இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

நேருவின் கோபம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 99. to 100-1


இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்... இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.

மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா?


இந்து மதம் எங்கே போகிறது ?

பகுதி 99. சனாதன மதானுஷ்டானங்களுக்கு இம்மிளவும் பாதிப்பு வரக்கூடாது. வர்ணாஸ்ரம வரையறைகள் மாறக்கூடாது என பட்டேலிடம் சங்கராச்சாரியாரின் விண்ணப்பத்தை கேட்கப்போய்...

‘மடாதிபதிகளை திருத்த முடியாது. அவர்களை நம்பி நீங்கள் வராதீர்கள்’ என கடுமையாகவே சொல்லி என்னை அனுப்பிவிட்டதைச் சொன்னேன். இதை சங்கராச்சாரியாரிடம் சொன்னபோது... ‘இதுவும் உண்மைதான்’ என ஒத்துக் கொண்டதையும் குறிப்பிட்டேன்.

இதன் பிறகுதான் பண்டிட் நேருஜியை இதே விண்ணப்பத்துடன் பார்க்கப் போனேன்.

அதற்கு முன்னதாக பல ஆச்சாரியார்களிடம் ஆலோசனை பண்ணி... லௌகீகர்கள் சிலரையும் சேர்த்துக் கொண்டு பிறகு பண்டிட் நேருஜியை பார்க்கப் போனேன்.

என்ன விஷயம்? என்றார் நேருஜி. நாங்கள் மெமோரண்டத்தின் சாரத்தை எடுத்துச் சொல்ல ஆரம்பித்ததுமே... கொஞ்ச நேரம் கேட்டு விட்டுப் பிறகு மெமோரண்டத்தையும் பார்த்தார்.

உடனே... நிமிர்ந்தவர் என்னைப் பார்த்து “If you want to talk about religion, You should go to outside from this nation. We don’t allow speciality to any religion. Here all are equal...Dont’ talk me about religion... understand?” என்றார் ரோஜாவின் ராஜா. நான் அதிர்ந்து விட்டேன். அவர் என்ன சொன்னார் என்று புரிகிறதா?

“நீங்கள் மதத்தைப் பற்றி மதத்தின் தனியுரிமையைப் பற்றி பேச வேண்டுமென்றால் இங்கு... பேசாதீர்கள். இங்கு எந்த மதத்திற்கும் தனிப்பட்ட உரிமையோ, ஸ்பெஷாலிட்டியோ கிடையாது. எல்லா மதங்களும் சமம்தான். All are equal.


மீண்டும் நீங்கள் மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை குறித்து பேசவிரும்பினால்... இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ என கடுமையாகச் சொல்லிவிட்டார் நேரு.

இவ்வளவு நடந்தும் சங்கராச்சாரியார் அலட்டிக் கொள்ளவில்லை. மதத்துக்குத்தான் தனியுரிமை சிறப்புரிமை கிடைக்கவில்லை. மடங்களுக்காவது தனியுரிமை கிடைக்குமா என்று பார்ப்போம் என சொல்லி களத்தில் இறங்கிவிட்டார்.

‘பட்டேல் சொன்ன மாதிரி மதங்களின் பிரதிநிதிகளான மடங்கள் மக்கள் சேவைக்கு வரவேண்டும். மடாதிபதிகள் ராஜபோகங்களில் துயில்கிறார்கள், மிதக்கிறார்கள் என்ற தத்துவத்தை தகர்க்க வேண்டும். அதனால் தேஸத்தின் எல்லா மடங்களையும் இதற்காக நாம் வலியுறுத்த வேண்டும். எனவே பாரதிய மடங்களின் சபையை நாம் கூட்ட வேண்டும்.

பாரதிய மடங்களின் சபையை கூட்டுவதற்கு முன்... அவரவர்கள் மடத்துக்குப் போய் ‘புது அரசியல் மூலம் ஸ்வதந்திர தேசமாகப் போகிறோம். இதுவரை இருந்த நிலை வேறு. இனிமேல் நான் இருக்கப் போகும் நிலை வேறு. ஆகவே நம் மடங்களுக்கும் ஜீவாதார உரிமை பெற முயற்சிக்க வேண்டும்’ என்று சொல்லச் சொன்னார். அதன்படி அகில பாரதிய மடங்கள் மாநாட்டை டெல்லியில் கூட்டச் சொன்னார்.

அதற்குப் பட்டபாடு அப்பப்பா...! இந்த மாநாட்டைக் கூட்ட குளித்தலை அண்ணாதுரை அய்யங்கார் என்ற உத்தமமான புருஷன் முன் வந்தார். இவர் சங்கராச்சாரியாரிடம் அபார பக்தி கொண்டவர். மடங்களைப் பார்த்து பேசுவதற்காக மோட்டார் காரில் திருச்சியில் இருந்து புறப்பட்டு உடுப்பி, அதைத் தொடர்ந்துள்ள சிருங்கேரி மடம் ஆகிய மடங்களை நேருக்கு நேராய் போய்ப் பார்த்து விஷயங்களை விக்ஞாபித்தோம். உடுப்பியில் மாத்வ சம்ப்ரதாயத்தைச் சேர்ந்த 8 மடங்கள் உள்ளன. இவை தவிர உத்தராதி மடம், சோதன மடம். சுமுதிர்த்த மடம். மந்த்ராலய மடம் எல்லாரையும் சந்தித்தோம்

மேற்குத் தொடர்ச்சி மலையின் கடைசியில் உள்ள ‘சுப்ரமண்யம்’ என்ற மடத்துக்குப் போனோம். இந்த இடத்தில் ஒரு முக்கியமான விஷயத்தை குறிப்பிட்டாக வேண்டும். சிருங்கேரி மடத்துக்குப் போன போது, மடாதிபதி நவராத்திரி உற்சவத்துக்கு வெளியே எழுந்தருளியிருந்தார். மாஜி ஜில்லா ஜட்ஜ் ஒருத்தர், இன்னொரு ஹைகோர்ட் ஜட்ஜ் ஒருத்தர் என முக்கியஸ்தர்களுடன் சிருங்கேரி மடாதிபதியை பார்த்தபோது...” பெரியவர் சுத்தமான தமிழில் பேசினார். பெரியவாளின் கர்மானுஷ்டத்துக்கு நேருக்கு நேராக உதவி செய்ய முடியாதே என்று சொல்லிவிட்டார்.

பின், அங்கிருந்து பாலேஹி என்னும் மடத்தின் மடாதிபதியை கடும் மழைக்கிடையே பார்த்து, மடங்களின் மாநாட்டுக்கு அழைத்தோம். சகடபுரம், அரிஹரப்பூர் மடங்களுக்கு அலைந்துவிட்டு ஷிமோகா வந்து சங்கமேஸ்வர மடாதிபதியையும் பார்த்தாச்சு. அப்படியே மைசூர் போய் வைஷ்ணவ மடமான பரக்கால மடத்தைப் பார்த்து விஷயத்தை விளக்கிவிட்டு கிழக்கு கர்நாடகாவில் வீர சைவ மடங்கள், வடக்கு கர்நாடகாவில் கோதே, தும்கூர் இப்படியாக பாரதம் முழுதும் சுற்றி பூரிஜெகன்னாத் போனோம்.

அங்குள்ள பல வைஷ்ணவ மடங்களின் பிரதான மடத்தின் தலைவரான கிரிதாரிதாஸ் ராமானுஜர், அவரது வித்வான் துர்பலாச்சாரி மூலம் பல மடங்களை பார்த்தோம் பின் அயோத்திக்குப் போனேன்.

அங்குள்ள மடங்களைப் பார்த்து புது அரசியல் சாசனத்தில் மடங்களுக்கு சுதந்திரம் வேண்டி மகா பெரியவர் எடுத்து வரும் முயற்சிகளை விளக்கினோம்.

பின்... இன்றைய பாகிஸ்தான் கராச்சியில் உள்ள சிந்து நகரத்தின் மடத்தையும் சென்றடைந்தோம். செட்டி நாட்டு குன்னக்குடி மடம், திருநெல்வேலி செங்கோல் மடம் முதல் சிந்து நகர மடம்வரை... எல்லோரும் நாங்கள் பார்த்தபோது எங்களுக்கு ஆட்சேபணையே தெரிவிக்கவில்லை சரி...டெல்லியில் மட மாநாடு நடந்ததா?- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.

பகுதி 100 – 1.  மத உரிமைகளுக்காக.. அவற்றை நிறைவேற்றுவதற்காக கன்னியாகுமரி முதல் கராச்சி வரை, அலைந்து... பல்வேறு மடங்களையும் நேரில் அடைந்து, மடாதிபதிகளையும் மாநாட்டுக்கு அழைத்த கஷ்டமான காரியத்தை விளக்கினேன். டெல்லியில் இந்துமகாசபை என்ற இடத்தில் மாநாடு நடந்தது. யார் யார் கலந்து கொண்டனர்?

கல், காடு, மலை, வெயில் என கடந்துபோய் நாங்கள் சந்தித்த பாரதத்தின் நூற்றுக்கணக்கான மடங்களிலிருந்து எவரும் கலந்து கொள்ளவில்லை. கராச்சி சிந்துநகர மடப்ரதிநிதியை தவிர.

சின்ன வருத்தம்தான் அதற்காக என்ன செய்வது? பேருக்குக் கூடிய அந்த மாநாட்டில்.‘Freedom of religion and maintaining religious institutions...’ வேண்டும் என ஒரு தீர்மானத்தை நிறைவேற்றிவிட்டு கலைந்தோம் எங்கே?

கலைவதற்குக்கூட ஆட்கள் இல்லை. இதன் பிறகும் சளைக்காமல் மடங்களுக்கான தனியுரிமை குறித்து... Parliament Bill கொண்டுவர ஏற்பாடு செய்தோம். புது பார்லிமென்ட் வந்த பிறகு அந்த பில்லை யாரும் கண்டு கொள்ளவில்லை.

ஸ்வதந்த்ரம் பெற்று பாகிஸ்தான் - இந்தியா என தேசம் இரண்டாகப் பிரிக்கப்பட்டது. இந்தியாவான நமது தேசத்தில் ‘All are equal... All religions are equal...’ என்று பிரகடனப்படுத்தப் பட்டது. அதாவது Secular State என அரசமைப்பு சாசனம் அறிவித்தது.அதாவது எத்தனை மதங்கள் எத்தனை தர்மங்களை பின்பற்றினாலும் இந்த தேசத்தின் பொதுதர்மம் All are equal என்பதுதான்.

நமது மதாசாரப்படி... தர்மம் எல்லார்க்கும் ஒன்றுதான் அரசனும் தர்மத்துக்கு கட்டுப்பட வேண்டும். ஏன் பகவானே கூட தர்மத்துக்கு, தர்ம நெறிமுறைகளுக்கு எதிராக நடந்தால் பகவானையே தண்டிக்கவும் நமது மதக்கலாச்சாரம் கற்றுத்தருகிறது. இதனைத்தான் ‘தர்மவிகிக்ரமம்’ என்கிறோம். -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

பகுதி 98. மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவிக்கிறார்கள். மடாதிபதிகளை திருத்த முடியாது.

No comments:

Post a Comment