
இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ? இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம்.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 54.
பெண் தெய்வங்கள் இந்த பாடுபடுவது வைஷ்ணவ சம்ப்பிரதாயத்தில் மாத்திரம்தானா? சைவத்தில் எப்படி? உங்களுடைய இந்தக் கேள்விக்கு பதில்கூற நாம் சிதம்பரம் வரை போகவேண்டும். சிதம்பரம் நடராஜ பெருமானை எல்லாரும் அறிந்திருப்பீர்கள். உங்களில் சிலபேர் அவரது ஆலயத்துக்குச் சென்று தரிசனமும் செய்திருப்பீர்கள்.
இந்த ஸ்தலத்துக்கு விசேஷமே சிவபெருமானான நடராஜ பெருமானின் நர்த்தனம் தான். ஒருநாள்... மிகப்பழைய காலத்தின் அழகான நாள்... சிதம்பரத்தில் ஒரு போட்டி நடனப்போட்டி. கலந்து கொள்பவர்கள் யார், யார்?
பரமசிவன், தில்லை காளி. யாரிந்த தில்லை காளி? சிவபெருமானுடன் நடனப்போட்டி போட வந்தவள். மிகச் சிறந்த நர்த்தன நாட்டியக்காரி. இயற்கையிலேயே ஆண்களை விட பெண்கள்தான் நடன அசைவுகளிலும் இசைத் துடிப்புகளிலும் அழகாக இழைவார்கள். புருஷர்கள் ஆடும்போது ஏற்படும் ரசனையை விட ஸ்தீரிகள் நர்த்தனமாடும் போது அதிகபட்ச அழகு மிளிரும். இது இயற்கையின் ஏற்பாடு. அதிலும், தில்லைகாளி நடனப்பயிற்சி பெற்றவள் பின் சொல்ல வேண்டுமா?
அவளது சலங்கை ஒலி கேட்டு காற்றே ஆடிப்போகும். அவளது நடனத்துக்குப் போட்டியாக ஆட வருபவர்களே ஆடிப்போய் விடுவார்கள். இப்படிப்பட்ட தில்லை காளிதான் சிவபெருமானின் நடனப் போட்டிக்கு வந்தாள். ஏற்பாடுகள் நடந்தன.
இரண்டு மேடைகள் எதிரெதிரே. அதில்தான் சிவபெருமானும் காளியும் நடனமாட வேண்டும். கூட்டம் கூடியிருக்கிறது. ஆட்டம் தொடங்க இருக்கிறது. போட்டியில் யார் ஜெயிப்பார்கள் என கூடியிருந்தவர்களிடையே ஒரு கிசுகிசு நுழைந்து நெளிந்து கொண்டிருந்தது.
தொடங்கியாகி விட்டது. தனது ஆர்ப்பாட்டமான அசைவுகளோடு ஆட ஆரம்பித்தாள் காளி. அவளது பாதங்கள் சலங்கைகளை ஒலியோடு சுருதி சேர்த்தன. காளியின் கைவிரல்கள் காற்றில் நடனச் சித்திரங்கள் தீட்டின.
மறுபக்கம் சிவன் தனது தாண்டவத்தை ஆரம்பித்தார். சிவனின் தாண்டவத்தை அய்ந்து வகையாக அவரது அடியார்கள் போற்றுவர். அற்புத தாண்டவம், அநவாத தாண்டவம், ஆனந்த தாண்டவம், பிரளய தாண்டவம், சங்கார தாண்டவம், இங்கே சிவன் ஆடியது ஆனந்த தாண்டவம். காளியின் நடன அசைவுகளும் நர்த்தன நுட்பங்களும் பார்ப்பவர்களை வசீகரித்தன.
சிவனின் தாண்டவம் காளியின் தாண்டவம் முன்பு தோற்றுவிடும் நிலைமை...பார்த்தார் சிவபெருமான், ஒரு பெண்ணிடம் நான் தோற்பதா?
அவள் கால்கள் செய்யும் நடனம் அவருக்குள் கலவரம் செய்தது. ‘ஆஹா... சிவபெருமானை தில்லை காளி ஜெயித்துவிட்டாளே’ என குரல்கள் கிளம்பப் போகிற நேரம்... இனியும் இவளை ஆடவிடக்கூடாது என முடிவுகட்டிய சிவன்... தன் இடதுகாலை சற்றே தூக்கினார்.
நடனத்தின் ஒருவகைதான் என நினைத்து ஈடுகொடுத்து ஆடிக்கொண்டிருந்தாள் காளி. சிவனின் இடது கால் இன்னும் எழும்பியது, ஆமாம்... இன்னும் உயரமானது. கொஞ்சம் கொஞ்சமாக இடது காலை விலக்கி எடுத்துச் சென்ற சிவபெருமானின் திட்டம் பலித்தது.
வலதுகாலை ஊன்றி இடது காலை உயர விலக்கிக்கொண்டே போக... சபையே ஒருகணம் அதிர்ந்தது. ஏன்?...வேண்டுமென்றே சிவனின் சிஷ்டம் (அதாவது ஆணுறுப்பு) வெளியே தெரியும்படியானது. இதற்காத்தான் இடது காலை விலக்கி தூக்கியிருக்கிறார்
சிவன்.வெற்றியின் விளிம்பில் நடனமாடிக் கொண்டிருந்த தில்லை காளி இக்காட்சியை பார்க்கவேண்டிய கட்டாயம் நேர்ந்துவிட்டது. பொட்டென அவளது நர்த்தனம் நின்றது தலைகுனிந்தாள். தனக்கு முன் ஒரு ஆண் இப்படிப்பட்ட கோலத்தில் நிற்பதை எந்தவொரு பெண் பார்த்துக்கொண்டே தன் வேலையை தொடருவாள்? காளியின் நர்த்தனம் நின்றதா? நிறுத்தப்பட்டது.
ஆனால், சிவபெருமான்... தொடர்ந்து தாண்டவமாடிக்கொண்டே இருந்தார். ஆக... சிவன் ஜெயித்தார் என்றாகிவிட்டது. வலதுகாலை ஊன்றி இடது காலை தூக்கி சிஷ்டத்தை (ஆணுறுப்பை) வெளிக்காண்டு வந்து... ஜெயித்துவிட்டார். இதுதான் சிதம்பர ரகசியமோ என்னவோ?
‘இப்படி’ ஜெயித்த பிறகுதான் சிவனுக்கு நடராஜன் என்னும் நாமமே உண்டானது.
இதற்கு நடனத்தில் ராஜா என்று அர்த்தம். இதை நானாகச் சொல்லவில்லை. நடராஜ மகாத்மியம் என்னும் புஸ்தகத்தில் சொல்லப்பட்டிருக்கிறது. அதாவது சிதம்பரம் சொல்லும் செய்தி என்ன? ஆணிடம் பெண் போட்டி போடக்கூடாது. அப்படியே திமிராக போட்டி போட்டாலும் ஜெயித்துவிடக்கூடாது. அவளை தோற்கடிக்க ஆண் என்ன வேண்டுமானாலும் செய்யலாம். தோற்றவள் காளி.
நான் ஏற்கெனவே சொல்லியிருக்கிறேன். காளி... ஆகமத்துக்கு அப்பாற்பட்ட காவல் தெய்வம். இங்கேதான் முக்கியமான இன்னொன்றைக் கவனிக்க வேண்டும். “Siva is a hig class God. „But Kali is low class rural God” என்று சொல்லி காளி ஒதுக்கப்பட்டாள். எங்கே...?
இன்னமும் நீங்கள் சிதம்பரம் நடராஜர் கோயிலுக்குப் போய் தில்லை காளி எங்கே என்று கேளுங்கள். கோயிலுக்கு வெளியே வடக்கு நோக்கி கை காட்டுவார்கள்.
கிட்டத்தட்ட 1 கிலோமீட்டர் தூரத்தில் சிதம்பரத்தின் எல்லையில் ஒரு சின்ன கோயிலுக்குள் கோபமாக உட்கார்ந்திருப்பாள் காளி.
‘அதாவது ஆணுக்கு பெண் போட்டி போட முடியாது. போட்டியிட்டால் இப்படித்தான் விரட்டப்படுவாள்’ என்று நமக்கு நடராஜர் மூலம் சொல்லாமல் சொல்லிக் கொண்டிருக்கிறாள்.
இன்னும் சிதம்பரம் கோயிலில் அர்ச்சனையில் ஈடுபடும் தீட்சிதர்கள் அக்காளியை திரும்பிக்கூட பார்ப்பதில்லை.
இவ்வாறு தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்... பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது. அதோடு வர்க்கமொழி பேதமும் பின்பற்றப்பட்டிருக்கின்றன.-- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
வருகிறது ...
பாகம் 56 ல் பார்வதி குளிப்பதை திருட்டுத்தனமாக பார்த்த சிவன்.!!!! முடிவு?? விநாயகர் . யானை தலை ஏன் ?
பகுதி 53. பகவானின் சாப்பாட்டுப் பட்டியலை பார்த்தீர்களா?
பகுதி 55 சிவனின் மன்மத புயல் கிளம்ப பார்வதி விலகிக் கொள்ள... சிவனின் உயிர்த்துளிகள் சேரவேண்டிய இடத்துக்குப் போய்ச் சேரவில்லை.. சிவனின் சிந்திய இந்திரியம். முருகன் யார்? முருகன் பரமசிவனுக்கும், பார்வதிக்கும் பிறந்தவர் இல்லை.
மூட நம்பிக்கைகளை தோலுரித்துக் காட்டும் தங்கள் பதிவு இனிமை.
ReplyDeleteloosu mathiri karpanai kathai ezhuthathe
ReplyDelete//தெய்வங்களுக்கிடையிலேயே ஆண்... பெண் பேதம் போற்றி வளர்க்கப்பட்டிருக்கிறது// even God Has SEX?? what a stupidity...
ReplyDeleteகடவுளாக மக்கள் வழிபடும் சிவன் இப்படி ஒரு மோசமான செயலைசெய்தார் யென்றால் அவரை வணங்கிக்கொண்டு இருக்கும் மற்ற மக்களுக்கு அவர் ஒரு ஒதாரனமாக ஆகிவிட்டார் ..பெண்களை போதைப்பொருளாக நினைத்து அவர்களது பலவீனத்தை காட்டி தனது ஆண் உறுப்பைக் காட்டி ஜெயித்த அவரது அடிவருடிகளான பிரேமானந்தாமுதல்,நித்யானந்தாவரை இன்று தவறுகள் செய்கிறார்கள் யென்றால் அவர்கள் பின்பற்றும் கடவுளே இந்த தவறுகளுக்கு சர்டிபிகாடே கொடுத்து உள்ளார் ..என்டவே இதுபோன்ற போலி மதத்தை இனியும் நாம் பின்பற்றவேண்டாம் உண்மையான இறைவனை நாம் தேடுவோம் நிட்சயமாக நமது தேடலுக்கான விடை கிடைக்கும்
ReplyDeleteசுப்ரமணியன்
hahahaha sema comedy sivan than aanuruppai kaati jeikkavillai nandraga purindhu kollungal sivan kaalai mele thooki aadivitan anal kaaliyal appadi kalai mele thooki aadamudiyadhu adhanal kaali tholvi kandale thavira sivanin aanuruppai parthu alla nandraga purindhu kollamal thavaraga eludhadhirgal
ReplyDeletekaali thanadhu kalai mele thooki aada mudiyadhadhal tholivi kandale thavira sivanin aanuruppai parthu alla pengalal kalai mele thooki adamudiyadhu enbadhe unmai siva thanadhu aanuruppai kaati thaan jeikka vendum enbadhu ilai mulumaiyaga purindhu kollamal kandadhai eludhadhirkal
ReplyDeleteKaalai thookkinal jeikkalaam endraal,, sivanai jeikka kaali thevai illai.. Oru circus girl podhume?
ReplyDeletesaivama ,vainavama athuthanea ungal nokkam
ReplyDeleteaanukkum pennukkum ulla veatrumai unarthavea siva thandavam
aathi yogi is great
பெண்ணுக்கு நிகராக ஆட நினத்தபொழுதே சிவன் தன் மரியாதை இழந்துவிட்டான்.
ReplyDelete