இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

தெய்வங்களில் மேல்தரம்? கீழ்தரமா ?

விஷ்ணு, சிவன் உள்ளிட்ட தேவதைகள் வேதம் வகுத்த தேவதைகளாம். மற்ற தேவதைகள் எல்லாம் கிராம தேவதைகளாம். அவை... கீழ்த்தரமான தேவதைகளாம். ஏனென்றால், அவற்றை வணங்குபவர்கள் உழைக்கும் மக்கள், சூத்திரர்கள். அதனால்தான் கிராம தேவதை!

என்னைக் கேட்டால் கிராம தேவதைகள் என்று சொல்வோரை உதைக்கவேண்டும்.

அதென்ன கிராம தேவதை, சர்க்கிள் தேவதை, ஜில்லா தேவதை என நீங்களே வகைப்படுத்துவது...?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி  52. – 1.

வைணவத்தில் பிராட்டி... சைவத்தில் அம்பாள். இந்தப் பெயர் வேறுபாடுதானே தவிர பெண் தெய்வங்களை அடிமையாக வைத்திருத்தலே இரண்டு சமயங்களிலும் பக்தி யுக்தியாக பேணப்படுகின்றன. பெண்கள் சைவம் எப்படி திருவிளையாடல் பண்ணியது என்பதை பிறகு பார்ப்போம்.

அதற்குமுன்... காஞ்சி காமாட்சி, மதுரை மீனாட்சி போன்ற அம்பாள்கள் கோயிலை விட்டு வெளியே வந்து நீங்கள் பார்த்திருக்கிறீர்களா?

இன்றும் ‘அத்வைதம்’ என பேச்சுக்குப் பேச்சு பேசும் காஞ்சி சங்கராச்சாரியார்கள் எங்கெங்கே போய் வருகிறார்கள்? சென்னை, பம்பாய், காசி, டில்லி என டூர் அடித்து கோர்ட் வரைக்கும் போய்விட்டார்கள். ஆனால்... அவர்கள் பூஜிக்கும் காஞ்சி காமாட்சியம்மன் கோயில் பிரகாரத்தைத்தாண்டி வெளியே வந்திருக்கிறாளா என விசாரித்துப் பாருங்களேன்.

இதுபோல் தெய்வங்களிலேயே ஆண் - பெண் ஏற்றத் தாழ்வுகளை ஏற்படுத்தி வைத்திருந்த ஆகம சம்பிரதாயங்கள்... தெய்வங்களில் வர்க்க பேதங்களையும் வகைப்படுத்தி வைத்திருக்கின்றன.

அதென்ன? விஷ்ணு, சிவன் உள்ளிட்ட தேவதைகள் வேதம் வகுத்த தேவதைகளாம். மற்ற தேவதைகள் எல்லாம் கிராம தேவதைகளாம். அவை... கீழ்த்தரமான தேவதைகளாம். ஏனென்றால், அவற்றை வணங்குபவர்கள் உழைக்கும் மக்கள், சூத்திரர்கள். அதனால்தான் கிராம தேவதை!

என்னைக் கேட்டால் கிராம தேவதைகள் என்று சொல்வோரை உதைக்கவேண்டும்.

அதென்ன கிராம தேவதை, சர்க்கிள் தேவதை, ஜில்லா தேவதை என நீங்களே வகைப்படுத்துவது...?

“சமேத விஷ்வா வசஸாபதிந்தவஹா ரெகஹ விபுஹீஅதிதித் ஜனானாம் தம் வர்த்தனிஹீயது வாவ்ருதே ஏகையித் பூரி...”

அந்தந்த பகுதியில் வாழும் மக்கள் அந்தந்த மண்ணுக்கேற்ற வகையில்... தங்கள் வாழ்க்கை முறைக்கு ஏற்ற வகையில் தங்கள் தெய்வங்களை சிருஷ்டித்துக் கொண்டார்கள்.

இது பெரும்பாலும் பெண் தேவதைகளாகவே அமைந்தன. ஏனென்றால்... பெண் வீட்டிலேயே இருந்து சகலத்தையும் கவனித்துக் கொள்வதுபோல பெண் தேவதைகளை நிறுவி வைத்தால் நாம் வெளியே போனாலும் நம் ஊரிலேயே நமது பகுதியிலேயே தங்கியிருந்து பாதுகாக்கும் என்பது வாழ்க்கையிலிருந்து அவர்களுக்குக் கிடைத்த நம்பிக்கை.

அவரவர் பகுதியில் அவரவர் தெய்வத்தை சிருஷ்டிக்கிறார்கள். அதனால் ‘கிராம தேவதை’ என்ற பதமே தவறானது.

முதன்முதலில் வெளிச்சத்தை மனிதன் வணங்கினான் என்று முன்பே பார்த்தோம்.அதேபோல் இருட்டைக் கண்டும் பயந்து வணங்கினான். இருட்டுக்குள்ளும் கடவுள் இருக்கிறது என்று நம்பினான்.

அதுதான் காளி. கருங்கல்லைத்தான் முதலில் காளி என்று வணங்க ஆரம்பித்தான். காளி என்றால் கருப்பு என்று அர்த்தம். பிறகு அந்தக் கரிய கல்... கரிய உருவமானது. காளியம்மாள் ஆனது. பின் காளியாத்தா ஆனது.

இதேபோல் வேளாண் தொழில் செய்து வந்தவர்கள் காளியை பச்சையாக பார்த்தார்கள். பண்பாடு வளர வளர... அவரவர் வாழ்க்கை முறைக்கேற்ப தங்களது தெய்வங்களை வடிவமைத்துக் கொண்டார்கள்.

இப்படிப்பட்ட காளி, மாரி போன்ற தேவதைகள் எல்லாம் ஆகமத்துக்குக் கட்டுப்பட்டவை அல்ல. அதனால் அவை வெளியே வரக்கூடாது என்றெல்லாம் நிபந்தனைகள் கிடையாது.

ஏனென்றால், அந்த தேவதைகள் இருப்பதே... ஊருக்கு வெளியே எல்லைப் புறத்திலே காவலுக்காகத்தானே.பிற்பாடான காலங்களில் இவைகளையும் ஆகமத்துக்கு உட்படுத்தினார்கள் --- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)


கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 51. நள்ளிரவிலும் பிராட்டியை சேரவேண்டும் என்ற ஆசை கடவுள் ரங்கநாதனுக்கு வந்தது. உடனே தன் அங்கத்தை (ஆண் குறி மட்டும் விர்ரென பறந்துபோய்) அனுப்பி ரங்கநாயகி சன்னதிக்குள் சென்று இச்சையை தீர்த்துக்கொண்டு விடுகிறார்

பகுதி 52–2.பகவானுக்கும் பசிக்கும். குளிரும். திருஷ்டி படும்.

No comments:

Post a Comment