இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

உடலுறவு சமயத்தில் தேவதைகளே உதவுங்கள்.

நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது

திருமணம் முடித்த அன்பர்களே உங்களின் எத்தனை பேரின் திருமண சடஙகில் இந்த ம‌ந்திரம் ஓத‌ப்பட்டது?


மண‌முடிக்க இருக்கும் அன்பர்களே இதெல்லாம் உங்களுக்கு வேண்டுமா?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 42

லோபாமுத்ரை திருமணத்துக்குப் பிறகுதான் தன் கணவன் அகத்திய முனியின் சுய ரூபத்தையே தெரிந்து கொண்டாள். குள்ள ரூபம், தாடியும் மீசையுமாய் ரோமக் காடாய் முகம்.இப்படிப்பட்ட ஒருத்தர்... அழகானவர் போல் நம்மை ஏமாற்றி விட்டாரே என லோபாமுத்ரைக்குள் அழுகையும் ஆத்திரமும் பொங்கின. ஆனால்.. ஸ்த்ரி தர்மப்படி புருஷனுக்கு பணிவிடைகள் செய்வதுதானே பத்தினியின் கடமை.அதன்படி.. தன் புருஷன் அகத்தியனுக்கு பணிவிடைகள் செய்வதையே வேலையாகக் கொண்டு பதிவிரதையாக வாழ்ந்து வந்தாள் லோபா.

காலை எழுந்தவுடன் ஸ்நானம் செய்வது... பிறகு மந்திரங்கள் தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபடுவது பிறகு ஆகாரம் புசிப்பது... மறுபடியும் தியானம்... மந்த்ரம்... பிறகு இரவு நெடுநேரம் தீப ஒளியில் ஏதேனும் மந்த்ரங்கள் இயற்றிக் கொண்டே இருப்பது... பிறகு தூங்கிக் கொண்டே இருப்பது... பிறகு தூங்கி விடுவது இதுதான் அகத்தியனின் வாழ்க்கை முறை.வேண்டி விரும்பி திருமணம் செய்து கொண்டவளைப் பற்றி அகத்தியன் சிந்திக்கவே இல்லை லோபாவும் தன் புருஷன் தன்னையும் கவனிப்பான் என காத்திருந்தாள் கைங்கர்யம் செய்தபடியே.

இப்படியே காலம் ஓடிக் கொண்டிருக்க.. மந்த்ரங்கள், சிஷ்யர்கள், கமண்டலம்.. என வாழ்ந்த அகத்தியனுக்கு ஒரு நாள்தான்... ‘இதுவரை லோபாவைப் பற்றி நாம் சிந்திக்கவே இல்லையே... அவளை ஒரு வேலைக்காரியாக மட்டுமே பயன்படுத்திக் கொண்டேனே தவிர...ஒரு புருஷனாக பத்தினிக்கு தரவேண்டிய சுகங்களை, அந்தஸ்தை நாம் தரவே இல்லையே.. பேரழகியை திருமணம் செய்து கொண்டு பாராமல் விட்டு விட்டோமே...’ என அகத்தியனுக்குள் அடுக்கடுக்காய் எண்ணங்கள் உதித்தன.

லோபா முத்திரையின் லோக வாழ்வைப் பற்றி அகத்தியன் நினைத்துப் பார்த்தது... கண்கெட்ட பிறகு சூர்ய நமஸ்காரம் என்பார்களே அதுபோல ஏனென்றால்... இருவருக்கும் 80 வருடங்கள் ஓடிப்போய் விட்டன.அழகு ஆட்சி செய்த லோபாவின் மேலே காலம் தன் கட்டளைகளைப் பிறப்பித்து விட்டது. அழகான அவளது முகத்திலும், சருமத்திலும் காலதேவன் தன் விளக்கத்தை சுருக்கங்களாக எழுதினான். கருகருவென்ற அவளது வசீகரமான கேஸத்திலே வெள்ளையடித்து விட்டான்.லோபாமுத்ரை என்ற பேரழகியின் மீதே காலதேவன் தன் முத்திரையை பதித்துவிட்ட போது... அகத்தியர் எப்படியிருப்பார்?நரை கூடி கிழப்பருவம் எய்தி விட்டார்.

இப்படிப்பட்ட நிலையில்தான் லோபாமுத்ரை பற்றிய நினைவு வர... அவளிடம் ஓடிப்போனார் அகத்தியர்.‘தேவி... அம்மா நான்தான் உன் ஆம்படையான் வந்திருக்கேன் என அவளது தோளைத் தொட லோபாமுத்ரை தன் புருஷனிடம் இப்போது தான் வாய் திறந்தாள்.

“உன்னாலே என் ஜென்மாவே பாழாய் போச்சு. என் அழகு வீணாப்போச்சு இப்போது வந்திருக்கிறீரே என்ன பிரயோஜனம்?... இது நியாயமா?...” என பொங்கியழுதாள் லோபாமுத்ரை.“நான் பண்ணிய மந்த்ரங்கள் எல்லாம் உனக்காகத்தானே தேவி”... என அகத்தியன் சமாதானம் சொல்ல... “மந்த்ரங்களுடனா நான் குடித்தனம் நடத்த முடியும்?... என் மணாளன் நீயா?... மந்த்ரங்களா?... என பதில் பேசுகிறாள் லோபாமுத்ரை.

அகத்தியமுனி அப்படியே நிற்கிறார்... இந்தக் காட்சியை அகஸ்தியரின் சிஷ்யர்கள் பார்த்து விடுகிறார்கள். அவர்கள் வழியே தான் இந்த வேதக்கதையே வெளியே வருகிறது.அதாவது... பெண்ணை திருமணம் செய்து கொண்டு அவளுக்கு கொடுக்க வேண்டிய சுகங்களை கொடுக்காவிட்டால் அது மகாபாவம் என்பதை வலியுறுத்துவதற்காக இந்தக்கதை.

சரி... திருமணத்தில் வாத்யார்கள் அர்த்தம் தெரியாமல் ஓதும் மந்த்ரங்களுக்கு மேலும் உதாரணம் சொல்கிறேன் என போன அத்யாயத்தில் சொல்லியிருந்தேனல்லவா.

அத்தகைய ஒரு மந்த்ரத்தைப் பாருங்கள்.
“தாம்பூஷன் சிவதமாம் ஏவயஸ்வயஸ்யாம் பீஜம் மனுஷ்யா பவந்த்தீயான ஊரு உஷதி விஸ்ரயாதையஸ்யா முஷந்தஹா ப்ஷரே பஷேபம்...”...

இது வேதத்தில் சொல்லப்பட்ட மந்த்ரம். இதை கல்யாண மேடையிலே பெண்ணையும், மாப்பிள்ளையையும் உட்கார்த்தி வைத்து சத்தமாக சொல்கிறார் வாத்யார். இந்த மந்த்ரத்தின் அர்த்தம் புரிந்தால்... அந்த வாத்யாரை நீங்கள் வாத்சாயணர் என்றுதான் அழைப்பீர்கள்.

அப்படி என்ன சொல்கிறது இந்த மந்த்ரம்?

நான் அவளை கட்டிப்பிடிப்பேன். (அவளோடு உறவு கொள்ளும் பொழுது) அப்போது எங்களது அந்தரங்க பாகங்களை சரியாக பொருந்தச்செய்யுமாறு... தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும்

.இந்த மந்த்ரத்தின் அர்த்தத்தை இதைவிட நாகரீகமாக சொல்ல முடியாது. விளக்கமாக நான் சொல்லியிருப்பேன் என்றால்... என் மீதும் என் வயதின் மீதும் உங்களுக்கு இருக்கும் மரியாதை போய்விடும். அப்படிப்பட்ட மந்த்ரம் அது.

என் இஷ்டமித்ரர் ஒருவருடைய மகளின் கல்யாணம் சமீபத்தில் நடந்தது. அந்த பெண் மகாபுத்திசாலி. சமஸ்கிருதம் பயின்றவள் அவள் மணமேடையிலே உட்கார்ந்திருக்கும் போது...வாத்யார் இந்த மந்த்ரத்தை உரக்கச் சொல்ல...


“ஸ்வாமீ... நிறுத்துங்கோ” என்றாள் அவள். வாத்யார் வாயடைத்து விட்டார்.“இதுக்கு என்ன அர்த்தம் தெரியுமோ?... பொண்ணும் மாப்ளையும் துணியில்லாம செய்யுற காரியத்தை... நீங்க பல பேர் முன்னாடி சொல்றேளே...”

“வாத்யார் அதன்பிறகு அந்த மந்த்ரத்தை சொல்லவில்லை. இதை ஏன் சொல்கிறேன் என்றால், வாத்யார்கள் சடங்குகள் என்ற பெயரில் இன்ன அர்த்தம் என்றே தெரியாமல்... பல மந்த்ரங்களை உச்சரித்து வருகிறார்கள் என்பதை சுட்டிக் காட்டத்தான்.

இதுபோல் இன்னொரு மந்த்ரம்“விஷ்ணுர் யோனி கர்ப்பயது தொஷ்டா ரூபானி பீமிசதுஆசிஞ்சது ப்ரஜாபதிதாதா கர்ப்பந்தாது...” இதன் அர்த்தம் இன்னும் ஆபாசம். அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 41. கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள். மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் மாட்டு மாமிசம் தான்.

பகுதி 43.உடலுறவு கொள்ளும்போது எல்லாம் சரியாக நடக்கிறதா என்பதை கண்காணிக்க ஆபாச திருமண மந்திரங்கள்.

4 comments:

  1. உண்மைதான், ஆனால் இது எழுத / சொல்லப்ட்ட காலத்தினையும் சேர்த்து பார்க்க வேண்டும்.

    அந்த காலத்தில், இபோது உள்ளதை போல காமம் பாவமாக நினைக்கபடவில்லை.

    அப்படி இருந்து இருந்தால், பெரும் கோவில்களில் உடலுறவு நிலையை சிற்ப்மாக வடித்து இருப்பர்களா ?

    காமம் இயல்பானவிஷயம் என்ற பார்வை அப்போது இருந்தது , இபோது இல்லை. அதனால் இப்போது இம்மந்திரங்கள் தவறாக தோன்றுகின்றது.

    ReplyDelete
  2. thank you for this this article

    this is an eye opener for everybody.

    ...

    ReplyDelete
  3. thanks for revealing the truth.

    ReplyDelete