இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

தமிழா!! ஜடமாகி போனாயா? இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 73.


 `ஜாதிவாதம்’ சொல்லி பல கூடாதுகளை உத்தரவாகப் பிறப்பித்துள்ளவனும் அதை பின்பற்றுகிறவனும் மனிதனே அல்ல ஜடம்தான். ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.

கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் நீ மனிதனே அல்ல ஜடம் தான்.

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலய அமாவாசை, மகாமகம் என்ற காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் குளத்துக்குள்  இறங்கி அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி  அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 73

காவிரிக்கரையிலே நன்றாக சம்மணம் போட்டு உட்கார்ந்துகொண்டு கங்கையைப் போற்றும் நமது `அறியாமை’யை போன அத்தியாயத்தில் பார்த்தோம்.

இதோடு சமஸ்கிருதத்தைத் தவிர மற்ற மொழிகளை மிலேச்ச அதாவது Non Aryan பாஷை என்று சொல்லி... அவற்றை வேதம் மறுதலிக்கச் சொன்னதையும் பார்த்தோம்.

சமஸ்கிருத பாஷையைத்தான் போற்றுவோம், சமஸ்கிருதத்தில் சொன்னால்தான் கேட்போம் என்று ஒற்றைக்காலில் நிற்பவர்களுக்கு நானும் `ஒற்றை ஸ்லோகம்’ ஒன்று சொல்கிறேன்.

இதுவும் அந்த சமஸ்கிருதத்தில்தான் இருக்கிறது. அந்த ஸ்லோகம் சொல்கிறபடி நடப்பார்களா?

``வேத ப்ராமாண்யம் கஸ்ய மிதுகர்த்ரு வாதஹா ஸ்நானேதர்மேச்சா ஜாதிவாத அவலேபஹசந்தா பாரம்பஹா பாபஹானா யசஇதீஸத்வஸ்த ப்ரக்ஞாநாம் சஞ்சலிங்கானீ ஜாம்யே....’’

இந்த சமஸ்கிருத கவிதை சாற்றும் பொருள் என்னவென்று விளக்குகிறேன் கேளுங்கள்.

மனிதன் உயிருள்ளவன், ஜீவன் உள்ளவன் சிந்திக்கவேண்டிய கடமை கொண்டவன். இப்படி சிந்தனையாளனாக இருக்க வேண்டிய... மனிதன் என்று வெறும் ஜடமாகி விட்டான். அதாவது குட்டிச்சுவர் போலவும், சாலையில் கிடக்கும் கல்லைப் போலவும் பயனற்ற ஜடமாகி விட்டான். ஏன் அவ்வாறு ஜடமானான்? சிந்னை சக்தி இழந்தான்? என்பதற்குக் காரணங்களை அடுக்குகிறது அந்த ஸ்லோகம்.

ஒவ்வொன்றாய் சொல்கிறேன்.

1. எதற்கெடுத்தாலும் வேதம் சொன்னதையே நம்பிக் கொண்டு... அதில் நல்லவை, கெட்டவை எது என்பதை அறியாமல் அப்படியே பின்பற்றுவது (`வேத ப்ராமாண்யம்’).

2. கஸ்யமிது கர்த்வாஹா...அதாவது நாம் எல்லோரையும் ஒருத்தன்தான் படைத்தான். அவன்தான் நமக்கு கர்த்தன், அதாவது காப்பாளன் என சும்மா நம்பிக் கொண்டிருப்பதால் மனிதன் ஜடமாகிறான்.

3. ஸ்நானே... இது ரொம்ப முக்கியமான வார்த்தை. சாதாரண காலை வேளைகளில் நாம் ஸ்நானம் செய்வது உடம்புக்கும், மனசுக்கும் புத்துணர்ச்சி கொடுப்பதற்காகவும், ஆரோக்கியத்துக்காகவும் தான். ஆனால்... இந்த குளிக்கும் விஷயத்தை கூட்டமாக சேர்ந்து போய் ஆற்றில் குளிக்க வைத்து அதற்கு புனித நீராடல் என்றும் தீர்த்தவாரி என்றும் பெயர் கொடுத்து தண்ணீருக்கே மதச் சாயம் பூசி விட்டார்கள்

சாயம் பூசினால் தண்ணீரில் போய் கழுவலாம். தண்ணீருக்கு சாயம் பூசிவிட்டால்...?

ஆடி அமாவாசை, தை அமாவாசை, மஹாலய அமாவாசை, மகாமகம் என்ற சில நாள்களை காரணம் காட்டி... கூட்டம் கூட்டமாக போய் ஆற்றுக்குள் இறங்கி, குளத்துக்குள் இறங்கி தீர்த்தமாடுகிறார்கள். தங்களது அழுக்கை கழுவுகிறோம் என்று சொல்லிக் கொண்டு, நதிகளையும், குளங்களையும் அழுக்காக்கி விடுகிறார்கள்.

இதுபோன்று அன்றாட ஆரோக்கியப் பணிகளை குளியல் செய்வதில் மதத்தை சம்பந்தப்படுத்துவதால் மனிதன் ஜடமாகிப் போனான்.

4. அடுத்ததாக ஜாதிவாத அவலேபஹ...அதாவது இவன் உயர்ந்த ஜாதி, இவன் தாழ்ந்த ஜாதி, இவன் தோள் பட்டையிலிருந்து பிறந்தான். அவன் தொடையிலிருந்து பிறந்தான். எனவே, இவனும் அவனும் ஒன்றாக முடியாது. இவன் கும்பிடும் இடத்தில் அவன் வரக்கூடாது. இவன் வசிக்கும் பகுதியில் அவன் நுழையக்கூடாது என `ஜாதிவாதம்’ சொல்லி பல கூடாதுகளை உத்தரவாகப் பிறப்பித்துள்ளவனும் அதை பின்பற்றுகிறவனும் மனிதனே அல்ல ஜடம்மதான். ஒன்றுக்கும் உதவாத ஜடம்தான்.

5. சந்தாபாரம் மனிதன் ஜடமாய் போய் விட்டதற்கான அடுத்த `தகுதி’ இது.அதென்ன?

இன்றும் சாதாரணமாக சாலைகளிலேயே நாம் பார்க்கிறோம். பலசாலியான ஒருவன்... குடும்பம் குட்டியோடு பக்திமானாக ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாகப் போய் சாட்டையால் தன்னைத்தானே அடித்து துன்புறுத்திக் கொள்கிறான். முதுகு, மார்பெல்லாம் ரத்தக் கோடுகள் வழிகின்றன. கேட்டால் கோயிலுக்கு, எல்லாம் வல்ல கடவுளுக்கு வேண்டுதல் என்பான். நாக்கில் அலகு குத்திக் கொண்டு, ரத்தம் வழிய ஊர்வலம் வருகிறான்.

இதுபோல கடவுள் பெயரைச் சொல்லி... உடல் ரீதியாக தன்னைத்தானே நீ உன்னை வருத்திக் கொள்வாயானால் நீ மனிதனே அல்ல ஜடம்தான். இவைகள்தான் அந்த சமஸ்கிருத ஸ்லோகத்தில் சொல்லப்பட்டுள்ள விஷயங்கள்.

எல்லாவற்றிலும் சமஸ்கிருதமே இருக்க விரும்பும் இன்றைய அர்ச்சகர்கள் சிலரிடம் போய்... `இந்த ஸ்லோகத்தை சொல்லி பெருமாளுக்கு ஒரு அர்ச்சனை பண்ணிக் கொடுங்கோ’ என்றால் `பேஷாக பண்ணித் தரேன்’ என்பார்கள். ஏனென்றால்... அவர்களுக்கு வடமொழி அறிவு அந்த நிலையில் தான் இருக்கிறது.

சமஸ்கிருதத்தில் சொன்னால் தான் ஒத்துக்கொள்கிறேன் என்பவர்கள்.... தர்மபாலர் என்பவர் எழுதிய `பிரமாண வார்த்திகம்’ என்னும் புத்தகத்தில் உள்ள மேற்கண்ட சமஸ்கிருத ஸ்லோகத்தை ஏற்றுக் கொள்வார்களா? முடியாது என்று சொல்வார்களே என்றால் ஏன்?

சமஸ்கிருதம் தேவ பாஷையாயிற்றே. அதில் சொன்னால் தெய்வமும் சொன்ன மாதிரியாயிற்றே.

ஒன்றைத் தெரிந்துகொள்ள வேண்டும். மொழி என்றால் அது கருவி. மனுஷாள் பேசிக் கொள்ள பயன்பட வேண்டியதுதான் மொழியே தவிர, அது ஒருவரை ஒருவர் ஏசிக்கொள்ள பயன்படக் கூடாது.

இது தாழ்ந்த மொழி, இது உயர்ந்த மொழி, இது தெய்வ மொழி... இது அசுர மொழி என்றால்... அந்த மொழியே நம்மைப் பார்த்து திட்டும். இதை விளக்கத்தான் தர்மபாலரின் ஸ்லோகத்தை சொன்னேன்.- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி - 72. பிராமணர்கள் தமிழகத்திலே வாழக்கூடாதாம்.? பிராமணர்கள் சமஸ்கிருதம் தவிர வேறு பாஷை எதுவுமே பேசினால் பாவம் . பிராமணர்கள் வாழ வேண்டிய பகுதி ஆப்கானிஸ்தானாக இருக்கிறது. தமிழா, வேதம் உன் தாய்மொழியை கெட்டது , உன் தாயை கெட்டவள் என்கிறது. வேதம் சொன்ன எல்லாவற்றையும் செய்வாயா?

பகுதி 74–75. தமிழர்கள் விரதம் இருக்கக்கூடாது. சூத்ரச்சிகளாகவே கருதப்படும் அனைத்துப் பெண்களும், சூத்ரர்களும் (தமிழர்கள்) விரதம் இருக்கக்கூடாது. விரதம் பற்றிய உண்மைகள் மலையேறி விட்டன.

No comments:

Post a Comment