இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும். சளி பிடிக்கும்.

அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான்.

எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள்.

பகவானுக்கு குளிரும். அதனால் குளிர்காலத்தில் கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை.
இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 52 - 2

பிராமணர்கள். அதன் பிறகு சிலைக்கு நைவேத்யம் வழங்கும் வழக்கம் வருகிறது.

அதாவது ஆகமத்துக்கு அப்பாற்பட்ட தேவதைகளையும் பூஜிக்கத் தொடங்கிய பிராமணர்கள் நைவேத்யத்தை கட்டாயமாக்கினார்கள்.

அதாவது... பகவானுக்கு பசிக்கும். அவன் சாப்பிட்டால்தானே நமக்கு அனுக்ரஹம் செய்வான். எனவே, அவனுக்கு, அவளுக்கு (தெய்வங்களுக்கு) தினமும் முறையாக நைவேத்யம் படைக்கவேண்டும் என்றார்கள்.

இங்கே ஒரு முக்கியமான விஷயம்... தினமும் பகவானுக்கு வழக்கமாகப்படைக்கும் நிவேதனம் வேறு. விசேஷ காலங்களில் ஒவ்வொரு விசேஷத்துக்கும் ஒவ்வொரு வகை நைவேத்யம்.

பெருமாள் கோயில்களில் சொல்கிறேன் கேளுங்கள். காலையில் தினமும் நடக்கும் காலசந்தி என்ற பூஜைக்கு தயிர்ச்சாதம், மதியம் உச்சிகாலம் எனப்படும் பூஜைக்கு சாதம், குழம்பு, கூட்டு, பொரியல், இத்யாதிகள். இதற்குப் பெயர் அலங்காரத்தளிகை.

அதாவது நாம் சாப்பிடும் மதியச்சாப்பாட்டை பகவான் சாப்பிட்டால் அதற்குப் பெயர் அலங்கார தளிகை. பெருமாள் வெளியே வாகனங்களில் சுற்றி விட்டு கோயில் திரும்புவார் என்று சொன்னேன் இல்லையா?

அப்போது ஊரெல்லாம் திருஷ்டி போட்டிருக்கும் என கருதப்பட்டு... பெருமாளுக்கு திருஷ்டி கழிப்பதற்காக ‘திருவந்தி காப்பு’ என்றொரு விசேஷம்.

இதில் பால், பழம், பயத்தம்பருப்பை ஊற வைத்து செய்த வடைப் பருப்பு, தோசை எல்லாம் நைவேத்யம் செய்து திருஷ்டி கழிப்பார்கள்.

இதுதவிர அமாவாசை, ஏகாதசி காலங்களில் ஒரே நைவேத்யம் உப்புமா. இதுதவிர அய்ப்பசி மாதம் மூல நட்சத்திரம் அன்று... பால் புடலங்காய்... அதாவது பாலில் புடலங்காயை ஊற வைத்து செய்யப்படும் இனிப்பான உணவு.

வைகாசி விசாகம் அன்று பால்மாங்காய். இதுவும் அதுபோலவே ஓர் இனிப்பு. நாச்சியார் திருமொழி சாத்துமறை திருநாளன்று அக்காரவடிசில் அதாவது சர்க்கரைப் பொங்கல். இதுதவிர புளியோதரை போன்ற புகழ் பெற்ற உணவு வகைகள் திருவிழாக்களில்.

பெருமாள் கோயிலைப்போன்று சிவன் கோயில்களில் உணவுக்கு இந்த அளவு முக்கியத்துவம் இல்லை. அங்கே ‘சம்பா’ சாதம் தான் முக்கியம். அதாவது மிளகு, ஜீரகம், பொடியோடு நெய் ஊற்றி சாதம் பிசைந்து படைப்பார்கள்.இவ்வளவு கேட்டு உங்கள் நாக்கில் உமிழ் நீர் ஊறுகிறதா? இவையெல்லாம் நிர்மால்யம். அப்படியென்றால்...?
-- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)
.....................

பகவானுக்கு குளிரும் அதனால் குளிர்காலத்தில் கம்பளி ஆடை. கடவுள் சிலைகளுக்கு கம்பளி ஆடை

பூரி, டிச.15-  ஒரிசா மாநிலம் பூரி நகரில் தற்போது கடுமையான குளிர் வாட்டுகிறது. இதைத்தொடர்ந்து அங்குள்ள ஜெகநாதர் ஆலயத்தில் உள்ள ஜெகநாதர், பால பத்ரா, தேவி சுபத்ரா ஆகிய சாமி சிலைகளுக்கு மாலை நேரத்தில் கம்பளி ஆடைகளை கோவில் நிர்வாகத்தினர் அணிவிக்கிறார்கள்.

அதைத்தவிர, ஒவ்வொரு நாளும் சுவாமி சிலைகளுக்கு ஒவ்வொரு நிறத்தில் ஆடைகள் அணிவிக்கிறார்கள். அந்தந்த நாளுக்கு உரிய நட்சத்திர பலனுக்கு ஏற்ப இந்த வண்ண ஆடைகள் தேர்ந்து எடுக்கப்படுகின்றன.

உதாரணமாக புதன் கிழமை நீல நிறத்திலும், வியாழக்கிழமை மஞ்சள் நிறத்திலும், வெள்ளிக்கிழமை வெள்ளை நிறத்திலும், சனிக்கிழமை கறுப்பு நிறத்திலும் கம்பளி ஆடைகள் அணிவிக்கப்படுகின்றன.

கடவுள் சிலைகளுக்கு வண்ண கம்பளி ஆடைகளை அணிவிப்பதால், பக்தர்களும் அதே வண்ணத்தில் ஆடைகளை அணிந்து கோவிலுக்கு செல்ல தொடங்கி விட்டனர்.---- தினத்தந்தி பத்திரிகை 15-12-2010 செய்தி.
SOURCE: http://www.dailythanthi.com/article.asp?NewsID=613852&disdate=12/15/2010  --
...........

கல் சிலைக்கும் சளி பிடிக்குமா?
குற்றால ``சீசன்என்பதால்

குற்றால நாதனுக்கும் அதன் சகதர்மிணி செண்பகக் குழல்வாய் மொழி அம்மைக்கும் தினமும் சுக்குக்காப்பி நைவேத்யம் செய்கிறார்கள், ஏன் தெரியுமா?

இவர்கள் இருவரின் தலையிலும் எந்நேரமும் தண்ணீர் கொட்டிக் கொண்டேயிருப்பதால் சளி பிடித்துக் கொள்ளாமல் தடுக்கவே சுக்குக் காப்பியாம்!

கல் சிலைக்கும் சளி பிடிக்குமா? என்னய்யா, மடத்தனம்?
SOURCE: viduthalai.com. news
------------------------
கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 52. – 1.தெய்வங்களில் மேல்தரம்? கீழ்தரமா ?

1 comment: