இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

1.இந்து மதம் எங்கிருந்து வந்தது?

இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 1

இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.

இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.

அது அந்தக்கால ஆப்கானிஸ்தான் நிர்வாண மனிதர்கள். சாப்பிடத் தெரியாது. எதுவும் தெரியாது. மாலை மயங்கி இருள் இழைய ஆரம்பித்தால் பயத்தில் சிகரத்தில் ஏறி குகைகளுக்குள் விழுந்து விடுவார்கள். சூரியன் மறுநாள் வந்து விளக்கேற்றிய பிறகுதான் பயம் போய் வெளியே வருவார்கள்.

பூமியே புதிராக தெரிந்தது. அவர்களுக்கு நதியை யார் துரத்துவது? பயந்தனர். மரத்தின் தலையைப் பிடித்து உலுக்குவது யார்? பயந்தனர் சுற்றிலும் இருள் பூசியது யார்? நடுங்கினர்.இந்தப் பயத்தாங்கொள்ளிகளுக்கிடையே சிலபேர் பயப்படாமல் பார்த்தார்கள். மலை, நதி, மரம், வானம், உற்றுப் பார்த்தார்கள்.

அவர்களின் மூளைக்குள்ளும் சூரியன் உதித்தது. மனிதனுக்கே உரிய சிந்தனா சக்தி அந்த சிலருக்கு வயப்பட்டது. சிந்தனையை இரு கண்களிலும் ஏற்றி வைத்துக் கொண்டு பார்வையால் உலகத்தைக் குடைந்தனர்.

விளைவு...! கண்டுபிடிக்கப்பட்டது தெய்வம். இதுவரைப் பார்த்து பயந்த மரம், செடி, கொடி, மலை நதி தான் தெய்வம். இருட்டை ஓடஓட விரட்டுகிறானே அந்த வெளிச்சம்தான் தெய்வம் என்றான் உற்றுப் பார்த்தவன். (இந்த தெய்வம் என்ற பதம்தான் அய்ரோப்பியர்களால் டிவைன் (Divine) என வழங்கப்படுகிறது.

ஆரியர்களில் ஒரு பகுதிதான் அய்ரோப்பாவுக்கு நகர்ந்தது).இயற்கைதான் கடவுள். துரத்தும், உலுக்கும் சக்தி தான் கடவுள். உற்றுப் பார்த்தவன், பார்த்தான் பார்த்தான் பார்த்துக் கொண்டே இருந்தான்.அவனுக்கு ரிஷி என பெயர். ரிஷி என்றால் பார்ப்பான், பார்ப்பான், பார்த்துக்கொண்டே இருப்பான்.

நமக்கும் மேல் ஒரு சக்தி இருக்கிறது என கண்டுபிடித்தவர்கள் அடுத்ததாய் அதற்குநாம் கட்டுப்பட்டு வாழ்வதெப்படி என்பதையும் வகுத்தார்கள்

உண்டாயிற்று வேதம்.

உற்றுப் பார்த்து சிந்தித்து சிந்தனையாளர்களால் நாகரிகம் மெல்ல மெல்ல அரும்பத் தொடங்கியது.‘இந்த உலகமே தெய்வம்தான். நாம் வாழ சந்தோஷமாக வாழத்தான் தெய்வத்தைப் பயன்படுத்த வேண்டும்” -வகுத்தது வேதம்.“Civilisation never born, but, it is the heritage of humanity” என பிற்பாடு அமெரிக்க அறிஞர் ப்ரைஸ் சொன்னது போல் தொட்டுத் தொடர்ந்தது நாகரிகம்.

முதலில் இயற்கையைப் பார்த்துப் பயந்த மனிதர்களுக்கு சிந்தனை செய்து உற்றுப் பார்த்த மனிதனான ரிஷி அறிவுரை சொன்னான்.

பயப்படாதே.. நீயும் நானும் நன்றாக வாழ வேண்டும். அதற்கு இந்த மரத்தைப் பயன்படுத்துவோம்.நதிகளைப் பயன்படுத்துவோம். இயற்கை நமக்காகத்தான் வேதம் ஒரு கட்டுப்பாடு மிக்க கலாச்சாரத்தைக் கொண்டு வந்தது.
ஆரிய இனத்தவர்கள் என வரலாற்று ஆசிரியர்களால் வர்ணிக்கப்படும்...இம் மனிதர்களிடையே இப்படித்தான் வேத மதம் பிறந்தது.

இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்.அதற்கு என்ன செய்தார்கள்! பிரித்தார்கள். மூன்றாக பிரித்தார்கள். தங்களைத் தாங்களே நிருவாகம் செய்வதற்கு ஆள்வதற்கு ஒரு பிரிவு. அவர்கள் சொன்னபடி செய்து முடிப்பதற்கு ஒரு பிரிவு. இதோடு நிறுத்தவில்லை.

ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்.

ஆட்சி செய்வதற்கே நேரம் போதவில்லை என அதில் தீவிர கவனம் செலுத்த ஆரம்பித்தனர் க்ஷத்திரியர்கள். உழைக்க வேண்டும். பிழைக்க வேண்டும் என்பதில் தீர்மானமாக வியர்வை சிந்த புறப்பட்டுவிட்டார்கள் சிந்தனாசக்தி குறைந்த அப்போதைய வைசியர்கள்.பிராமணர்கள் பார்த்தார்கள். இவர்கள் இருவருமே வேதத்தை விட்டு விட்டுப் போய்விட்டார்களே....

அதிலுள்ள கருத்துகளை கட்டளைகளை கர்மாக்களை நாம்தானே சிரமேற்கொண்டு செயல் படுத்தவேண்டும். எனவே வேதம் பிராமணர்கள் கைக்குப் போனது.இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன.

ரிசா, குபா, க்ரமு என்கிற நதிகள் வேதத்தில் ஓடுகின்றன. இவை ஆப்கன் தேச நதிகள் என்பதால் வேதகாலம் பெரும்பாலும் ஆப்கன் பகுதியில்தான் நிகழ்ந்துள்ளதாகச் சொல்கின்றன.

வேதத்தில் மூழ்கியிருந்தோரின் முடிவுகள்.வேதம் பிராமணர்கள் கைக்கு போனதும் அறமும் தர்மமும் கர்மாக்களும் செவ்வனே நடந்தேறி வந்ததால்.. வேத மதம் பிராமண மதம் ஆயிற்று.

ஆரிய மதம் வேதமாகி வேத மதம் பிராமண மதமாகி, காலவெள்ளத்தில் அவர்கள் இந்தியாவிற்குள் அடியெடுத்து வைக்க, அப்போது இங்கே சுமார் 450 மதங்கள் இருந்தனவாம். இவைகளில் எது இந்து மதம்? --அக்னி ஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார், ( தொடரும் )

கட்டுரை தொடர்ந்து வளர வளர நீங்கள் அறியாத மறைக்கப்பட்ட தகவல்கள் உங்களை அதிர்ச்சிக்கும் ஆச்சரியத்திற்கும் உள்ளாக்கும். தொடர்ந்து வாருங்கள்.
--------
CLICK AND READ

===>பகுதி 2. இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?

9 comments:

 1. எந்த ஹிஸ்டரி புக்ல இந்த மாதிரி சொல்லி இருக்குன்னு சொன்னீங்கன்னா நல்லா இருக்கும்...

  "இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்."

  இப்போது அதுக்கு பேரு தாங்க சட்டம்.

  "ஆள்பவனையும் ஆளப்படுபவனையும் வேதம் சொல்லும் நெறி முறைகளைச் சொல்லிக்கொடுத்து... அவர்கள் தடம் பிறழாமல் காப்பதற்காக ஒரு பிரிவு.ஆள்பவன் க்ஷத்திரியன் ஆனான். ஆளப்படுபவன் அதாவது உழைப்பவன் வைசியன் ஆனான். இவர்கள் இரண்டு பேரையும் வேதத்தை வைத்துக் கொண்டு, வேதத்தைக் கற்று நீதி நெறிப்படுத்தியவன் பிராமணன் ஆனான்."
  அதாவது Flightla Economy Class, Business Class - Theatrela Elite, Premium இப்படி தானுங்க... : )

  "இதெல்லாம் முழுக்க முழுக்க ஆப்கானிஸ்தானில் நடந்ததாகத்தான் வேத காலத்தைப் பற்றிய ஆராய்ச்சிகள் அறிவிக்கின்றன."
  நீங்கள் பேசுகின்ற காலகட்டத்தில் அவை எல்லாமே ஒரே நிலப்பரப்பு தான்.....அப்படி பிரிவுகள் எல்லாம் கிடையாது...ஹரப்பா மொகன் ஜிதாரோ இப்போ பாகிஸ்தான்ல இருக்கு....அதுக்காக இப்போ நமக்கு சம்மந்தம் இல்லாததாகிவிடுமா ?

  எல்லா சமயங்களின் தோற்றமும் ஒரே மாதிரி தான் இருக்கும்...வெள்ளத்தில் ஆரம்பித்தது தான். அதன் மூலம் மெதுவாக நாகரிக வளர்ச்சி பெற்றவைகள் தான் உலக சமயங்கள்.

  ReplyDelete
 2. Very true.
  Do you have english translation?

  ReplyDelete
 3. Very true.
  Do you have english translation?

  ReplyDelete
 4. கபிலன் said...
  //"இந்த நல்லெண்ணச்சிந்தனை வளர்ந்து மெருகேற்றியதுதான் சமூக அமைப்பு. கலாச்சாரத்தைக் கட்டிக் காப்பாற்ற. ஒரு கட்டுமானம் வேண்டும். அது ஆளப்பட வேண்டும். வேதம் சொன்ன நெறிமுறைகளை வைத்து வாழ கற்றுக்கொள்ளப்பட வேண்டும்."

  இப்போது அதுக்கு பேரு தாங்க சட்டம்.//

  இதை எந்த சட்டப் புத்தகத்தில எழுதி வைச்சிருக்கு! உலக சட்டப்புத்தகத்திலேயா?

  சரி! இதை மட்டும், எந்த வரலாற்றுப் புத்தகத்திலே எழுதி வைக்கப்பட்டிருக்கு?

  நமக்கு சாதகமா இருந்தா?....சப்பைக்கட்டு தாராளமா வரும்....? இல்லைன்னா காஞ்சிப்போன கீரைக்கட்டுதான்!

  நான் மேனேஜராகணும்னா, தகுதியிருக்கும் எல்லோரையும் கீழேதான் தள்ளுவன்! அப்பத்தானே நான் முன்னுக்கு வரமுடியும்! அப்பத்தானே எனக்கு சம்பளம் அதிகம் கிடைக்கும்.....எல்லோரையும் ஏய்க்க முடியும்?

  எனக்கு ஏய்க்கிற வழி ரொம்ப பிடிக்கும் ஏன்னா? நான் மேனேஜரா இருந்துகிட்டு முதலாளிக்கு ஜால்ரா போட்டுகிட்டு என் பதவியை சுலபமா தக்கவைச்சுகிட்டு இருக்கேனே! அதனால, எனக்கு உடல் உழைப்பு குறைவு லாபம் அதிகம்.....

  மத்தவங்களுக்கு இது பிடிக்காது, காரணம் அவங்க எல்லாத்தையும் கீழே தள்ளிவிட்டதுனால தான்.....

  .ஒரு தனியார் நிறுவனத்துல சர்வ சாதாரணமா நடக்கிற விஷயத்துக்கே இப்படின்னா...இது மாதிரி பொது மக்களை பல பிரிவுகளாக பிரித்து ஏய்க்கிறதுக்கு ஒரு சோம்பேறிக்கும்பல், வேலை செய்யறதுக்கு ஒரு கும்பல், சண்டைப் போடறதுக்கு ஒரு கும்பல் என்று கட்டாயம் அனைவரும் உழைக்கவேண்டிய, பின்பற்றவேண்டிய கடமையை பாகுபாட்டுடன் பிரித்து கொடுத்தா வயிறு எரியுமா? எரியாதா?

  அதுவும் படிப்பறிவே இல்லாத காலத்திலே காட்டுமிராண்டிங்க பண்ணதை இப்பவும் சரின்னு சப்பைக்கட்டு கட்டுனா? கோவம் வருமா? வராதா? அப்புறம் எதுக்கு படிப்பு? காரித் துப்பணும்னு கூட தோணும்!

  அப்புறம் எப்படி பூமி உருண்டைன்னு கண்டுபிடிச்சிருக்க முடியும்?

  அதான்! இதையெல்லாம் வேற ஒருத்தன் கண்டுபிடிச்சான்....நம்ம விரல் சப்பிட்டு...... மீண்டும் மீண்டும் இதுக்கு சப்பைக்கட்டு கட்டுவோம்!

  ஆனா பேண்ட் சட்டை போடுவோம்! கம்புயூட்டர் யூஸ் பண்ணுவோம்.....புத்தி மட்டும் பழையகாலத்துக்குத்தான்..... உஷரா ஜாதி நன்மைக் கருதியேப் போகும்!

  ReplyDelete
 5. please sent more very intrest

  ReplyDelete
 6. @கபிலன் நீங் சொன்னது எந்த சட்டத்துல இருக்குங்கோ கேள்வி கேட்போர் சங்கம்

  ReplyDelete
 7. பிறப்பால் ஏற்றத்தாழ்வு ஏற்படுத்துவது என்பது மதநூளினின் மூலம் கூறப்பட்ட சட்டமென்றால் ......அதை எவ்வாறு ஏற்க முடியும்.ஆள்பவனையும் ,ஆளப்படுபவனையும் பிரிக்கும் சூத்திரம் பிறப்பில்தான் தொடங்கும் என்று கூறும் எந்த நூலும் புனித நூல் அல்ல .மாறாக அது கட்டுக்கதையே அதை சுட்டெரிக்க வேண்டியது ஒவ்வொரு பகுத்தறிவுள்ள ,மூளையுள்ள ,சிந்திக்க தெரிந்த மனிதனின் கடமை .

  ச.அருள்

  ReplyDelete
 8. சித்தாந்தத்திர்கும் வேதாந்தத்திர்க்கும் அர்த்தம் புரியாத முட்டா பசங்க எந்த சட்டம் கேக்குரானுங்க.
  மனித உயிர் பற்றி எந்த சட்டத்துல இருக்கு எப்படி உருவாகும்னு ஏதாவது சட்டம் இருக்கானு கேப்பானுங்க. அப்புரம் வழுரதுக்கு சட்டம் சாவுரதுக்கு சட்டம் எல்லா சட்டமும் கேப்பானுங்க ஆனா ஒரு சட்டத்தை யும் மதிக்க மாட்டானுங்க

  ReplyDelete