இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 23.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி 23.

பகுதி 23. பிராமர்களை திருத்த‌ வேத சாஸ்திர பரிபாலன சபை

“வாரும் தாத்தாச்சாரியார்... நன்னா இருக்கீரா? உம்மைப் பத்தி சிஷ்யாளெல்லாம் சொன்னா... தர்ம பிரச்சாரம் பண்ணிண்டே இருக்கீராமே... உடம்பை பார்த்துக் கோங்காணும்....”....என முதன் முதலாய் என்னிடம் வார்த்தைகளை மென்மையாக வீசினார்


சங்கராச்சாரியார்.சனாதனத்துக்கு நம்மளால முடிஞ்சதை பண்ணணுமே ஸ்வாமி... அதான் அங்க இங்கேன்னு அலைஞ்சாலும் விடாம தர்மப் பிரச்சாரத்துலேயே இருக்கேன். என நான் பதில் சொல்ல.... எங்களது சபை சமாச்சாரங்களைப் பற்றி ரொம்ப கேள்விகள் கேட்டார் மகா பெரியவர்.

நானும் சளைக்காமல் போன, வந்த இடங்கள், பிரசங்க அனுபவங்கள் பற்றியெல்லாம் ஏற்ற இறக்கங்களோடு அவரிடம் விளக்கினேன்.

எனது அனுபவங்களையெல்லாம் சிலாகித்துக் கேட்ட மகா பெரியவர்... ‘ரொம்ப நல்லது பண்ணின்டிருக்கீர்... இன்னோர் நாளைக்கு விஸ்தாரமா பேசுவோம்’ என விடை கொடுத்தார். அவரின் பல வினாக்களுக்கு விடை கொடுத்த நானும் கிளம்பி வந்தேன்.

நான் சங்கராச்சாரியாரைப் பார்த்து விட்டு வந்ததில் எங்கள் சமூகக்காரர்களுக்கிடையிலேயே ஒரு சின்ன சலசலப்பு.

என்ன ஓய்... நாமெல்லாம் சுத்த ஆச்சார்ய புருஷாள்... ஆனா இவர் சங்கராச்சாரியாரை பார்த்துட்டு வந்திருக்காரே... இதெல்லாம் நன்னா இருக்ககோ...” என என் காதுபடவே கும்பகோணத்தில் சில குரல்கள் புறப்பட்டன.இதெல்லாம் நன்னா இருக்கோ?... என பார்ப்பதற்கு முன்... ‘அதென்ன ஆச்சார்ய புருஷாள்?... என உங்களுக்குள் ஒரு கேள்வி முளைக்கும்.

ஒரு சமூகத்தில் அதாகப்பட்டது அந்த கால பிராமண சமூகத்தில் சமய தத்துவங்களை போதிக்க ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவை நிரம்பப் பெற்ற சிந்தன வாதிகளுக்குக்குத் தான் சிறப்புத் தகுதி இருந்தது. அதாவது அவர்களை குரு ஸ்தானத்தில் வைத்திருந்தனர்.

இதுபோல் அனைத்து சமய தகுதிகளும் வாய்க்கப் பெற்ற குரு ஸ்தானத்தில் உள்ளவர்கள் சிற்சிலர் தான் இருப்பார்கள். அவர்களை தேர்ந்தெடுத்து சகல மரியாதைகளையும் கௌரவத்தையும் கொடுத்து போற்றி வந்திருக்கிறார்கள். அப்படி போற்றப்பட்டவர்கள் தான் ஆச்சார்ய புருஷரின் வம்சா வழியான நானும் ஓர் ஆச்சார்ய புருஷன்.

அதே நேரம்... வெறும் வம்சத்தால் மட்டுமே இப்பெருமையை இப்போது பலர் பெற்றிருக்கிறார்கள். சிலர் தான் அந்த ஞானம் ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் இன்னமும் தங்கள் பரம்பரைப் புகழை காப்பாற்றி வருகின்றனர்.

உதாரணத்துக்கு சிறீராமானுஜர் அருளிய பாஷ்யத்தைப் பற்றி உபதேசிக்கவும் எடுத்துரைக்கவும் பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என சிலர் அவரது காலத்திலேயே நியமிக்கப்பட்டனர்.

அவர்களின் பரம்பரையில் பிறந்து வந்ததன் காரணமாகவே இன்றும் சிலர் தங்களை பாஷ்ய சிம்மாசனாதிபதிகள் என அழைத்துக் கொள்கிறார்கள். உண்மையில் ‘பாஷ்யம்’ பற்றி இவர்களுக்கு தெரிந்தது பூஜ்யம் என்றாலும் கூட இவர்கள் தான்

இன்று பாஷ்ய சிம்மாசனாதிபதிகள். அதுபோல... ஆச்சார்ய புருஷர் பரம்பரையில் வந்த நான் ஞானம், ஒழுக்கம், அனுஷ்டானம் ஆகியவற்றில் எதையும் நழுவவில்லை. அதனால்தான் ஆச்சார்ய புருஷராகிய நான் மாற்று தத்துவக்காரராகிய மகா பெரியவரை சந்தித்தது பற்றி சிலர் கும்பகோணத்தில் கேள்வி எழுப்பினார்கள்.

அழைத்தவரை சென்று சந்திக்காமல் இருப்பதைவிட பெரிய கௌரவக் குறைச்சல் இருக்கமுடியுமா?...அதனால் அக்குரல்கள் பற்றி நான் கவலைப்படவில்லை.அந்த முதல் சந்திப்புக்குப் பிறகு மகா பெரியவர் அவ்வப்போது என்னை சந்திப்பார்.

அப்படி ஒரு தடவை சந்தித்தபோது... ‘முதலில் நாம் நம்மை சுத்தப்ப படுத்திக்கணும் இல்லையா?... இப்போது பல பிராமணர்கள் வேதத்தை மறந்து பாவம் சுமக்க தொடங்கி விட்டார்கள். வேதத்தை எப்படியாவது காப்பாற்றணும் அதற்கு நாம் ஏதாவது ஸ்தாபனரீதியாக செய்யவேண்டும். ஏதாவது சொல்லுங்களேன்...’ என்றார் மகா பெரியவர்.

நான் சொன்னேன் ‘நாங்கள் சபை மூலமாகவும், பத்திரிகைகள் முலமாகவும் கூடிய அளவுக்கு பிரச்சாரங்கள் செய்தபடி தான் இருக்கிறோம். டி.கே. ஜெகந்நாதச்சாரியார் (எழுத்தாளர் சாண்டில்யனின் தகப்பனார்) கூட ‘பிராமணன்’ ‘தார்மீக ஹிந்துனு’ பத்திரிகைகள் நடத்தறார். நாங்களும் பேசி எழுதிதான் வருகிறோம்’ என நான் சொன்னேன்.

பதிலுக்கு மகா பெரியவர்...‘அதெல்லாம் நடக்கட்டும் தாத்தாச்சாரியார்... ஆனாலும் பிராமணர்கள் தங்கள் கடமையை மறந்துட்டா இல்லையா?அதனால அவாளை திருத்துறதை முக்ய நோக்கமா கொண்டு... ஒரு சபை ஆரம்பிக்கலாம்.

அதுக்கு வேத தர்ம சாஸ்திர பரிபாலன சபைனு பேர் வைக்கலாம். இதுக்கு நீர்தான் பெரிய உபகாரம் பண்ணனும்.மொதல்ல பிராமணர்கள் வேதத்தை படிச்சு அதை தழைக்க செய்யணும்.

இந்த சபை நடத்தறத்துக்கான பணத்தை பிராமணாள்ட்ட மட்டும் வாங்கணும். அப்பத்தான்.. நாம செஞ்ச பாவத்தை நாமளே சுத்தப்படுத்த முடியும்” என்றார்.

இஃது உடனே செயல் வடிவமாக்கப்பட்டது.குளித்தலை அண்ணாத்ர அய்யங்காரும், ஜெயராமய்யரும் இந்த சபைக்கு

செகரட்டரியானார்கள்.அன்றைய தஞ்சாவூர் ஜில்லா முழுவதும் இவர்கள் பிராமணர்களை சென்று சந்தித்து அவர்களால் முடிந்த காணிக்கை பணத்தை வசூல் செய்ய, அவர்களோடு நானும் புறப்பட்டேன்.

“பிராமணர்கள் திருத்தினால் நல்வழிப்படுத்தினால் அவர்கள் சமூகத்தை நல்வழிப்படுத்துவார்கள்” நம்பிய மகா பெரியவர். இதற்காகத்தான் வேத சாஸ்திர பரிபாலன சபையை ஆரம்பிக்க வைத்தார். அது என்ன பலனை கொடுத்தது? - அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார். (தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

பகுதி 22. பெரியாருக்கு பதிலடி .ஆரியசமாஜம்.பகுதி 24. பெரியாரின் பரபரப்பு பிரசாரம். பிராமணிய பலத்துக்காக யாகம்
.

No comments:

Post a Comment