இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

24 - பெரியாரின் பரபரப்பு பிரசாரம். பிராமணிய பலத்துக்காக யாகம்

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 24

24 பெரியாரின் பரபரப்பு பிரசாரம். பிராமணிய பலத்துக்காக யாகம்.

மகா பெரியவரின் ஆசீர்வாதத்தோடு ஆரம்பிக்கப்பட்ட வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை. அன்று எங்களைப் போலவே இளமையோடு வீரியமாக விஸ்தாரமாக செயல்பட ஆரம்பித்தது. “ வேதங்களை சிரத்தையாக வாசித்து அது சொல்லியபடி அனுஷ்டிக்கும் பிராமணாள் குறைஞ்சிட்டா... அவாளுக்கு வேதிக் ஸ்பிரிட் (Vedic spirit) உண்டாக்கணும்.


நாம் நம்ம தரப்பிலிருந்து செய்ய வேண்டியவற்றை செய்தால்தான்... பகவான் அவர் தரப்பிலிருந்து செய்ய வேண்டியதை செய்வார் இல்லையா?...” என என்னிடம் வினவிய மகா பெரியவர், வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபையின் ஒவ்வொரு கூட்டங்களிலும் யஜுர் வேதத்தில் சொல்லப்பட்டுள்ள ஆவஹந்தி ஹோமத்தை நடத்துமாறும் கேட்டுக் கொண்டார்.

எத்தனையோ ஹோமங்கள் வேதங்களில் சொல்லப்பட்டிருக்க எதற்கு ஆவஹந்தி ஹோமம்?... அப்படியென்றால் என்ன?...ஒவ்வொரு ஹோமமும் ஒவ்வொரு நோக்கத்துக்காகத்தான் அதாவது கோரிக்கைகளை (Demands) முன்னிறுத்திதான் நடத்தப்படுகின்றன. அந்த வகையில் ஆவஹந்தி ஹோமம்.. ப்ரம்ம தேஜஸ்க்காக நடத்தப்படுகிறது.

புனித கலசத்தை நிறுவி... அதன்மேல் வேதங்களை தொகுத்த வ்யாஸரை போற்றி துதி செய்து... அக்னி வளர்த்து மந்த்ரங்களை முழங்குவதுதான் ஆவஹந்தி ஹோமம் இந்த ஹோமத்துக்கு முக்கியமாக பயன்படுத்தப்படுவது வெறுஞ்சாதம். அஃதாவது அன்னத்தை கொடுத்து வ்யாஸரின் வேத அறிவையும் கொடுத்து ‘ப்ரம்ம தேஜஸ்’ஸை, கடவுளின் பலத்தை அதிகரிக்கச் செய்யவேண்டும் இந்த ஹோமத்தில் ப்ரம்ம தேஜஸ்’ என்பது பிராமணீயத்தின் பலம் என குறிப்பிடப்படும்

ஆவஹந்தி ஹோமத்தின் முக்கிய பலன் பிராமணீயத்தை பலப்படுத்துதல்.

இப்போது புரிகிறதா இந்த ஹோமத்தை ஏன் பண்ணச் சொன்னார் என்று.

இந்த ஹோமம் செய்து முடிந்ததும்... வேதத்தைப்பற்றி விளக்கமாக உபன்யாசிக்க வேண்டும். வேதங்களை பிராமணர்கள் கைக்கொண்டு செய்ய வேண்டியவற்றையெல்லாம் அந்த உபன்யாஸங்கள் விளக்கும்.

அப்போது... கும்பகோண மடத்துக்கு ஒன்றும் சொல்லிக் கொள்ளும்படியான செல்வம் இல்லை. நாங்கள் இந்த சபைக்கென எந்த மூலதனத்தையும் முன் கூட்டியே வைத்திருக்கவில்லை. இன்னும் சொல்லப்போனால் எந்த வங்கிக் கணக்கும் இல்லை. சபைக்கென டிரஸ்டியும் இல்லை.

இந்த ‘வசதி’கள், ஒன்றுகூட இல்லாவிட்டாலும் அப்போது... மகாபெரியவரின் ஆசீர்வாதம். எங்களது உழைப்பு ஆகியவற்றால் வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை கனஜோராக செயல்பட்டது.

இதன் முக்கியமான விளைவாக... தஞ்சாவூர் ஜில்லாவில் நாங்க போன ஒவ்வொரு கிராமத்திலும்... ஒவ்வொரு பேரூர்களிலும் வேதப் பிரச்சாரம் முழுமையாக நடந்தது. பல பிராமணர்கள் தங்கள் குழந்தைகளை வேத பாடசாலை பக்கம் திருப்பி விட்டனர். ஒரு ஆன்மீக வேத புத்துணர்ச்சி எழும்பியது. இதற்கு சீதாராமையர் பெரும் பொறுப்பு வகித்தார்.

இப்படியாக... இந்த வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை படிப்படியாக வளர்ச்சி கண்டு வந்ததில் மகா பெரியவருக்கு மெத்த மகிழ்ச்சி. தஞ்சாவூரின் கிராமங்களில் வேத உபன்யாஸமும் பண்ணிக் கொண்டிருந்த எங்களுக்கு பம்பாயிலிருந்து அழைப்பு வந்தது.

யார் அழைத்தது? இங்கேயிருந்து போன பிராமணர்கள்தான் செல்வச் செழிப்பில் மிதந்த அவர்கள் வேதத்தை விட்டு ஒதுங்கியிருந்தாலும் வேத ஈடுபாட்டிலிருந்து விலகவில்லை.

அதனால் எங்களை அழைத்தார்கள். பம்பாய் தொடங்கி... அகமதாபாத் டெல்லி, கல்கத்தா, நாக்பூர் என தென்னிந்திய பிராமணர்கள் வசிக்கும் வட இந்திய பகுதிகளுக்கெல்லாம் சென்றோம். ஹோமம் வளர்த்தோம். உபன்யாசம் செய்தோம். அதன்மூலம் வேதம் வளர்த்தோம்.

அதற்கு கிடைத்த சம்பாவணை அதாவது சன்மானத்தை மறுபடியும் தஞ்சாவூர் ஜில்லாவில் வேதம் வளர்க்க பயன்படுத்தினோம். இப்படி நாங்கள் பரபரப்பான பகவத் சேவையில் ஈடுபட்டுக் கொண்டிருந்த சமயம்.. நாத்திக நாயகரான ராமசாமி நாயக்கரும் பரபரப்பான பிரச்சாரத்தில் இறங்கி சுற்றிக் கொண்டிருந்தார்.

அவருக்கும் தெரிந்த எனக்கும் தெரிந்த ஒருத்தர் கே.கே. நீலமேகம். கும்பகோணம் கடைத்தெருவில் அவரை நான் பார்க்கும்போது..

“ஸ்வாமி... பார்த்தீரா... எங்கள் ராமசாமி நாயக்கர் உங்களை வாங்கு வாங்கென வாங்கிவிட்டார்” என்பார். கடைத்தெருவில் நாயக்கர் சொன்ன வாதங்களுக்கு எதிர்வாதங்களை நீலமேகத்திடம் எடுத்துச் சொல்லிவிட்டுத்தான் நான் நகர்வேன்.

இந்நிலையில் பிராமணர்களை மட்டுமன்றி.. தெய்வங்களின் சொரூபங்களை கிண்டலடிக்கும் அபச்சாரத்தை அப்போது நாத்திகக்காரர்கள் கூடுதல் உத்தியாக கையிலெடுத்தனர்.

இது மகா பெரியவரையும் உறுத்தியது. வழக்கம்போல என்னிடம் ஆலோசித்தார். தாத்தாச்சாரீ... நாம மொதல்ல நடத்தின வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபை ரொம்ப நன்னா போறது.

அதுக்கு அடுத்ததா.. அவாள்லாம் சொரூபங்களை கிண்டலடிக்கிறதால... நாம் பூஜா தத்வத்தையும்... சிற்ப சாஸ்திரத்தையும் பத்தி எல்லாருக்கும் புரிய வச்சாகணும்... என்ன சொல்றீர்..” என்றார்.

“வாஸ்தவம்தான் ஸ்வாமீ... இந்த ‘அவேர்னஸ்’ (Awareness) பிராமணாளுக்கும் வரணும்... மத்தவாளுக்கும் வரணும்...” என்றேன். எங்களின் சிலநாள் ஆலோசனைகளுக்குப் பிறகு... உதித்தது ஆகம சிற்ப சதஸ். - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.


பகுதி 23. பிராமணர்களை திருத்த‌ வேத சாஸ்திர பரிபாலன சபை


பகுதி 25. தமிழில் பேசினால் தீட்டு கழிய‌ ஸ்நானம் பண்ணணும்.

No comments:

Post a Comment