இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

பூணூல், உபநயனம் என்றால் என்ன‌? மந்த்ரங்கள்ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

பூணூலை மையமாகவைத்து கயிறுவிட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 48 - 2

உபநயனம் என்பது பிராமண ஆண்களுக்கு நடக்கும் முக்கியமான சடங்கு என்றும், பூணூல் போட்டவன்தான் பார்ப்பனன் என்றும் இந்த நூலை மையமாக வைத்து கயிறு விட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

உண்மையில் பூணூல் என்ற பழக்கமே கிடையாது. முற்காலங்களில் யாகம் பண்ணும்போது வஸ்திரத்தை குறுக்காக அணியவேண்டும் என்ற விதி இருந்தது. வஸ்திரம் சரியாக வரவில்லை என்பதால் அதை சிறிய அளவில் நூலாக்கி போட்டுக் கொண்டார்கள்.

இதை நான் முன்பே கூறியிருக்கிறேன். அப்படியும் யாகம் பண்ணும்போதுதான் அதற்கு வேலையே தவிர மற்ற சமயங்களில் கிடையாது.

பிறகு... இந்த உபநயன சடங்கு எப்படி வந்தது? உபநயனம் என்றால் என்ன? என்னடா இவர்... பெண்களைப்பற்றி சொல்லிக் கொண்டிருக்கும்போது இடையில் ஏன் ஆண்களைப்பற்றி பேசுகிறார் என்று நினைக்காதீர்கள். பெண்கள் சம்பந்தப்பட்ட விஷயம்தான்.

சந்தர்ப்பம் வாய்க்கும்போதே சில விஷயங்களை தெளிவுபடுத்திட வேண்டும். உபநயனம் உள்ளிட்ட எதுவும் பெண்களுக்கு கிடையாது என மநு சொல்லியிருக்கும்போது...

உபநயனம் என்றால் என்ன என்று தெரிந்தால் தானே மநு சொல்வதை புரிந்துகொள்ள முடியும். சரி! உபநயனம் என்றால் என்ன?

இப்போது உபநயன சுபமுகூர்த்தம் என்று ஆண் மகனுக்கு முதல் கல்யாணம்போல பெரியதாக விழா நடத்துகிறார்கள்.

உண்மையில் உபநயனம் என்றால்... பிராமணப்பையனை பள்ளிக் கூடத்துக்கு அனுப்புதல் என்று அர்த்தம். என்னது...?

இப்போது இருப்பதைப்போல அப்போதெல்லாம் பள்ளிக்கூடங்கள் கிடையாது. அதனால் வேத பாண்டித்யம் பெற்ற ஒரு ஆச்சாரியரிடம் அதாவது ஆசிரியரிடம் பையனை அனுப்பி வைப்பார்கள். வேதக் கல்வி கற்பதற்காக.
அந்த ஆச்சாரியர் அச்சின்னப்பையனை கையைப் பிடித்து அழைத்துச் செல்வார். இதற்குப் பெயர்தான் உபநயனம்.

அதாவது ஆசிரியர் மாணவனை கையைப்பிடித்து அழைத்துச் செல்வதுதான்.

இந்த சமயத்தில் அந்தக் குழந்தைப் பயலுக்கு நன்றாக ஸ்நானம் பண்ணி வைத்து, புது வஸ்திரம் கட்டிவிட்டு, இடுப்பில் `பெல்ட்’ (அந்த காலத்தில் துணியாலேயே) கட்டிவிட்டு குருகுலத்தில் சேர்த்துவிடுவார்கள்.

அப்போது அவனது அப்பா... ``பயலே... இனிமே நீ இந்தப் பக்கம் வரக்கூடாது. எல்லா கல்வியையும் கற்கும்வரை உனக்கு இந்த வீட்டு ஞாபகம் வரக்கூடாது. திரும்பிப் பார்க்காமல் ஆச்சாரியரோடு போ...’’ என்று பையனை வழியனுப்பி வைப்பார்.

அந்தச் சின்னப்பையனும் வீட்டை மறந்து கல்விக்காக ஆசிரியர் கையை பற்றிக்கொண்டு நடப்பான்.
இதுதானப்பா ஒரிஜினல் உபநயனம். இப்போது என்ன நடக்கிறது?

பள்ளியில் படித்துக் கொண்டிருக்கிற பையனை லீவு போடச் சொல்லி வீட்டுக்கு வரவழைத்து உபநயனம் பண்ணுகிறார்கள். உபநயனம் என்றாலே வீட்டுப் பக்கம் வராதே என்று பையனை பாடசாலைக்கு அனுப்புவதுதான். ஆனால்... நடைமுறையில் அப்படியே முரண்பாடாகி விட்டது.

காரணம்...? இதையும் சடங்காக்கி மந்த்ரங்கள் ஓதி பணம் பண்ணுவதற்காகத்தான்.

இப்போது இங்கே பெண்ணை அழைத்து வருகிறேன் பாருங்கள். உபநயனம் உள்பட எந்த மந்த்ர சடங்கும் பெண்ணுக்குக் கிடையாது என்றால் என்ன அர்த்தம்?

பெண்களை பள்ளிக்கு அனுப்பக்கூடாது. உபநயனம் என்றால் பள்ளிக்குப் போவதுதானே?

ஆனால்... இன்று எல்லா ஜாதி பையன்களும், பெண்களும் உபநயனம் பண்ணிக் கொள்கிறார்கள். ஆமாம்... பள்ளிக்குப் போய் பாடம் படிக்கிறார்களே!

பெண்கள் வாழ்வில் அடுத்த கட்டமாய்... அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

48 - 1. பெண்களுக்கு கல்வி கூடாது. வெளியில் செல்லவும் கூடாது.

பகுதி 49. வித‌வைகளுக்கு மொட்டையடி. விதவைகளின் மறுமணம் விபசாரம்?

3 comments:

 1. அப்போது ஏன் நீவீர் பூணூல் போட்டு உள்ளீர்?????. பணம் பண்ணுவதற்க்குதானா?

  ReplyDelete
 2. "அப்போது ஏன் நீவீர் பூணூல் போட்டு உள்ளீர்?????. பணம் பண்ணுவதற்க்குதானா?"

  விளக்கவும்.

  ReplyDelete
 3. பூணுல் போடுவது தவறு என்று அவர் சொள்ளவவில்லை ஜகன்

  ReplyDelete