இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

6. தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 6

6. தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள்

தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.

இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.


சிற்பக் கலைகளில் ஓங்கி உயர்ந்திருந்த தமிழர்கள் பல பெண் உருவச் சிலைகளை வடித்தனர். சிறு சிறு குழுக்களுக்கு ஊர்களுக்கு அவற்றை காவல் தெய்வமாக வைத்தனர் அச்சிலைகளின் முன் நின்று உரத்த குரலில்...‘ஏ... காவல் காக்கும் அம்மா... என் வீட்டில் மாடுகள் நிறைய கொடு... எங்கள் ஊருக்கு மழையைக் கொடு... என அச்சிலை முன் நின்று சத்தம் போடுவார்கள்.

ஏன் என்று கேட்டால்... சிலைக்கு கல் காதல்லவா? அதனால் நாம் உரக்கச் சத்தம் போட்டால் தான் நமது வேண்டுகோள் அச்சிலையின் காதில் விழும். அப்போது தான் நமது கோரிக்கை நிறைவேற்றப்படும்... என்பது நம்பிக்கை.

இப்படியே கொஞ்ச காலம் போக... ஒருவன் சொன்னான் நாம் நமக்குள் பேசுவது போல பேசிக் கொண்டிருந்தால் சிலையின் காதில் கேட்குமா?

க்ரீம் த்ரீம் ப்ரீம்... என அடி வயிற்றிலிருந்து அதிரும்படியான சொற்களை உச்சரித்தால் அந்த அதிர்வில் சிலையின் காது திறக்கும் என்றான்.

இந்த உரத்த வழிபாடு ஒரு பக்கம் நடந்துகொண்டிருக்க தமிழர்களுக்கு கைகூப்ப கற்றுக் கொடுத்தார்கள் பிராமணர்கள். எப்படி?

தொடக்க கால ஆரியர்களோடு தாஸே எனும் பழங்குடியின மக்கள் பல வகைகளில் மோதினர். சிந்தனை சக்தியில்லாத முரட்டுக் கூட்டத்தை உயர உயரமாய் இருந்த ஆரியர்கள் பதிலுக்குச் சண்டையிட்டு வெல்ல... அப்போது தாஸே இனத்தவர்கள் ஆரியர்கள் முன் குனிந்து இரு உள்ளங் கைகளையும் பிணைத்து... ‘இனி உங்களை தாக்கமாட்டோம் என அடிபணிந்தனர்

.அதுபோல வைத்துப் பாருங்கள் கும்பிடுவது போல் தோன்றும். அந்த ‘தாஸே‘ இனப் பெயரிலிருந்து தான் தாஸன் என்ற சொல் முளைத்தது. தாஸன் என்ற சொல்லுக்கு அடிமை என்ற அர்த்தமும் அதன் வழியேதான் முளைத்தது. தங்களை அன்று கும்பிட்ட ‘தாஸே‘ இன மக்கள் மாதிரியே... பிற்காலத்தில் தெய்வங்களை வழிபடக் கற்றுக் கொடுத்தனர் பிராமணர்கள்

கடவுளுக்காக கை கூப்ப வைத்த பிராமணர்கள் படிப்படியாக... தமிழர்களின் உரத்த வழிபாட்டிற்குள்ளும் ஊடுருவினார்கள்.

“நாம் பேசுவதையே தெய்வத்திடம் பேசினால் அதற்குக் கேட்குமா? நாங்கள் சில மந்திரங்கள் சொல்கிறோம். அதை உச்சரித்தால்தான் உன் சிலைக்கு தெய்வ சக்தி வரும். தவிர மனிதர்களுக்குள் பேசும் மொழியை நீங்கள் தெய்வத்திடம் எப்படி பேசுவீர்கள்?.. என வேத சமஸ்கிருத மந்த்ரங்களை அச்சிலை முன்னர் கூறத் தொடங்கினார்கள்.

புதிதாக இருக்கிறதே என கேட்க ஆரம்பித்த தமிழர்கள் தான் இன்றுவரை கேட்டுக் கொண்டிருக்கிறார்கள்.

இத்தனைக்கும் வேதத்தில் சொல்லப்பட்டிருப்பது என்னவென்றால்... கடவுளுக்கு உருவம் கிடையாது. உபநிஷத்துகள் உபதேசிப்பது என்னவென்றால்... “கடவுளுக்கு உருவம் எதுவும் கிடையாது. உருவம் இல்லாதது தான் உண்மையான உருவம்

வேதம், உபநிஷத்து இவற்றையெல்லாம் தாண்டிக் குதித்து தமிழகத்தில் சிலைகளுக்கு முன்னாள் மந்திரம் சொல்ல ஆரம்பித்தான்.

தமிழன் வழிபாட்டு முறையான பூவோடு... தெய்வம் சாப்பிட ஏதாவது கொடுக்க வேண்டாமா? பழம் கொண்டு வா, அன்னம் கொண்டு வா’ தொடங்கியது படையல் பண்பாடு. நந்தா விளக்கு தீபம், பூ இவற்றோடு வழிபாட்டு பொருள்களுக்கான பட்டியலில் பழம் சேர்ந்தது. உணவுப் பொருள்கள் சேர்ந்தன.

தமிழ் மட்டும் தள்ளி வைக்கப்பட்டது.

வழிபாட்டு முறையில் மாற்றம். அடுத்தது சமூக ரீதியாக மாற்றங்கள் உண்டாக வேண்டியதுதானே நியதி?... உண்டானது.

கலாச்சாரத்தின் முதல் மாற்றம் கல்யாணத்தில் தொடங்கியது. தமிழர்களின் கல்யாணமுறை எப்படி இருந்தது என தெரிந்து கொண்டால்தானே அது எவ்வாறு மாறியது என்பதையும் தெரிந்து கொள்ளமுடியும்.

இலக்கியங்களை சித்தரிப்பது போல களவியல் என்பதுதான் பழந்தமிழர்களின் திருமணமுறை அதென்ன களவியல்?

பெண்ணொருத்தி பூப்பெய்துகிறாள் உறவுப் பெண்கள் சுற்றிலும் மகிழ்ச்சி பொங்க முற்றுகை யிட்டிருக்கிறார்கள். பெண்மை, தாய்மை என்னும் பெருமைக்கெல்லாம் அடிப்படையே இந்த திருநாள்தானே. அதனால்தான் சுற்றத்தின் முகத்தில் மகிழ்ச்சி. அந்த யுவதியின் முகத்தில் வெட்கம்.

இதை பக்கத்து வீட்டுக் காளை பார்த்து பூரிக்கிறான். அவளது அழகு அவனை அழைப்பதாய் அவனுக்குத் தோன்றுகிறது. பெண்மையின் முதல் வெட்கத்தின் முகவரி அவள் முகத்தில் தெரிகிறது. அதை படிக்க அந்த காளை ஆசைப்படுகிறான்.

சுற்றிலும் உறவினர்கள். பெண்களின் பாதுகாப்பு... அன்ன நடை போட்டா அவளை அடைய முடியும்?

பொறுத்திருக்கிறது காளை. பொழுது சாயத் தொடங்கிய உடன் பாயத் தயாராகிறது. ராத்திரியின் மெல்லிய ஒளியில் தன் ராணியை நெருங்கியவன் நேரம் காலம் பார்ப்பதில்லை.ஒரே தூக்கு. அந்த ஆளான அழகை தன் இளங்கரங்களில் ஏந்தி சிற்சில நொடிகளில் சீறிப்பாய்ந்து மறைகிறான்.

ருதுவான மங்கை மாய மாய்ப்போன பின்னே... தேடுகிறார்கள்.

சுற்றுவட்டாரத்தையே அப்பெண்ணின் ஆண் உறவினர் கூட்டம் அணு அணுவாய் அலசுகிறது. கடைசியில் அந்த ஜோடி ஜொலித்துக் கொண்டிருக்கும் இடத்தைக் கண்டுபிடித்து விடுகிறது கூட்டம். பக்கத்து வீட்டு காளை அவளை பருகி நெடுநேரம் ஆகியிருந்தது. கையும் களவுமாக பிடித்த பின் என்ன தண்டனை தெரியுமா? -- அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்.(தொடரும்)

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.

CLICK TO READ:-

====>பகுதி 5. வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்.

====>பகுதி 7. பிராமணர்கள் உருவாக்கிய கல்யாண சடங்குகள்.

7 comments:

 1. yes...yes...you proceed...

  let the true comes out

  ReplyDelete
 2. sorry let the truth comes out

  ReplyDelete
 3. தாத்தாச்சாரியார் அவர்களே,

  அப்படியென்றால் நம் தமிழர்கள் பண்பாடில்லாமல், ருதுவான பெண்ணை, அப்பெண்ணின் சம்மதமில்லாமல், அன்றே தூக்கிச்சென்று கற்பபழிப்பவர்களா ???

  அப்படிக் கற்பபழிப்பிர்க்குப் பிறந்தவர்கள் தான் நாமா???

  இதைவிட நமக்கு வேறு அவமானம் உண்டா???

  இதைப் படிக்கும் எந்த மானமுள்ள தமிழனும் கேள்வி எழுப்பாதது ஏன்???

  ReplyDelete
 4. திரு தாத்தாச்சாரியார் அவர்களே,

  உங்கள் கட்டுரைகளில் உண்மைகளை விட கற்பனைகளே அதிகம் இருக்கின்றன.நீங்களும் உங்கள் தளத்தில் என் கருத்துக்கு பதில் அளிப்பதில்லை.அதுவும் தமிழனையும், தமிழ் கலாச்சாரத்தையும் நீங்கள் கேவலப்படுத்தியதுபோல் எவருமே கேவலப்படுத்தியது கிடையாது.

  பெண் ஒருவள் ருதுவான அன்று இரவே அவளை தூக்கி,-கடத்திச்- சென்று, ருதுவான அன்று இரவே அவளைக் கற்பழித்து, பின் கையும் களவுமாகப் பிடிக்கப்பட்டு ,பின் கட்டப்பஞ்சாயத்து தீர்ப்பின் படி மனம் புரிதலே தமிழர் கலாச்சாரமாம்.

  எந்தப் பெண் ருதுவாவால், அவளைக் கடத்திச் சென்று கற்பழித்து,திருமணம் செய்வோம் என்று கருமமே கண்ணாக காத்துக்கொண்டிருந்தவனா நம் சங்கத் தமிழன்,அப்படி பட்ட கேடுகேட்டக் கலாச்சாரத்தில் பிறந்தவர்கள் தான் நாமா?இதைவிட தமிழனுக்கு வேறென்ன அவமானம் வேண்டும்??

  பலவகைத் திருமணத்தில் ஒன்றே இந்த கடத்திச் சென்று மனம் புரிவது.இதில் கற்பழிப்பெல்லாம் நடைபெறாது.அதில் இந்த ருதுவான,அன்றே கடத்துவதும், ருதுவான அன்றே கற்பழிப்பதும் அப்பட்டமான, கேவலமானக் கற்பனையே.. இந்தத் கட்டுரையில் நம் தமிழரின் கலாச்சாரமும் கற்பழிக்கப்பட்டிருப்பதை ஏன் எந்த மானமுள்ள தமிழனும் கேள்வி கேட்கவில்லை???

  ReplyDelete
 5. அக்னிகோத்திரம் தாத்தாச்சாரியார் மறைவு.
  அக்னிகோத்திரம் ராமானுஜ தாத்தாச்சாரியார்
  29, டிசம்பர் 2008 திங்கள் கிழமை இரவு உடல்நிலை குறைவு காரணமாக மரணம் அடைந்தார்.

  அவருக்கு வயது 102.

  கும்பகோணத்தைச் சேர்ந்த தாத்தாச்சாரியார், காஞ்சி மகா பெரியவருக்கு நெருங்கிய நண்பர். இந்து மதத்தின் தனிப்பட்ட அங்கீகாரத்திற்காக நேரு, அம்பேத்கர் போன்றவர்களிடம் வாதிட்டவர். வேத ஆராய்ச்சியில் தன்னை முழுமையாபக ஈடுபடுத்திக் கொண்டவர்.

  தமிழில் அர்ச்சனை செய்யலாம் என்றும், அனைத்து சாதியினரும் அர்ச்சனை செய்யலாம் என்றும் அழுத்தமாக சொன்னவர்.

  இந்து மதம் எங்கே போகிறது என்ற தொடரை நக்கீரன் வார இதழில் தொடராக எழுதி பரபரப்பை ஏற்படுத்தியவர் தாத்தாச்சாரியார்.

  மேலும் சடங்குகளின் கதை என்ற பெயரில் நக்கீரன் இணைய தளத்திலும் தொடர் எழுதியுள்ளார்.


  102 வயதான தாத்தாச்சாரியார் கடந்த சில நாட்களாக உடல்நிலை சரியில்லாமல் இருந்தார். இந்நிலையில் திங்கள் கிழமை இரவு மருத்துவ சிகிக்சை பலன் அளிக்காமல் மரணம் அடைந்தார்.

  செவ்வாய்க்கிழமை, 30, டிசம்பர் 2008 (13:27 IST

  ..

  ReplyDelete
 6. திரு தமிழன் அவர்களே,

  உங்கள் தளத்தில் உள்ள கட்டுரைகளுக்கு பதில் சொல்ல உங்களுக்கு உரிமையும் ,கடமையும் உண்டு.

  ReplyDelete
 7. அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியாரின் க‌ட்டுரைக‌ள் அப்ப‌டியே இங்கு பதிவு செய்ய‌ப்ப‌ட்டிருக்கிற‌து.

  அவர் ஒரு பிராமிணர் என்ற உண்மை அவரது எழுத்துக்களில் ஆங்காகே பிரதிபளிக்கத்தான் செய்கிற‌து.

  ஆத‌ர‌வு அல்ல‌து மறுப்புகளை பின்னூட்ட‌ங்க‌ளாக‌ வாச‌கர்களே தெரிவிப்பதே விரும்ப‌த் த‌க்க‌து

  ReplyDelete