இந்து மதத்தின் பேரால் அடக்க, ஒடுக்க, அறியாமையில் ஆழ்த்த, அவமதிக்க பாரபட்சமான ஓர வஞ்சனையாக நடத்தப்படும் அக்கிரமங்களை, அட்டூழியங்களை, பரப்பிடும் மூடநம்பிக்கைகளை செயல்களை அவர்களின் வேதங்களையே ஆதாரமாக சுட்டிக் காட்டி அம்பலப்படுத்தி கண்டித்து அச்சுறுத்தலுக்கோ எச்சரிக்கைகளுக்கோ பணிய மறுத்து உள்ளம் குமுறி
அக்னிஹோத்ரம் ராமானுஜ தாத்தாச்சாரியார் அவர்கள் “உண்மையைத் தேடும் தமிழ் அறிவுலகத்துக்கு சமர்ப்பணம்" என்ற முகமனோடும் "மதம் என்னும் கோப்பையில் நல்ல பாலை ஊற்றி அருந்துங்கள்."‍ என்ற அறிவுரையுடன் "இந்து மதம் எங்கே போகிறது?"என்ற நூல் எழுதியுள்ளார்.
இத்தளத்தில் உள்ள அத்தனையும் முழுமையான ஆதாரங்கள், சுட்டிகள், நூல்கள், விபரங்கள் அமைந்தவை.. பதிவுகளுக்கு பதிப்புரிமை இல்லை..முன் அனுமதியின்றி மீள்பதிவு செய்யலாம். செய்யுங்கள். நீங்கள் ஓர் உண்மையான தமிழனாக‌ இருந்தால்... இந்நூலில் இருப்பதை உண்மை என உணர்ந்தால்... ஏனைய சகோதர தமிழர்களையும் இத்தளத்தை படிக்கத் தூண்டி உண்மையை உலகறிய‌ செய்யுங்கள்.; இந்தியத் திருநாட்டின் உண்மையான குடிமகன் என்ற அளவில் நீங்கள் இந்தக் கடமையில் தவறக் கூடாது.
தினசரி இந்த தளத்திற்கு வருகை தாருங்கள். நண்பர்களையும் பார்க்கச் செய்யுங்கள்.பதிவுகளை தங்களின் ஃபேஸ்புக்கில் அதிக அதிகமாக ஷேர் செய்யுங்கள்.
ADD TO YOUR BOOKMARK :- http://thathachariyar.blogspot.com -: ADD TO YOUR FAVORITES

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 20.

20. காஞ்சி மடமா? கும்பகோண மடமா?

சிருங்கேரி மடத்துக்குள் தமிழ் குடியேற்றங்களை உள்ளே விடாததற்கும்... காஞ்சியா கும்பகோணமா என்பதற்கும் என்ன சம்மந்தம் என்று தானே கேட்கிறீர்கள்.

மறுபடியும் மடத்தின் வாசல். “நீங்கள் எந்த கோத்ரமாக இருந்தாலும்... எந்த வேதக்காரராக இருந்தாலும் (பிராமணர்களில் ரிக் வேதக்காரர்கள், யஜுர், சாம, அதர்வண வேதக்காரர்கள் என ஒவ்வொரு வேதத்தின் வழி வந்தவர்களாக பிரிக்கப் பட்டிருக்கிறார்கள்)

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி–19.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 19

19.ஸ்திரீகளை மடத்துக்குள் சேர்க்கக்கூடாது. மடாதிபதி என்றால் யார்...? கும்பகோணம் மடமா? காஞ்சி மடமா?

இந்தக் கேள்விக்குள் நுழைவதற்கு முன்பு, 500 வருடங்கள் பின்னால் போய் அதோ அந்த சிருங்கேரி மடத்தின் வாசலில் நில்லுங்களேன். இன்றைய பெங்களூரிலிருந்து சில மணித்துளிகள் வாகனப் பயணம். அங்கே ஷிமோகா இயற்கையின் அழகு அமோகமாய் மேற்குத் தொடர்ச்சி மலைமீது ஏறி இறங்கி தவழ்ந்து கொண்டிருக்கிறது.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி-18

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி-18

சங்கரர், சங்கர மடங்களை ஸ்தாபித்தாரா?...

ஆதிசங்கரர் போதித்தபடி தான் அவர்தம் சிஷ்யர்களால் சிருஷ்டிக்கப்பட்ட மடங்கள் நடக்கின்றதா? ஆதி சங்கரரே மடங்களை ஸ்தாபிக்கவில்லை என்பதற்கு என்ன ஆதாரம்?

இரண்டாவது கேள்விக்கான பதிலை முதலில் பார்ப்போம்.
வரலாற்றுச் செய்திகளை, வதந்திகளை தூக்கிப் பிடித்துக் கொண்டு அப்படியே அண்ணாந்து பார்த்து ஆமாம் போடுவதல்ல அறிவு.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 17.

17. மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்?


இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 17.

17. மடங்கள் எப்படி தோன்றின.மடங்களுக்கான நோக்கம்? அப்படியானால்...சங்கரர் சகாப்தம் முடியும் வரை சங்கர மடங்கள் தோன்றவில்லையா?... அந்த மடங்களையெல்லாம் சங்கரரே ஸ்தாபித்தார் என்ற கருத்து உண்மையில்லையா?... அவ்வாறே வைத்துக் கொண்டால் அத்வைத மடங்கள் மலர்ந்த கதை என்ன?...இந்த கேள்விகளுக்கெல்லாம் பதிலை சங்கரருக்குப் பிறகான நூற்றாண்டு காலம்தான் சொல்கிறது.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 16

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 16

16. கர்மா,வழிபாடு எல்லாம் தேவையில்லை என்கிறார் சங்கரர்.
அப்படியென்றால் மோட்சம் பெற என்ன வழி...?
வேத கர்மாக்களை செய்தால் எளிதில் மோட்சம் பெறலாம் - என சங்கரர் சொல்லி அத்வைத குட்டையை குழப்பிவிட்டார் என்பதை கடந்த கட்டுரையில் குறிப்பிட்டிருந்தேன்.

குட்டைதான் குழம்பியது. அதில் குளித்தெழுந்த சங்கரர் குழம்பவில்லை. தன்னளவில் மாயாவாதத்தை விட்டு விலகாமல்தான் இருந்தார்.


15. பணத்தை தேடித் தேடி அலையாதே. பெண்களை நம்பாதே – சங்கரர்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி–15

15. பூணூலை அவிழ்த்து எறிந்தார் சங்கரர். ‘பெண்களை நம்பாதே’ பணத்தை தேடித் தேடி அலையாதே. பணத்தால் திவலை அளவு கூட நன்மையில்லை. பணத்தால் சத்யம் சாகடிக்கப்படும். சங்கரர் அத்வைத குட்டையைக் குழப்பிவிட்டார்

14.சந்யாசிகள் எப்படி எப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 14

14. சந்யாசிகள் எப்படிஎப்படி வாழவேண்டும், வாழக் கூடாது.
உண்மையான சந்யாசி ஒரு குதிரை வண்டியையோ, மாட்டு வண்டியையோ பார்க்கவே கூடாது. அவனது பார்வைகூட. அந்த வண்டிகளில் பயணம் செய்யக் கூடாது. மற்றவர்களிடம் பிச்சை வாங்கி உண்பதுதான் சந்யாச பண்பாடு. சந்யாசியானவன் பணத்தை கையால் தொட்டால் கூட அது மிகப் பெரிய பாவம்...

13. ஆதிசங்கரர் யார்? ‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 13

13. ‘எல்லாமே பொய்... எதுவும் மெய்யில்லை’ ஆதிசங்கரர். இவர் எழுதியது என்ன? செய்தது என்ன? உபதேசித்தது என்ன?

விஷ்ணுவே முழுமுதற் கடவுள் என வைணவர்களும், சிவனே முழுமுதற் கடவுள் என சைவர்களும் சர்ச்சைகளைக் கிளப்பியது பற்றி படித்தோம். அவைகள் ஒரு பக்கம் இருக்கட்டும்.

12. பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி – 12


12.பிராமணர்களிடையே பிளவா? லிங்க வழிபாடு. ஆபாசத்தை, அசிங்கத்தைச் சொல்லும் லிங்கத்தை வழிபட முடியாது என்ற கருத்து தோன்றியதால் ஆரம்ப காலங்களில் கோயில்களில் இடம் கிடைக்கவில்லை.

11.மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி–11

11. மக்களைப் பிளவு படுத்தி வாழ்ந்த பிராமணர்கள்.

நிலையான சமூக கட்டுமானத்துக்காக தொழில் அடிப்படையில் இருந்த பிரிவுகளை பிறப்பு அடிப்படையில் சாதியாக மாற்றினார்கள்.! பிராமணர்கள்’ என்பதை கடந்த அத்தியாயத்தில் கவனித்தோம்.

வணிகத்தை மறந்துவிட்டாலும் வைசியனுக்குப் பிறந்தவன் வணிகன்தான், சூத்திரனுக்குப் பிறந்தவன் வேளாண்மையை மறந்தாலும் அவன் சூத்திரன்தான். க்ஷத்திரியனுக்குப் பிறந்தவன் ஆள ராஜ்யமின்றி நடுத்தெருவுக்கு வந்தாலும் அவன் க்ஷத்திரியன்தான்.

பிராமிணர்களின் அலங்கோல ஆச்சார அதிர்ச்சிக‌ள்.

உற்றார் சம்மதத்துடன் ஒரு பெண் பத்து ஆண்களுடன் இணைந்து உறவு.

பிராமணர்களால் ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்?

கால்நடைகளைப் போன்று காணும் ஆடவர், பெண்டிருடன் உறவு வைத்து நடந்தனர் என்பதை நம்பமுடியவில்லை தானே?. ஆனால் அது தான் உண்மை!

மேல்ஜாதி நம்பூதிரிகளால் (பிராமணர்கள்) ஒரு பெரும் சமுதாயமே கேவலமான வாழ்க்கை வாழ்ந்து கொண்டிருந்ததை நினைத்துப் பார்த்தால்

இந்து சமுதாயத்தில் உயர்ஜாதி நம்பூதிரிப் (பிராமண) பெண்களைத் தவிர வேறு எவருக்கும் இடுப்புக்கு மேல் ஆடை அணிவது கூடாத செயலாக இருந்தது.

10.பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் கள்ளஉறவு கொண்டால்?

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 10

10. பிராமண ஆண்பெண்கள் கீழ்ஜாதிகளிடம் உறவு கொண்டால் ? தவறு செய்யும் ஆணை விட்டுவிடலாம். பெண்ணை ஊருக்கு வெளியே புறம் தள்ளி வைக்க வேண்டும்.

என்ன?... அண்ணல் காந்தியடிகள் பல வருடங்களுக்கு முன் சண்டாளர்கள் என்றால் யார் என சொன்னதை போன அத்தியாயத்தில் கேட்டீர்களா?

9. ” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 9

9. தலித் களுடன் பிராமண ஆண் பெண்களின் கள்ள உறவு. யார் அந்த சண்டாளர்கள்? ” தலித் ” துகள் சண்டாளர்களாம். ? துரோகம் செய்தவனை கொலை பாதகனை, பத்தினிகளை வேட்டையாடுபவனை தான் பொதுவாக சண்டாளன் என்று சாடுவோம்.

ஆனால், மநு யாரைச் சொல்கிறது தெரியுமா? சூத்திரர்களுக்கு கீழ்பட்டவர்கள். எல்லா விதத்திலும் ஒடுக்கப்பட வேண்டியவர்கள். வர்ணாஸ்ரம பேதத்தின் கடைசி கூட்டத்தினர் இப்படியாக அருவருப்புடன் வர்ணிக்கப்படும் தலித்துகளைத்தான் மநு தனது அகராதியில் பஞ்சமர்கள் என்று சண்டாளர்கள் என்றும் குறிப்பிட்டார்.


8. திருமண சடங்குகளின் விளக்கங்கள்.

இந்து மதம் எங்கே போகிறது ? பகுதி – 8

கல்யாண கலாச்சாரத்தில் பிராமணர்கள் கொண்டு வந்த சடங்கு சம்பிரதாயங்களில் இது வரை ஏழு பார்த்தோம்.

எட்டாவது சடங்கு பாணிக்ரஹனம். பாணிக்ரஹனம். இதுதான் முக்கியமான சடங்கு. `கைத்தலம் பற்ற கனாக்கண்டேன் தோழி’ என ஆண்டாள் பாசுரம் போலவும், மேற்கத்திய கலாச்சாரத்தில் `கை’ப்பற்றுவது போலவும் அமைந்தது இச்சடங்கு.மணமகள் - மணமகனை கைப்பிடிப்பது! இனி வாழ்விற்கு நீதான் இணை, துணை, எல்லாம் நீயே என்ற அர்த்தத்தில் இருவரும் கைப்பிடித்துக் கொள்வது தான் கல்யாணத்தின் முக்கிய அம்சம்.

7.பிராமணர்கள் உருவாக்கிய கல்யாண சடங்குகள்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 7

7. `தாலி’ வந்த கதை. கல்யாணங்களில் பிராமணர்கள் எக்கச்சக்க சடங்குகளை கொண்டு வந்தனர்.

"நிச்சயதாம்பூலம்” “காசியாத்திரை” “ஊஞ்சலாட்டுதல்” “திருஷ்டி சுத்தி போடுவது” “ஆரத்தி எடுப்பது” “குளிப்பாட்டு” “புடைவைச் சடங்கு” .....  இன்னும் இருக்கு!!!


6. தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 6

6. தமிழர்களிடம் பிராமணர்களின் ஆதிக்க ஊடுருவல்.

தமிழர்களின் வழிபாட்டிற்குள் ஊடுருவி கைகூப்ப கற்றுக்கொடுத்து தமிழை தள்ளி வைத்து தமிழர்களை ஆதிக்கம் செய்த பிராமணர்கள்

தமிழ் பூக்களால் தமிழர்கள் செய்த பூஜை (பூ செய்) எப்படி பூஜையானது என பார்த்தோம்.

இது மட்டுமல்ல இன்னும் பல வகைகளில் தமிழர்களின் வழிபடுமுறை மாறிப்போனது.

5. வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்.

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 5

5. வெறும் கற்சிலைகளை தெய்வங்களாக்கிய பிராமணர்கள்.
வழிபாடு என்றால்? பூசெய்... என்பதை மாற்றி பூஜை ஆக்கினார்கள்.பூணூல் வந்த கதை வேடிக்கையானது.

புத்தம் சரணம் கச்சாமி...தர்மம் சரணம் கச்சாமி... சங்கம் சரணம் கச்சாமி... என்ற மெல்லிய கோஷங்கள் தென்னிந்தியாவின் தொண்டை மண்டலக் காற்றில் கலக்க ஆரம்பித்த காலம்.


4. புத்தரும் X பிராமண‌ர்களும்

இந்து மதம் எங்கே போகிறது? பகுதி - 4

புத்தரும் X பிராமண‌ர்களும்.

முரட்டுத்தனமாக ஓடித்திரியும் குதிரைகளுக்கே மோட்சம் கிடைக்கும்போது, மென்மையாய் வேதம் ஓதும் உங்களுக்கு அந்த அக்னி குண்ட மோட்சம் வேண்டாமா?...

-என புத்தர் வேள்விச் சாலைக்கே சென்று ஒரு கேள்விப் பொறியை போட யாகத்தை விட பெரு நெருப்பாய் கிளம்பியது இந்த ஒரு நெருப்பு.

காகம் கொத்தி ஆல மரம் சாயுமா?...ஆலமரம் போல் வேர்களையும், விழுதுகளையும் மண்ணுக்குள்ளும், மக்களுக்குள்ளும் ஊன்றி வைத்திருந்த வேத கட்டுப்பாடுகள், மநு கட்டளைகள் ஆகியவற்றின் முன் புத்தரின் கொள்கை முழக்கம் முதலில் தடுமாறினாலும் கொஞ்சம் கொஞ்சமாய் வலுப்பெற தொடங்கியது.

3.அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்

இந்துமதம் எங்கே போகிறது? பகுதி – 3

அசுவமேதயாகத்தின் ஆபாசங்கள் கொடூரங்கள்.
பகுதி - 3

வேதத்தின் பெயரைச் சொல்லி கர்மாக்கள் அரங்கேறிக் கொண்டிருந்ததை எதிர்த்து புத்தர் எழுப்பிய குரலை போன அத்தியாயத்தில் கேட்டோம்.

குரல் கொடுத்த பின்னணி, அடுத்தபடியாக அவரது செயல்கள் எப்படி இருந்தன? விளைவுகள் என்ன சம்பவித்தன? என்பது பற்றி இப்போது பார்க்கலாம்.

2.இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?

இந்துமதம் எங்கே போகிறது பகுதி 2

இந்தியாவில் இருந்த 450 மதங்களில் எது இந்து மதம்?

படிப்படியாகப் பார்ப்போம்.

ஒரு புருஷனும், அவன் பத்தினியும் மழை பெய்த சாலையில் நடந்து கொண்டிருக்கிறார்கள். வழியில் ஒரு பள்ளம். இடையில் மழை நீர் தெரு மண்ணோடு கூட்டணி வைத்து ‘சகதி’ அந்தஸ்தோடு கிடக்கிறது.புருஷன் பார்த்தான். ஒரே தாண்டு. இந்தப்பக்கம் வந்துவிட்டான்.

திரும்பிப் பார்த்தால் அவன் பத்தினி பாவமாக நின்று கொண்டிருந்தாள். தாண்டினால் விழ வேண்டியதுதான் என பயந்தாள்.‘கொஞ்சம் கை குடுங்கோ... வந்துடறேன்’ என்கிறாள் பத்தினி. இது உங்களுக்காக சொன்ன உதாரணம்தான்.

இதேபோலத்தான் அன்று... ஆரியர்கள் சிந்து நதி, இமயமலை என பள்ளத்தாக்குகளை தாண்டி இந்தியாவுக்குள் நுழைந்து கொண்டிருக்கிறார்கள். நம்மூர் மழைச் சாலையைவிட மலைச் சாலை எவ்வளவு கடினமாக இருந்திருக்கும்?

நதிக்கு கரையில்லாத காலமது. காடு, மலை, விலங்குகள் இவற்றை யெல்லாம் தாண்ட ஆரிய பெண்களுக்கு தைரியம் இல்லை. பெண்கள் கோரிக்கை விடுத்தார்கள். அது புறக்கணிக்கப்பட்டது.

‘வரும் பெண்கள் வரலாம். வராதவர்கள் இங்கேயே இருக்கலாம்.’


1.இந்து மதம் எங்கிருந்து வந்தது?

இந்து மதம் எங்கே போகிறது பகுதி - 1

இந்து மதம் எங்கிருந்து வந்தது?

நான்காயிரம் வருடங்களுக்கு முன்பு ஓடிச் செல்லுங்கள் முடிகிறதா? உங்கள் மனக்குதிரையில் ஏறி உட்கார்ந்து கொண்டு கற்பனை, சிந்தனை இரண்டு சாட்டைகளாலும் விரட்டுங்கள்.

வரலாறு துல்லியமாக கணிக்க முடியாத காலத்தின் பாதாளப் பகுதி அது. மலைகள், காடுகள் என மனிதர்களையே பயமுறுத்தியது பூமி.

இமயமலைக் குளிர் காற்றில் நடுங்கியபடி ஓடிக் கொண்டிருக்கிறது சிந்து நதி. என்ன திமிர்? அத்தனை குளிரிலும் மானசரோவரில் பிறந்த சுமார் ஆயிரம் மைல்கள் மலையிலேயே நடை பயின்று பிறகுதான் கீழிறங்குகிறாள் சிந்து.