இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

பார்வதி குளிப்பதை மறைந்து பார்த்த சிவன். விநாயகன் பரமசிவன் தான்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள் தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன.

விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன் தான்.

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 56 - 1.

முருகன் என்ற பேருக்கும் ஸ்கந்தன், சரவணன் என்ற பேர்களுக்கும் இடையே நிலவும் மொழி, கலாச்சார வேறுபாட்டைப் பார்த்தோம்.

அப்படியென்றால் முருகனின் அண்ணான விநாயகர், கணபதி யார் என்கிறீர்களா? அண்ணன், தம்பி, தங்கை, அக்கா, மச்சினன் என தெய்வங்களுக்கிடையே உறவு வைத்ததெல்லாம் Humanistic Worship -ஆல் வந்தது.சரி... கணபதிக்கு வருவோம்.

கணபதி முருகனின் அண்ணன், சிவனின் மூத்த மகன் என்றுதான் பரவலாக நம்மவர்கள் பேசி வருகிறோம். நம்பி வருகிறோம்.

ஆனால்... சமஸ்கிருதக் கதைகள் இதற்கும் வேட்டு வைக்கின்றன. என்ன கதை? பரமசிவனின் மனைவியாகிய பார்வதி, ஒருநாள் ஸ்நானம் பண்ணிக் கொண்டிருக்கிறாள்.

குறும்பு, லீலைகள் என்பவையெல்லாம் மனிதர்களுக்கு கற்றுக்கொடுத்ததே தெய்வங்கள்தானோ என நினைக்கும் அளவுக்கு பகவத் சிலுவிஷமங்கள் புராணங்களில் நிறைந்து கிடக்கின்றன

சரி... சிவன் இங்கு என்ன செய்கிறார்? பார்வதி தேவி தண்ணீர் கொட்டிக் கொட்டி குளித்துக் கொண்டிருக்கிறாள். சிவனுக்கு ஒரு நப்பாசை. நம் தேவி எப்படி குளிக்கிறாள் என்பதை அவள் அறியாமல் பார்க்கவேண்டும். அதாவது... ஒருபெண் குளிப்பதை அவளுக்குத் தெரியாமல் இன்னொரு ஆண் (கணவனே என்றாலும் தெரியாமல் பார்க்கிறானல்லவா?) பார்த்தால் எப்படி இருக்கும் என்பதை பரீட்சித்துப் பார்க்க ஆசைப்பட்டார் சிவன்.

அதுபோலவே பார்வதி தேவி ஜலக்கிரீடை செய்யும்போது மறைந்து மறைந்து நின்று தேவியின் தரிசனத்தை அவருக்கே தெரியாமல் பெற்றுக் கொண்டிருந்தான் பரமசிவன்.

‘சகல லோகங்களையும் கண்காணிக்கும் சக்தி பெற்ற’ பராசக்திக்கு தான் குளிப்பதை இரண்டு கண்கள் திருட்டுத்தனமாக பார்ப்பது தெரிந்திருக்காதா என்ன?உணர்ந்தாள்.

தான் தன்னந்தனியாக குளித்துக் கொண்டிருப்பதை யாரோ ரசம் சொட்ட பார்த்துக் கொண்டிருப்பதை தன் சக்தியால் தெரிந்துகொண்ட பார்வதி திடுக்கிட்டாள். பெண் தெய்வம் என்றாலும் பெண் தானே?

உடனே... அவசரமாக தனது கச்சைகளையும், வஸ்திரங்களையும் பதறியபடியே உடுத்திக்கொண்ட பார்வதி, தன்னைப் பார்த்தவனை தேடினாள். டேய்... யாரங்கே? பராசக்தியின் ஸ்நானத்தை ஒளிந்து பார்க்கும் அளவுக்கு துணிச்சல்காரன் யார்?

என கோபத்தில் பார்வதிதேவி சத்தம்போட... பட்டென்று வெளியே வந்த சிவன்... ‘தேவி... யாம்தான் ஒரு சின்ன திருவிளையாடல்... அதற்குப் போய் ஏன் இப்படி கோபப்படுகிறாய்? சாந்தம்... சாந்தம்...’ என்கிறார்.

எது ஸ்வாமி திருவிளையாடல் ஒரு பெண் குளிப்பதை இன்னொரு ஆண் மறைந்து நின்று கண்களால் சுகிப்பது உங்கள் திருவிளையாடல் என்றால்... என் திருவிளையாடலையும் கொஞ்சம் பாருங்கள்.

சக்தியும் தன் திருவிளையாடலை அரங்கேற்றினாள். “மனைவியென்றும் ‘பாராமல்’ நான் குளித்ததைப் பார்த்த நீர்... யானைத் தலையனாகவும், மனித உடம்பாகவும் மாறக் கடவுவது...” என கோபத்தால் சாபமிட்டாள்.

அந்த க்ஷணத்திலேயே பரமசிவன் அவ்வாறே ஆனார். அதாவது யானை முகத்துடனும் மனித உடம்பாகவும் புது வடிவம் பெற்றார். அதாவது... விநாயகன் வேறு யாரும் அல்ல. பரமசிவன்தான் என்கிறது இக்கதை.

இன்றும் ஆற்றங்கரை, குளத்தங்கரைகளில் எல்லாம் விநாயகர்கள் நிறைந்திருப்பதை பார்த்திருப்பீர்கள்.அது எதற்கு என்றால்...?

‘டேய்... குளிப்பது உன் பத்தினியாக இருந்தாலும் எட்டிப் பார்க்காதே. பார்த்தால் என் கதிதான் உனக்கும்’ என்று பரமசிவன் ஆண்களிடம் சொல்வதற்குத்தான். இது கதை.

அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 55 சிவனின் சிந்திய‌ இந்திரியம். முருகன் யார்? முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.

பகுதி 56-2. வேதப்படி கணபதி கடவுள் இல்லை.?? மிருகங்களை வழிபடுதல்.

No comments:

Post a Comment