இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

26. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி - 26

26. தமிழ் பேசினால் எனக்கு தீட்டு.

“நீங்களும் மகா பெரியவரும் ஏன் சமஸ்கிருத்திலேயே பேசிக்கொள்கிறீர்கள்? இதை நாங்கள் கேள்வி கேட்டால்... ஸ்நானத்தை முடிச்சுப் போடுகிறீர்கள். பேசிக் கொண்டிருப்பதற்கும் குளிப்பதற்கும் என்ன சம்பந்தம்...?”...மறுபடியும் புரியாமல் என்னிடம் கேட்டார்கள்.
சத்திரத்தில் இருந்த சிலர் அன்று நான் அவர்களுக்கு பதில் சொல்லிவிட்டேன். அந்த பதிலை உங்களுக்குச் சொல்வதற்கு முன்... மகாபெரியவர் திருப்பாவை ...திருவெம்பாவை என்னும் கருத்துருவை தேர்ந்தெடுத்ததை அவர் மூலம் கேட்ட வழியில் சொல்கிறேன்.

தமிழ் மாதங்களில் ஆடி மாதம் முதல் மார்கழி வரையிலான ஆறு மாதங்கள் தட்சணாயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் தென்திசை வழியாக பயணிக்கும் காலம் என இதற்குப் பொருள். (அயணம் என்றால் வழி என இங்கே அர்த்தப்படும்.!

தை முதல் ஆனி வரையிலான மீதமுள்ள ஆறு மாதங்களும் உத்தராயணம் என அழைக்கப்பெறும். அதாவது சூரியன் வடதிசை வழியே பயணிக்கும் என பொருள்.

தட்சணாயண காலத்தில் பகல்பொழுது சுருக்கமாகவும், ராப்பொழுது அதிகமாகவும் இருக்கும். உத்தராயண காலத்தில் ராப்பொழுது சுருங்கி பகல் பொழுது விஸ்தாரமாகும்.

இப்படிப்பட்ட தட்சணாயண காலத்தின் விடிகாலைகளில் தமிழச்சிகள் தங்களது தோழிமார்களை கூட்டிக்கொண்டு நதிக்கரைக்குச் செல்வார்கள். குளிர் கூத்தாடும் வைகறைப் பொழுதில் நதியோர சிலுசிலு நடுக்கத்தையெல்லாம் தங்களது மென்மையான பாதங்களால் மிதித்து ஈர வஸ்திரங்களோடு ‘பாவை தெய்வம்’ பேரை சொல்லி நீராடி தொழுதார்கள் தமிழச்சிகள்.

இப்பண்பாடு நீட்சியாகி... தங்களுக்கு சிறந்த கணவன் வேண்டி கடவுளை தொழுவதற்காக விடிகாலைகளில் நீராடினார்கள். இந்த நிலையிலிருந்தும் வளர்ந்து... ‘நமது கோரிக்கைகளை விடிகாலையில் கடவுளிடம் சொல்கிறோம்.

நாம் எழுந்திருந்தது போல் கடவுளும் எழுந்திருப்பாரோ அவரை முதலில் எழுப்ப வேண்டும்’ என எண்ணிய பக்தைகள் முதலில் கடவுளை எழுப்புகிறார்கள்.
கடவுளை மனித வழியில் அணுகுவது என்ற கலாச்சாரம் இது. பிற்பாடு... கடவுளையே கணவனாக அடையவேண்டும் என்ற ‘நாயக’ நாயகி பாவம்’ வரை வளர்ந்தது இந்தப் பண்பாடு. தொடர்ந்து அதிகாலைகளில் நீராடி... கடவுளை எழுப்புவதற்காக, கட்டுப்பாட்டோடு இதில் கலந்துகொள்ள வேண்டும் என்பதற்காக நோன்பு, அதாவது விரதமாக இதை அனுஷ்டிக்க ஆரம்பித்தனர். பாவையர் மட்டுமே பங்கு பெற்ற பக்தி நோன்பு, ஆதலால் ‘பாவை நோன்பு’ ஆயிற்று.

இத்தகைய தூய தமிழ் கலாச்சாரத்தைத் தான் சைவத்தின் மாணிக்கவாசகப் பெருமானும், வைணவத்தின் ஆண்டாள் சுடர்க்கொடியும் பக்தி இலக்கியங்களில் பயன்படுத்தினார்கள். திருப்பாவை, திருவெம்பாவை என தமிழ்ரசம் சொட்டும் பக்திப்பாக்கள் செய்தார்கள். இத்தகைய தமிழ் பாக்களைத்தான் சைவ-வைஷ்ணவ ஒற்றுமைக்கும், பிராமணர்-பிராமணர் அல்லாதார் நெருக்கத்துக்கும் பயன்படுத்த நினைத்தார் மகாபெரியவர்.

தமிழை, தமிழ்ப்பண்பாட்டு அடிப்படையிலான இலக்கியத்தை ‘பாவைமாநாடு’ என்ற பெயரில் உற்சவமாக தொடங்கி வைத்தார் மகா பெரியவர். அப்படிப்பட்டவர் ஏன் என்னோடு உரையாடும்போது சமஸ்கிருதத்தில் உரையாடுகிறார் என்ற சந்தேகம் உங்களுக்குள் உயிர்த்திருக்கும்.
இதே சந்தேகத்தைத்தான் அன்று திருவிடை மருதூர் சத்திரத்தில் உள்ளவர்களும் கேட்டார்கள். நான் சொன்ன ‘ஸ்நான’ பதில் அவர்களுக்கு புரியவில்லை.அவர்கள் புரிந்து கொள்ளும்படியாக... மடத்தில் நடந்த ஓர் உண்மை சம்பவத்தையே அவர்களிடம் அறிவித்தேன்.

அது...கும்பகோண மடம்... சூரியன் வானத்தின் மேற்குப் பக்கமாய் மேய்ந்து கொண்டிருந்தான். மஞ்சள் நிறக் கதிர்கள் பூமியின் மீது பொலபொலவென உதிர்கின்றன. ஒருவிதமான ஊதல் காற்று கும்பகோணத்தையே குளிப்பாட்டிக் கொண்டிருந்தது.

அந்த நாளுக்கான மாலைநேர பூஜைகளுக்காக மடம் தயாராகிக் கொண்டிருந்தது. மகாபெரியவர் ஸ்நானம் முடித்திருந்தார். மதியம் சிறிது நேரம் தூங்கினால் கூட ‘மடி’ அதாவது ஆச்சாரம் போய்விடும். மறுபடியும் குளிக்கவேண்டும். அந்த வகையில் குளித்து முடித்துவிட்டிருந்தார் மகாபெரியவர்.

அந்த நேரமாய் பார்த்து ஒரு சில பக்தர்கள் அவரைப் பார்த்தே தீருவது, அருளாசி பெற்றே தீருவது என்ற முடிவில் காத்திருந்தார்கள். அவர்களில்... நாட்டுக்கோட்டை செட்டிநாட்டிலிருந்து வந்திருந்த அருணாசலம் என்ற பக்தர்... மகாபெரியவரை பார்த்து அவரிடம் அருள்மொழிகள் வாங்கிவிட்டுத்தான் போவது என்ற உறுதியோடு இருந்தார்.

அந்த நேரம் நானும் மடத்தில் இருந்ததால், அருணாசலத்திடம் சொன்னேன்... ‘இதோ பாரப்பா, இன்றைக்கு நீ மகாபெரியவரை பார்க்க முடியாது. நாளை வாயேன்..’ என்றேன்.

‘இல்லை சாமி இப்பவே அவரை பார்க்கணும்’ என்றார் பக்தர்.எங்கள் பேச்சுச் சத்தத்தை கேட்ட சிலர்... விஷயத்தை மகாபெரியவரிடம் சொல்ல அவர் என்னை உள்ளே அழைத்தார். போனேன். கேட்டார் சொன்னேன்.

‘இதோ பாரும் தாத்தாச்சாரி... அவரை பாக்கறதுக்கு நேக்கு ஒண்ணுமில்லை. பாத்தால் ஏதாவது கேப்பார். பதிலுக்கு நான் தமிழ் பேசவேண்டிவரும். நோக்குதான் தெரியுமே.


தமிழ் பேசினால் எனக்கு தீட்டு. மறுபடியும் ஸ்நானம் பண்ணணும். பூஜைக்கு நேரமாயிடுத்துல்யோ... அதனால் நான் மௌனம் அனுஷ்டிக்கிறேன்னு சொல்லி அனுப்ச்சிடுங்கோ...” என என்னோடு சமஸ்கிருத சம்பாஷணை நிகழ்த்தினார் மகாபெரியவர்.

நானும் வெளியே வந்தேன். நான் சொன்னதுதானப்பா... சுவாமிகள் மௌனத்தில் இருக்கார். நாளைக்கு வாயேன்.. என்றேன்.

‘அப்படியா? தெய்வத்தை இன்னிக்கே பார்க்கலாம்னு எதிர்பார்ப்போட வந்தேன். சரி... நாளைவரை ஏதும் சத்திரத்தில் தங்கிவிட்டு வர்றேன்’ என தாய்மொழியாம் தமிழில்’ மகாபெரியவரை தெய்வமாக மதித்து ஆதங்கப்பட்டுக் கொண்டே சென்றார் அருணாசலம். - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
25. தமிழில் பேசினால் தீட்டு கழிய‌ ஸ்நானம் பண்ணணும்.


பகுதி 27. சூத்ரனோ, பஞ்சமனோ கோயிலுக்குள் பாதம் வைத்தால் பகவான் பட்டென ஓடிப் போய் போய்விடுவார். விக்ரகம் வெறுங்கல்லாகி விடும். பரிகாரம் கும்பாபிஷேகம். அதாவது குடமுழுக்கு.

3 comments:

  1. Adi pinreenga ponga... Naan ungaloda periya fan.. pls. ella unmaigalaiyum sollungal...

    ReplyDelete
  2. Ayya! SIVA LINGAM uruvana kathaiyai satru pathivu seiyungal please

    ReplyDelete
  3. சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான்.

    "என்ன கருமம்டா இது..?? இந்த கேவலத்தை நாம் வணங்க வேண்டுமாம் ..!!" கும்புடுறதா இருந்தா கும்பிட்டு நாசமா போங்கடா.........?

    CLICK >>> சிவலிங்கத்தின் கேவலமான கதை இது தான். <<<< TO READ

    ReplyDelete