இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

உடலுறவுக்கு தட்டுபாடில்லாத சுவர்க்கம். இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 89.

உனக்கு இப்போது ஒரு தேவடியாள் வேண்டுமா? குடும்பஸ்திரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு..?  எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.

 இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம். பரலோகத்தில் பேரின்பமாக மாறும்
இந்து மதம் எங்கே போகிறது?  பகுதி 89.

விரஜா என்னும் நதி மிக சன்னமாக சீராக ஜலஜலவென ஓடிக் கொண்டிருக்கிறது. இந்த நதியைத் தாண்டி அபராஜிதை என்னும் ஒரு பட்டணம் இருக்கிறதாம். பட்டணம் என்றால் அப்பேர்ப்பட்ட பட்டணம் அதாவது எங்கு பார்த்தாலும் ஆண்கள், பெண்கள் ரொம்ப சந்தோஷமா கூடிக் குலவி களித்துக் கொண்டிருக்கிறார்கள்.

மாட மாளிகைகள், கூட கோபுரங்கள் நிறைந்த இங்கே.. ஆயிரங்கால் மண்டபம் ஒன்று உள்ளதாம் அந்த மண்டபத்திலும் ஒரே ஆனந்த மயம்தான். அந்த ஆயிரங்கால் மண்டபத்தில் திவ்யபர்யங்கம் என்னும் உயர்ந்த கட்டில் ஒன்று இருக்கிறது அதிலேதான்.. பாம்புப் படுக்கையிலே பெருமாள் இருக்கிறார்.

பக்கத்திலே அங்குள்ளவன் தனது விருப்பத்துக்கு தக்கபடி பித்ரு லோகம், ஸ்த்ரி லோகம் முதலியவற்றை படைத்துக் கொள்கிறான் சுகத்தையும் அனுபவித்துக் கொள்கிறான். இதெல்லாம் என்ன? இதுதான் மோட்சமாம். மோட்ச லோகத்தில் குடும்பம்  குட்டிகள் உண்டா? சன்னியாசிகள் உண்டா? ஒருவனுடைய பத்னியை இன்னொருவன் அபகரிப்பானா?

என்றெல்லாம் கேள்விகளைப் போன அத்தியாயத்தில் பார்த்திருப்பீர்கள்.

இதெல்லாம் நான் எழுப்பிய கேள்விகள் இல்லை.. மும்மதஸாரம் என்னும் புத்தகத்தில் சக்கரவர்த்தி ஆச்சாரியார் எழுப்பிய கேள்விகள். பின் அவரே விளக்குகிறார் பாருங்கள்.மோட்ச ஸ்வருபம் என்ற தலைப்பில் அவர் எழுதியிருக்கிறார்.

இவர்கள் இணைந்துள்ள மோட்சம் எல்லோராலும் போற்றத் தகுந்தது ஜாதி, வர்ணம், மதம், பாகுபாடு இதில் கிடையாது எல்லாரும் ஏக ஜாதியைச் சேர்ந்தவர்கள் அங்கு போகத்திலும் வேற்றுமை இல்லை அனைவருக்கும் சமமான போகம் இதைத்தான் ஸாயுஜ்யம் என்பர் எல்லா வகைகளும் எல்லாருக்கும் சமமாகப் பரிமாறப்படுகின்றன என்றிருந்தால் தான் அது ஸாயுஜ்யம்.

குயில், கிளி, கருடன், கஜானன் (யானை) செடி, கொடி, மரம் முதலியவைகளும் அங்கு வைகுண்ட லோகத்தில் உள்ளனவே.. இவர்களும் ஜீவராசியை சேர்ந்தவர்கள்தானே, இதைக் கொண்டு வேற்றுமை ஏற்பட்டுவிடாதா என்கிற அய்யம் சிலருக்கு வரலாம்.

இதற்குப் பதில்.. இவர்கள் அனைவரும் அங்குள்ள நித்ய ஸ்திரீகள் ஆண், பெண் என்கிற வேறுபாடு அங்கிருந்தாலும்.. எவ்வகையிலும் அவர்களுக்குக் குறைவில்லை. கிளி, குயில் முதலியவைகளும் தத்தம் விருப்பப்படி பல உடல்களை எடுத்துக்கொண்டு பணிவிடை செய்யலாம்.

ஒரு முக்தாத்மா பல உடல்களை எடுக்கும்போது ஆண், பெண், குழந்தை முதலிய உடல்களை எடுத்துக்கொண்டு குடும்பமாக அடிமை செய்யலாம் அல்லது மற்றொரு முக்தாத்மாவை உதவியாக வைத்துக்கொண்டு அதற்குத் தக்கபடி இரு முக்தர்களும் பல உடல்களை எடுத்து குடும்ப தாஸ்யம் செய்யலாம்.

இவ்வாறு குடும்ப தாஸ்யம் செய்யும் போது.. ஆண் உருவமும், பெண் உருவமும் உடையவர்களாக இருந்து கொண்டு விளையாடினால் காமம் என்கிற இன்பம் இவர்களுக்கு வரும். ஆகையால், அது மோட்ச சொரூபத்துக்கு விரோதமா என்று சந்தேகப்பட வேண்டாம். இவர்களது எல்லா ரமணமும் அதாவது விளையாட்டும் பகவானுடையதே..

கிருஷ்ணன் கோபி ஸ்திரிகளுடன் ஏன் காம போகத்தை அனுபவிக்கவேண்டும்?

சிறீரங்கநாதன் தனது ஆனந்த நாடிகளைக் கொண்டு சிறீ ரங்கநாயகியுடன் ஆனந்தமாகக் கலவியை அனுபவிக்கிறான் என பாரசரபட்டர் சிறீகுணாத்ர கோசத்தில் எப்படி சாதித்தார்?

இவையெல்லாம் நாம் யோசித்துப் பார்த்தால்.. இங்கு போல் அங்கும் சகல போகங்களும் உள்ளன. அங்குள்ளவர்கள் நித்ய சுத்தர்களாக இருந்தாலும் லீலையாக ஜலக்ரீடை முதலியவைகளை செய்கிறார்கள் 'எல்லாம் பகவான் செயல்' என விளக்கமாக சொல்லிக் கொண்டே போகிறார் சக்கரவர்த்தி ஆச்சாரியார்.

இன்னும் நாம் உபநிஷது வாக்கியங்களின் மூலமாகவே அங்கே என்ன நடக்கிறது என்பதைப் பார்ப்போமா? "சஹ யதீ பிதுர் லோககாமோ பவதீ...சங்கல்பா தேவாஸ்யபிதர உபதிஷ்ட ந்தே...”

உனக்கு என்ன வேண்டும்? உன் அம்மாவை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் அப்பாவைப் பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள் உன் புத்திரனை பார்க்கவேண்டுமா? படைத்துக் கொள்!

சரி.. குடும்ப உறவுகள் வெறுத்துப் போய் விட்டது உனக்கு இப்போது ஒரு பரஸ்த்ரீ வேண்டுமா? அதாவது இந்த லோகத்தில் நீ விரும்பிய பெண்கள் அல்லது அந்த லோகத்தில் நீ விரும்புகிற பெண்கள் யார் வேண்டும் உனக்கு.. நீ நினைத்தால் உன் முன்னே வந்து நிற்பாள் உன்னைப் பார்த்து சிரிப்பாள் நெருங்குவாள் அணைப்பாள் ஆனந்தம் தருவாள். இங்கு பெண்களின் இன்பம் சிற்றின்பம் அங்கே பேரின்பமாக மாறும். இந்த லோகத்தின் ஆனந்தங்கள் அல்பம் அங்கே பகவத் ஆனந்தம்.

இது Nature அது Super Nature. "யஷனன்னே க்ரீடன்னேரமமானாஹா ஸ்த்ரீபிர்வாயானிர்வா...”
என்று போகிற உபநிஷது.

இங்கு நீ மோட்டாரில் சுற்றுவது போல அங்கேயும் ஜாலியாக சுற்றலாம் அதுவும் எவள் கூட வேண்டுமானாலும் சுற்றலாம்.. அவளை நீயே படைத்துக் கொண்டு என்கிறது. அப்படியென்றால், அங்கே பகவானின் வேலை என்ன?  - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.  (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 88. கிளி கர்ப்பமாகி குட்டிபோட்டது.. புராணம் அப்படித்தான் சொல்கிறது. ரிஷிகள் காம சுகத்தை அவஸ்யத்துக்காக அனுபவிக்கிறார்கள்

பகுதி 90. - 91-1, பெண்களுக்கு மோட்சம் கிடையாது. அப்படி வேண்டுமென்றால் அவள் இன்னொரு பிறவியெடுத்து ஆணாய்ப் பிறந்தால்தான் மோட்சம். கடவுளுக்கு வேலை என்ன?. உடலுறவுக்கு தேவடியாள்கள் விரும்பிய ஸ்த்ரிகள் நிறைய பேரை மோட்சலோகத்தில் அங்கு போனவன் படைத்துக் கொள்வான்.

1 comment: