இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

மாதவிடாய் பெண்களை விலக்கிவையுங்கள். ப்ரம்மஹத்தி தோஷம் என்றால் என்ன?

அவள் தீட்டு, அவளை, அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி 37.

ஸ்திரீ ஸம்ஸாதம் அதாவது பெண்கள் மாநாடு பற்றி போன அத்தியாயத்தில் பார்த்தோம். ஆணைவிட 4 மடங்கு அறிவு கொண்ட பெண்கள் ஒன்றாக கூடி விவாதங்கள் செய்து... வேத காலத்தில் சிறந்து விளங்கினார்கள்.

கார்க்தி, வாஸக்தலி, யாக்ஞவல்கியரின் மனைவி மைத்ரேயி போன்றவர்கள் இந்த விவாதங்களில் கலந்து கொண்டிருக்கிறார்கள் என்பதும் நமக்கு அறியக் கிடைக்கிறது.

இவ்வளவு முற்போக்காகவா பெண்கள் இருந்திருக்கிறார்கள் என்கிற நம் ஆச்சரியக்குறியை ஒடித்துப் போடுகிற அளவுக்கு அடுத்த தகவல் அதிர்ச்சி தருகிறது.

அது என்ன? பெண்களுக்கு இயற்கை மாதாமாதம் அளிக்கும் ஒரு துன்பம்... வலி உடலியல் காரணங்களால் வெளியேற்றப்படும் கழிவாகிய ‘மாதவிடாய்’ என்பதை காரணம் காட்டி பெண்களை வெறுத்து ஒதுக்கியது வேதகாலம்.

அவள் தீட்டு, அவளை விலக்கிவையுங்கள், அசிங்கமானவள், சுத்தமில்லாதவள் என்றெல்லாம் கடுஞ்சொற்களால் பெண்களை ஒதுக்கி வைத்தது ஏற்கெனவே இயற்கை தந்த துன்பத்தை சகித்துக் கொண்டிருக்கும் பெண்கள் - அறியாமையால் ஆண்கள் தந்த தீண்டாமை துன்பத்தையும் சகித்துக் கொண்டார்கள்.

கரு உருவாகுவதற்காக கர்ப்பப்பையை சுத்தம் செய்யும் விதமாக மாதாமாதம் இயற்கையே அதிலுள்ள கழிவுகளை வெளியேற்றும் ஏற்பாடுதான் மாதவிடாய். ஆனால், இதை வேத காலம் எதனோடு ஒப்பிட்டு காரணம் கண்டு பிடித்தது தெரியுமா?

பார்ப்பதற்கு முன்...மீண்டும் ஸ்திரீ ஸம்ஸாதம்.... பெண்கள் கூடிப் பேசிக் கொண்டிருக்கிறார்கள். சிரிப்பொலி காற்றில் சிணுங்கலாக மிதந்து கொண்டிருக்கிறது. அந்த வேளையில் திடுமென அவ்விடத்தில் ஒரு பிரகாசம். வெளிச்சப் புகைக்கு நடுவே அங்கே வந்திறங்குகிறான் இந்திரன்.

இந்திரன்? ஆம் தேவர்களின் அரசன். சர்வ சந்தோஷங்களையும் அனுபவித்து அனுதினமும் பகட்டில் வாழும் அவன் முகமே பார்க்க முடியாத அளவு கோரமாய் காட்சியளித்தது. செம்பட்டு இழையான தலைமுடி கொண்ட இந்திரன் செம்பட்டையும் பரட்டையுமாக மாறி போயிருந்தான்.

புன்னகை வெளிப்பட்ட வாயிலிருந்து கோரப் பற்கள் கறுத்து இருண்ட மேனியுடன் வந்த இந்திரனின் முகத்தில் சங்கட ரேகைகள். கண்கள் மட்டும் அல்ல, அங்கங்கள் அனைத்தும் அழுதன. நடுக்கம் அவன் நெற்றியில் எழுதி ஒட்டப்பட்டிருந்தது. என்ன ஆச்சு இந்திர ராஜாவுக்கு!

ப்ரம்மஹத்தி தோஷம் அப்படியென்றால்...!குற்றங்களிலேயே மிகக் கொடிய குற்றம். உச்ச பட்ச தண்டனைக்கு உள்ளாகும்படியான குற்றம். தலைமைக் குற்றம் என்றுகூட சொல்லலாம். இக்குற்றத்தை செய்தவனுக்கு எந்த பரிகாரமும் இல்லை. பித்துப் பிடித்து அலைவதைத் தவிர

சரி.. என்ன செய்தால் இந்த குற்றம் வரும்? ப்ராமணனை கொலை செய்வது தான் ப்ரமஹத்தி குற்றம். பிரம்மம் - பிராமணன்; ஹத்தி கொலை அதாவது பிராமணனை கொலை செய்யும் குற்றம்தான் ப்ரமஹத்தி.

இப்பேர்ப்பட்ட குற்றத்தைத்தான் இந்திரன் செய்துவிட்டான். இப்போது இந்த காலத்தில் காஞ்சிபுரம் கோவிலுக்குள்ளேயே வைத்து சங்கரராமன் என்னும் பிராமணனை கத்தி, அரிவாள் போன்ற கொடூர ஆயுதங்களால் ஹத்தி (கொலை) செய்தார்களே. அவர்களும்கூட வேதத்தின் நீதிமன்றம் முன்பு ப்ரமஹத்தி (தோஷம்) குற்றம் செய்தவர்கள்தான். அதாவது அவர்கள் இவ்வளவு ப்ரமஹத்திகள்.

சரி., நாம் இந்திரன் விவாவதத்துக்கு வருவோம் ப்ரம்ஹாத்தி குற்றம் செய்யும் அளவுக்கு இந்திரன் என்ன செய்தான். காஸ்யபன் என்றொரு முனிவர். அவருக்கு திதி, அதிதி என இரண்டு மனைவிகள். திதியின் பிள்ளைகள் மதத்தவர்கள். அதாவது அசுரர்கள். திதி அசுர குலத்தை சேர்ந்தவள். இன்னொரு மனைவி அதிதியின் பிள்கைள் தேவர் குலத்தைச் சேர்ந்தவர்கள்.

அதிதிக்கு பிறந்த 12 புதல்வர்களில் ஒருவரான தொஷ்டா, அசுர குலத்தைச் சேர்ந்த ரஸனை என்னும் பெண்ணை மணமுடிக்கிறார். தேவனாகிய தொஷ்டாவுக்கும் அசுரப் பெண்ணாகிய ரஸனைக்கு பிறந்தவன் விஸ்வரூபன். இந்திர ராஜ்யத்தில் புரோகிதராக இருந்தான் விஸ்வரூபன்.

புனித யாகங்கள் முடிந்தபின் கிடைக்கும் ‘ஹவிஸ்’ என்ற பெரும் நலம் கொடுக்கக்கூடியப் பொருளை இந்திரனுக்குத் தெரியாமல் தன் மாமாவான அசுரர்களுக்கு கொடுத்துவிட்டான். இது தெரிந்த இந்திரன் - விஸ்வரூபனின் தலையையும் கோபப்பட்டு வெட்டி வீழ்த்திவிட்டான். விஸ்வரூபன் ஒரு பிராமணன் கொலை செய்தவன் இந்திரன் சும்மா விடுமோ?

பிடித்தது ப்ரம்மஹத்தி. எங்கெங்கோ போய் கத்திப் பார்த்தான் அலைந்தான் - திரிந்தான்.

கடைசியில் ‘ஞானம்’ வந்த இந்திரன் தனது ப்ரமஹத்தி கொடுத்து விடுதலை பெறலாம் என நினைத்தான்.முதலில் பூமா தேவியை போய் பார்த்து அழுதான் இந்திரன். என்னயென்று கேட்டாள் பூமாதேவி.

இதுபோல் நான் ப்ரமஹத்தி தோஷத்திற்கு ஆளாகிவிட்டேன் தேவி. என் தோஷத்தை நீதான் எடுத்துக்கொண்டு எனக்கு அருளவேண்டும் என்றான் இந்திரன்.

எல்லா தோஷத்தையும் நானே எடுத்துக்கொண்டால் என் மேல் வசிக்கும் ஜீவராசிகளுக்கு ஏது சந்தோஷம். அதனால் நீ கேட்கிறாய் என்பதற்காக ஒரு பகுதி தோஷத்தை என்னிடம் கொடு என்கிறாள் பூமாதேவி.

அதன்படி.... இந்திரன் தன் கொலைக் குற்றத்தில் ஒரு சிறு பகுதியை பூமாதேவியிடம் இறக்கி வைத்தான்.

அதுதான், தானியங்கள் விவசாய தகுதி இல்லாத தரிசு நிலங்களாகவும், பாலைவனங்களாகவும் மாறிபோய் விட்டன. தோஷத்தை வாங்கிக் கொண்டதற்கு பரிகாரமாக பூமி பிளந்தால் ஒன்று சேரக்கூடிய வரத்தை வழங்கினானாம் இந்திரன்.

விருட்சங்ளே... என் ப்ரம்மஹத்தி தோஷத்தை எடுத்துக் கொள்ளுங்களேன் என கெஞ்சினான். அப்படியானால், எங்களை வெட்டிப் போட்டாலும் வெட்டிய இடத்திலிருந்து துளிர்க்க வரம் தா என கேட்டன மரங்கள். வரம் கொடுத்த இந்திரன் உடனே தன் ப்ரம்மஹத்தி தோஷத்திலும் பாதியை கொடுத்தான்.

அதுதான் மரங்களில் பிசினாக (கோந்து) வழிந்து கொண்டிருக்கிறது. பெருங்காயமும் ‘ஹிங்கு என்ற மரத்திலிருந்து வந்த ஒரு பிசின்தான். அதனால்தான் பிராமணர்கள் முக்கிய விழா சிரார்த்தம் (தவசம்) போன்ற காரியங்களில் சமையலில் பெருங்காயத்தை உபயோகப்படுத்த மாட்டார்கள்.

இன்னும் பாதி ப்ரம்மஹத்தி தோஷத்தை வைத்திருந்த இந்திரன் கடைசியாக ஸ்தரீ சம்ஸாதம். அதாவது பெண்களின் மாநாட்டில் பிரவேசித்தான். அங்கே? அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

CLICK AND READ >> பகுதி 36.கோத்ரம் என்றால் என்ன? பெண்கள் மாநாடா? வேதத்திலா?

CLICK AND READ >> பகுதி 38. இந்திரனின் தோஷமே பெண்களுக்கு மாதவிடாய்.பெண்களை துரத்தித் துரத்தி துன்புறுத்திய வேதம்... மந்திரங்கள் பெண்களின் காதுகளில் விழுந்துவிடக் கூடாது.

.

2 comments:

  1. மிக அருமையான தளம் .......தொடர்ந்து எழுதுங்கள் நன்றி
    அதித்யா
    திருச்சி

    ReplyDelete
  2. அறிய செய்திகள் .......அறியவேண்டியவை தொடர்ந்து படிக்க வாய்ப்பு கொடுங்கள் .... எழுதுங்கள் நன்றி !

    ReplyDelete