இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

மடாதிபதிகள் ராஜபோகம் அனுபவிக்கிறார்கள். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 98.


வர்ணாஸ்ரமம் பின்பற்ற தடை.

ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை

மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள்,

மடாதிபதிகளை திருத்த முடியாது. தந்தி போராட்டம்.
இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 98.

ஒன்றா? இரண்டா? நூறு தந்திகள். அந்தக் காலத்தில் ஒரு தந்தி அடிக்க வேண்டுமென்றால், ரொம்ப கஷ்டம். ஏனென்றால், பெரிய பெரிய நகரங்களில் தான் தந்தி ஆபீஸ் இருக்கும்.

ஒரு தந்தி என்றால் அடித்து விடலாம். நூறு தந்திகள். ஒரே இடத்திலிருந்து கொடுத்ததாக இருக்கக் கூடாது. தேஸத்தின் பல பகுதிகளிலிருந்தும் அனுப்பவேண்டும்.

`பாரத தேசத்தின் மதாச்சார கர்மானுஷ்டாங்களுக்கு பாதுகாப்பு வேண்டும். புது அரசியல் மூலம் எங்கள் மத ஸ்வதந்த்ரம் பாதிக்கப்படக் கூடாது’ என்பதுதான் தந்தி வாசகம்.

இதை தேசத்தின் பல இடங்களிலிருந்தும் டெல்லிக்கு அனுப்பினோம். 100 தந்திகள்... அதுவும் வெவ்வேறு இடத்திலிருந்து. செலவை மகாபெரியவரே ஏற்றுக் கொண்டார். நான் உதவி செய்தேன்.

தந்தியடித்த பிறகு, மறுபடியும் என்னை அழைத்த மகாபெரியவர், `நாம அவாளை நேர்ல பார்த்து நம்ம மத சம்ப்ரதாயத்தை பத்தி பிரஸ்தாபிச்சு சனாதன மதத்துக்கு ஸ்வதந்த்ரம் கேக்கணும்... அதை நீர்தான் பண்ணணும்’ என்றார்.

அப்போது... `பார்லிமெண்ட் டெலிகேஷன்’ மெம்பர்கள் பத்திரிகைக் கார்யாலயங்களுக்கெல்லாம் விஜயம் செய்து... ஸ்வராஜ்யம் பற்றி தேஸம் என்ன நினைக்கிறது என்றெல்லாம் கேட்டுத் தெரிந்துகொள்வார்கள். ஏனென்றால், நம் தேசத்தின் சுதந்திர எழுச்சியைப் பல பத்திரிகைகள் தட்டி எழுப்பியபடி இருந்தன.

அந்த வகையில்... சென்னைக்கு வந்தது பார்லிமெண்ட் டெலிகேஷன். அன்று தேஸத்தின் மிக முக்கிய பத்திரிகையான `தி ஹிண்டு’ ஆங்கிலப் பத்திரிகை ஆபீசுக்கு டெலிகேஷன் வந்திருந்தது.இதையறிந்த மகாபெரியவர்... உடனே என்னை அழைத்து அவர்களைப் போய் பார்க்கச் சொன்னார்.

நானும் `ஹிண்டு’ பத்திரிகை ஆபீசுக்குப் போனேன்.அப்போது... `ஹிண்டு’வின் எடிட்டராக இருந்த சிறீ.கே. சீனிவாஸன் என்னை பார்லிமெண்டரி டெலிகேஷனிடம் அறிமுகப்படுத்தி வைத்தார். எப்படியென்றால் `இவர் மதாச்சாரியார்களின் பிரதிநிதி’ என்று.

டெலிகேஷனில் இருந்த சோரன்சன் என்ற பாதிரியாரும் நானும் பரஸ்பர வணக்கத்தைப் பரிமாறிக் கொண்டோம்.

நான் முதலில் 100 தந்தி விடயத்தை அவரிடம் ஞாபகப்படுத்தினேன். 'oh’ என ஞாபகப்படுத்திக் கொண்ட சோரன்சன்... ‘We meet tonight’ என்றார்.

அன்று ராத்திரி பிரபல அட்வகேட் ஒருவரின் வீட்டில் இருந்த சோரன்சன்னை சந்தித்தேன். பத்து மணி ராத்திரிப் பொழுதில் எனக்கும், சோரன்சன்னுக்கும் நடந்த ஆங்கில உரையாடலை இங்கே தருகிறேன்.

சோரன்சன்: Welcome. What do you want?
நான்: We lives in India. But havings not any rights to follow our religion. We must need freedom to follow our “Dharma”. சோரன்சன்: Oh... it is very serious matter... give me a memorandam and meet me in Delhi என்றார்.

நான் உடனே கும்பகோணம் விரைந்து மகாபெரியவாளிடம் விஷயத்தைச் சொன்னேன். சில அட்வகேட்கள் சம்ப்ரதாயஸ்தர்கள் ஆகியோரை வைத்துக்கொண்டு... ``வர்ணாஸ்ரம தர்மத்துக்கு முழு சுதந்திரம் வேண்டும்’’ என்ற மெமோரண்டத்தைத் தயார் பண்ணினோம். டெல்லிக்கு போய் நேரில் கொடுக்க இருந்தோம். அதற்குள் அந்த டெலிகேஷன் மெம்பர் அஸ்ஸாம் போய் அங்கே தேஸ நிலைமையை ஆராய்ந்து கொண்டிருந்தார்.

இந்த விஷயம் கேள்விப்பட்டவுடன்... மெமோரண்டத்தை அஸ்ஸாமுக்கே ஒரு காப்பி முதலில் அனுப்பி வைத்து விட்டோம். பிறகு டெல்லி போனேன். அங்கே வக்கீல் சிவராவின் வீடு, பகல் 11 மணிக்கு காங்கிரஸ் தலைவர்களான அச்சுத பட்டவர்தன், ஜெயப்பிரகாஷ் நாராயண் ஆகியோர் டெலிகேஷனை சந்திக்கக் காத்திருந்தார்கள். அவர்கள் பார்த்துவிட்டுப் போனவுடன், நான் சில அட்வகேட்களுடன் டெலிகேஷனை சந்தித்தேன்.

`வர்ணாசிரம மதாச்சாரத்தைப் பின்பற்ற ஜீவாதார உரிமை வேண்டும்’ என்ற மெமோரண்டத்தைப் பார்லிமெண்ட்ரி டெலிகேஷனிடம் நேரடியாகவே கொடுத்தோம். வாங்கிக் கொண்டு போய்விட்டார்கள். இதன் பிறகு... பிரிட்டிஷ் நாட்டிலிருந்து Cabinet deligation வந்தது. அந்த குழுவினருக்கும் தந்தியடித்தோம். மெமோரண்டம் கொடுத்தோம்.

அவர்களோ ``உங்கள் அரசியல் சாசனத்தை உங்கள் தலைவர்கள்தான் உருவாக்கப் போகிறார்கள். அதனால் உங்கள் தேசத் தலைவர்களையே பாருங்கள்’’ என சொல்லி விட்டார்கள்.

சரி... என சொல்லிவிட்டு நம் தேஸத் தலைவரான சர்தார் வல்லபாய் பட்டேலை பார்க்கச் சென்றோம். அவர்... மெமோரண்டத்தைப் பார்த்துவிட்டு... `` சனாதன மதத்தைப்பற்றியும் மடங்களைப்பற்றியும் நீங்கள் சொல்வது வாஸ்தவம்தான். ஆனால், மடாதிபதிகள் தங்களுடைய ஸ்தாபனத்தின் கீழ் ராஜபோகத்தை அனுபவிக்கிறார்கள். அவரவர்களுக்கும் அவரவர்களுடைய சிஷ்யர்களோடுதான் பழக்கம். வெளி உலகத்தோடு மக்களோடு உறவே இல்லை. மக்களின் பொதுவான பணிக்கோ, மதப் பணிக்கோ அவர்கள் முன்வரவில்லை.

முக்கியமாக ஹரிஜனங்களுடைய முன்னேற்றத் திட்டத்தில் மதமும், மடாதிபதிகளும் முக்கியத்துவம் காட்டவே இல்லை. முதலில் மக்களின் தேவையை உணர்ந்து அவர்களுக்குப் பணி செய்ய மதாச்சாரியார்களை வரச் சொல்லுங்கள்...’’ என்று கண்டிப்பாக என்னிடம் கூறினார் பட்டேல்.

நான்... `பழைய காலத்தில் அப்படி இருக்கலாம். புது பாரத தேசம் உருவாவதால் அவர்கள் பொதுப் பணிகளை நிறைவேற்றுவார்கள்’ என சொல்லிப் பார்த்தேன். ம்ஹூம்... பட்டேல் ஒப்புக் கொள்ளவில்லை.

இதை மகாபெரியவரிடம் சொன்னபோது... `ஆமாம் இது முழுவதும் உண்மைதான்’ என்றார். அடுத்து பண்டிட் நேருஜியை பார்த்தேன். - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்...)

 பகுதி 97. பெண்களுக்கு எட்டு வயதுக்குள் திருமணம் செய்து விடு - வேதம். இல்லை யென்றால்... அதாவது ருதுவானபின் கல்யாணம் செய்தால் அவளுடைய மாதவில‌க்கில் வெளிப்படுவதை அவளுடைய அப்பனே சாப்பிட வேண்டும்.
குழந்தைகளுக்குக் கல்யாணம் செய்து வைக்கக்கூடாது உத்தரவிட்ட‌ இந்தியாவின் ஆங்கிலேய அரசாங்கம். .


பகுதி 99. இந்து மதத்திற்கு தனி உரிமையோ சிறப்புரிமையோ இந்தியாவில் கிடையாது, மதத்தின் தனியுரிமை சிறப்புரிமை விரும்பினால் இந்த நாட்டுக்கு வெளியே எங்கே வேண்டுமானாலும் சொல்லலாம்’ நேருவின் கோபம்

No comments:

Post a Comment