இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

எட்டுவயதுப் பெண் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா?

மகளை எட்டு வயதுக்குள் திருமணம் செய்து கொடுத்துவிடு.

எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணாமல் அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான் என்றால் தகப்பனுக்கு மிக அசிங்கமான குமட்டுகின்ற‌ தண்டனை --‍ மநு.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 45.

எட்டுவயது பெண் குழந்தை மரப்பாச்சியை வைத்து விளையாடிக் கொண்டிருக்கின்றது. இடையில் மநு ஸ்மிருதி விளையாட ஆரம்பித்துவிட்டது என்றேனே.. மநு எப்படி விளையாடும்?...

மரப்பாச்சி வைத்து விளையாடிக் கொண்டிருந்த அந்த பெண்குழந்தையை வைத்துதான் மநு விளையாடியது!... என்ன சொல்கிறார் இவர்?... என்ற கேள்வி எழுகிறதா?...

ஆமாம்... விளையாடிய குழந்தையை சீவி சிங்கரித்து அம்மா கூப்பிடுகிறாளே எதற்கு? தலைவாரி பூச்சூடி உன்னை... பாடசாலைக்கு போ என்று சொன்னாள் உன் அன்னை என்ற அர்த்தத்திலா?

கிடையவே கிடையாது. அந்த எட்டு வயது சுட்டியை மணமேடைக்கு அழைத்துச் செல்கிறார்கள் எதற்கு?... மணப் பெண்ணின் பக்கத்தில் இப்போது சின்னச் சின்னக் குழந்தைகளை யெல்லாம் உட்கார்த்தி வைத்து அழகு பார்க்கிறார்களே... அதற்காகவா?...முற்றிலும் கிடையாது... மணப் பெண்ணே அந்த எட்டு வயது சுட்டிதான்.

என்னது... எட்டு வயதுப் பெண்தான் மணமகளா? குழந்தைக்குக் கல்யாணமா? இதுதான் மநுவின் விளையாட்டு மநுவின் கட்டளைகள் முன் சின்னப் பெண் குழந்தைகள் வெறும் மரப்பாச்சிகள்.

பெண்கள் மீது மநு தொடுத்த முதல் போர் இங்குதான் ஆரம்பிக்கிறது.

வேதம் பெண்களை எவ்வளவு கட்டுப்பாடுகளுக்குள் வைத்திருந்தாலும் அவள் ருதுவான பின்னர்தான் திருமணம்.

மநுவர்க்கம் என்றெல்லாம் சடங்குகளைப் பின்னியது....ஆனால் மநு அப்படியல்ல... எட்டு வயதுக்குள்ளேயே பெண்களை கெட்டியாக பிடித்துக் கொண்டது மநு...ப்படி பெண்களுக்கு பொதுவான பெயர் க்ருஹிணி அதாவது வீட்டுக்காரி வீடுதான் அவள் உலகம்.

வீட்டுக்குள்தான் அவள் இருக்கவேண்டும். நான் முன்பு சொன்னேனே. வாசலில் விளையாடிக் கொண்டிருந்தாள் என்று. திருமணம் வரைக்கும் வீட்டு வாசலில் விளையாடலாம்.

அதன்பிறகு கல்யாணமாகி முழு க்ருஹிணி ஆன பின்னர் வீடுதான் அவள் சகலமும் கல்யாணத்தை மநு கன்னிகா தானம் என்கிறது. கன்னிகையை தானம் செய்தல் கன்னிகாதானம்.

கன்னிகா என்றால் அதாவது கன்னிகை என்றால்? மநு தர்மப்படி எட்டு வயது பெண்கள் அனைவரும் கன்னிகைகள், பின்... கன்னிகைகளுக்கு கல்யாணம் பண்ண வேண்டும்.

இன்னொருவன் கையில் பிடித்துக் கொடுக்கவேண்டும். அதாவது அவனிடத்திலே இந்த கன்னிகையை தானம் செய்யவேண்டும். இது கன்னிகாதானம்.இதைத்தான்...‘அஷ்ட வருஷா பலேத் கன்யா...’ என்கிறார் ஆதிபுருஷர் மநு.

இதில் இன்னொன்று... எட்டு வயது தான் கன்னிகைக்குரிய வயது. எட்டு வயது கொஞ்சம் தாண்டினாலும் அவள் கன்னிகைப் பருவத்தை கடந்து விடுகிறாள். அதனால்... அதன் பிறகு அவளுக்கு செய்வது கன்னிகாதானமல்ல. அதாவது கல்யாணமல்ல.

அதனால் எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக் கொடு...கல்யாணத்தில் இப்போது நிச்சயதார்த்தம் என ஒரு சடங்கு வைக்கிறார்கள்.

சிலபேர் இதை நிச்சயதாம்பூலம் என்று சொல்கிறார்கள். ஏதோ ஒன்றை சொல்லிவிட்டுப் போங்கள் ஆனால்... இதன் அர்த்தம் என்ன? முன்பு எப்படி நடந்தது’... என்று தெரிந்து கொள்ள வேண்டாமா?...

கிராமப் புறங்களில் சந்தையிலே ஆட்டையோ, கோழியையோ, மாட்டையோ விற்பதாக வைத்து... பக்கத்திலே துண்டை கையால் மூடிக் கொண்டு விலை பேசுகிறார்கள் தெரியுமா? இதன் பேர் தான் நிச்சயதார்த்தம்.

இன்னொரு முக்யமான விஷயம். இந்த நிச்சயதார்த்தத்தில் மணப்பெண் மட்டும்தான் கலந்து கொள்வாள். மாப்பிள்ளைக்கு அங்கு வேலையே கிடையாது. இது வெறும் லௌகீகச் சடங்கு... அதாவது மந்த்ரத்துக்கு இடமே இல்லை.ஆனால்... இன்று நிச்சயதார்த்தம் என்ற பெயரில் திருமணத்துக்கு சமமான ஒரு சடங்கை create பண்ணிவிட்டார்கள்.

வாத்யார்களைக் கேட்டால் ‘ எல்லாம் பெரியவாள்’ சொன்னது...’ என்கிறார்கள்.என்னைக் கேட்டால் இப்போது கல்யாணம் பண்ணி வைக்கும் புரோகிதம் பண்ணி வைக்கும் வாத்தியார்களையெல்லாம் ஒரு சிறைக்குள் போட்டு... அதாவது மறைச்சிறை அதுதான் வேதச்சிறை.

அங்கே அவர்களுக்கு... உண்மையான சடங்கு சம்ப்ரதாயங்களைக் கற்றுத் தரவேண்டும். வேதத்தில்... ஸ்மிருதிகளில் என்ன சொல்லப்பட்டிருக்கிறது என்பதை அர்த்தத்தோடு விளக்கி அவர்களுக்குப் பயிற்சி கொடுத்து அதன்பிறகு அவர்களை வெளியே அனுப்பவேண்டும்.சரி சரி... நான் என்ன சொன்னேன்?

எட்டு வயதுக்குள் அவளை இன்னொருத்தன் கையில் பிடித்துக்கொடு. அப்படியா.. ‘மநுபிரபோ என்னால் முடியவில்லை. என் பெண் குழந்தையை கட்டிக் கொள்ள எந்த பொடிப் பயலும் கிடைக்கவில்லை. அவளுக்கும் எட்டு வயது கடந்து விட்டது. இப்போது ருதுவாகி விட்டாளே...’இப்படியாக ஒரு ஏழைத் தகப்பன் மநுவிடம் மன்றாடுகிறான் என்று வைத்துக் கொள்ளுங்கள். மநுவிடம் வாய்வழியாக மனு போடுகிறான் எனக் கருதிக்கொள்ளுங்கள்.

அவனுக்கும்... அவனைப் போன்ற அப்பாக்களுக்கும் மநு பதில் தருகிறார்.

“பாணிக்கிரஹாப நிகா மந்த்ராஹாகன்யா ஸ்வே ப்ரதிக்ஷதஹா...நகன்யாஸீ...”

இது பதில் அல்ல தண்டனை. எட்டு வயதுக்குள் பெண்ணுக்கு கல்யாணம் பண்ணவில்லை. அவள் ருதுவாகித்தான் கல்யாணம் பண்ணி வைக்கிறான். அவன் என்ன செய்ய வேண்டும் தெரியுமா?...அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.   ( தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 44.(2) தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். இனியொரு முறை திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

பகுதி 46. ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அருந்து????. எட்டு வய‌துக்குள் உன் ம‌க‌ளை திரும‌ண‌ம் செய்து கொடுக்காவிட்டால் ருதுவாகி கல்யாணமாகாமல் இருக்கும் காலம் வரை..ம‌க‌ளுடைய‌ மாதவிடாயை அப்பாவாகிய நீ வீணாக்காமல் அருந்த வேண்டும்.

No comments:

Post a Comment