இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இறந்தகணவனுடன் மனைவியையும் எரித்துவிடு உயிருடன்

உன் கணவனோட நீயும் போய்விடேன். அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்து விடுகிறோம் சரியா?


இறந்தகணவனுடன் மனைவியையும் உயிருடன்  எரித்துவிடு. வேதம்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 44.(1)

சரியப்பா... அவள் இப்படித்தான் வாழ்கிறாள்... கணவனின் தலையில் ஏறி உட்கார்ந்திருக்கிறாள். சந்தோஷமாக வாழ்க்கை போகிறது.

ஒருநாள்... வயதானதாலோ, தேகப் பிரச்சினைகளாலோ கணவன் தலை சாய்ந்து விடுகிறான். அதாவது மரணம் சம்பவிக்கிறது. குடும்பமே அழுகிறது. குழந்தைகள் ஒன்றும் தெரியாமல் தன் பிதாவின்மீது விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.

தன்மேல் பிரேமம் வைத்தவன், இப்படி பிரேதமாகக் கிடக்கிறானே என அந்த இளம்பெண் கண்களிலிருந்து நதிகளை பிரசவித்துக் கொண்டிருக்கிற நேரத்தில்... அவளுக்கு என்ன தேவை? ஆறுதல் மொழிகள்தானே...

``கவலைப்படாதேம்மா... அவன் விதி அவனை கொண்டு போய்விட்டது. உன்னை நம்பி குழந்தைகள் இருக்கிறார்கள். பாவம், அவர்களை நீ தான் நல்லபடியாக வளர்க்கவேண்டும்... அழு... அழுதுவிட்டு உன் குழந்தைகளோடு சந்தோஷமாக இரு...’’- இப்படித்தானே சொல்லவேண்டும்?

அவளுக்கு வேதம் ஒரு மொழியை வழங்குகிறது பாருங்கள்.

`பத்யுர் ஜனித்வம் அபி சம்ப பூவ...’இப்படி தொடங்கும் மந்த்ரத்துக்கு என்ன அர்த்தம்?

``உன் ஆம்படையான் இறந்துவிட்டான். பாவம்... இனி உன்னை யார் காப்பாற்றுவது? இனி நீ அவன் வீட்டிலேயே இருந்தால் பாரம்தானே? சுமைதானே? உன்னை ஆம்படையான் குடும்பத்தினர் எப்படி தாங்குவார்கள்? அதனால்...
அதனால்...? ஆமாம்மா புகுந்த வீட்டுக்கு பாரமாக கண்ணெல்லாம் ஈரமாக இனிமேலும் நீ வாழவேண்டுமா? அதனால் உன் கணவனோட நீயும் போய்விடேன்.அவன் சிதையிலேயே உன்னையும் வைத்து எரித்துவிடுகிறோம் சரியா?

அவளாக பற்றவைத்துக் கொள்வதை தீக்குளித்தல் என்கிறோம்

வேதம் அவளை தீக்குளிப்பாட்டியது. கணவனை இழந்த கைம்பெண்ணுக்கு இதுதான் கடைசி வழியானது. இந்த சதிச் செயல்தான் சுருக்கமாக ‘சதி’ என அழைக்கப்பட்டது.

இதை எதிர்த்துதான் ராஜா ராம்மோகன்ராய் போன்றவர்கள் பிற்காலங்களில் போராடினார்கள். ஏன்... சில வருடங்கள் முன்பு கூட ராஜஸ்தான் மாநிலத்தில் ரூப்கன்வர் என்ற ஸ்த்ரீயை கணவனை இழந்தவுடன் தீவைத்து தீர்த்துக் கட்டியிருக்கிறார்கள்.

வேதத்தீயின் வெளிச்சம் காலங்காலமாக கனலடித்துக் கொண்டிருப்பதற்கு இது ஓர் உதாரணம். பெண்களைப் பற்றிய பல வகையான அலசல்களை வேதத்தை மையமாக வைத்து நாம் இதுவரை பார்த்தோம்.

இதுபோன்று ‘சதி’ச் செயல்களால் எரிக்கப்பட்ட பெயர் தெரியாத அப்பாவி ஸ்திரிகளிடம் நாம் மன்னிப்பு கேட்டுக் கொண்டு அவர்களின் ஆத்மா சாந்தியடைய வேண்டிக்கொள்வோம்.

இப்படி நாம் நினைத்தாலும் பொதுவாகவே பெண்களின் ஆத்மாவை சாந்தியடைய விடாது போலிருக்கிறது
---அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.


பகுதி 43. உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.


பகுதி 44(2) தன் தாயையே சந்தேகப்படும்படியான மந்த்ரத்தை திவசம் செய்யும் போது, ‘மகன்’கள் சொல்கிறார்கள். இனியொரு முறை திவசம் செய்யும்போது இப்படியொரு அர்த்தத்தை அறிவிக்கக் கூடாதென்று எச்சரிக்க வேண்டியவர்களை எச்சரிப்பார்களா?

1 comment:

 1. Argument that the Rig Veda sanctions sati
  It is often claimed that this most ancient text sanctions or prescribes sati. This is based on verse 10.18.7, part of the verses to be used at funerals. Whether they even describe sati or something else entirely, is disputed, The hymn is about funeral by burial, and not by cremation. There are differing translations of the passage. The translation below is one of those said to prescribe it.
  इमा नारीरविधवाः सुपत्नीराञ्जनेन सर्पिषा संविशन्तु |
  अनश्रवो.अनमीवाः सुरत्ना आ रोहन्तु जनयोयोनिमग्रे || (RV 10.18.7)
  Let these women, whose husbands are worthy and are living, enter the house with ghee (applied) as collyrium (to their eyes). Let these wives first step into the pyre, tearless without any affliction and well adorned.[62]
  The text does not mention widowhood, and other translations differ in their translation of the word here rendered as 'pyre' (yoni, literally "seat, abode"; Griffith has "first let the dames go up to where he lieth"). In addition, the following verse, which is unambiguously about widows, then contradicts any suggestion of the woman's death; it explicitly states that the widow should return to her house.
  उदीर्ष्व नार्यभि जीवलोकं गतासुमेतमुप शेष एहि |
  हस्तग्राभस्य दिधिषोस्तवेदं पत्युर्जनित्वमभि सम्बभूथ || (RV 10.18.8)
  Rise, come unto the world of life, O woman — come, he is lifeless by whose side thou liest. Wifehood with this thy husband was thy portion, who took thy hand and wooed thee as a lover.[63]
  A reason given for the discrepancy in translation and interpretation of verse 10.18.7, is that one consonant in a word that meant house, yonim agree "foremost to the yoni", was deliberately changed by those who wished claim scriptural justification, to a word that meant fire, yomiagne.[64]

  ReplyDelete