார்.

இங்கே அரங்கத்தம்மா பள்ளி எழுந்தருளாயே... -என தன் இறைவனை அம்மாவென அழைக்கிறார் ஆழ்வார். இந்தப் பாடலில் பக்தி இல்லையா?... சுவை இல்லையா?... இலக்கியம் இல்லையா?... அல்லது உங்களுக்கு அர்த்தம் புரியவில்லையா?...இன்னும் ஒரு தமிழ் திருப்பள்ளியெழுச்சி கேளுங்கள்.கடி-மலர்க் கமலங்கள் மலர்ந்தன, இலையோகதிரவன் கனை கடல்முளைத்தனன், இவனோதுடியிடையார் சுரி குழல் பிழிந்து உதறிதுகில் எடுத்து ஏறினர்.

சூழ்புனல் அரங்காதொடை ஒத்த துளவமும் கூடையும் பொழிந்துதோன்றிய தோள் தொண்டரடிப்பொடி என்னும் அடியனை அளியன் என்று அருளி உன்அடியார்க்கு ஆட்படுத்தாய்! பள்ளி எழுந்தருளாயே!- சுற்றிலும் காவிரி நதி சூழ்ந்த அரங்கா. கடலிலே கதிரவன் தோன்ற... குளங்களில் தாமரைப் பூக்கள் சிரித்து மலர்ந்து மணக்கின்றன.சின்னச் சின்ன இடுப்புகளை பெற்ற பெண்கள் காவிரியில் குளித்து... தங்களின் நனைந்த கூந்தலை ஈரப்பதம் இல்லாமல் உலர்த்தி உதறி... தத்தம் அடைகளை உடுத்தி கரையேறுகிறார்கள்.

இப்படிப்பட்ட இளங்காலைப் பொழுதில் தொண்டரடிப் பொடியென்னும் நான் திருத்துழாய் (துளசி) மாலையும், பூக்குடலையும் தாங்கி காத்திருக்கிறேன். இந்த அன்பனை ஏற்று அருளி ஆளாக்க வேண்டும்.இந்த தமிழ்பாடலுக்கு என்ன குறைச்சல்….

பகுதி – 70. - தொண்டரடிப் பொடியாழ்வாரின் தமிழ் திருப்பள்ளி எழுச்சிப் பாடல்கள் பத்தில்... முதல் மற்றும் கடைசி பாடல்களை எடுத்துக் காட்டினேன்.என்ன வர்ணனைகள்?... என்ன எதுகை மோனைகள்?... எவ்வளவு இனிமை வழிகிறது!

"கொழுங்கொடி முல்லையின் கொழுமலர்' என்ற இரண்டாவது பாடல், "சுடர் ஒளி பறந்தன சூழ்திசை எல்லாம்' என்ற மூன்றாவது பாடல், "மேட்டு இள மேதிகள்' என்ற 4-ஆம் பாடல், "புலம்பின புட்களும் பூம்பொழில்களின் வாய்' என்ற ஐந்தாம் அருளிச் செயல் "இரவியர் மணி நெடுந் தேரோடும்' என்ற ஆறாவது பாசுரம்."அந்தரத்து அமரர்கள் கூட்டங்கள்' என ஆரம்பிக்கும் ஏழாவது பாட்டு, வம்பவிழ் வானவர் வாயுறை வழங்க... -என்ற எட்டாவது பாட்டு... ஏதம் இல் தண்ணுமை எக்கும் மத்தளி... - என்று ஒன்பதாவது பாசுரம்...தொண்டரடிப் பொடியாழ்வாரின் இந்த பத்து பாடல்களும்... இன்று எங்கும் ஒலிக்கிற சுப்ரபாதப் பாடலுக்கு 600 வருடங்கள் முன்னரே ரங்கனை எழுப்பிய பாடல்கள்.

சுப்ரபாதத்தில் இன்னொரு "லாஜிக்'கும் இருக்கிறது. அதிலும் தமிழ்தான் வெற்றி பெறுகிறது

திருப்பதி வெங்கடாஜலபதி நின்று கொண்டிருக்கிறார். அவரை எழுப்புவது சரியாக இருக்குமா?... இங்கே திருவரங்கத்தில் அரங்கன் படுத்துக் கொண்டிருக்கிறார் இவரை எழுப்புவது சரியாக இருக்குமா?

படுத்துக் கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை தமிழில் செய்தார் தொண்டரடிப் பொடியாழ்வார். நின்று கொண்டிருப்பவரை எழுப்பும் வேலையை சமஸ்கிருதத்தில் செய்தார் அண்ணா.

ஆனால்... நாமோ logic இல்லாத சமஸ்கிருத வெங்கடேச சுப்ரபாதத்தை தினந்தோறும் காலையில் போட்டுக் கேட்கிறோம். ஆனால்... மறுபடியும் நான் அழுத்திச் சொல்வேன். இதே பொருளை 600 ஆண்டுகள் முன்கூட்டியே சொன்ன தமிழை தள்ளி வைத்து விட்டார்களே.

இன்றும் கோயில்களில் தினசரி சேவா காலத்தில் தொண்டரடிப் பொடியாழ்வாரின் திருப்பள்ளியெழுச்சி ஒலிக்கிறது. ஆனாலும், சுப்ரபாதத்தை போல திருப்பள்ளியெழுச்சி என தமிழ் பெயரில் மாற்றி இனியாவது எவரேனும் அதற்கு நல்ல இசையமைத்து விடியற்காலையில் தமிழ் மணக்கச் செய்வார்களா?

சமஸ்கிருத கைதிகளாக இருக்கும் சிலபேர் தமிழை நீசபாஷை என ஒதுக்கித் தள்ளியிருக்கிறார்கள். தமிழ்தான் நமக்கு மட்டுமல்ல அரங்கனுக்கும் நேசபாஷை என்பதை இன்னொரு ஆழ்வாரின் வாழ்க்கையிலிருந்தே தெரிந்து கொள்ளலாம்.

அவர் திருப்பாணாழ்வார்... சோழ நாட்டிலே உறையூர் என்ற திருவூரில் பாணர் வம்சத்தில் பிறந்தவர். பாணர்கள் என்றால் "பாண்' என்னும் இசைக்கருவியை வைத்துக் கொண்டு மன்னர்களைப் பாடி பரிசுப் பொருள்களை பெற்று ஜீவனம் நடத்துபவர்கள்.

ஆனால்... நமது பாணரோ... திருவரங்கத்து பெருமாளையே நினைத்துப் பாடிக் கொண்டிருந்தார். சுற்றிலும் காவேரி சூழ்ந்த திருவரங்கத்தில் இருக்கும் ரங்கநாதனை தனது பாண் இசைக்கருவி மூலம் "டிங்கு டிங்கு டிங் டிங்...' என இசைத்துக் கொண்டு பாடியபடி இருந்தார்.

ஆனால்... இவரைப் பார்த்த உயர் ஜாதியினர்களோ..."நீ தாழ்ந்த சாதிப்பயல் நீ எப்படியடா திருவரங்கத்துக்குள் நுழைய முடியும்... போடா' என துரத்தியடித்தார்கள். பாணரோ... நான் பெருமாளை பாடித்தான் தீருவேன் என்று செந்தமிழில் ரங்கனை உருகி ராகமிசைத்துக் கொண்டிருந்தார். இவரது தமிழிசையை... ரங்கனின் உயர்ஜாதி பக்தர்கள் காதில் போட்டுக் கொள்ளாமல் விரட்டியடிக்க... காவேரிக் கரையிலேயே நின்று கொண்டிருந்த பாணர் வாழ்வில் ஒரு அதிசயம் நடந்தது.

காவேரிக் கரையில் தனிமையில் நின்று அரங்கனை பாடிக் கொண்டிருந்த பாணர் முன்பு... ஒரு வைதீகர் ஆச்சாரமான வைதீகர் நின்றார். எங்களை மன்னிப்பீர் பாணரே... உங்களை இதுநாள் வரை திருவரங்கத்துள் அனுமதிக்காமல்... அரங்கனை தரிசிக்க விடாமல் பாவம் செய்தோம். உங்கள் தமிழை நாங்கள் மறுதலித்தோம்.

ஆனால்... பகவான் அரங்கநாதர் உங்கள் தமிழுக்காக தவம் இருக்கிறார்.உங்களது இனிய பாடல்களை அரங்கன் அவதானித்துக் கொண்டே இருக்கிறார். என்னை அழைத்து, "நீ போய் நமக்கு அந்தரங்கரான பாண் பெருமாளை உம்முடைய தோளிலே தூக்கிக் கொண்டு வா... அவரை ஒதுக்கி வைக்க நினைக்காதீர் உடனே செல்' என கேட்டுக் கொண்டார்.

வாருங்கள் என் தோளில் ஏறிக் கொள்ளுங்கள். உங்களை சுமந்து அரங்கனிடத்தில் இறக்கி விடுகிறேன்'' என்று பாணரை பார்த்து பணிவுடன் சொன்னார் அரங்கன் அனுப்பிய லோகசாரங்கர். பாணர் அதாவது திருப்பாணாழ்வார் லோகசாரங்கர் தோளில் எறி... திருவரங்கத்தை அடைய...அங்கே திருப்பாணாழ்வாரை பார்த்த அரங்கன்... அவருக்கு காட்சி தந்து இப்போது என் அருகில் தமிழ் பாடுங்கள் பாணாழ்வாரே...'' என்று கேட்கிறார்.இந்த காட்சியை பார்த்து அனுபவித்து அமலனாதிபிரான் என பத்து பாசுரங்களை (927-936) பாடினார் திருப்பாணாழ்வார். ..இப்போது சொல்லுங்கள் தமிழ் நீச பாஷையா?... இறைவனின் நேச பாஷையா?...
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 68. தமிழை கட்டிப்போட்ட சமஸ்கிருதம். பூசையில் சூழ்ச்சி. தமிழன் வெளியே நிறுத்தப்பட்டு சமஸ்கிருதர்கள் உள்ளே சென்றார்கள்.

பகுதி 71. தமிழ் நேசபாஷையா? நீசபாஷையா? தமிழ் உள்ளே போகக்கூடாது என்பதற்காக தெய்வத்தை வெளியே தூக்கிவருகிறார்கள்..

No comments:

Post a Comment