இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது.

அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 48 - 1

இத்தொடரில் முதல் சில அத்தியாயங்களில் நான் சொன்னது ஞாபகம் வருகிறதா? வேத காலத்தில் ஆரியர்கள் இந்தியாவுக்குள் வரும்போது உடன் வந்த பெண்களின் எண்ணிக்கை மிகக்குறைவு என்று குறிப்பிட்டிருந்தேன். இன்னும் சொல்லப்போனால் பெண்களே வரவில்லை என்றும் கருதலாம்.

அப்படிப்பட்ட நிலையில்...

இங்குள்ள எல்லா பெண்களையுமே சூத்திரர்களாக பாவித்தது மநு. இன்றுகூட... என்னை சந்தித்து வேத விளக்கங்கள் பெற வரும் பிராமணப் பெண்களிடம் `நீ சூத்ரச்சி... உன் அம்மா சூத்ரச்சி... உன் பெண்ணும் சூத்ரச்சி...’ என்று கூறுவேன்.

உடனே அவர்கள் மெல்லியதாக கோபப்பட்டு `எப்படி?’ என்பார்கள். நமது ஸ்மிருதியிலேயே இதுதான் விதி என சொன்னதும் `அப்படியா?’ என்ற ஒரு வார்த்தையோடு அடங்கிப் போய் விடுகிறார்கள்.

ஆக... மநு-ப்படி பெண்கள் எல்லாருமே சூத்ர ஜாதிதான். பிராமணப் பெண்கள், வைஸியப் பெண்கள், க்ஷத்ரியப் பெண்கள், சூத்திரப் பெண்கள் என்றெல்லாம் பேதம் கிடையாது. அதனால்... சூத்ரன் வெளியே உழைப்பதைப்போல சூத்ரச்சியான பெண்கள் வீட்டுக்குள்ளேயே உழைக்கவேண்டும்.

அதாவது...
``ஸ்த்ரீனாந்த சூத்ர ஜாதினாம்...’’
பெண்கள் அனைவரும் சூத்ர ஜாதி.
`நஸ்த்ரீ சூத்ர வேத மத்யதாம்...’

அதனால்... பெண்களும், சூத்ரர்களும், வேதங்களை ஓதக்கூடாது. வேத ஓசையை கேட்கக்கூடாது. யாகங்கள் நடந்தால்... அதில் ஓதப்படும் வேத மந்த்ரங்களை கேட்காமல் இருப்பதற்காக புடைவையால் காதை மூடிக் கொள்ளவேண்டும்.

பெண்களுக்கு கல்விக்கான வாய்ப்பே கிடையாது. அவர்கள் வெளியில் போகவும் முடியாது அப்புறம்...?

``ஸ்த்ரீதாம் உபயநயனஸ்தானே
விவாஹம் மநு ரப்ரவீத்...’’

அதாவது பெண்களுக்கு உபநயனம் உள்ளிட்ட எவ்வித மந்த்ர சம்ஸ்காரங்களும் கிடையாது.- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 47. பிராமண பெண்ணும் ஒரு சூத்திரச்சிதான். அதனால் அவளுக்கு வேதத்தை தொட , படிக்க, வேதம் கண்பட, ஓதும் ஓசை காதில் பட அருகதை கிடையாது. கல்யாணத்தின் போது சீதைக்கு வயது ஆறேதான்.

பகுதி 48 - 2 பூணூல், உபநயனம் என்றால் என்ன‌? மந்த்ரங்கள்ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

No comments:

Post a Comment