இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

கல்யாணங்களில் பொருந்தாத மந்திரங்கள்.

திருமணத்தில் மாடு வெட்டுகிறார்களா? ஆமாம்... வேதம் வகுத்துத் தந்த திருமணத்தில் முக்கியமான அம்சம் கோமாமிசம் தான்.

மாப்பிள்ளை அழைப்பு என்ற திருமணத்துக்கு முதல் நாள் நிகழ்ச்சியில் மது வர்க்கம் என்றொரு சடங்கு. இதிலும் மறுநாள் திருமணச் சடங்குகளிலும் ரிஷிகளும், கோமாமிசமும் அவஸ்யம் என்கிறது வேத விதி.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி 41

பக்கத்தில் ஒரு கிரகத்தில் திருமணம் நடக்கிறது. யாகங்களும் மந்த்ர ஒலிகளும் பூமியிலிருந்து வானத்தை நோக்கி சத்தமிட்டு புறப்படுகின்றன. திரவியங்களின் வாசனை நாசிக்குள் நாட்டியமாடுகிறது. இப்படிப்பட்ட சுகந்தமான சூழ்நிலையில் அந்தக் கிரகத்தின் பக்கத்தில் இரண்டு சிறுவர்கள் பேசிக்கொள்கிறார்கள்.

“என்னடா அங்கே மடமடன்னு சத்தம் கேட்கிறதே?” “உனக்குத் தெரியாதா? பக்கத்து கிரஹத்திலே கல்யாணம் ரிஷிகள் நிறையபேர் போயிருக்கிறார்கள் பாவம்... இன்று கன்றுக் குட்டிகள் தப்பிக்க முடியுமோ? அவைகளை வெட்டும் சத்தம்தான் மடமடயாதே... (அதாவது மடமடன்னு கேட்கிறது)” என்கிறான் மற்றவன்.

இது ஒரு வேதக்கதை அதாவது கல்யாண காரியங்களிலே கன்றுக்குட்டிகளையும் கறி சமைத்திருக்கிறார்கள்.

ஆனால்.. இன்று நடக்கும் திருமணங்களிலும் அறிந்தோ அறியாமலோ(?) வாத்யார்கள் (கல்யாணம் நடத்தி வைப்பவர்கள்) மாடு வெட்டும் சடங்குக்குரிய மந்திரங்களை ஓதுகிறார்கள். ஆனால்... ‘மது வர்க்க’த்தில் கோமாமிசத்துக்குப் பதில் வாழைப்பழத்தைக் கொடுக்கிறார்கள்.

அப்படியானால் அந்த மந்த்ரம் எதற்கு? மாட்டை வெட்டச் சொல்லும் மந்த்ரத்தை நீங்கள் சொல்லும்போது மாடு வெட்டப்பட வேண்டுமே! அப்படி செய்யாத பட்சத்தில் அந்த மந்த்ரத்தை கல்யாணச் சடங்கிலிருந்து வெட்டிவிடலாமே?

இதேபோல... ‘கௌஹு...கௌஹு என சொல்லிக்கொண்டே இன்னொரு கல்யாண சடங்கையும் நடத்துகிறார்கள். கல்யாண தினத்தன்று... கோமாமிசம் சாப்பிடவேண்டிய சடங்குக்கான மந்த்ரத்தை சொல்கிறார்கள்.

அந்த நேரத்தில் பெண்ணும் மாப்பிள்ளையும் தேங்காய் உருட்டி விளையாடிக் கொண்டிருக்கிறார்கள்.ஏன் இந்த முரண்பாடு? காலத்தின் மாற்றத்தால் சடங்குகளை மாற்றிக் கொண்ட பிராமணர்கள்...மந்த்ரங்களை மட்டும் இன்னும் விடாப்பிடியாய் பிடித்திருக்கிறார்கள்.

இது பிராமணர்களின் கல்யாணங்களில் மட்டுமல்ல... மற்ற ஜாதியினரின் கல்யாணங்களிலும் இந்த பொருந்தாத மந்த்ரங்கள்தான் போற்றப்படுகின்றன. மாட்டு மாமிசம் தின்பதற்கும், தேங்காய் உருட்டுவதற்கும் என்ன சம்பந்தம்?இதற்கான மேலும் சில மந்த்ர உதாரணங்களைப் பிறகு பார்க்கலாம்.

இப்படியாக கல்யாணம் நடக்கிறது. பெண்ணானவள் புருஷன் வீட்டில் எப்படி நடந்துகொள்ளவேண்டும்.

“பரித்வா கிர்வனோ க்ரஹஇமாபவந்து விஷ்வதஹாவ்ருத்தாயும் அனிவ்ருத்தயாஜீஷ்டா பவந்து ஜீஷ்டாயா?......அடியே... உனக்கு நாங்கள் கொடுக்கும் சீதனத்திலே மிக உயர்ந்த மெல்லிய, அழகுக்கு அழகு சேர்க்கக்கூடிய ஜரிகை வஸ்திரங்கள் இருக்கலாம்.

அவற்றை நீ அணிந்தால் உனக்கு அலங்காரமாக இருக்கலாம். ஆனால்... இவையெல்லாம் ஒருநாள் மக்கிவிடும், மடிந்துவிடும், கிழிந்துவிடும்.ஆனால்... என்றென்றும் கிழியாத வஸ்திரம் உனக்கென்று உள்ளது. புகுந்த வீட்டில் புருஷனும்... மற்றவர்களும் உன்னைப் புகழ்ந்து பேசவேண்டும்.

அவர்கள் உன்னை மெச்சிக்கொள்ளும் புகழ்மொழிகள்தான் உனக்கு உண்மையான ஆடை. அதனால் புகுந்த வீட்டில் அவர்கள் சொன்னபடி நீ நடந்து அந்த ஆடையை அணிந்துகொள்.இப்படியாக பெண்களுக்கு நிறைய அறிவுரைகளை அள்ளித்தரும் வேதம்... திருமணத்துக்குப் பிறகு அவளை எப்படி நடத்தவேண்டும், நடத்தக்கூடாது என்பதற்கு அகஸ்தியர் மூலமாக ஒரு கதையை சொல்லியிருக்கிறது.

அகஸ்திய முனிவர் ரொம்ப குள்ளமானவர். அவர் லோபாமுத்ரை என்னும் மங்கையை பார்த்ததும் அவளை அடைந்தே தீரவேண்டும் என்று அவருக்குள் உயரமாக உதித்தது ஆசை. நேராக அந்தப் பெண்ணின் தந்தையிடமே போனார் அகஸ்திய முனி. ‘உன் பெண்ணை பார்த்தேனப்பா... அவளையே கல்யாணம் செய்துகொள்ள ஆசைப் படுகிறேனப்பா’... எனக்கூற...தந்தையோ, அகஸ்திய முனியை கொஞ்ச நேரம் பார்த்தார். ‘என் பெண்ணிடமே கேட்டு, அவளுக்கு இஷ்டமா, இல்லையா என தெரிந்துகொள்ளப்பா...’ என சொல்லிவிட்டார்.

இப்படியே இந்த உருவத்திலேயே போனால் லோபாமுத்ரை நம்மை ஏற்றுக்கொள்வாளா? தன்னையே ஒருதடவை பார்த்துக் கொண்டார் அகஸ்தியர். கடைசியில் தன் குள்ள உருவத்திலிருந்து சில மந்த்ரங்களைச் சொல்லி தன்னை அழகனாக மாற்றிக் கொண்டார் அகஸ்தியர்.

லோபாமுத்ரையிடம் போனார் பேசினார். அகஸ்தியரின் வாளிப்பிலும், வார்த்தைகளிலும் மயங்கிய லோபாமுத்ரா அவர் கழுத்தில் மாலையைப் போட்டாள். தன் மணாளனாக்கிக் கொண்டாள்.அகஸ்தியருக்கு சந்தோஷம். மறுபடியும் லோபாவின் அப்பாவிடம் ஓடினார். ‘உன் பெண்ணை கல்யாணம் செய்துவிட்டேன் பார்’ என்றார்.கல்யாணம் ஆன பிறகுதான்... தன் கணவன் அகஸ்தியரின் நிஜ உருவத்தை தரிசித்தாள் லோபாமுத்ரை.... பிறகு...? - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 40. “விவாஹே கௌஹு...க்ருஹே கௌஹு... திருமணவீட்டில் மாட்டை வெட்டி மதுவகையுடன் மாட்டிறைச்சி.பெண்ணுக்கு சீதனமாக இன்னொரு பெண்.

பகுதி 42.. நான் அவளோடு உடலுறவு கொள்ளும் பொழுது தேவதைகளே நீங்கள் உதவ வேண்டும். திருமணத்தில் சொல்லப்படுகின்ற ஒரு மந்திரம்

No comments:

Post a Comment