இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

பிராமணிசம் தேசதர்மத்துக்கு புறம்பானது. இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100 - 3


ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

மதமென்ற‌ பெயரால் அழியாதே.

மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

பிராமணத்துவத்தை (இந்துதுவம்) பின்பற்றினால் அதில் சூத்திரர் , பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணத்துவம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 100-3.

இப்போது நம் தேசத்தில் சட்ட பூர்வமாக தீண்டாமை ஒழிக்கப்பட்டு விட்டது. ஆனால் ஆகமரீதியாக இன்னமும் இது உயிர் வாழ்ந்து வருகிறது.

ப்ராமண்யத்தின்படி பிராமணன்தான் தெய்வம். இது இப்போதைய நமது தேச தர்மத்துக்கு முரணானது.

If you follow Bhraminism, there is Sutra and Punchamas. So, according to constituion Bhraminism is antilaw. பிராமணிசத்தை பின்பற்றினால் அதில் சூத்திரர், பஞ்சமர் என இனபிரிப்புகளை அடக்கியுள்ளது. ஆகையால் தேசிய அமைப்பு சட்டத்தின் பிரகாரம் பிராமணிசம் தேசிய அமைப்பு சட்டத்திற்கு முரணாணது.

அதனால்... மநுதர்மத்தை பின் தொடர்ந்து செல்லும் பிராமணீயம் (நன்றாக புரிந்து கொள்ளவேண்டும்.நான் சொல்வது கொள்கை தத்துவத்தை ) என்பது நமது அரசியல் தர்மத்துக்கு மட்டும் அப்பாற்பட்டது.

அதனால் All are equal என்ற தர்மம்தான் இப்போது நம் மதத்தை காப்பாற்ற ஒரே வழி.

விவேகானந்தர் சிகாகோ மாநாட்டில் ஹிந்து தர்மத்தைப் பற்றி பேசிப் புகழ் சேர்த்துவிட்டு... சென்னை வந்தபோது அவர் ஆற்றிய உரையில் சிலவற்றை உங்களுக்குத் தருகிறேன்.

“இளைஞர்களே... இதை நினைவில் கொள்ளுமாறு தனிப்பட்ட முறையில் உங்களை கேட்டுக் கொள்கிறேன். இந்திய ஆன்மிகச் சிந்தனைகளால் உலகத்தை நாம் வெல்லவேண்டும். ஆன்மிகச் சிந்தனைகள் என்று நான் கூறியது... உயிருணர்வு அளிக்கக்கூடிய கோட்பாடுகளையே தவிர...நாம் நெஞ்சோடு நெஞ்சாக இறுகப்பிடித்துக் கொண்டிருக்கிற மூட நம்பிக்கைகளை அல்ல.

கண்ட கண்ட மூடநம்பிக்கைகளை எல்லாம் மதம் என்ற பெயரில் அனுமதித்து தன்னைத்தானே பாழ்படுத்திக் கொண்டிருக்கிற மூளையிடம் நாம் எச்சரிக்கையாக இருக்கவேண்டும்.

இந்த மூடநம்பிக்கைகளின் பின்னால் ஓடாதீர்கள். அதைவிட நீங்கள் உறுதியான நாஸ்திகர்கள் ஆகிவிடுங்கள் இது உங்களுக்கும் நல்லது. உங்கள் இனத்துக்கும் நல்லது...’ என்று மதராஸ் ராஜதானியில் பேசினார் விவேகானந்தர்.

இது ‘இளையபாரதமே எழுக’ என்று ராமகிருஷ்ணா மடம் விவேகானந்தரின் சென்னை சொற்பொழிவுகளை வெளியிட்டுள்ள புஸ்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

வேதம் வகுத்த இயற்கை வழிபாட்டு நெறிமுறைகள் லோகசேமத்துக்கே

‘இந்தா பால் இதைக் குடித்து வளமோடு வாழு...’ என்கிறது வேதம். மதம் என்னும் கோப்பையில் நல்லபாலை ஊற்றி அருந்துங்கள்... லோக சேமம் பெறுங்கள்!.

உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு
சமர்ப்பணம். --
அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் .

(இந்து மதம் எங்கே போகிறது? நிறைவு)

--------------------

இந்து மதத்தின் பேரால் ஏனைய சாதியினரை அடக்கவும், ஒடுக்கவும், அறியாமையில் ஆழ்த்தவும், அவமதிக்கவும் ஒரு குறிப்பிட்ட சாதியினரால் பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி மூடநம்பிக்கைகளுக்கு எதிராகக் குரல் எழுப்பி

 “சுருதி ஸ்மிருதி இதிஹாஸ”, “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்”,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய”,
டாக்டர்”
 அக்னிஹோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்

தனது 100ஆவது வயதில்
“உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடு எழுதியுள்ள

“இந்து மதம் எங்கே போகிறது? "

இங்கு ப‌திவு செய்ய‌ப்பட்டுள்ள‌து.
********************

அவரது 100வது வயது வரையில்
சுருதி ஸ்மிருதி இதிஹாஸ” , “புராண மீமாம்ஸாத்வாய ஸுத்ர விஷாரத்” ,“வேதார்த்த ரத்னாகர வேதவாஸஸ்பதி”, “மஹோ பாத்யாய”, “மகா மஹோ பாத்யாய” “டாக்டர்” “
அக்னிஹோத்திரம் ராமானுஜ‌ தாத்தாச்சாரியார்

என்று நீட்டி மூழக்கி போற்றிப் புகழ்ந்தார்கள். இந்துமத சடங்குகளையும் அதில் அடங்கியுள்ள மூட நம்பிக்கைகளையும் அவர் அம்பலப்படுத்தியதால் இப்போது அவர் நினைவே அவர்களுக்கு வேம்பாகக் கசக்கிறது.

சூட்சுமம் புரிகிறதா?
*****************

No comments:

Post a Comment